உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சம் கட்டுரை – அ.பாக்கியம்

உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சம் கட்டுரை – அ.பாக்கியம்




சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது காங்கிரஸ் வருகிற 16-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதற்கான பிரதிநிதிகளை இறுதிப்படுத்தி விட்டார்கள்.

2296 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பிரதிநிதிகளில் நேரடி களத்திலும் உற்பத்தி துறையிலும் பணியாற்றக் கூடியவர்கள் 771 பேர். அதாவது 33. 6 சதவீதம் பங்கு பெறுகிறார்கள்.

192 பிரதிநிதிகள் 8.4 சதவீதம் தொழிலாளர்கள்.
85 பேர்கள் 3.7 விவசாயிகள்.
266 பேர் தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள்.
இவர்கள் 11.6%.

பெண் பிரதிநிதிகள் 619 பேர்.
இது கடந்த 19வது கட்சி காங்கிரசை விட 68 பேர் அதிகம்.

சீனாவில் உள்ள 40 சிறுபான்மை குழுக்களில் இருந்து 264 பிரதிநிதிகள் அதாவது 11.5 சதவீதம் பங்கேற்கிறார்கள்.

2296 பிரதிநிதிகளில் சராசரி வயது 52.2 ஆகும்.
இவர்களில் 59.7% பிரதிநிதிகள் 55 வயதுக்கு குறைவானவர்கள்.
18.9% பிரதிநிதிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மொத்த பிரதிநிதிகளில் 52.7 சதவீதம் முதுகலை பட்டப்படிப்புகளையும் 36 சதவீதம் இளங்கலை பட்டங்களையும் பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 9கோடியே 60 லட்சம் கட்சி உறுப்பினர்களில் இருந்து இந்த பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எதுமேதிகளில் 2 224 பேர் சீர்திருத்தத்திற்கு பிறகு கட்சியில் இணைந்தவர்கள்.

பிரதிநிதிகள் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். பல்வேறு வழிகளில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களைப் பற்றி மக்களிடம் கருத்து கேட்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் கருத்தும் அறியப்பட்டது.

உட்கட்சி ஜனநாயகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் உட்பட தங்கள் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சீனாவில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு தொழில்களில் பரந்துபட்ட பகுதிகளை பிரதிபலிக்கின்றனர்.

இது மேற்கத்திய ஜனநாயகத்திலி ருந்து வேறுபட்டது.

சீனாவின் உட்கட்சி ஜனநாயகம் கவனமாக ஆலோசனை செய்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதாகும். மேற்கத்திய ஜனநாயம் பெரும்பாலும் எளிய வாக்குகளை உள்ளடக்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் நிலைபாடு, திறன், செயல்திறன் வறுமை நிவாரணத்தில் பங்கேற்பது, கோவில் 19 எதிர்த்து போராடுவது பேரிடர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பது, ஆகியவற்றில் பங்காற்றியவர்களை பரிசோதித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

புள்ளி விவர கணக்கின்படி 710 பிரதிநிதிகள் மாகாண அளவிலான கார்பஸ் மற்றும் கௌரவ பட்டங்களை பெற்றவர்கள்.
92.1 பரிதிநிதிகள் முன்னணியில் பணியாற்றுகின்றனர்.

இருபதாவது கட்சி காங்கிரஸ் மிகவும் இன்றியமையாதது. சீனாவை அனைத்து வகையிலும் நவீன சோசலிச நாடாக உருவாக்கி இரண்டாம் நூற்றாண்டு இலக்கை அடையும் பயணத்தில் உள்ளது. எனவே தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது..

– அ.பாக்கியம்

நன்றி: GLOBAL TIMES

https://www.globaltimes.cn/page/202209/1276173.shtml?utm_source=pocket_mylist

As a Communist without being a member of the Communist Party. Red Salute for Comrade Williams' death - A. Soundarajan

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லாமலேயே கம்யூனிஸ்டாக.. தோழர் வில்லியம்ஸ் மறைவுக்கு செவ்வஞ்சலி

எனது மிக நெருங்கிய நண்பனும் தோழனும் ஆன வில்லியம் டயல் மறைந்த செய்தி பேர் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் உண்டாக்கியுள்ளது. பத்திரிக்கையாளராக அவர் தினத்தந்தியில் பணியாற்றி பின்னர் அலையோசையில் வேலை செய்தபோது தான் தொழிற்சங்க போராட்டங்களில் செய்தி சேகரிக்க வந்த அவர்…
புத்தகம்: முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்) – ப.கு. ராஜன்

புத்தகம்: முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்) – ப.கு. ராஜன்

முதல்  கிளை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம் ப.கு. ராஜன்   ஒரு நூறாண்டு பயணம் விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதி எனும் தாகத்தில் வழுக்கும் செங்குத்துப் பாறையில் ‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும் மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’ அரூப…
ஒரு புரட்சியாளனின் வரலாற்றுச் சிறப்புமிக்கபயணங்கள்-சௌகத் உஸ்மானி (தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்)

ஒரு புரட்சியாளனின் வரலாற்றுச் சிறப்புமிக்கபயணங்கள்-சௌகத் உஸ்மானி (தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார். சௌகத் உஸ்மானி பிறந்த தேதி தெரியவில்லை. எனினும் அவர்…
May Day Special Offer

மே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…

மே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு…