Matram Kavithai By Dharma Singh மாற்றம் கவிதை - ஐ. தர்மசிங்

மாற்றம் கவிதை – ஐ. தர்மசிங்

விடியலை
கூவி எழுப்பியது சேவல்
கடிகாரமாய்
நேரம் காட்டியது சூரியன்

விரல் கொண்டு
மணலைக் கிளறி
எழுதிப் படித்தார்கள்

ஓலைச்சுவடிகளில்
வரலாற்றை
கண்டு கொண்டார்கள்
வியர்வைகளை
காசாக்கும்
வித்தைகளைக் கற்றார்கள்

ஏர்முனைகளால்
தேசத்தை
நிமிரச் செய்தார்கள்

கொண்டாடும் விழாக்களால்
ஒற்றுமையை
வளர்த்தார்கள்
பொங்கி வழியும்
பானைகளால்
மனம் நிறைந்தார்கள்

வரம்பின்றி
பெற்ற பிள்ளைகளை
இறைவனின் கொடைகளாகக்
கொண்டாடினார்கள்

குடிசை வீட்டிலும்
குறட்டையொலியொடு
தூங்கினார்கள்

கதைச் சொல்ல
நரைத்த தலையோடு பாட்டி
குழப்பத்திலிருந்து விடுபட
உதாரணங்களோடு தாத்தா

தோளில் சுமந்து செல்ல
தடந்தோள்களோடு
தாய்மாமன்

சுகமாக தலைகோத
அத்தையிடம்
அன்பான விரல்கள்

கட்டிப் பிடித்து முத்தம் தர
கருணை நிரம்பிய சித்தி
கைப்பிடித்து அழைத்துச் செல்ல
புன்னகையுடன் சித்தப்பா

காலங்காலமாக முற்றத்தில்
நினைவுகளைச் சுமக்கும்
கயிற்றுக் கட்டில்

கொல்லைப்புற தோட்டத்தில்
பட்டாம்பூச்சிகள் கொஞ்சி விளையாடும்
பசுமையான தோட்டம்

தொழுவத்தில்
கேட்டுக் கொண்டிருக்கும்
” ம்மா ” எனும் சப்தங்கள்
” ம்மே” எனும் சப்தங்கள்

வாசலில் விட்டு விட்டு ஒலிக்கும்
” லொள்…லொள்…” சப்தங்கள்
” மியாவ்… மியாவ்…” சப்தங்கள்

வெள்ளை மனங்களோடு
கலகலப்பாக இருந்தது
கூட்டுக் குடும்பமாய்
அந்தக் காலம்…

ஆரவாரங்கள் குறைந்து
அமைதியாக இருக்கிறது
இன்றைய டிஜிட்டல் உலகம்
ஆளுக்கொரு அலைபேசியோடு…

Paalkari Arukkani poem by Ka. Amsapriya க.அம்சப்ரியாவின் பால்காரி அருக்காணி கவிதை

பால்காரி அருக்காணி கவிதை – க.அம்சப்ரியா




நாலு மாடு கறக்கறீங்க
இவ்வளவுதான் பால் இருக்குமா?
பால்காரரின் ஒரே கேள்விதான்
நாளுக்கு ஒரு தொனியில் வலமாகும்
அருக்காணிக்கோ ஒரே பதில்தான்
புள்ளத்தாச்சி பால்னு வரும்போது
அதுக்கு எப்படிப் பணம் வாங்குறது..
சொல்லிய மறுவினாடி
எப்போதும் போல்
வெற்று அடிமடியை
ஒரு முறை கைகள் தொட்டு மீளும்

பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்தும்…. உண்மையா… போலியா..? – பேரா. பொ.ராஜமாணிக்கம்

திரிபரா பீஜேபீ முதல் அமைச்சர் முதல் பீஜேபீ எம்பி துறவி சாத்வீ பிரயாக் வரை பல பீஜேபீத் தலைவர்களும் பசுப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களும் ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சியாளர்களும் பதஞ்சலி உள்ளிட்ட பிரபல தயாரிப்பாளர்களும் பசுவின் சிறு நீர் அடர்விலோ... நீர்த்த வடிவிலோ…
கவிதை: அசை போடும் பசு மாடு — சாந்தினி

கவிதை: அசை போடும் பசு மாடு — சாந்தினி

சின்னஞ்சிறு பிராயமதில் சிறிய விடுமுறைகளில் சீறிப் பாயும் காளை வண்டியில் சில காத தொலைவிலிருக்கும் அப்பச்சி வீட்டிற்கு அம்மாவுடன் சென்ற அந்தக் கால நினைவுகள் அகலாது நெஞ்சை விட்டு அசை போட வைக்கிறது ! ஊரே நம் உறவாய் உள்ள ஒரு…