இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 66 – சுகந்தி நாடார்
வளர்ந்து வரும் பாளச்சங்கிலி தொழில்நுட்பம்
selfish miner, eclipse attack, Proof of work, Hard fork, soft fork, smart contracts NFT ஆகிய கலைச்சொற்கள் இன்றைய பாள சங்கிலி பேரட்டுத் தொழில்நுட்பத்தில் பேசப்படுகின்றன. பரவலாக பேசப்படும் இந்த கலைச்சொற்கள் பாளச்சங்கிலி தொழில் நுட்பத்தை அடிப்படையாக் கொண்டு வளர்ந்து வரும் நாளைய மின் எண்ணியியல் எதிர்காலத்தின் ஒரு சிறு முனையாகவேத் தெரிகின்றது. ஒரு நூல்கண்டின் முனையைப் பிடித்து இழுத்தால் உருண்டு கொடுக்கும் நூல்கண்டால் நூலின் நீளமும் அதனால் உருவாகும் சிக்கலும் அதிகரிப்பதைப் போல பாளச்சங்கிலி தொழில்நுட்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள, அதன் பல்வேறு பரிணாமங்களும் அது இன்றைய இளைய சமுதாயத்தில் எந்தளவுக்கு வேரூன்றிப் பரந்துசிக்கலை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது
மேலேச் சொன்ன கலைச்சொற்களின் விவரங்களைப் பார்க்கும், போது நாளைய சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகின்றது.
Proof of work: பாளச்சங்கிலி பிணையத்திலொருக்கும் ஒவ்வோரு கணினி முனையிலும் தரவு விவரங்கள் இருக்கும் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். இந்த கணினி முனையில் பயன்படுத்தும் எந்த ஒரு நிரலரும் தரவுகளை மாற்றி தங்களுக்கு ஏதுவானதாக மாற்ற முடியாத வகையில் எண்ணியியல் செலவாணியை அகழ்தல் செய்யும் முறையே Proof of work என்று அழைக்கப்படுகின்றது. எண்னியியல் அகழ்தலை மேற்கொள்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப் படும் பாளத் தரவுகளின் எந்த ஒரு விவரமும் தெரியாத நிலையில் எண்னியியல் அகழ்தலை செய்யும் போது தரவுகள் சரிபார்க்கப்படும் என்பதோடு ஒரு கணினி சரிபார்த்த விவரமும் மற்ற கணினிகள் சரிபார்த்த விவரமும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும். எண்ணியியல் பிணையத்தில் இருக்கும் கணினிகளை ஆளும் நிரலர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமற்றவராக இருக்கும் நிலையிலேயே நிலையிலேயே எண்ணியியல் பேரேடுகலை இவ்வாறு சரி பார்ப்பது சாத்தியமாகும்.
இன்று புழக்கத்தில் இருக்கும் எண்ணியியல் செலவாணிகள் எண்ணில் அடங்காதவை . ஒவ்வோரு துறைக்கும் ஒரு எண்ணியியல் செலவாணி என்பது போக ஒவ்வோரு வாடிக்கையாளர்களின் பண்பிற்கு ஏற்ப எண்னியியல் செலவாணிகள் தோன்றிக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வோரு எண்ணியியல் வர்த்தகங்களும் தங்களுக்கான எண்ணியியல் செலவாணியை உருவாக்கி வருகின்றனர்.
அப்படியானால் ஒரு எண்ணியியல் அகழ்வாளர் தன் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி? அவர்கள் போட்டியாளரின் எண்ணியியல் செலவாணியின் பிணையத்தைத் தாக்க வேண்டும்.
ஒரு நிரலர் தனக்குப் போட்டியாக வளரும் எண்ணியியல் செலவாணிக்கான பிணையத்தை தாக்கும் முறைகள் என்பதை அடுத்து வரும் இரு கலைச்சொற்கள் விவரிக்கின்றன.
Eclipse Attack: எண்ணியியல் பிணையத்தைத் தாக்க நினைக்கும் நச்சுநிரலர் ஒருவர் அந்த பிணையத்தின் ஒரே ஒரு கணினி முனையை மட்டும் குறி வைப்பர். அதன் பின் அந்தக் கணினியைச் சுற்றி ஒரு செயற்கையான சூழ்நிலையை உருவாக்கி அந்தக் கணினி முனையை பிணையத்திலிருந்து பிரிப்பர்.இவ்வாறு பிரித்த பிறகு அந்தக்கணிமுனையின் வழி பரிமாற்றம் செய்யப்படும் அதன் தரவு விவரங்களையும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி விடுவர். இப்படி ஒரு கணினி முனையை அதன் பிணையத்திலிருந்து இருட்டிப்பு செய்யும் முறையே eclipse attack ஆகும்.
கணினிவழிபாதுகாப்பு தனியுரிமைக் கொள்கைகளைக் கண்காணிக்கும் USENIX Security Symposium 25வது மாநாட்டுக் கட்டுரைகளில் ஒன்றான ” eclipse attack on bitcoins peer to peer network” என்பதில் ஆராய்ச்சியாளர் ஈதன் ஹெய்ல்மென் கூறி இருப்பதாவது “ஒரு நச்சு நிரல் கணினியாளர் ஒரு கணினியின் அகழ்தல் விகிதத்தையும், ஒரு நாணயத்தை இருமுறை செலவு செய்வதாலும் எண்ணியியல் செலவாணியின் பிணைப்பகம் தாக்கப் படுகிறது:.கணினி முனை தாக்கப்படுவதினால் அந்தப்பிணையத்திலிருந்து துண்டாடப்படுகின்றது. தாக்கப்பட்ட கணினியில் அகழ்தல் விகிதத்தையும் நச்சு கணினியின் அகழ்தல் விகிதத்தையும் இணைத்துக் கொண்டு நச்சுக்கணினி தவறான தரவுகளைக் கணினிக்குள் அனுப்ப ஆரம்பிக்கின்றது. அவ்வாறு அனுப்புவதன் மூலமும் , கணினி முனைக்கு வரும் தரவுப் பாளங்களில் ஒரு சில பாளங்களை மட்டும் தாக்கப்பட்ட கணினி முனைக்கு அனுப்பியும் எண்னியியல் பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளிலிருந்து ஒரு கணினியைத் தனிமைப் படுத்தி தவறான தரவு பாளத் தரவுகளை பிணையத்தில் வலம் வரச் செய்வதே eclipse attack: என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் பாளத் தரவுகளில் முதலிலிருந்த விவரங்கள் சூறையாடப்படுகின்றன. தரவு விவரங்கள் இல்லையெனில் அங்கே எண்ணியியல் செலவாணியும் பூஜ்ஜியம் தானே?
Selfish Miner
ஒரு எண்ணியியல் செலவாணியை உருவாக்கும் போது பெறப்படும் பாளத் தகவல்களை பொதுவாக ஏற்கனவே இருக்கும் பாளச்சங்கிலில்லுள் இணைப்பர். அவ்வாறு இல்லாமல் ஒரு எண்ணியியல் அகழாளர் தான் உருவாக்கிய புதியப் பாளச்சங்கைலியை பொதுவில் விடாமல் இரகசியமாகச் சேமித்து வைத்து இருப்பார். இப்படி இரகசியமாக வைத்திருக்கும் பாளத்தில் தான் அடுத்தடுத்து அகழும் எண்ணியியல் செலவாணியின் விவரங்களை அதில் இணைப்பார். அதனால் அவர் பெறும் எண்ணியியல் செலவாணிகள் பொதுக் கணக்கிலிருந்து மறைந்து போகும்.
முதலில் இந்த தன்னலஎண்ணியியல் அகழ்வாரின் பாளச்சங்கிலியின் நீளம் பார்க்கப்படும் பொதுவானப் பாளச்சங்கிலியின் நீளத்தை விட குறைவாக இருக்கும் ஆனால் மெள்ள மெள்ள பொதுத் தரவாக இருக்கும் பாளச்சங்கிலியைவிட இவரது பாளச்சங்கிலியின் நீளம் அதிகமாகும் அந்த நேரத்தில் ஏற்கனவே பொதுவில் இருக்கும் பாளச்சங்கிலித் தரவுகளுக்குப் பதிலாக தான் உருவாக்கிய பாளச்சங்கிலியை உண்மையான பாளச்சங்கிலியாக வெளியிடுவார்.இதனால் இவரது கணக்கில் காட்டப்படும் எண்ணியியல் செலவாணியின் தொகை அதிகமாக தீடிரென்று காட்டப்படும். எல்லாமே கணினியின் உள்ளே இருக்கும் தரவுகள் என்பதால் இது சரியான கணக்கா தவறான கணக்கா என்று தெரிந்து கொள்வதற்குச் சிரமமாக இருக்கும்
Hard fork & soft fork
பாளச்சங்கிலி பிணையத்தில் இருக்கும் அனைத்துக்கணினி முனைகளும் ஒரே மாதிரியான கணக்கீடுகளில்(algorithem) வேலை செய்வதே அவற்றின் பெரிய பலம். ஆனால் நாம் நம் கணினி இயங்குதளங்களையும் நமது திறன்பேசி இயங்குதளங்களையும் அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதைப் போல இந்த கணக்கீடுகளிலும் புதுப்பீடு செய்ய வேண்டிய நிலை வரும்.
ஒரு புதிய கணக்கீடு எப்போது உருவாக்கப்படும் என்று யோசித்தால் பேரேட்டுத் தகவல்கள் பற்றிய விவரங்களை பிணையத்தில் உள்ள நிரலர்கள் அனைவரும் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாளச்சங்கிலியின் கணக்கீடு முறைகள் மாற்றப்படும். எண்ணியியல் செலவாணியின் பிணையத்தின் பாதுகாப்புக் கருதியே முழுவதுமாக பாளச்சங்கிலியின் கணக்கீடுகள் மாற்றப்படுகின்றன. மேலும் குழுவில் உள்ள நிரலர்களின் கருத்து ஒத்துப் போகாவிட்டாலும் புதிய கணக்கீடுகள் உருவாக்கப்படும்.ஏற்கனவே உள்ள பாளங்கள் சிதைந்துபோனாலோ மாற்றப் பட்டாலோ அது Hard fork என்று அழைக்கப்படும்.
அப்படிச் சிதையாமல் உருவாக்கப்படும் பழையத் தரவுகளுக்கும் ஏற்றவாறு உருவாக்கப்படும் புதிய கணக்கீடு soft fork என்று அழைக்கப்படுகின்றது. முதலில் ஏற்படுத்தப் பட்ட பாளத் தரவுகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப் படும் கணக்கீடுகள் தரவுப்பேரேட்டில் எந்த ஒரு வில்லங்கத்தையும் கொண்டு வராது. எனவே ஒரு பிணையத்தில் இருக்கும் கணினி முனைகள் சரியான கணக்கீடு முறைகளைக் கண்டு தங்கள் கணினியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
smart contracts ஒரு ஒப்பந்தத்தின் விவரங்களை பாளச்சங்கி தரவுகளாகச் சேமிப்பது தான் smart contracts என்று அழைக்கப்படுகின்றது ஒப்பந்தம் செய்பவர்களின் விவரத்தோடு ஒப்பந்தின் வரைமுறைகளையும் தரவுகளாக இடலாம்.
இருவருக்கான பொருளாதார ஒப்பந்தத்தை வங்கிகள் வழக்கறிஞர்கள் நிறுவங்கள் போன்ற எந்த ஒரு மூன்றாம் நபரின் உதவியும் இல்லாமல் எண்ணியியல் முறையில் விவரங்களை பாளச்சங்கிலியாக பதிவு செய்த பின் கணக்கீடுகளில் ஒப்பந்தத்திற்குத் தேவையான நிபந்தனைகளையும் இட வேண்டும் இந்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் இப் பண ஒப்பந்தம் அமுலுக்கு வரும்.
ஒரு ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய விதிகள் செயல்முறைகள் அனைத்தும் இங்கே எண்ணியலாக மாற்றப்படுகின்றது. மனிதர்களின் மேற்பார்வை இல்லாமலே கணினி கணக்கீடுகள் கூறிய நிபந்தனைகள் படி இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முக்கியமாக இவை எண்ணியியல் செலவாணியைக் கொண்டு விலை பேசப்படுகின்றன.
எண்ணியல் பாள சங்கிலியைப் பற்றி நாம் புரிந்து கொண்டது சரியாக இருந்தால், ஒவ்வோரு முறை இந்த ஒப்பந்தத்தைச் செயல் படுத்தும் போதும் நம் கணக்கில் உள்ள எண்னியியல் செலவாணியை நம் செலவு செய்கின்றோம். அப்படி ஒவ்வோரு செலவாணியைச்செலவு செய்யும் போதும் அது தனியாக ஒரு பாளச்சங்கிலையை உருவாக்குகின்றது இவை இரண்டும் தனித்தனி பாளச்வங்கிலித் தொடர்களாகச் செயல்படுமா? அல்லது ஒரு smart contract இன்னும் எண்ணியியல் செலவாணி தரவுகளுக்குள் புதைந்து விடுமா தெரியவில்லை.. ஆனால் ஒரு நிரலர் அல்லாத பயனீட்டாளர் இப்படி ஒரு ஒப்பந்தத்தை செயல்படுத்த தன் வங்கியிலிருந்தோ கடன் அட்டையிலிருந்தோ இன்று புழக்கத்திலிருக்கும் தொட்டு உணரக்கூடிய தட்டைப் பணத்தைத்Flat currency) தான் பயன்படுத்த வேண்டும்.
NFT Non-fungible token என்பதன் சுருக்கமே NFTயாகும். fungible என்றால் ஒரு பொருளுக்குப் பதிலாக அதேபோல வேறுவடிவத்தில் இருக்கும் பொருளை வாங்கிக் கொள்வது பண்ட மாற்று முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று, தங்கம் என்றால் அது தங்கக் கட்டிகளாகவும் இருக்கலாம். அல்லது தங்க நாணயங்களாகவோ, நகைகளாகவோ இருக்கலாம். . இன்னப் பொருள் இப்படித்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இல்லை ஒரு பொருளின் தன்மை மாறினாலும் அதன் பயன்பாடு மாறுவதில்லை அப்படி என்றால் Non-fungible token என்பது தன்மையையும் பயன்பாட்டையும் மாற்ற இயலாத அடையாள வில்லை. என்று பொருள் வருகிறது. இந்த அடையாள வில்லை முறை எத்திரியம் எண்ணியியல் செலவாணியில் பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது ஒரு பொருளின் உரிமையாளர் தன்னுடைய விவரங்களை எண்ணியியல் பாளச்சங்கிலியில் சேமித்து வைப்பது தான் Non-fungible token. இன்று இந்தத் தொழில்நுட்பம் கலைஞர்களைக் கவருகின்றது. காரணம் அவர்களது படைப்புக்கள் கணினிக் கருவிகளில் கணினிக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப் பட்டதாக இருக்கும் இப்படி உருவாக்கப்பட்ட படைப்புகளில் உள்ளத் தரவுகள் அத்தனையும் எண்ணியியல் பாளச்சங்கிலிக்குள் மாற்றி விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதன் பின் படைப்பாளரின் படைப்பை ஒருவர் விலை கொடுத்து வாங்கினால் அந்த விவரங்களும் இதனுள்ளேயேப் பதியபப்டும்.
தரவு விவரங்களை மாற்ற முடியாது.என்று சொன்னேனே தவிரக் கருத்துத் திருட்டு நடைபெறாது என்று சொல்லவே இல்லை. கருத்துத் திருட்டு காப்புரிமை மீறல் சட்டப்படிக் குற்றம் என்பது ஒரு பக்கம் எண்ணியியல் பாளச்சங்கிலித் தொழில்நுட்பத்தின் இன்னொரு முகம் தான் இந்த NFT. ஒரு பொருளின் உரிமை தரவுகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என்னும் போது அந்தப் பொருளுக்கு எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் உரிமையாளராக இருக்கலாம் என்கின்றனர். அதாவது படைப்பவரும் வாங்குபவரும் ஒரே நேரத்தில் ஒரு படைப்பின் உரிமையாளராக ஒரு பாளச்சங்கிலியில் பதிந்து இருக்கும். அப்படியானால் ஒரு படைப்பாளி தன் படைப்பை எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் போலத் தெரிகிறது. எண்ணியலின் நிரலர்கள். இதில் ஒருவரின் காப்புரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்ற விளக்கம் இல்லை.
இன்னும் பார்க்கலாம்…
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 (அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 57 (Monero, Titcoin, Zcash) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 59 (எண்ணியல் செலவாணி வர்த்தக மையங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 61 (எண்ணியல் செலவாணிகளை அகழ்தல்)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 62 (இன்றைய கொளவு எண்ணியியல் – ஒரு பார்வை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 63 (இராட்சத கொளவு எண்ணியியல் அகழ்தல் ஏன்?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 64 (கொளவுக்கனிமை வழி எண்ணியியல் அகழ்தல் )– சுகந்தி நாடார்