புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி

புரட்சியின் பயணம் கவிதை – சந்துரு ஆர்.சி




கட்டிட வேலை செய்யும்
வட இந்திய இளைஞன்
பனியனைத் தடவிக்கேட்டேன்
அவர் யார் எனத் தெரியுமா என்று…
காரை படிந்த பற்கள் சிரிக்க
நை மாலும் என்று
கைவிரித்தான்
பின் அவனே
ஷினிமா இஸ்டார் என்றான்…

கிராமத்து விவசாயியிடம்
அவர் அணிந்திருந்த ஆடையை காட்டி
யார் இவர் என்றேன்
தன் மகனுக்குத்தான்
அது தெரியுமென்று
பதிலை மடை மாற்றி
வேலைக்கு நகர்ந்தார்

நகரத்தின் தெருவோரச் சிறுவனிடம்
செல்லமாய் கேட்டேன்
யாரடா இவரென்று
சிகரெட் ஊதும் பாவனையில்
விரலிடுக்கில் உதடுகுவித்து
ரஜினி ஸ்டைல் என்றான்

நடுத்தர வாலிபனின்
தோள் தொட்டு கேட்டேன்
தெரியுமா இவரை என்றேன்
சிறு புன்னகையை பதிலாய் தந்து
தலையசைத்து
வேறிடம் நகர்ந்தான்

கல்லூரி இளைஞனின்
கரம்பற்றி கேட்டேன்
அவனோ அவரை
அவரை ஒரு
விளம்பர மாடல் என்று
சந்தேகமாய் உறுதி செய்தான்

ஐ.டி. இளைஞனைக்
கேட்டுப்பார்த்தேன்
மே பி ஹி இஸ் அன்
ஹாலிவுட் ஆக்டர் என்று
தோள் குலுக்கி
நம்மிடமே பதிலைத் திருப்பினான்

ஒரு நாள்
நண்பரின் வீட்டில்
குவியலாய் கிடந்த
அவர் படத்தைப்பார்த்து
அவர் மனைவியிடம் கேட்டேன்
இப்படி கரித்துணியாய்
வைத்திருக்கிறீர்களே
இதிலிருக்கும் மனிதர்
யார் எனத்தெரியுமா என்று..
அப்பாவியாய் சிரித்துக்கொண்டே
போஸ்டர்ல பாத்திருக்கேன்
சுடு தண்ணி தூக்கவும்
சோறு வடிக்கவும்
இந்த துணிதான் வழுக்காம
சூடு தாங்குதுண்ணா
வெள்ளந்தியாய்ச் சொன்னார்

இறுதிவரை யாருக்குமே
தெரியவில்லை
இவர் யாரென்று

கடைசியாய்
விளையாடி முடித்து
வழியில் நடந்து செல்லும்
பள்ளிச் சிறுவனிடம் கேட்டேன்
தயங்காமல் சொன்னான்
சேகுவேரா என்று..
அடையாளம் கேட்டதற்கு
பிறந்தது அர்ஜெண்டைனா
வென்றது கியூபாவில்
வாழ்வது உலகத்தின் இதயத்தில்.
பராட்டை எதிர்பாராமல் கடந்து செல்கிறான்

உலகில்
புரட்சியின் அடையாளமாய்
அறியப்பட்டவரை
யாரெனத்தெரியாமலே
தங்கள் பனியன்களில்
அணிந்துகொண்டு
திரிபவர்கள் மத்தியில்
இளங்குருத்திடம் அழுத்தமாய்
அவர் சேர்ந்திருப்பதுடன்
தெரிந்தவர் தெரியாதோர்
எல்லோருடனும் சேர்ந்து
அதே புன்னகையுடன்
மீண்டும் ஒரு புரட்சியைக் காணமுடியும்
என்ற நம்பிக்கைகளோடு
வெவ்வேறு வடிவங்களில்
சேவும் பயணிக்கிறார்…

சந்துரு ஆர்.சி

Cuba’s Organic Revolution by Bharath Mansata,

நூல் அறிமுகம்: இயற்கை விவசாயப் புரட்சி (ORGANIC REVOLUTION) கியூபாவில் 1990இலிருந்து விவசாயத்தில் நடைபெற்ற மாற்றங்கள் – கு. செந்தமிழ் செல்வன்

“இயற்கை விவசாயம் தற்போது வலுவான சர்வதேச இயக்கமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தொழில்துறை விவசாய (industrial agriculture) மாதிரியின் விளைவாக ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகெங்கிலும் அதிக கவலை நிலவுகிறது. இவற்றில், பல்லுயிரின இழப்பு, வளர்ந்து வரும் காடழிப்பு மற்றும்…
வாரிசாட்சி வழிகாட்டி ‘கியூபா’ – அண்டனூர் சுரா 

வாரிசாட்சி வழிகாட்டி ‘கியூபா’ – அண்டனூர் சுரா 

‘இது நானாக எடுத்து முடிவு. கியூபாவின் எதிர்காலம், அடுத்தத் தலைமுறை, இளைஞர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. எதுவொன்றும் இந்த முடிவை நோக்கி என்னைத் தள்ளவில்லை. நான் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், என் எஞ்சிய வாழ்நாட்களைக்…
கல்வி: தனிநபர் வளர்ச்சியல்ல, சமூக வளர்ச்சி – தீ.சந்துரு (இந்திய மாணவர் சங்கம்)

கல்வி: தனிநபர் வளர்ச்சியல்ல, சமூக வளர்ச்சி – தீ.சந்துரு (இந்திய மாணவர் சங்கம்)

கொரோனா பெருந்தொற்றை  எதிர்கொள்ள பல நாடுகளுக்கு தனது மருத்துவர்களை அனுப்பி  கியூபா  உதவிவருகிறது. பொது சுகாதாரத்தின் அவசியத்தையும் அதன் மருத்துவ உள்கட்டமைப்பின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் உலகிற்கே கியூபா வழிகாட்டுகிறது. ஏகாதிபத்திய பொருளாதார வழிமுறைகளான தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமலாக்கிய இந்தியா…
புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

கியூபாவும் அதன் மருத்துவர்களும் இன்றைய மோசமான கொரோனா நோய் தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவையாற்றிவருகின்றனர். இன்றுவரை மருத்துவத்திலும், கல்வியிலும், வாழ்நிலையிலும் முன்னிலையில் நிற்கிறது கியூபா. இத்தகைய வெற்றிகளுக்கு தனது தீராத முயற்சியால் தன் தாய் நாட்டிற்காக போராடி…
புரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி

புரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி

ஐ. நா. வின் மனித வள மேம்பாட்டு அளவையின்படி கல்வியில் கியூபா உலக நாடுகளின் முன்னணி வரிசையில், பின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அணிவகுத்து நிற்கிறது. அதன் மதிப்பெண் 1 க்கு 0.993 ஆகும். வயதுவந்தோர் எழுத்தறிவில் உலகில் இரண்டாம் இடம்;…