இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73 – சுகந்தி நாடார்
கல்வி ஏழ்மை
இன்றைய கல்வியின் துணைக்கருவிகளாக தொழில்நுட்பம் மிளிர்ந்து வருகின்றது. அன்றாடம் நடக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் கல்வியாளர்களுக்கு ஒரு சோதனையாகவும் சவாலாகவும் இருக்கின்றது,தொழில்நுட்ப மாற்றங்கள் கண்டிப்பாய் இலவசமாக நமக்குக் கிடைப்பதில்லை. கணினிக் கருவிகளாகட்டும் மென்பொருட்களாகட்டும் கல்விச்சூழலை இணைக்கும் இணைய இணைப்பு ஆகட்டும் அனைத்துமே நம்மில் பலருக்கு இன்றளவும் ஒரு ஆடம்பரச் செலவாகவே உள்ளது. கல்வி என்ற ஒரு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உபகரணங்கள் ஒரு குடும்பத்தின் ஆடம்பரச் செலவாக அமையும் போது அங்கே கல்வியின் நிலை என்ன கற்றல் கற்பித்தலில் நிலை என்ன? யோசித்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகின்றது.
உலக வங்கிகள் குழுமம் என்ற அமைப்பு வளர்ந்து வரும் நாடுகளின் கல்விநிலைக்கு பண உதவி செய்யும் அமைப்பாகும் IBRD(The International Bank for Reconstruction and Development) IDA(The International Development Association) IFC(The International Finance Corporation) MIGA( The Multilateral Investment Guarantee Agency) ICSID(The International Centre for Settlement of Investment Disputes) ஆகிய உலகின் மிகப்பெரு நிதி நிறுவனங்கள் ஐந்து இணைந்து பின்தங்கிய நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் கல்விக்கான மேம்பாட்டிற்கு உதவி வருகின்றன இக்குழுமத்தின் நோக்கம் 2030ம் ஆண்டுக்குள் உலக ஏழ்மையில் 3% குறைப்பதும் ஒவ்வோரு நாட்டிலும் 40% மக்களின் வருமானத்தை உயர்த்துவதும் ஆகும். உலகில் கல்வியின் தன்மையைக் கண்டறிய 10 வயதுக் குழந்தைகளுக்கு கதை சொல்லி அவர்களின் புரிதல் தன்மையை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகம் முழுவதும் கல்வி ஏழ்மை பாதித்திருக்கின்றது என்று அறிவிக்கின்றது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 50% ஏழைநாடுகளில் இந்து 83%விகிதம் என்றும் இவ்வறிக்கைக் கூறுகின்றது.
பேரிடர் காலத்தில் கல்விக்கு ஏற்பட்ட பல்வேறு தடங்கல்களால் இந்தக் குறைபாடு மேலும் 10% அதிகரித்து உள்ளது என்றும். இந்த அதிகரிப்பிற்குக் காரணம் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வே என்றும் இவ்வறிக்கைக் கருதுகின்றது.
உலகம் முழுவதும் இருக்கும் கல்வி ஏழ்மையைப் போக்க இருவழிகள் உண்டு என்று ஐநா சபைக் கூறுகிறது, ஒன்று கல்வி மேம்பாட்டிற்காக உலகின் மிகப்பெரிய கணினி நிறுவனங்கள் முன் வர வேண்டும். இரண்டாவது ஆசிரியர்களுக்கு இணையக் கல்வியில் ஆசிரியர்களுக்கு உதவியும் திறன் மேம்பாடு பயிற்சிகளும் கொடுக்கவேண்டும் இவை இரண்டுமே பொருளாதாரம் சார்ந்தது.
கல்வி ஏழ்மையைப் போக்குவதற்காக தங்கள் இலாபத்தை நிறுவன ங்கள் அரசாங்கங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுமா அப்படி நிறுவனங்கள் உடன்படிக்கை செய்துகொண்டால் அதில் அவர்களின் சுயநலம் எவ்வளவு இருக்கும்? கணினிக் கல்வி ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்று ஆனால் ஒவ்வோரு நாட்டின் தனித் தன்மையைப் பாதிக்காத வண்ணம் எவ்வாறு அமையும்? அதற்கான மூலதனம் என்ன?
இன்றையக் கல்வி என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல என்று சொன்னாலும் நம் பொருளாதார வளம் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி நம் கல்வியை சார்ந்து இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள வேண்டும் அதிலும் எதிர்காலப் பொருளாதாரம் முழுக்க முழுக்க கணினி சார்ந்தது எனும் போது தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வு கண்டிப்பாக தீர்த்து வைத்து வைக்க வேண்டிய ஒரு பிரச்சனை தான் ஆனால் தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசமாக இருக்கும் போது சரி செய்ய இயலுமா?
இன்று நிலைவும் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகளை தீர்க்கும் முயற்ச்சியில் முதல் படி கணினி பற்றிய விழிப்புணர்வு தான். என்ன மாதிரியான விழிப்புணர்வு?
நவீன உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் விட மிக மிக வேகமாக மாறி வருவதும் அசுர வேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு தொழில்நுட்பமாக கணினி தொழில்நுட்பம் இருக்கின்றது. அதிலும் தரவுகளின் சிறப்பான சீரான மேலாண்மையும், செயற்கை நுண்ணறிவும் இந்த வேகத்தை ஊக்கப்படுத்தும் உந்து சகதியாக இருக்கின்றன. இந்த உந்து சக்திகளில் மின் எண்ணியியல் செலாவணியும் சேர்ந்து கொண்டு இருக்கின்றது. செயற்கை கோள்கள் அன்றாடப் புழக்கத்திற்கு வரக்கூடியக் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நம் திறன்பேசிகளில், புகைப்படம் எடுத்து அதை பல கோலங்களில் கோணங்களில் மாற்றி அமைப்பது நமது பொழுது போக்கு என்றால் நம்மையே ஒரு திரைபப்டத்தின் நடடிகர்களாக மாறித் திரைப்படங்களை வெளியிட வைப்பது இன்றைய செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் கணினியால் உருவாக்கபட்ட முகத்தை நமக்கு விருப்பமான ஒருவரின் முகத்தைப் பொறுத்தி அந்த காணொலியில் அவர் இருப்பதாக பொய்யாக ஒரு தோற்றத்தை உருவாக்குக்கும் தொழில்நுட்பம் இணையத்திலும் அலைபேசிகளிலும் பிரபலம் அடைந்து வருகின்றது.
டீப் ஃபேக்ஸ் (deep fakes) என்று அழைக்கப்படும் உணரமுடியாத போலிகள் இன்னும் என்னெனென்ன தாக்கங்களை உருவாக்குமோ? ஏற்கனவே பல விஷமிகள் புக்சிப் மென்பொருகள் மூலம் பெண்களை பாலியியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவச்து என்பது ஒரு சமூகநலக்கேடாக இருக்கிறது. இப்போது காணோலியாக வெளியிடப்படும் இந்த மென்பொருளுக்கு ஏற்கனவே காண களியாட்டங்களைச்செய்யும். இணையதளப் பயனாளர்களிடையே பிரபலம் அடைந்து வருகின்றது.
அமெரிக்க தேர்தல் சமயத்தில் இது போல பொய்யான செய்திகள் உண்மை போல பரப்பப்பட்டன. சீனாவிலும் இந்தத் தொழில்நுட்பம் கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சீன செய்தியாளர்கள் சிறப்பான ஆமெரிக்க ஆங்கிலத்தில் பேசுவது போல தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மெரிக்க அதிபர் ட்ரம்ப். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல சமுதாயப் பிரச்சனைகளை மக்களிடம் நேரடியாக தனது கருத்தை தெரிவித்தார். அந்த செய்தியை அவருக்கு பதிலாக அவர் தனது சமூக வலைதலங்களையே பயன்படுத்தி நேரில் மக்களுடன் தொடர்பில் இருந்தார்.
சென்ற ஞாயிறுகூட இந்திய பிரதமரின் dividdar பாதிக்கப்பட்டது. வளைகுடா நாடான அமீரகத்தில் உலகிலேயே அனைத்துமே மின்னியியல் வழி செயல்படும் ஒரு நாடு என்று அரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு ஒரு மின்னியல் நாடாக மாறியதால் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏறத்தாழ 350மில்லியன் சேமிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்நாட்டின் இளவரசர் தெரிவித்தார். இவரது அறிவிப்பில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் மனித உழைப்பில் 14மில்லியன் மணி நேரங்கள் சேமிக்கப்படுகிறது என்பது தான்.
இவ்வாறு ஒரு நாட்டின் அரசியல் முடல் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம் வரை நம்மை ஆட்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தைப் பற்றிய என்ன விழிப்புணர்வு தேவை? கணினியையும் இணையத்தையும் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு கையாளுவது என்பதா? இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றதா?
ஒரு கல்வியாளராக நமக்கு கற்றல் கற்பித்தலுக்கான வளங்கள் மட்டுமன்றி கணினி உலகைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு மிகவும் தேவையாய் உள்ளது. கணினி உலகம் என்று சொல்லும் போது கணினியை இயக்குவது நிரல் எழுதுவது என்பதையும் தாண்டி அது எவ்வாறு நம் சுற்றுச்சூழலை நம் வாழ்க்கைத் தரத்தை, பண்பாட்டு சின்னங்களை, நம் தனித்துவத்தை, நமது அரசியல் சூழலை பாதிக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் நம் விழிப்புணர்வுக்குள் அடங்கும். துபாயில் உள்ளது போல அமெரிக்காவில் அனைத்தும் மிண்ணியியலாகும் வசதிகள் இருந்தும் இன்றுக் காகிதங்கள் பயன்பாட்டில் இருப்பதற்குக் காரணம் தங்களின் தேவை காகிதத்திலும் இருக்கலாம் என்ற ஒரு குடியாட்சி தன்மை இருப்பதால்தான். மற்ற நாடுகளை விட துபாய் முழுக்க முழுக்க எண்ணியியல் நாடாக அதிவிரைவில் மாறியதற்குக் காரணம் அது ஒரு ஏகாதிபத்திய நாடு. சீனாவும் இந்தியாவும் கூட இப்படித்தான். இந்தியாவில் கணினியாளர்கள் அதிகம் இருந்தும் சீனா இன்று கணினி உலகில் முன்ணனியில் இருக்கக் காரணம் இரு நாடுகளில் உள்ள ஆட்சி முறை அரசியல் கொள்கைகளின் வேறுபாடுதான். எனவே உலக நாடுகளின் அரசியல் அமைப்புக் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்மைச் சுற்றி பல தொழில்நுட்ப மாற்றங்கள். நிகழ்ந்து கொண்டே இருக்கிறன இந்த மாற்றங்களின் வேலைப்பாடு என்ன அதன் விளைவுகள் என்ன என்று சாமான்ய மக்களாகிய நாம் ஒரு தெளிவு அடையும் முன்னரே அதைப் பயன்படுத்தத் தள்ளப்படுகின்றோம். அதிவேகமாக ஒரு தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும் போது எதை இழக்கின்றோம்?
இன்று என்னைத் தெரியாத ஒருவர், எனக்குத் தெரியாத ஒருவர், ஒரு புலனக்குழுவில் என்னை சேர்த்தார் அது முதலீடு செய்வதற்கான ஒரு குழு, சரி அவர்கள் என்ன தான் சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம் என்று பார்த்தால் வரும் அறிவிப்புக்கள் ஒருவரை வினாடி நேரம் கூட யோசிக்க விடாமல் உடனடியாக செய்ய வேண்டிய செயலாக இருக்கின்றன. உதாரணத்திற்கு எண்னியியல் செலவாணியில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் 1000$ முதல் 10,000$ வரை சம்பாதிக்க இயலும் ஆனால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். அதுவும் அடுத்த 180 வினாடிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
பதிவு செய்து பணத்தை இழந்து விட்டால் நீங்கள் மீண்டும் 1500, 3000, 5000, 12000 என்றத் தொகைகளில் முதலீடு செய்து ஒரு முதலீட்டாளராக மறு அவதாரம் எடுத்துக் கொள்ளலாம் என வருகின்றது. அக்குழுவில் இருப்பவர்கள் இச்செய்தியைப் படித்ததும் என்ன நினைப்பர்? அவருக்கு உடனடிப்பணத்தேவை இருந்தால் அவர் செய்தியைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக அச்செய்தியில் வரும் விவரங்களைச் செய்வார்தானே? அதே சமயம் சங்கேத செலாவணி பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் இருந்தாலும் செய்தியை பற்றி ஒரு சில வினாடிகளாவது யோசிப்பார் தானே?
அந்த யோசித்தலுடன் தனக்கு வரும் செய்தியை கொஞ்சம் ஆழமாகப் படித்தால் கொடுக்கப்பட்ட செய்தியின் உள் விவரம் ஒரு சூதாட்ட விளையாட்டைப் போலவோ அல்லது ஒரு குதிரைப் பந்தயத்தைப் போலவோ இருக்கின்றதே என்று யோசித்து ஆராய்ந்து செயல்பட முயற்சிக்கலாம் அல்லவா? இதைத் தான் நாம் விழிப்புணர்வு என்று சொல்கின்றோம்
ஆனால் இன்று அதிலும் ஒரு பிரச்சனை இருக்கின்றது. வினாடிக்கு ஆயிரம் ஆயிரமாக நம்மை நோக்கி வரும் செய்திகளில் எப்படி உண்மையைக் கண்டுபிடிப்பது பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்திகள் சேகரிக்கப்படுவது போல இன்று செய்திகள் சேகரிக்கப்படுவதில்லை. பல செய்திகள் சமூக வலை தளங்களிலும் ஒரு தனி மனிதரின் இணைய அறிவிப்புப் பலகைகளான twitter instagram ஆகியவற்றில் வெளியாகும் செய்திகள் தொகுக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் சமூக வலைதளங்களில் இடும் செய்தி பொய்யா மெய்யா என்று நமக்குத் தெரியாது. உண்மையில் செய்தியை இடுவதும் அவர் தானா என்பதும் நமக்குத் தெரியாது. நம்மால் சரிபார்க்க இயலாத செய்திகளை ஏற்றுக் கொள்வதும் மூடநம்பிக்கைக்கு சமம் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
கற்றலில் ஏழ்மை என்பது கற்றலுக்கான கணினி வசதிகள் மட்டுமல்ல, ஒரு உயரிய மனித வளத்தை உருவாக்கக் கூடிய கல்வி வளங்களின் பற்றாக்குறையும்தான் இதை சீர் செய்யக்கூடிய கல்வி வளங்கள் எங்கே இருந்து வரும். நமக்கு கிடைக்கும் செய்திகளில் இருந்து தானே? நம்மால் சரிபார்க்க இயலாத செய்திகளை வைத்து நம்மால் ஒரு சரியான கல்வி வளத்தைத் தயாரிக்க முடியுமா?
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 68(கல்வியில் கணினி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 69(கல்வியின் எதிர்காலம் கணினியா?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்