கவிதை: விவசாயிகள் போராட்டம் – மு.பாலசுப்பிரமணியன்

கவிதை: விவசாயிகள் போராட்டம் – மு.பாலசுப்பிரமணியன்

உழுது விதைத்து அறுத்தவன் இன்று அழுது போராட வைப்பதா -அட தொழுது கிடந்திட துயரம் அடைந்திட பழுதுகள் இப்படி நடப்பதா தலைநகர் சாலைகள் தலைகளின் காட்சி நிலைமையோ மோசம் பாரடா -அவர் இலையெனில் இங்கே இல்லை சோறுதான் உலையெங்கே கொதிக்கும் கூறடா…
கவிதை: *ஆறு பூதம்* – ஜே.ஜே.அனிட்டா

கவிதை: *ஆறு பூதம்* – ஜே.ஜே.அனிட்டா

ஆறு பூதம் -------------------- ஏரு கலப்பை உழுத நெலங்களில் சோறு வெளஞ்ச தேசத்துல காடு மழை தாண்டி நியாயங்கேட்டு ஆறு போல கடந்து வரோம். சேரும் கடல் எது சாமி..? கோதுமைக்கும் கோவணத்துக்கும் வாக்கப்பட்ட குலம் கூடி வாதைகள தீர்க்கச் சொல்லி…
கவிதை: கைகளைக் கழுவ விடுங்கள் – உமா மோகன்

கவிதை: கைகளைக் கழுவ விடுங்கள் – உமா மோகன்

கைகளைக் கழுவ விடுங்கள் நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள் நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள் அவுரி கண்ட மண்ணுக்கு ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது நகரும் கால்களில் உங்களுடையது நான்காமிடமோ நாற்பதாமிடமோ உடைமை என்பதே பெருஞ்சுமை அதை இறக்கத்தானே இத்தனை…
இராம. பெருமாள் ஆச்சி கவிதை

இராம. பெருமாள் ஆச்சி கவிதை

இயற்கை மயமானவர்கள் இயந்திரமென உழைப்பவர்கள்.. இறுகிய தோள்களை உடையவர்கள் இளகிய மனங்களாகப் பூப்பவர்கள். மண்ணைக் கிளறுபவர்கள் விண்ணை நம்புபவர்கள்.. அரசியல் ஆழமறியாதவர்கள் அரையாடை மனிதர்கள்.. அழுக்கு முகங்களின் அழகர்கள்.. வழக்கு வாழ்வியலின் அச்சாணிகள்.. உழைப்பைத் தவிர ஒன்றுமறியாதவர்கள்.. பிழைப்பைப் பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்..…
கவிதை: பயிர் பேசுது – ஆதிரன்

கவிதை: பயிர் பேசுது – ஆதிரன்

தலைநகரின் மருத்துவமனைகளில் பெருங்கூட்டம்! அய்யோ அம்மாவென்று அலறுகின்றன ஊடகங்கள்! அதிபர் துணைஅதிபர் ஆளுங்கட்சியினர் அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு நோயாம்! மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கைகள் வந்தன. அதிபருக்கானது முதலில்! "பெருங்குடலில் வேர்விட்டு வளர்கிறது தக்காளிச் செடியொன்று. அறுவைச் சிகிச்சை அவசியம்" -ஆதார விலையில்லாமல்…
கவிதை: உழவர் பேரணி – சிற்பி பாலசுப்பிரமணியம்

கவிதை: உழவர் பேரணி – சிற்பி பாலசுப்பிரமணியம்

உழவர் பேரணி ————————- நாங்கள் வருகிறோம் நாட்டின் பசியை நீக்கும் உழவர்கள் நாங்கள் வருகிறோம் எழு கதிரோடும் மழை முகிலோடும் பிறந்தவர் நாங்கள் அழகிய மண்ணைத் தாயின் மடியாய் அணைத்தவர் நாங்கள். (நாங்கள்) ஏர்முனை என்னும் எழுத்தாயுதத்தை மண்ணில் நாட்டுவோம் வேரபிடித்…
கவிதை: இன்குலாப் ஜிந்தாபாத் – திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

கவிதை: இன்குலாப் ஜிந்தாபாத் – திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி

இன்குலாப் ஜிந்தாபாத்  ஓர் அரசு காணிகளின் விளைச்சலை கார்ப்பரேட் பத்தாயங்களில் கொட்ட நினைக்கும் கொடுங்கோண்மையைப் பார்த்தபிறகும் வீதிக்கு வருவதன்றி வேறுயேதும் வழியுண்டோ விவசாயத் தோழனுக்கு? புழுதிபடிந்த ஏழைகளின் போராட்டத்தைக் கலைக்க நீரைப் பாய்ச்சும் நிர்மூடர்கள் அதே தண்ணீரில் தங்கள் ஆணவ அழுக்குகளைக்…
குமரன் விஜி கவிதை

குமரன் விஜி கவிதை

என் உணவு என்னோடு பேசுகிறது மறுக்க முடியவில்லை; ஒரு சில நொடியில் நீ விழுங்கும் ஒரு பிடி கவளத்தில் பாடுபட்டவனின் பல நாட்களை எளிதாய் விழுங்குறாய் உனக்கென்ன கவலை பரவாயில்லை நீ விழுங்கு என்கிறது உணவு சோற்றை பிசைய முடியவில்லை. இரவெல்லாம்…