சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் | Planet Destruction | Asteroid impact and extinction | எரிமலை | இரிடியம் | விண்கல் - சிறுகோள் - https://bookday.in/

சிறுகோள்கள் வீழ்ச்சியும், உயிரின அழிவும் (Planet Destruction)

சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் கடந்த 539 மில்லியன் வருடங்களில் இருந்து  பூமியில் பலமுறை வெகுஜன அழிவுகள் (mass extinction) நடந்திருக்கிறது. இதில் இறுதியாகவும் பரிணாம வரலாற்றில் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்திய ஒன்று தான் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் (Cretaceous/Palaeogene) அழிவு அல்லது KP-G…
ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதா? (Has RSS adopted the national flag Malayala deshabhimani article translated in tamil) - https://bookday.in/

ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதா? – ஸ்ரீகுமார் சேகர்

ஆர்.எஸ்.எஸ் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதா? - ஸ்ரீகுமார் சேகர் இன்று  ஆகஸ்ட் - 15 சுதந்திர தினம். ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா'  என்ற திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர…
ஹிரோஷிமா தினம்: போர்களின் எச்சங்கள் | Hiroshima Day | Atomic bombings of Hiroshima and Nagasaki | Israeli – Palestinian conflict | Gaza - https://bookday.in/

ஹிரோஷிமா தினம்: போர்களின் எச்சங்கள்

இன்று ஆகஸ்ட் 6 - "ஹிரோஷிமா தினம்". வரலாற்றில் நிகழ்த்த பெரும் சோகமான நாளாக இது அறியப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு மனிதநேயத்திற்கு எதிரான ஹிரோஷிமா தினத்தின் இரட்டை சகோதரர் வருவார். அது வேறு ஒன்றும் இல்லை "நாகசாகி தினம்". ஹிரோஷிமாவில் நடந்தது வரலாற்றில் முதல் அணுகுண்டு வீச்சு ஆகும் . 1945 ஆம்…
Friedrich Engels (ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்) : Immortal Symbol of Communist Brotherhood (கம்யூனிச சகோதரத்துவத்தின் அழியாத அடையாளம்) | ஏங்கல்ஸ் என்பவர் யார்? | ஏங்கல்ஸ் வரலாறு - https://bookday.in/

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்: கம்யூனிச சகோதரத்துவத்தின் அழியாத அடையாளம்

  குளிர்காலத்தில் ஒரு நாள் 1852 நவம்பர் 18ஆம் தேதி மத்திய லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ள ட்டரபல் கார் ஸ்கொயர் பகுதிகள் முழுக்க ஓயாத மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தது. பிரதமராக இருந்த வெல்லிங்டன் பிரபுவின் இறுதி…
சி.டி.குரியன் - இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர்: பிரகாஷ் காரத் | Prof. C.T.Kurian - inspired by Leftist Thoughts : Prakash Karat - https://bookday.in/

பேராசிரியர் சி.டி.குரியன் – இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர்

பேராசிரியர் சி.டி.குரியன் - இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர்   பிரகாஷ் காரத் தேசாபிமானி   தனது தொன்னூற்றி மூன்றாவது வயதில் காலமான பேராசிரியர் சி.டி.குரியன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக, ஆசிரியராகத் திகழ்ந்தவர். அவருடைய வாழ்வும், பணியும் முற்போக்கான சமூக மாற்றத்திற்கான ஆழ்ந்த…
Deshabhimani (தேசாபிமானி) Poetry By S. Perinba Rajan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam. தேசாபிமானி - சி.பேரின்பராஜன்

தேசாபிமானி – சி.பேரின்பராஜன்



தேசாபிமானி…

“மந்திரி.. முரசம் எங்கே…”
கிழிந்து விட்டது மன்னா…

“தீவிரவாத சதி”.. செய்திபரப்பு..

“கவசம் எங்கே…”
“காணாமல்” போக்கி விட்டோம் மன்னா..

“அமைதிக்கான முன்னெடுப்பு”
தலைப்புச் செய்தி கொடு

*பட்டத்து யானை எங்கே…*
பசியில் தானாக போய்விட்டது மன்னா…

“சிக்கன நடவடிக்கை” .. பேட்டி கொடு.

“நம்மைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்… ”
பலர் குழப்பத்திலும் விரக்தியிலும் இருக்க..
சிலர் மட்டும்
கூவுகிறார்கள் மன்னா..

கூவுபவனை தேசவிரோதி என அறிவி…

“ஊர்தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்…”
சிலர் பெருமை பேச..சிலர் உரிமை கேட்கிறார்கள் மன்னா..

பெருமை முகத்தில் சேறு பூசு..
உரிமை கேட்டவன் ஊர்சபையை விலை பேசு..

மன்னா… புல்லரிக்கிறதே…
தங்கள் குறுமதி கூர்மதியானதன் ரகசியம் என்ன…

சிறுமதிக் காரனே
செய்ததைக் கேளடா….
சாணக்யணிடம் சாணை பிடித்தேன்-
குறுமீசைகாரனின்
குற்றங்கள் பயின்றேன்..

கோயபல்ஸை சிந்தையில் நிறுத்தி..
பாஸிஸத்தில் விந்தை கற்றேன்..

மந்திரி…
அழுத்தப்பட்ட பந்துதான் மேலெழும்பும்..
இழுக்கப்பட்ட அம்புதான் விசையெடுக்கும்..
என் தேசமுன்னேற்றத்தை
விரைவுபடுத்தவே இத்தனையும் செய்கிறேன்…
நம்பு… நான் ஒரு

“தேசாபிமானி…”

– சி.பேரின்பராஜன், கரூர்.