சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது கட்டுரை – அ.பாக்கியம்

சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்புகளைத் தருகிறது கட்டுரை – அ.பாக்கியம்




இந்த ஆண்டு நாட்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸ் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Xi Jinping 20வது CPC தேசிய காங்கிரஸிற்கு தனது அறிக்கையில் “வளர்ச்சி” பற்றி 100 முறை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு புதிய வளர்ச்சி முறையை உருவாக்குவதையும், விரைவுபடுத்துவதையும், உயர்தர வளர்ச்சியைப் பின்பற்றுவதற்கும் சீனாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

நாட்டின் புதிய வளர்ச்சித் தத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகவும், உண்மையாகவும் பயன்படுத்தவும் வேண்டும்.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத தொடர வேண்டும்.

உயர்தரத் திறப்பை (high-standard opening-up,) ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையில் புதிய வளர்ச்சி வடிவத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி அழைப்பு விடுத்தார்.

இவை அனைத்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார ஓட்டங்களுக்கு இடையே நேர்மறை தொடர்புகளை கொண்டுள்ளது.

உலகத்திற்கான வாய்ப்புகள்:

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த 10 ஆண்டுகளில் 54 டிரில்லியன் யுவானில் இருந்து 114 டிரில்லியன் யுவானாக வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாக உள்ளது. இது 7.2 சதவீத புள்ளிகள் அதிகரித்து வருகிறது என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

2013 முதல் 2021 வரையிலான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சராசரியாக 38.6 சதவீதம் வரை சீனா பங்களித்துள்ளது என்றும் இது ஒட்டுமொத்த ஜி 7 நாடுகள் வளர்ச்சியை விட அதிகமானது என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NBS) வெளியிட்ட விவரங்கள் அடிப்படையில் தெரிவித்தார்.

தற்போதைய COVID-19 தொற்றுநோய், முதலாளித்துவ நாடுகளால் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், உலகமயமாக்கலுக்கு எதிராக குறிப்பாக சீனாவுக்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காக, சீனா தனது புதிய “இரட்டை சுழற்சி” வளர்ச்சி முறையை வெளியிட்டது.

உள்நாட்டு சந்தையை பிரதானமாகக் கொண்டு அதே நேரத்தில் வெளிநாட்டு சந்தையை பலப்படுத்தக்கூடிய முறைகளைக் கையாண்டு தற்காத்துக் கொண்டது.

சீனாவின் புதிய வளர்ச்சி முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் உள்ள வளர்ச்சி வளையம் அல்ல.

வெளி உலகிற்குத் திறக்கும் அதன் அடிப்படை தேசியக் கொள்கைக்கு சீனா என்றும் உறுதிபூண்டுள்ளது. பரஸ்பர நன்மை பயக்கும் திறப்புக் கொள்கையை கடைபிடிப்பதில் சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் ஜி கூறினார்.

“அதன் சொந்த வளர்ச்சியுடன் உலகிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அனைத்து மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்கும் திறந்த உலகளாவிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தனது பங்களிப்பை வழங்கவும் சீனா பாடுபடுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

உயர்தர திறப்பு:

ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை சீனா பல மடங்கு உயர்த்தி உள்ளது. 82வழித்தடங்களுடன், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில்கள் இப்போது 24 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 200 நகரங்களை இணைத்துள்ளது.

ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் பயணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்ந்து.

மொத்தம் 1.02 மில்லியன் TEU(twenty foot equivelent unit) சரக்குகள்(containers) கொண்டு செல்லப்பட்டன.

இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சீனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ., லிமிடெட் வழங்கிய தரவுகளை குறிப்பிட்டார்.

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இன்றைய நூதன இராணவக் கருவிகள்? நாளைய நிதர்சனம்? நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செய்திகள், கல்வி 4.0க்கான நம்முடைய இந்த ஆய்வின் பயனாளிகளை அடையாளம் காண உதவுகின்றது மெலோட்டமாக . நம்முடைய ஆய்வின் பயனாளிகளாக , கணினி, மனிதர்கள் என்று இருபிரிவு…

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்




தொன்மக் காலத்து இயற்கை மாற்றங்களால் உருவான புவி வெப்பச்சலனத்திற்கும், நம்முடைய இன்றைய வெப்பச்சலனத்திற்கான ஒப்புமையை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கல்வியாளர்களின் பணி தொழில்புரட்சிக் காலத்திற்கும் இன்றைக்கும் மாறி விட்டதை உணர முடிந்தது. பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கே தவறு செய்து விட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

புத்தாக்கச் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டுமானால் அது கல்வியாளர்களால் மட்டுமே முடியும் என்றப் புரிதல் ஏற்பட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதையாய், நம்முடைய முந்நூறு நூற்றாண்டு கண்டுபிடிப்புக்கள் பல நம்முடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வாழும் வழிகளை மாற்றி அமைத்து இருந்தாலும், நம்முடைய அடிப்படை வாழ்வாதாரமான புவியைப் பற்றிய சிந்தனை இல்லாத கண்டுபிடிப்புக்கள் இன்று நம் அடி மடியிலேயே கை வைத்துவிட்டன.

அதே நேரம் நம்முடைய பொருளாதார நடவடிக்கை ஒவ்வொன்றும் கணினியைச் சார்ந்ததாகிவிட்டது கணினிசார் வாழ்க்கையில், இன்று இருக்கக்கூடிய பொருளாதாரம் இலாபம் சார்ந்த எந்த ஒரு தொழில் முனைப்புகள் நீடித்து இருக்கும் ஒரு புவி என்பதை தங்களுடைய தொழிலின் அடிப்படையாக கொண்டே செயலாற்றவேண்டும். இது ஒரு மேடைப் பேச்சாகவோ, மனித உணர்வுகளைத் தூண்டி தங்கள் செய்தி நிறுவனங்களின் விளம்பர வருவாயைப் பெருக்கக்கூடிய அன்றாடம் அடிக்கொரு தொலைக்காட்சியில் மிதந்து வரும் செய்திகளாக மட்டுமே இருந்து விடக்கூடாது.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

கணினிசார் உலகில், இயந்திரங்களே தொழிலாளர்களாக வேலை செய்யும், காலக்கட்டத்தில், அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும்முறை, நாம் வாழும் புவியின்மேல் நாம் காட்ட வேண்டிய அத்தியாவசிய அக்கறை இவற்றை நாம் ஒரு உணர்வு பூர்வமாகப் பார்க்கும்போது ஒரு தார்மீகப் பொறுப்பாக மட்டும்தான் தெரியும். ஆனால் தற்போதைய தரவுகளின் உலகத்தில் தரவுகளை ஆராய்ந்து நாம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்துப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒரு நல்ல குடிமகனாக இப்பொறுப்புணர்ச்சி அனைத்துத் துறையில் இருப்பவர்களுக்கும் பொது என்றாலும், கல்வித் துறைக்கு இப்பொறுப்பின் பளு அதிகமாகத்தான் உள்ளது. உலக நிகழ்வுகள் மட்டுமன்றி இயற்கையையே சீர் படுத்தவேண்டிய ஒரு அச்சாணியாகக் கல்வித்துறை திகழ்கிறது. ஆசிரியர்கள் ஆனாலும் சரி மாணவர்களானாலும் சரி இந்தப் பொறுப்பை எந்த அளவிற்கு உணர்ந்திருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடாய் நம்முடைய அன்றாட வகுப்பறை பாடங்கள்.

நம்முடையப் பாடங்கள் தொழில் புரட்சி காலத்தில் ஒரு தனி மனிதன். உயர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வோரு துறை வாரியாக நமது பாடங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தாலும் தரவுகளின் ஆராய்ச்சியினாலும் சமூக வலைதளங்களில் தனி ஒருவரின் ஆளுமையினாலும் நம் ஒவ்வோருவரின் செயல்பாடுகள் பாடப் புத்தகங்கள் வகுப்பறை மதிப்பெண்கள் என்ற எல்லையைத் தாண்டி வெட்டவெளியில் அனைவருக்கும் எந்நேரமும் கிடைக்கக் கூடிய தரவுகளாக உள்ளன. அதனால் நமது செயல்பாடுகளின் பக்க விளைவுகள் பின் விளைவுகள் பல்வேறு கோணமாக ஆராயப்படுகின்றன. அப்படி ஆராயப்பட வேண்டியத் தேவையும் உள்ளது.

அப்படி ஆராயப் படக்கூடிய பொருண்மைகளாக நமது பாடநூல்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்க்கவேண்டும். கல்வி 4.0 என்பது கணினிசார் வாழ்க்கைமுறைக்கான கல்வி என்பதோடு, கணினியோடு இயந்து வாழும் வாழ்க்கைமுறை என்பதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். கணினிகள் மனிதனின் உதவியாளராக மட்டுமல்லாமல், மனித வளத்திற்கும் போட்டியாகவும், மனிதனின் சிந்தனையை அச்சிந்தனை சார்ந்த செயல்முறையை நடத்திச் செல்லும் ஒரு அதிமுக்கியக் காரணி என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடப் பொருண்மை ஆகிய ஆராய்ச்சிக் கூறுகளை கணினி என்ற அளவு கோலைக் கொண்டு நாம் மதிப்பிடவேண்டும்.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

எந்த ஒரு ஆராய்ச்சியிலும் உள்ள நான்கு முக்கிய கூறுகளை நாம் புரிந்து கொண்டால் கல்வி 4.0 கொள்கைகளை நம் ஒவ்வொருவரின் தனித்தனித் தேவைக்கு ஏற்ப புரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல் இரண்டு Objective and Subjective analytics. Objective analysis என்பது உணர்வுகளை சார்ந்தது. ஆராய்ச்சியாளரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு ஆய்வு இது. அகவழி ஆய்வு எனவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். Objective analysis என்பது புறத்தில் ஆய்வாளர் சேகரிக்கும் புள்ளி விவரங்களை சார்ந்தது. உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்கும், காலக் கட்டத்திற்கும் தேவைக்கும் ஆராய்ச்சியின் பொருண்மைக்கும் தேவையான விவரங்களை அறிவியியல் பூர்வமாக நிரூபிக்க உதவும் புள்ளி விவரங்களைக் கொண்டது.

பொது முறை ஆய்வு என்று அறியப்படும் இவ்வாய்வு முறை, ஒரு யதார்த்ததைப் புரிய வைக்கக் கூடியது ஐக்கிய நாடுகளின் கல்வி 4.0 கொள்கை பல்வேறு புள்ளி விவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொதுமறை ஆய்வின் விளைவாக உருவானது என்றால் கல்வி என்பது, ஒருவரின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. கல்வி என்ற பொருண்மை அகவழி ஆய்விற்கு ஏற்றதாகும். கல்வி 4.0 ஆய்வுப் பொருண்மையின் அடுத்த இரண்டு முக்கியக் கூறுகள், dependent variable and Independent variable. Variable என்றால் ஒரு ஆராய்ச்சியில் மாறிக் கொண்டே வரும் ஒரு கூறு (மாறி) Dependent variable என்றால் சார்பு நிலை மாறி என்றும். Independent variable என்றால் சார்பற்ற மாறி என்றும் அகராதி கூறுகின்றது. நாம் இதை ஒரு தன்னிச்சை மாறி என்றும் புரிதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.

கல்வி 4, 0 பற்றிய நமது ஆய்வில் கணினி என்பதற்கு சார்பற்ற மாறி (independent variable) என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடத்திட்டங்கள் பொருளாதாரத் தேவைகள் மனித வளம், புவியின் அழிவைத் தடுத்தல், இயற்கை வளங்களைக் காத்தல் என்பவற்றை சார்பு நிலை. மாறிகளாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். புழக்கத்தில் இதுக்கும் பலவகைப் பாடத்திட்டங்களை இன்றைய உலக நிகழ்வுகளோடு பொறுத்தி, நம்முடைய. இரு வகை மாறிகளையும், அக வழி ஆய்வாகவும் பொதுமுறை ஆய்வாகவும் நாம் அடுத்துப் பார்க்கலாம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 – சுகந்தி நாடார்

தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith Jarvis Thomson இருவரும் தத்துவஞானிகள் மட்டுமே. மனித மனம் எவ்வாறு சிந்திக்கின்றது ? மனித சிந்தனையில், மனிதனின் ஒழுக்க நெறி (உசனம் ethics)பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகவே தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சனையை ஒரு பொறியாளரிடம் கொடுத்து இருந்தால், அவர் அந்த இரயிலை எப்படி நிறுத்த முடியும் என்று சிந்தித்து இருப்பார் தானே? ஒரு சட்ட அறிஞரிடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருக்க சட்டப்படி வழி செய்வார்தானே? ஒரு மருத்துவரோ விபத்து நேர்ந்தால் என்னென்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசிப்பார், இப்புதிரை ஒரு மொழியாளரிடம் கொடுத்தால் விபத்து பற்றிய காரண காரியங்களை ஆராய்ந்து அதை பிறரோடு பகிர்ந்திருப்பார். மற்றக் கலைஞர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப இப்பிரச்சனையை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு பொருளாதார வல்லுனரிடம் கொடுத்தால் அவர் விபத்தின் பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வார்.

இந்தப் புதிரை விடுவிக்க ஒவ்வோரு துறையினரும் ஒரு குழுவாக முயலும்போது, நல்விளைவுகளைப் பெருக்கவும், தீய விளைவுகளைக் குறைக்கவும் முடியும்தானே? நாம் இன்று அப்படித்தான் செய்து வருகின்றோம். ஆனால் குழுவில் செய்தாலும் புரிதல் குறைவு நேரம் கடத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம், இந்த நேரக் கடத்துதல் பிரச்சனைதான் சர்வவல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை நமக்குக் கொடுக்கின்றது.

நாம் வாழும் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்றது. புவி அழிய முடியுமா என்ன? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் dinosaurs (பெருத்த தொன்ம ஊருமினம்) வாழ்ந்து வந்ததாக தொல்லியியல் ஆராய்ச்சியில் கிடைத்த அவ்விலங்குகளின் எலும்புகள் சாட்சி கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அந்த விலங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லவே இல்லை.

அன்றையக் காலத்து உயிரின அழிவில் ஏறத்தாழ 75% அழிந்துவிட்ட காரணத்தால் இந்த பெருத்த தொன்ம ஊருமினம் மரபின்றி அழிந்து விட்டது(extinct) முழுமையாக அழிந்துவிட்டது என்றும் கூற முடியாது. பறவைகள் பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) வழித் தோன்றல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பேரழிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 1980களில் கண்டுபிடிக்கப்பட ஒரு உண்மை காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றத்தால் greenhouse effect உருவாகி மூச்சுவிடக் காற்று இல்லாமல் உயிரனங்கள் அழிந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

அப்படி அழிந்து போகக் காரணம் பூமியின் தட்பவெப்பநிலைதான். 2015ம் ஆண்டு Temperature of Earth என்ற தலைப்பில் எழுதப்பட்ட இணையக்கட்டுரையில் Jerry Coffey என்பவர் புவிக்கோளத்தின் சராசரி தட்பவெப்பநிலை 15 0c அல்லது 590 F என்கின்றார். பூமியின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது புவியில் உயிரினங்கள் வாழ இயலாமல் போய் விடும். பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) காலத்தில் மிகப்பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், அதிலிருந்து வெளிவரும் கரிமல வாயு புவியை சூழ்ந்துபுவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. 

10 கிமி விட்டம் கொண்ட ஒரு புவியின் அதிர்ச்சியில் உருவான பெரிய பெரிய எரிமலைகளும், நிற்காது தொடர்ந்த காட்டுத்தீக்களும் சூழ்நிலையில் உள்ள கரியமில வாயு அதிகரிக்கக் காரணமானது விண்கோள் புவியைத் தாக்கியதால் எழுந்த கந்தகப்புகையும் கரியமில வாயுவும் புவியிலிருந்து 75% உயிரினங்கள் இறக்கக் காரணமாகிவிட்டன. இப்புகைகள் சூரியனையே பல்லாண்டுகள் மறைத்து உலகின் உறைபனிக்காலம் உருவாகியது. இந்த இரண்டு காரணங்களாலும் உயிரினங்கள் வாழ இயலாமல் மடிந்தே போயின. அப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை நோக்கித்தான் நாம் இப்போது சென்று கொண்டு இருக்கின்றோம்.பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) அழிந்த காலத்தில் புவியின் தட்பவெப்பம் 50 C/410 Fஉயர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. 1880 களிலிருந்து புவி ஒவ்வோரு பத்தாண்டுக்கும் 0.080C/0.140 F உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் 0.18° C/0.32° F தட்டப்வெட்பநிலையைப் பற்றிய தளமான https://www.climate.gov ல் ரெபெக்கா லின்ட்ஸி என்பவரும் லுயன் டால்மென் என்ற இருவர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நாசா இன்று தனது இணையதளத்தில் கூறுவதாவது, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு ஏறக்குறைய 250p/million. 1950களில் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு 300p/million. ஆனால் தற்போது கரியமிலத் துகள்களின் அளவு 450 p/million, நாசா மேலும் அறிவுறுத்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக ஆகவே இருந்திருக்கிறது. 

நனது பாடத்திட்டங்களில் மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா என்ற அளவீடு எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகின்றது. தொழில் புரட்சிக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய கண்டுபிடிப்பு கணினி. தொழில்புரட்சிக்காலத்தில் புத்தாக்க கருத்துக்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நாம், அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் விட்டதன் விளைவே பூமி அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற அச்சுறுத்தலுக்குக் காரணம். 

அப்படி இருக்க நம்முடைய பாடத்திட்டம்,  மனிதாபிமான உணர்வுகளையும் விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் கருணை அன்பு விட்டுக் கொடுத்தல் என்று நீதிக் கதைகளை மட்டும் சொல்லாமல், நம் புவியைக் காக்க வழி சொல்லும் விதமான விவரங்களைக் புவியை பாதுகாத்து வளப்படுத்தும் அறிவையும், விழிப்புணர்வையும் அதை செயலாற்றும் வழி முறைகளையும் கொண்டதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும். இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் பெற்ற ஒருவர், செயலாற்றும் முன் அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் அவர் ஒரு சர்வத்துறையிலும் வல்லமை பெற்றவராகத்தானே இருக்க வேண்டும் ?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 – சுகந்தி நாடார்

மாணவர்களின் வல்லமை

மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).

நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்? 

மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா? 

மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா?  என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை  என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.

மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.

ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.

இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்? 

ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?

நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 78th Series by Suganthi Nadar. Book Day. Capitalism இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78 - அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78 – சுகந்தி நாடார்



அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?

இன்றைய உலகில் ஒருவர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள கல்வி நிலையம் செல்வது அவசியம் என்றக் கொள்கையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கல்வி நிலையங்களும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சார்ந்த  செய்திகளை மாணவர்களுக்கு பல விதங்களில் கொடுத்து அந்த விவரங்களிலும் செய்திகளிலும் வல்லவராக இருப்பவரை  வல்லுனர் என்று அழைக்கின்றது. அப்படி கல்விநிலையங்களுக்கு சென்று கல்வி கற்காதவர்கள் அதிக அளவுப் பொருள் ஈட்டினால் அவர்களை நாம் வெற்றியாளர் என்று  போற்றுகின்றோம்.

 பலபலப் பட்டங்கள் பெற்றவர்களும்  நிலையான வருமானமும் மட்டுமே வெற்றியை அடையாளப்படுத்தும் என்பது உண்மையானால் இன்று உலகத்தில் பசியும் பிணியும் ஏழ்மையும் இருக்கவே கூடாதே அதுவும் முக்கியமாக  நம்நாட்டில்.

 கல்வியால் வெற்றி என்று நம்பி நாம் அனவருமே நம் மாணவச்செல்வங்களின் கல்விக்காக எவ்வளவு  மூலதனத்தை வாரி இறைக்கின்றோம். இத்தனை மூலதனத்தின் விளைவாக ஒருவர் பெறும் கல்வி, அவரது வாழ்க்கை முழுவதும் உழைத்தால் மட்டுமே அவருக்கு ஒரு வளமான எதிர்காலத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நிலை நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இப்படித்தான் இருகின்றது. அமெரிக்காவில் ஆசிரியர்களாக பணிபுரியப் பெறும் கல்விக்கடனை  ஒருவர் தீர்க்க அவரின் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும். ஆசிரியர் கல்வி என்று இல்லை. பள்ளி வகுப்பு முடிந்து கல்லூரி என்று காலடி எடுத்துவைக்கும் போதே கடனோடுதான் கல்லூரிக்குள் நுழைகின்றனர். தமிழ்நாட்டில்  மாணவர்களின் பெற்றோர் கல்விக்காக கடனாளிகளாகின்றாரகள் என்றால் அமெரிக்காவில் ஒவ்வோரு மாணவரும் கடன் வாங்கியே கல்லூரிக்குள் நுழைகின்றனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகும் கல்லூரிக்கல்வி அவர்களின் பட்டத்தோடு கடன் சுமையும் கொடுத்தே கல்லூரிகள் மாணவர்களை வெளியே அனுப்புகின்றது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு  91 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவில் மாணவர்களின்  கல்விக்கடன் உள்ளது என்றும்  ஒரு சராசரி அமெரிக்கரின் வாழ்வில் வீட்டு அடைமானத்திற்கு அடுத்ததாக ஒருவரின் கல்விக்கடனே ஒரு பொருளாதாரச் சுமையாக  இருக்கின்றது என்று Education data என்ற  தளம் புள்ளி விவரம் கொடுக்கின்றது. இன்றையக் கல்விக் கொள்கைகள் நிச்சயமாகப் பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் ஒரு அறிவியல் சான்றாக விளங்குகின்றது.

அப்படியானால் யதார்த்தத்தில் கல்விநிலையம் என்பது எப்படி இருக்க வேண்டும் ஒரு கல்விநிலையம் என்பது குழந்தைகள் தங்களைப் பற்றிய ஒரு ஆனந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஏடுகளிலேயே இருக்குமா? அல்லது கல்வியும் கல்விநிலையங்களும் மாணவர்களின் அன்றாட அனுபவங்களின் நீட்சியாக இருக்குமா?

தமிழ் நாட்டில் பத்தாம் பன்னிரெண்டாம் மாணவர்களில் 90% மாணவர்களின் அன்றாட வாழ்க்கையே அதிகாலை 5 மணியிலிருந்து இரவு எட்டு ஒன்பது மணிவரை ஏதாவது ஒரு தேர்விற்குத் தயார் செய்வதுதான். வல்லமை இணைய நிறுவனர், ஆசிரியர் அண்ணாக் கண்ணன் அவர்களிடம் கல்வி பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது, அவர் கூறியது மாணவர்களுக்கு போட்டி உலகம் இருக்கிறது அப்போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பைக் கொண்டுவருவது முக்கியம் என்று கூறினார். இன்னும் சில ஆசிரியப்பெருமக்கள் கணினிப் பயன்பாட்டில் தங்களுக்கு இருக்கும் குறையையும் வேலைவாய்ப்பிற்கு  உகந்த கல்வியே உன்னதமானக் கல்வி என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஒரு விதத்தில் இவர்கள் கூறியது சரியே என்றாலும், கல்வி என்பதில் போட்டியில் வெற்றிபெற்று வாழ்க்கை நடத்துவதா? அல்லது ஒவ்வோருவரரும் தங்களை முன்னேற்றிக் கொள்ளும்போது தங்கள் சார்ந்த சமூகத்தையும் வளர்த்துக் கொள்வதா?

நான் இங்கு சித்தரிப்பது ஏதோ ஒரு கற்பனைபோல இருந்தாலும் இன்று நமக்கு இது தானே தேவையாய்  இருக்கிறது இங்கே நாம் கனவு காணும் நல்லுலகம் கல்விக் கொள்கைகளை விட தத்துவங்களின் அடிப்படையில் இருப்பதுபோலத் தோன்றலாம். வாழ்க்கைக்கும் கல்விக்கும் இடையில் தத்துவங்களுக்கு இடமில்லை என்ற மனநிலையில்தான் இன்று பெரும்பாலோர் இருக்கின்றோம். 

Essential requirements for internet classroom 78th Series by Suganthi Nadar. Book Day. Capitalism இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78 - அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?
Philippa Ruth Foot

 

Philippa Ruth Foot என்ற ஆங்கிலேய பெண் தத்துவஞானியும் Judith Jarvis Thomson என்ற அமெரிக்கத் தத்துவஞானியும் ஒரு மாணவருக்கு எப்படிப்பட்ட சிந்தனை இருக்கவேண்டும் என்பதை ஒரு மின் இரயில் புதிர்களின் (trolly problem) மூலம் விளக்குகின்றனர்.

தறிகெட்டு ஓடும் ஒரு மின் ரெயில் ஒன்றின் பாதையில் 5 பேர் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர். தறிக்கெட்டு ஓடும் பாதையில் இருக்கும் அவர்களுக்கு மரணம் நிச்சயம். ஆனால்  அவர்களை நெருங்க கிளையாய் பிரிந்த இருப்புப்பாதையில் ஒரே ஒரு மனிதன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

இரயிலின் ஓட்டுனர் எந்தப் பாதையில் தன் இரயிலை விட வேண்டும்? என்பது Philippa Ruth Foot அவர்களின் கேள்வி ஐந்து பேரை மரணிப்பதா? இல்லை ஐந்து பேருக்காக ஒருவரின் உயிரை பலி கொடுப்பதா?

 மேற்கொண்ட பிரச்சனையை  சிறிது மாற்றிக் கொடுக்கின்றார் Judith Jarvis Thomson தறிகெட்டு ஓடும் மின் ரெயிலின் பாதையில் உள்ள தண்டவாளத்தில்  வேலை செய்யும் ஐந்து பேரின் உயிரையும் மின்ரெயிலில் பயணிப்பவர்களின்  உயிரையும் காப்பாற்ற ஒரே வழி, ஒரு மிக பளுவானபொருளைத் தூக்கி இரயில் பாதையில் போடுவதுதான். மின்ரெயிலின் பாதையில் உள்ள பாலத்தின்மேல் ஒருவர் நின்று கொண்டு இருக்கின்றார். 

அவர், தன் அருகில் இருக்கும் ஒரு குண்டோதரனை எடுத்து இரயிலின் பாதையில்போட்டு, மற்ற ஐந்து பேரையும் காப்பாற்றலாமா? இந்த இரண்டு  புதிர்களுக்கும் விடை என்ன

மற்றவர்களைப் பாதிக்காத செயல்களைச் செய்யாமல் இருப்பதா? அல்லது மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியான செயலைச்செய்வதா? என்ற இரு கேள்விகளுக்கும் இடையில்  எந்த மாதிரியானத்  தீர்வை இரயில் ஓட்டுனராய் நாம் எடுக்க வேண்டும்?

எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதன் நன்மையும் தீமையும் முடிவுகளின் விளைவுகளால்தானே முடிவு செய்யப்படுகின்றது? ஐந்து பேரைக் காப்பதற்காக ஒருவரைக் காவுக் கொடுப்பதில் தவறு இல்லை என்று சொல்லலாம். அப்படியானால் அந்த ஒருவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் பட்சத்தில் நாம் யாரைக் காப்பாற்ற வேண்டும்? அல்லது நாம் காவு கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு உயிர்  ஒரு குழந்தையாக இருந்தால்? அதுவும் இரெயில் ஓட்டுனரின் குழந்தையாக இருந்தால்?

 அதே நேரம் உயிருக்கு ஆபத்து வந்த ஐந்து நபர்களும் தீவிரவாதிகளாக இருக்கும் பட்சத்தில் இரயில் ஓட்டுனரின் முடிவு எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒவ்வோருவரின் நிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து முடிவு எடுக்க முடியுமா? பொது நலத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? 

Essential requirements for internet classroom 78th Series by Suganthi Nadar. Book Day. Capitalism இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78 - அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?
Tim cook

ஜனவர் 7ம்  தேதி வெளியிட்ட செய்தியில், ஆப்பிள் நிறுவனத் தலைவர்  Tim cook-ன் 2021ம் ஆண்டிற்கான வருமானம்  அமெரிக்க $500 மில்லியன் என்று தெரிகிறது. அதே சமயம் 2021ல் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவரின் வருமானம் அமெரிக்க $68 254 ஆகும். ஒரு முதலாளியின் சம்பளம் அவரிடம் வேலை செய்பவரின் வருமானத்தை விட ஏறத்தாழ 250 மடங்கு அதிகம். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆப்பிள் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களை அடிமாட்டு கூலிக்கு வேலை வாங்கியதும், இந்தியத் தொழிலாளர்ச் சட்டங்களை அந்நிறுவனம் மீறி இருப்பதும் நமக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் உள்ளத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பெண்களுக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் பெரிய பிரச்சனையாகியதும் நமக்குத் தெரியும். ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களால் இயற்கை சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவிட்டுக் கூறமுடியாது. ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் செல்வம் சார்ந்த பொருளாதரத்தின் ஒரு சிறு உதாரணம் தான். ஒரு கணினித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தன்னலமான செயலின் விளைவுகளே இப்படி இருக்கும் போது நம் வாழ்க்கையே கணினிகளை சார்ந்து இருக்கும் எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட  விளைவுகளை சந்திப்போம்.

இதே போல  செல்வத்தையும் லாபத்தையும் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும்  சமுதாய அறம் பற்றிய சிந்தனை இன்றி வேலை செய்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஐந்து நபர்களைக் காப்பதற்காக, ஒருவரைக் கொல்வது சரி என்ற கொள்கையின் அடிப்படையில்  நிறுவனத்தின்  வியாபாரக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இருக்கின்ற காரணத்தாலேயே இன்று தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வு உலகில் அசுரத்தனமாகி நிற்கிறது. மூன்றாம் தொழில்புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த பலரின் வாழ்க்கைத் தரம் இன்று குறைந்துதானே போய் இருக்கிறது? நம் வாழ்க்கை வசதியை உயர்த்த பல புதியதொழில்நுட்பங்கள் வந்த போதிலும்  சராசரி மனிதனின் செல்வநிலை எப்படி இருக்கின்றது?  சமுதாயப் பிரச்சனைகள் அதிகமாகியுள்ளது தானே?

இன்றைய இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் எழாதவாறு  செயல்படத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் கொடுக்கக் கூடிய கல்வி அல்லவா நமக்குத் தேவைப்படுகின்றது.

மேலே சொன்ன மின்ரெயில் புதிரை விடுவிக்க ஒரு மாணவனுக்கு அறிவும் செய்திகளும் தேவையில்லை. ஆனால் இப்படி ஒரு அறம் சார்ந்த பிரச்சனையை ஒருவர்  சந்திக்க நேரும் என்ற எதிர்பார்ப்போடு அப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாமல் இருக்கக் கூடிய சூழ்நிலையைக் கொண்ட தொழில்களையும் வேலைவாய்ப்புக்களையும் கொடுப்பதே மக்களைச் சார்ந்த பொருளாதாரம் ஆகும்.

Essential requirements for internet classroom 78th Series by Suganthi Nadar. Book Day. Capitalism இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78 - அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?

ஆப்பிள் நிறுவனத்தின் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், நிறுவன அதிபரின் வருமானம் பங்குச்சந்தையில் நிறுவனத்தின் மதிப்பு என்ற மேல்மட்ட பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு காண்பது செல்வம் சார்ந்த  பொருளாதாரம் என்றால்  அதிபரின் வருமானம், பங்குச்சந்தையின் மதிப்பு ஆகியவற்றிகு சமமான முக்கியத்துவம் இயற்கை சூழலுக்கும் அடிமட்டத் தொழிலாளர்களின் நலனிற்கும் கொடுக்க  உதவும் பொருளாதாரத்திற்கு மக்களைச் சார்ந்த பொருளாதாரம் என்று கொள்ளலாம். மக்களைச் சார்ந்த பொருளாதாரம் வலுப்பட கல்வியாளர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 77th Series by Suganthi Nadar. Book Day. The Davos Project and Education 4.o. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77 - டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77 – சுகந்தி நாடார்



டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்

The Davos Agenda என்பது உலகப் பொருளாதார மையத்தின் செயல்பாடு ஆகும். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை 15 கொள்கைகளை உலக மக்களின் மேம்பாட்டுக்காக வகுத்து வைத்திருக்கும் நிலையில் உலகப் போருளாதார மையம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் அரசு, தொழில்நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து இப்பொருளாதார மையத்தில் கலந்து கொண்டு ஆண்டுதோறும் கூடி உலக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டுவர். கடந்த 50 ஆண்டுகளாக இப்படிப்பட்டக் கூட்டம் நடந்து முடிந்து விட்டது. 2022 ஜனவரி 17 முதல் 21 வரை நடந்த இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர், சீன அதிபர், சிங்கப்பூர் அதிபர், இந்தியப் பிரதமர், ரொவாண்டா அதிபர், இஸ்ரெல் அதிபர்.

ஜோர்டான் நாட்டு மன்னர், கானா நாட்டு அதிபர், பிரான்ஸ் அதிபர், அர்ஜென்டினா அதிபர் என்று பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர். தடுப்பூசி பற்றிய விவாதங்களும் சமுதாய தொழில்களுக்கு ஆதரவு கொடுத்தும், வளர்ச்சியை நோக்கிய உறபத்தியும், மிக முக்கியமானக் கருத்துக்களாக கருதப்பட்டது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நீடித்து நிலைக்கக் கூடிய வளங்களையும் நாடுகளின் மீட்டெழுச்சித் திறனை ஊக்குவிக்கத் தகுந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை இந்த இணைய சந்திப்பு நிகழந்தது. Klaus Schwab, உலகப் பொருளாதார மையத்தின் நிறுவனர் கூறுகிறார்.

செல்வத்தைச் சாராத, மக்களைச் சார்ந்த ஒரு முதலாளித்துவம் தேவை என்பதை இந்த ஐந்து நாள் கூட்டம் வலியுறுத்தியது. ஒரு நிறுவனம் பங்குச்சந்தை பங்குதாரர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல் அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களின் நன்மைக்காகவும் எதிர்கால சந்ததியினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் படியாகவும் தங்கள் நிறுவனக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும், தரவுகளின் ஆதாரத்துடனும் இச்சங்கமம் வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் கருவூலச்செயலர் ஜெனட் எலன் அம்மா பேசுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரம்பரிய அளிப்புச் சங்கிலியை விட்டு நவீன அளிப்புச்சங்கிலி பற்றியக் கொள்கைகளை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது என்றும், ஒரு சமுதாயத்தின் உட்கட்டமைப்புகளான தொழிலாளர்கள், இயற்கை சார்ந்த எரிசக்தி கட்டமைப்பு மனித வளத்தை மேம்படுத்தும் தானியக்கத் தொழில்நுட்பங்கள் அதற்கான ஆராய்ச்சி கல்விமுறை ஆகிய பல பரிணாமங்களில் அரசுக் கொள்கைகள் மாறி வருகிறது என்று கூறினார். இப்படியாக பலப் பரிணாமங்களைக் கொண்ட இத்தகைய ஒரு பொருளாதாராத்தைத்தான் நான்காம் தொழில்புரட்சியின் அடிப்படை ஆகும். இப்பொருளாதாரத்தை எதிர் நோக்கியே ஐநா சபையின் 15 கொள்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மின்னியியல் சார்ந்த அடிப்படை அறிவுத் தேவைப்படுகின்றது என்பது கல்வியாளர்களான நமக்காகக் கூறப்படுவதாகும்.  இத்தகையப் பொருளாரத் தேவையை கணித்து 2016ல் நடந்த டாவோஸ் கல்வி 4.0ன் தேவை அறிவுறுத்தப்பட்டது. நான்காவது தொழில்புரட்சிக்கு ஏதுவாக இன்றைய கல்வியாளர்கள் தாங்கள் படிக்கும் விதங்களில், பொருண்மைகளில் சீரிய மாற்றம் தேவை என்பதை கல்வி 4.0 வலியுறுத்துகிறது.

நான்காம் தொழிற்புரட்சிக்கு ஏற்றக் கருவிகளை உருவாக்குதல் மழலைக் கல்வி மூலம் சமுதாயத்தை வழிநடத்தும் தலைமுறையை உருவாக்குதல், இப்புதிய கல்விக் கொள்கைகளை ஏற்று நடத்தும் படியான அரசு தனியார் நிறுவன கொள்கைகள் ஒவ்வோரு தேச அளவிலும் சர்வதேச அளவிலும் கொண்டு வர வேண்டும் என்பதே கல்வி 4.0 செல்வத்தைச் சார்ந்த முதலாளித்துவம் என்ன நமக்குத் தெரியும் ஆனால் அது என்ன மக்களைச் சார்ந்த முதலாளித்துவம்? 

நாம் இப்போதே கருவிகளை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கின்றோம்? இன்னும் என்ன மாதிரியானக் கருவிகள் உருவாக்கபப்ட வேண்டும்?

ஏற்கனவே 2 வயது மூன்று வயதுக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்? இன்னும் என்ன மழலைக்கல்வி பற்றிய விவாதம் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். 

இவற்றை ஒவ்வோன்றாக ஆராய்ந்தால் நாம்கல்வி 4.0 என்பதன் கட்டமைப்பை ஆழமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கல்வி 4.0 என்ற கல்வியின் வெளிப்பாடு

  • ஒவ்வோரு மாணவர்களுகளின் தனிப்பட்டத் தேவையை பூர்த்தி செய்யும் கல்விச்சூழல்,
  • கல்வி நிலையங்களை விட்டுத் தொலைவிலிருந்தும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் செயல்படக் கூடிய கல்வி
  • கல்விக் கற்றலுக்கான கருவிகள் தேவைக்கு அதிகபடியாக கிடைத்தல். தரவு விவரங்களை ஒவ்வோரு மாணவரும் தன் வசம் வைத்து இருத்தல் அடிப்படைத் திறன்களான பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • ஒரு செயல்பாட்டின் வழிமுறைகளும் செயல் திட்டம் சார்ந்த கல்விமுறை
  • திறன்சார் கல்வி
  • அறிவாற்றலைப் பலவழிகளில் கொடுக்கக் கூடிய வழிகள்
  • மாணவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படாமல் அவர்களின் ஒரு மனிதனின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான பாடங்கள் நடத்தப்பட வேண்டும்
  • செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகள்
  • குழு அமைப்பில் செயல்படுதல்
  • தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழி
  • செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும்
  • வாழ்க்கைக் கல்வி ர்செயல்திறனை அதிகரிக்கக் கூடிய செய்திகளைக் கொடுத்தல், பல்துறை அடிப்படை செயல் திறன்

ஆகிய அம்சங்களைத் தாங்கி இருக்க வேண்டும்

1. தனிமனிதனின் செயல் திறனை மேம்படுத்துதல்
2. செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்பாடுகளை அடையும் வழிகளைக் கண்டு பிடித்தல்
3. குழுவாகச் செயல்படுதல்
4. தனி மனிதக் குறிக்கோளை எட்டும் பிரத்யேக வழிகளை அடையாளப்படுத்துதல்
5. செய்யும் வேலையில் 100% முனைப்பாடும் வெளிப்பாடும் கொண்டு வருதல்
6. வாழ்க்கை கல்வி
என்ற இந்த ஆறு வழிகளில் நாம் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நம்முடைய இன்றையப் பாடத்திட்டங்கள் ஓரளவுஇந்தக் குறிக்கோள்களைக் எதிரொலித்தாலும், இன்னும் பல முக்கிய மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும். முக்கியமாக மனனம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் மாற்றியே ஆக வேண்டும்மாணவர்கள்

அது எப்படி ஏன் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 – சுகந்தி நாடார்



2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

அலிபாபா நிறுவனம் இயற்கை சூழலுக்காக  செய்யும் வேலைகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இயற்கையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமாக புத்தாக்க எரிசக்திகளைக் கொண்டுவருவதும் ஏற்கனவே சூழவியலில் உள்ள கரிமல வாயுவை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்து சுற்றுப்புறத்தையும் சூழ்வியலையும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் மக்களின் நடத்தையை, குணாதிசியத்தை மாற்றப் போவதாகவும் சீன அலிபாபா நிறுவனம் அறிவித்து உள்ளது. இதில் இருந்து இரு செய்திகளை நாம் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று 2030 ஒரு முக்கியமான ஆண்டு. இரண்டாவது  ஒரு நிறுவனத்தால் மனிதர்களின் குணாதிசியத்தை எளிதில் மாற்ற இயலும். அதற்குத் தேவையான அணுகு முறைகளும்  தரவுகளும் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கின்றது.  இந்த இரண்டில் இரண்டாவது  கூறப்படும் விஷயம் நாம் அனைவரும் அன்றாடம் அனுபவித்து வருகின்றோம். இன்று நம் ஒவ்வொரு வேலையும் தொழில்நுட்பங்கள் என்ன சொல்கின்றதோ அதை அடிப்படையாக  நம் தினப்படி வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.  

ஆனால் முதலாவது செய்தி அது என்ன 2030? அந்த ஆண்டில் என்ன அப்படி முக்கியத்துவம்?

2030ம் ஆண்டு இன்று உலக அரசின் செயல்திட்டங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பங்குசந்தையிலும் பொருளாதார வல்லுநர்களாலும் ஒரு தாரக மந்திரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1990களிலிருந்தே ஐநாசபை மனித எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அப்போதைய புள்ளி விவரங்களில் இருந்து தெரிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தது. அதன் விளைவாக  நீடித்து இருக்கக் கூடிய வளர்ச்சிக் குறிக்கோள்கள் என்று ஒரு பதினேழு குறிக்கோள்களை ஐநா சபைக் கொண்டு வந்தது. நம் பின்வரும் தலைமுறையினரின் எதிர்காலத் தேவைகளுக்கு எந்த ஒரு பங்கமும் வராமல், இன்றையத் தேவைகளை சந்திக்கும் ஒரு வளர்ச்சி தான் நீடித்து நிற்கக் கூடிய வளர்ச்சியின் சாராம்சம்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

ஏழ்மையில்லா நிலை, பசிக் கொடுமையின்மை, ஆரோக்கியம், வளமான கல்வி, பாலின வேறுபாடு களைவு, தூய்மையான நீரும் சுகாதாரமும், மலிவு விலையில் சுத்தமான ஆற்றல், தனிமனிதனுக்கு நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி, சமநிலை, வளங்கள், நீடித்து இருக்கும்படியான பயன்பாட்டைக் கொண்ட சமுதாயம், பொறுப்புணர்வோடு கலந்த நுகர்வும் உற்பத்தியும் சூழவியல் செயல்பாடு நீர்வாழ் உயிரினப்பாதுகாப்பு, நிலவாழ் உயிரினப்பாதுகாப்பு, அமைதி, நீதி இவ்விரண்டையும் மையமாக் கொண்ட  சமுதாய அமைப்பு, இவ்வனைத்து குறிக்கோள்களையும் அடைய கூட்டுறவு முயற்சி ஆகிய 17 குறிக்கோள்களைக் ஐநாசபை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐநாவின் திட்டப்படி இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டியக் காலக்கெடுதான் 2030ம் ஆண்டு.

மேற்கூறிய குறிக்கோள்களை அடைய ஒவ்வோரு நாடும் சட்டங்கள் இயற்றினாலும் பல வியாபாரர நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி சிறந்த நிலையில் இருந்தால் ஒழிய இந்தக் குறிக்கோள்களை அடையமுடியாது. இன்று நிறுவனங்களின் செயல்பாடு எப்படி இருக்கின்றது?

நுகர்வோர் மிண்ணனு பொருட்காட்சி (consumer electronic show- CES 2022) ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்வேகாஸ் நகரில் தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. நுகர்வோர் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று 1967ல் நிறுவப்பட்டு அதன் மூலம் பாமர மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் மின்ணனு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணைந்து மூன்று நாள் பொருட்காட்சியை ஆண்டாண்டுகளாய் நடத்தி வருகின்றது. நுகர்வோர் வாழ்வின் அனைத்து பரிணாமங்களின் இன்று கணினி இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இந்தப் பொருட்காட்சி இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்தால் நமது எதிர்காலம் எப்படி இருக்கும்? முக்கியமாக வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பிற்கு நாம் நிச்சயம் வரலாம்.

செயற்கை நுண்ணறிவிலிருந்து முப்பரிமாண அச்சிடுதல் போக்குவரத்து , உடல்நலம், மனநலம், பந்தய விளையாட்டுகள், கேளிக்கைகள், சாதூரியமான நகரம், சாதூரியமான வீடு, விண்வெளி பாளச்சங்கித் தொழில்நுட்பம், மிண்னியியல் செலாவணி என்று பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பொருட்காட்சியில் ஈடுபட்டுள்ளன. கல்வித் தொழில்நுட்பத்திற்கு என்று தனிப்பிரிவு இல்லை என்றாலும் தொய்விக்கும் பொழுது போக்கு IMMERSIVE Entertainment தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொழில்நுட்பங்களும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பமும் கல்வி சார்ந்த மின்ணனு சாதனங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று கொள்ளலாம்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

நேரத்திற்கும் இருப்பிடத்திற்கும் தகுந்தார் போல விளம்பரங்களைக் காட்டும் LG நிறுவனத்தின் CLO இயந்திர மனிதன், organic light-emitting diode என்பதின் சுருக்கமான OLED தொலைக்காட்சிப் பெட்டிகள். தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் BMW மின்சார மகிழுந்து, OMN ipod எனப்படும் சகல வசதிகளும் செயற்கை நுண்ணறிவு இயந்திர வேலையாளும் கொண்ட உல்லாச போக்குவரத்து வாகனம், எந்த ஒரு தளத்தையும் தொலைக்காட்சியாக மாற்றக் கூடிய தொழில்நுட்பம், விளையாடுக்களுக்கெனவே பயன்படும் மடிக்கணினி என்று மின்னணு சாதனங்களின் ஊர்வலம் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் நிபுணர்களையும் இணைத்து நடக்கின்றது. இவ்வாறாக மொத்தம் 2200 நிறுவனங்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் இந்தப் பொருட்காட்சியின் இணையதளம் தெரிவிக்கின்றது.

இவற்றைப் பார்க்கும்போது, எந்த மாதிரி தொழில்நுட்பம் வருங்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்மால் யோசிக்கமுடியும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்த சாதனங்கள் எல்லாமே தற்போது பொழுதுபோக்கு அம்சங்களின் ஒரு பகுதியாக உள்ளன என்பதும் நமக்குத் தெரிகின்றது. இன்றைய தலைமுறை நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் புத்தாக்க சிந்தைனையால் தொழில்நுட்பத்தின் உதவியோடு மெருகு ஏற்றிக் கொண்டிருக்கின்றது.

2015ல் ஆப்பிள் நிறுவனம் கணினியையே கைக்கடிகாராமாக்கியது ஒருவர் பயன்படுத்தும் கணினி திறன்பேசி அனைத்தும் அக்கடிகாரத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை இலகுவானதாக மாற்றுவதாக விளம்பரம் செய்து ஆப்பிள் நிறுவனம் அக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. இன்று உலகம் முழுவதும் ஆப்பிள் ஆண்ட்ரைடு, சாம்சங் தளங்களுக்கு ஏற்ப மூன்று வித திறன் கடிகாரங்களே சந்தையில் உள்ளன. ஆனால் இன்றளவும் ஏறத்தாழ 12.3 million திறன் கடிகாரங்கள் விற்பனையாகியுள்ளன. 

இந்த திறன் கடிகாரங்களை ஒப்பிடும் போது, கணினி சாராத பாரம்பரியக் கைகடிகாரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இருபதிற்கும் மேல் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6 கடிகார நிறுவனங்கள் உள்ளன. இக்கடிகாரங்களில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றத்தைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

இந்த நிறுவனங்களில் கார்ட்டியர் கைக்கெடிகார நிறுவனம் அறிமுகப்படுத்திய மாதிரியில் 1917 வருட முகப்புக் கொண்டு, சூரிய சக்தியில் இயங்கும் மின்கலம் கொண்ட கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பே இருந்தாலும், இப்போது கடிகார எண்களில் உள்ளத் துளை வழியாகவும் சூரிய ஒளி சென்று மின்கலத்தை உயிரூட்டும் வகையில் இந்தக் கைக்கடிகாரத்தின் கட்டுமானம் உள்ளது. அதே போல கைகடிகாரத்தின் பட்டையுமே ஆப்பிள் பழத் தோலிலிருந்து பெறபப்ட்ட மூலவளம் 40% பயன் படுத்தபப்டுகின்றது. என்ன ஒரு புத்தாக்க சிந்தனை. இயற்கை வளங்களை காப்பதில் என்ன ஒரு அக்கறை.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

Yankodesign என்ற நிறுவனம் நாம் சிறுவயதில் பயன்படுத்திய walkman போன்றத் தோற்றத்தில் bluetooth ஒலிப்பெருக்கிகளாக அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோல இன்றைய திறன் பேசியை tape recorderல் இட்டு பாடவைப்பது போன்ற  walkman ஒலிப்பெருக்கிகளும் வந்துள்ளன. சில ஒலிப்பெருக்கிகளில் திறன்பேசி மின்னேற்றம் செய்வதற்கும் வழி செய்யபட்டுள்ளது. வாழ்க்கை என்ற வட்டம் இதுதான் நம் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னதை அவர்களின் தலைமுறையினர் ஆசையோடு அரவணைக்கின்றனர். 2015ல் 18 வயதில் இருந்த சிறுவன் இப்போதுதான் இதுவரை அனுபவிக்காத ஒன்றைப் புதுமை என்று எண்ணி தன் வாழ்க்கை முறையில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இத்தலைமுறையின் குழந்தைகளுக்கு எந்த மாதிரிக் கல்வியை நாம் வழங்க முடியும்? அதற்குத் தயாராக நாம் என்ன செய்ய வேண்டும்? ஐநாவின் குறிக்கோள்களை அடைய அரசும் நிறுவனங்களும்  செயல்பட்டால் போதுமா கல்வி என்ற அமைப்பு என்ன செய்ய வேண்டி இருக்கிறது?

இயற்கை வளங்களைக் காப்பது, மனித வளங்களைக் காப்பது, மருத்துவம் என்று பல துறைகளில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நுகர்வோருக்கு அடையாளம் காட்டும் கலாச்சாரம், நுகர்வோரின் குணாதிசியத்தை மாற்றும் ஒரு வழியாகத்தான் தோன்றுகின்றது. மனித வளமும் தொழில்நுட்பமும் மோதிக் கொள்ளும் நாள் வருமா? அப்படிப்பட்ட ஒரு நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? கை கொடுக்குமா கல்வி 4.0? யோசிக்கலாம்.

இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன?
நாம் இன்று திறன்பேசியை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? ஒரு தொலைபேசியாக, ஒரு கடிகாரமாக, ஒரு நாள் காட்டியாக, ஒரு விலாசப்புத்தகமாக, ஒரு ஆலோசகராக, செய்தித்தாளாக, நம் தொழில்சார்ந்த கணினியாக என்று பலவிதங்களில் பயன்படுத்துகின்றோம். இப்படி எல்லா வழிகளிலும் தகவல்களைப் பெறும் கருவியாக இருக்கும் ஒரு சாதனம் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக மாறிவிடுகின்றது. நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மின்சாரப் பற்றாக்குறையால் அவதிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போது மின்சாரம் தடைபட்டாலும் நம் வீட்டில் முக்கிய மின்சார சாதனங்கள் தற்காலிகமாக வேலை செய்ய வேண்டிய உபகரணங்களை வாங்கி வைத்து இருக்கின்றோம்.

கருவிகளைப் பயன்படுத்த நமது பழக்க வழக்கங்கள் மாறுகின்றன.  ஒருவருடைய சராசரி நுண்ணறிவு குறைய ஆரம்பிக்கின்றது. நம் வீடுகளில் துவைப்பதற்கு என்று கல் இருக்கும். அவற்றின் இடத்தை சலவை இயந்திரங்களுக்கு நாம் கொடுத்துவிட்டோம். அம்மி உரல் போல துவைக்கும் கல்லும் கூட ஒரு கலாச்சாரத்தின் அடையாளாமாக மாறிவிட்டது.

ஆனாலும் இன்றைய தமிழ்நாட்டில், மின்சார சலவை இயந்திரம் வேலை செய்யாவிட்டால் நம்மில் பலருக்கு நம் துணியை துவைக்கத்தெரியும். அதே அம்மியில் அரைக்கத் தெரியுமா? ஆட்டுக்கல்லில் ஆட்டத் தெரியுமா ஏன்றால்? நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்?

சுகாதாரமான உடை அணிவதும் நாவுக்கு ருசியாக உணவு உன்பதும் எந்த ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை. அவற்றைக் கருவிகள் கொண்டு செய்யப்பழகும்போது நாம் நம் உடல்பயிற்சியை மட்டுமல்ல மற்ற ஒரு சில திறன்களையும் இழந்து விடுகின்றோம். மின் இயந்திரங்களை சமையலில் பயன்படுத்தும்போது, நம் வேலை எளிதாகிறது. அதை அடுத்து பொடிகளை வாங்கி சமைக்கின்றோம். அதுவும் குளிர்சாதனப்பெட்டி என்ற  இயந்திரம் வந்து விட்டதால் பல வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் சமையல், அதை அடுத்து இப்போது வலையொளியில் பார்த்து சமைக்கின்றோம். பாரம்பரிய கிராமக் கலைகளைத் தொலைத்து போல தொலைந்து போன ஒன்று சமையல்கலை. 

எங்கள் வீட்டில் என் குழந்தைகள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போது நடந்த கதை ஒன்றைக் கேளுங்கள். நான் அமெரிக்கா வந்ததிலிருந்து மின் இயந்திரத்தில்தான் துணி துவைப்பது. என் குழந்தைகள் இந்தியா வரும்போது மட்டுமே, துவைக்கும் கல்லைப் பார்த்து இருக்கின்றார்கள். அதில் துணி துவைப்பதை ஆச்சரியமாகப் பார்த்து இருக்கின்றார்கள்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

சரி கதைக்கு வருவோம். என் இரண்டாவது பெண் எட்டாம்வகுப்பு படிக்கும்போது அவர்களின் கோடைக்காலக் கல்வியாக மற்ற நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் மூன்று வாரங்களுக்கு உலக சுற்றுப்பயணம் செல்ல முடிவுசெய்தாள். சரி பயணத்திற்குத் தயாராகும் வேளையில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது, என்னவென்றால் அமெரிக்கா போல இல்லாமல் மற்ற எல்லா நாடுகளிலும் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் அதிகம். ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக யாரிடம்  தனி வாகனங்கள் இருப்பதில்லை. பொது வாகனங்களில் மட்டுமே மற்ற நாடுகளில் பயணிக்க இயலும். அதனால் மாணவர்கள் அவர்களால் கையாளக்கூடிய வகையில் எடை குறைந்த இலகுவான பயணப் பெட்டிகளே எடுத்துவர வேண்டும்.

முடிந்த அளவு ஒருவருக்கு ஒரு பயணப்பெட்டி ஒரு கைப்பை போதும் என்று கூறிவிட்டனர். மூன்று வாரத்திற்கு ஒரேஒரு பெட்டி என்னும்போது தினம் ஒரு ஆடை அணிய இயலாது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வந்தாலே போதுமானது. எடுத்துவரும் துணிகளும் எளிதில் துவைத்து அலசிக் காயப்போடும் வகையில் இருக்கவேண்டும் அவர்கள் தங்கும் இடங்களில் அவர் அவர் துணியை அவர்களேத் துவைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பயணம் எளிதாக இருக்கும் என்று சொல்லி விட்டனர். 

அடுத்தது என்ன? கையால் துவைக்க சோப்புக் கட்டியைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்கு சென்றாலும் சலவை இயந்திரத்திற்கு போடும் சோப்புத்தான் கிடைத்தது. வேறு வழியின்றி அந்த சோப்புத்தூளை வைத்தே துணி துவைக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். பயணத்தில் இருப்பவர்களாயிற்றே கூடவே வாளியையா கொடுத்து அனுப்பமுடியும். எட்டாவது படிக்கும் பெண் இயந்திரத்தில் அழகாக தன் துணியை துவைத்து எடுத்து வைத்துவிடுவாள், ஆனால் கையால் துவைக்க வேண்டுமேயானால்?

பயண ஏற்பாட்டாளர்கள்  சொல்லித் தந்தபடி ஆரம்பித்தது துணி துவைக்கும் பயிற்சி. துணியைக் கையால் துவைப்பது எப்படி  என்று பட்டியலிட்டு ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டார்கள். 

அவள் செய்ய செய்ய நான் அவளை மேற்பார்வையிட வேண்டும் (நான் வேறு ஆசிரியர்கள் சொல்வதை பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி புத்தி மதி கூறி இருக்கின்றேன். என் சொல்லைக் கேட்கவா போகிறாள்?. உதடுகளை கடித்து என் வாயை மூடி அவள் செய்வதைக் கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் நாம் கை கழுவி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணியை ஊறவைத்து பின் அதிலேயே அலச வேண்டும். 

தொட்டியில் நீரை நிரப்பி, சோப்புத்தூளை போடும்வரை இருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அதில் துணியை போட்டு ஊறவைக்க வேன்டும் என்ற நிலையில் எங்கள் இருவருக்குமே குமட்டிக் கொண்டு வந்தது. சரி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணி துவைப்பது என்பது முடியாத காரியம் என்று தெரிந்துபோனது. வீட்டில் இருக்கும் தொட்டியிலேயே இவ்வளவு அருவருப்பாக இருக்கும்போது பொதுத்தொட்டியில் துணியை துவைப்பதா ?

கண்டிப்பாக முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து குளிக்கும்போதே அப்படியே துணியை அலசிக் கொள்வது. அப்படி செய்து இரவில் துணியை குளியல் அறையிலேயே வைத்து விட்டு மறுநாள் காலை சென்று பார்த்தால் துனியிலிருந்து ஒரு வாடை மட்டுமல்ல துணி கொஞ்சம்கூட காயவில்லை ஏன் என்றால் துணியை ஈரம் போகப் பிழிய அவளுக்குத் தெரியவில்லை, துணையைப் பிழியாமலே சொட்ட சொட்ட காயப் போட்டு வந்துவிட்டாள்.

Essential requirements for internet classroom 76th Series by Suganthi Nadar. Book Day. Education towards the goals for 2030. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 - 2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி

இந்தக் கதையை எதற்குச் சொல்கின்றேன் என்றால், இயந்திரத்தை வைத்து ஒரு செயலைச் செய்யப் பழகிய அவளுக்கு அந்த வேலையை இயந்திரம் இல்லாமல் செய்யத்தெரியவில்லை. அதைவிட அந்த வேலையைச்செய்யும் பொறுமை அவளிடம் இல்லை. ஒரு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த அறிவைக் கொண்டு மட்டுமே அவளுடைய அன்றாட வாழ்க்கை இன்றும் நடக்கிறது.

இந்த இளம் தலைமுறையினர் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றனர். கணினிகள் சூழந்து அவர்கள் வாழும் வாழ்க்கை, கணினிகளே அவர்களுடைய வாழ்க்கையின் அத்தியாவசியம் ஆகி விடுகிறது. கருவிகளையே நம்பி வாழும் தலைமுறைக்கு  நமக்குப் பிந்தைய தலைமுறையினர் நுண்ணறிவோடு செய்த செயல்கள் ஆச்சிரியத்தைத் தருகின்றன. அவை ஒவ்வோன்றையும் அற்புதமாக நினைக்கின்றனர். அதனாலேயே இன்றைய அவர்களுடைய வாழ்க்கையில் புத்தாக்கம் என்பது  நுண்ணறிவு சார்ந்து செய்யப்படும் செயல்கள்தான். நாளையை தலைமுறை நேற்றைய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்  கருவி என்ற ஒரு பெரியதிரை இடையில் இருக்கின்றதே!

ப்படி யோசித்தால் நம்முடையக் கல்வி என்பது கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டுமா? இல்லையே? கருவி என்பது மனிதன் செய்யும் வேலைக்கு உதவி புரிய வந்தது தானே? இந்தக் கேள்விகளைப் பார்க்கும்போது இயற்கை சார்ந்த வாழ்க்கைதான் சிறந்தது என்ற முடிவிற்கு நாம் வரலாம். ஆனால் நம்முடைய சுமை தோளாக இருக்க இயற்கை உயிரோடு இருக்குமா? இயற்கையைவிட மேலாக நம் முண்ணோரின் அனுபவ அறிவிற்கும்  நுண்ணறிவிற்குமே 2030ல் பற்றாக்குறை இருக்குமே?

நாம் இன்றிலிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்தான்/ ஆனால் அது மட்டும் போதுமா? நமது நுண்ணறிவை,  கடந்த 200 ஆண்டுகால பட்டறிவை எப்படிக் காப்பது?

உலகில் ஐயாயிரம் வகை தவளைகள் இருக்கின்றனவாம். ஆனால் தவளைகளின் தொகை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. காரணம் அசுத்தமாகிப்போன நீர் நிலைகள். இப்படி எத்தனையோ நாம் கைக்காட்டிக் கொண்டே போகலாம். நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டும் அதே நேரம் செழிப்பான மண்வளம், நீர்வளம் மாசற்ற காற்றும் நம் அடிப்படைத் தேவையல்லவா? ஐநாசபை 2030க்கான திட்டம் கொரானா பெருந்தொற்றினால் ஆட்டம் கண்டிருந்தாலும் அரசாங்கத்தைப்போல, சமுதாயப் பொறுப்புள்ள நிறுவனங்களைப்போல கல்வியாளர்களாகிய நமக்கும் ஐநாவின் பதினேழு குறிக்கோள்களைப் பின்பற்றி ஒரு நல்லுலகைப் படைக்க வேண்டாமா? 

ஒவ்வோரு நாடும் தன் தனித்தன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைக் கணினி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தால் போதுமா?  

நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

அதற்குத் தான் கல்வி 4.0. இத்தனை வாரங்களில் கல்வி 4.0ன் தேவைக்கான காரணிகளைப் பலவாறு பார்த்தோம். அடுத்து கல்வி 4.0 என்ன என்பதைப் பார்ப்போம். அதை இன்றே நாம் நம் கல்வி முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் காணலாம். உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்:

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75 – சுகந்தி நாடார்



கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்

ஒரு காலத்தில் கணினியும் கணினியியலும் ஒரு  தனிப்பிரிவாக ஒரு அறிவியலின் ஒருஅங்கமாகக் கருதப்பட்டது. இப்போது கூட  STEM என்று சொல்லிக் கொண்டு அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அமைத்து கொடுப்பதோடு இவை நான்கும் இணைந்த ஒருத் தனிப்பிரிவாக பிரிக்கப்பட்டு கற்றுத்தர வேண்டும் என்று  வலியுறுத்தப்படுகிறது. நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல்பிரிவு, சமுதாய அறிவியல்பிரிவு, வீட்டுமேலாண்மை அறிவியல் என்று மூன்று பிரிவுகளாக பதினோராம் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு இருக்கும். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பவர்களுக்கு,  அறிவியல் பிரிவிலும் கணிதம் கணினிப்பிரிவிலும் சிக்கலில்லாமல்  இடம் கிடைக்கும். 

இப்போது தமிழ்நாட்டில் எப்படி நடக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு மாணவர் பயிலும் எல்லா பாடங்களிலும் இவை ஊடுருவி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலக தரத்தின்படி 20ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவியியல் பாடங்களை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் மிகக்குறைவாக இருந்தனர். இது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று கருதிய அமெரிக்க தேசத்து அறிவியில் நிறுவனம் பிரதான அறிவியல் பாடங்களை என்று பெயர் கொடுத்து மாணவர்களுக்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலேயே அவர்களுடையப் பாடத்திட்டத்தின் அடிப்படையாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்த்தினர்.
Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்
அதன் விளைவாக இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு வகையில் அமெரிக்கநாடு பலன் அடைந்து இருந்தாலும், மிக, மிக முக்கியமான மாற்றம், கணினியிலும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஏற்பட்டது. இந்த மாற்றம் எந்த அளவிற்கு என்பதை இன்றைய  அன்றாட வாழ்க்கையில் நாம் தினம்தினம் அனுபவித்து வருகின்றோம். தரவுகளின் இராஜியமாக உலகமே மாறிவிட்டது என்னும் பொழுது எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் மாணவர்களில் கணினியியல் தகவல் தொழில்நுட்ப இயல் இரண்டிலும் இளம் வயதிலிருந்தே முறையாகக் கற்றால்தான் அவர்களால், அவர்கள் படிப்பைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும்.

 கணினியியல் தகவல்தொழில்நுட்ப அறிவு என்று சொல்லும்போது, கருவிகளும் தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது முதல் குறிக்கோளாக இருந்தாலும் அடிப்படை கணினிஅறிவு  ஒருவருக்கு ஒரு அனுபவ அறிவாகக் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது. ஒரு கல்விமுறையில் கணினியியலின் அனுபவ அறிவு மட்டுமின்றி மிக ஆழமான  தெரிதலும் புரிதலும் கொண்ட கணினி ஆளுமையும் வல்லமையும் இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாகத் தேவையாக உள்ளது.

இது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையின் மறுபக்கம் என்ன? கணினி ஆளுமையும் வல்லமையும் பெறக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு சமுதாயம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே உருவாகி வருகின்றது. உலகின் மனிதவளத்தில் ஒரு சமமின்மைக் காணப்படுகின்றது. அதற்கு ஏழ்மை, அரசியல் சூழல் என்று நாம் காரணங்களை அடுக்கினாலும்  நாம் அனைவருமே நமக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்ற சேவைகளே போதும் என்று உலகின் மிக முக்கிய கணினி நிறுவனங்களை சார்ந்து இருக்க ஆரம்பித்து உள்ளோம்.

அந்த நிறுவனங்கள் நமக்குக் கொடுக்கும் சேவைகளுக்கு ஏற்றபடி  நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்திலிருந்து உலகில் எத்தனையோ கண்டுபிடிப்பகள் ஏற்பட்டன. அவற்றில் மின்சாரம், கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு, அணுசக்தி கண்டுபிடிப்பு, விமானத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் என்று நாம் சில முக்கியமானத் தொழில்நுட்பங்களோடு இன்றைய தகவல்தொழில்நுட்ப கணினியியல் தொழில்நுட்பம் உலகில் கொண்டுவந்த தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி ஒரு கல்வியாளர்களாக ஆராய்ச்சியாளர்களா நாம் தரவுகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பம்தான் மனித இனத்தை வேரோடு மாற்றிக்கொன்டு இருக்கின்றது.

உலக வரலாற்றில் ஒவ்வோரு தொழில்நுட்பமும் மனிதகுலத்தின் மேன்மைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பயன்பாடுகளின் எதிர்விளைவுகளை நாம்  இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். சென்னை வெள்ளம், மலேசிய வெள்ளம், ஆஸ்திரேலியா வெள்ளம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, சூறைப்புயல்களின் தாக்கம் வழக்கத்திற்கு மாறான இடங்களிலும் காலத்திலும் பனிப்புயல் என்று நம்முடைய அன்றாட வானிலை இரு திசைதெரியா முள்ளாக அலைபுற்றுக் கொண்டு இருக்கின்றது. இவையெல்லாம் இயற்கையில் நம் அன்றாட தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாட்டினால் வந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

மின்சக்தி நமக்கு இயற்கையில் கிடைக்கின்றது என்று பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அவர்களால் 1752ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மின்சாரம் என்ற தொழில்நுட்பமாக மாற்றியது தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள். அவரைத் தொடர்ந்து சாமுவேல் இன்சுல் என்பவர் ஒரு ஆடம்பர மூலப்பொருளாக இருந்த மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தக்கூடிய  வகையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்தார். மின்சாரம் கண்டுபிடித்து ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஏறத்தாழ 20%  உலக மக்கள் தொகைக்கு சரியான வகையில் மின்சாரம் கிடைக்கவில்லை.

மின்சாரப் பற்றாக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால்  மின்சாரத் தேவைக்காக பயன்படுத்தபபட்டு நிலக்கரி தொல்லுயிர் எச்சம் எரிசக்திகளினால் பைங்குடில் வளிக்களான (greenhouse gas) நீராவி கரிமல வாயு, ஓசோன் நைட்ரேட் ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியவை சுற்றுச்சூழலை பாதித்துக் கொண்டே இருக்கின்றது என்று நமக்குத் தெரியும். அதனால்தான் நீர் காற்று சூரியசக்தி என்று இயற்கை வழியில் நாம் எரிசக்தியைக் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் அடுத்தத் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமானது போக்குவரத்துத் தொழில்நுட்பம் இருசக்கரவாகனம் முதல் விண்வெளியில் செல்லும் விண்கலம்வரை அனைத்தும் தங்கள் கழிவுகளாக தங்கள் பங்கிற்கு சூழவியலை மாசுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இன்று மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியில்  நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியையும் நடத்தி வருகின்றன. நாம் இன்று பயன்படுத்தும் மகிழுந்து 1885களில் கண்டுபிடிக்கப்பட்டது. 1903ல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.Essential requirements for internet classroom 75th Series - Suganthi Nadar. Book Day. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும் 75 – சுகந்தி நாடார்

இத்தனை நூற்றாண்டுகளில்  இவற்றின் பாதிப்பு சூழவியலில் என்ன என்று தெரியுமா? ஒரு சராசரி நான்கு சக்கர மகிழுந்து 4.5 லிட்டர் கல்லெண்ணெயிலிருந்து (petrol) பயன்பாட்டில் எட்டு கிராம் கரிமல வாயுவையும் 4.5 லிட்டர் வளியெண்ணெய் (diesel) பயன்பாட்டிலிருந்து ஏறத்தாழ பத்துகிராம் கரிமலம் வெளியாகின்றது என்றும் அமெரிக்க சூழவியியல் ஆணையம் தெரிவிக்கின்றது. அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து ஜெர்மனிவழி சென்னை சென்று அதேபோல ஒருவர் திரும்பிவரும் பயணத்தில் 4.6 டன் கரிமல வாயுவை வெளியிடுகிறது என்று myclimate.org என்ற தளத்தில் அறிந்துகொண்டேன். அணுசக்தியினால் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட விளைவை உலகம் என்றுமே மறவாது.  

 நான் இவ்வாறு பாதகமான விளைவுகளை எடுத்துச் சொல்வதால் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை. கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட  தொழில்நுட்பங்கள் தங்களின் மனித பயன்பாட்டைப் பார்த்தனரே தவிர அதனால் விளையும்  பாதகமான விளைவுகளை எண்ணிப்பார்க்கவில்லை.

அதே போலத்தான் இந்த கணினித் தொழில்நுட்பமும். ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி வெளிவந்த காலக்கட்டத்திலிருந்து கணினித் தொழில்நுட்பம் பொது மக்களிடேயே மிகவேகமாகப் பரவினாலும் அதனுடைய பாதகமான தாக்கம் இயற்கைச்சூழலை மட்டுமல்ல மனிதவளத்தையே சூறையாடிக்கொண்டு இருக்கிறது. மனிதம் என்பது கற்றலும் பொருள் ஈட்டுவது மட்டும் தானா?  மனித நோக்கமே  பணிசெய்து பொருள் ஈட்டி பலபல சொத்துக்களைப் பெருக்குவதுதான் என்றால் நமக்கும்  மற்ற உயிரினங்களுக்கும் என்ன வேறுபாடு ஐந்தறிவு உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அறம். ஒவ்வோரு உயிரினத்திற்கும் ஓர் அறம் உண்டு. ஆனால் மனிதனின் அறம் எது என்பதை எப்படி  ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் நிச்சயிக்கலாம்?

இயற்கையை  தன்னைச் சுற்றிய சக மனிதர்களை, அரவணைத்துப் போக நமக்குத் தெரியவேண்டுமே? இது இங்கே வாழ்க்கைத் தத்துவமாக சொல்ல வரவில்லை. தன்னையும் நம் சமுதாயத்தையும் நாம் பேணி வாழாவிட்டால் அங்கே சமூகம் என்பதே ஏது? நம்முடைய இன்றையக் கல்விமுறைகளும் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நமக்குள் வளர்க்கவில்லை.  அறநெறி என்பது ஒரு தத்துவப் பாடமாகவோ அல்லது ஆன்மீகமாகவோதான் பார்க்கப்படுகின்றது என்றோ யாரோ போட்ட வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். நாம் சுவாசிக்கும் காற்று மாசு பட்டபோது நாம் கவலைப்படவில்லை. நம் விவசாய நிலங்கள்  மனைகளாக தொழிற்சாலைகளாக மாறும்போதும் நாம் கவலைப்பட்டதில்லை. கவலைப்பட்டவர்கள் எல்லாம் அதைக் கல்விச்சூழலில் கொண்டுவரவும் இல்லை.

 சமுதாய நல்லிணக்க நோக்கு இல்லாத ஒரு கல்வி எத்தகைய எதிர்காலத்தை நமக்கு உருவாக்கும்?

மனிதனுடைய எதிர்காலம் எல்லைகளை அரசியலை கலாச்சாரத்தை மொழியை  ஒரு கூட்டத்தினரின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும் அதை வளர்ச்சி அடையச் செய்வதிலுமல்லவா  ஒளிந்து இருக்கின்றது. இப்படி சமுதாய நோக்கோடு கூடிய நன்னெறிகொண்ட தலைமைப்பண்பு நாளைய நிறுவனர்களுக்கு, நாளைய தொழிலாளிகளுக்கு, நாளைய அரசாங்கத்திற்குத்  அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. அப்படிப்பட்ட அத்தியாவசியத்தை இன்றே இப்போதேப் பூர்த்தி செய்யத் தொடங்குவதுதான் கல்வி 4.0வின் அடிப்படை.

எப்படி அறிவியலுக்கான மனிதவளம் தேவை என்று தீர்மாணித்து STEM நம் பாடங்களில் கொண்டுவரப்பட்டதோ அதேபோல நம்முடைய எதிர்காலத்திற்கு இன்று பற்றாக்குறையாய் இருப்பது சமுதாய நல்லிணக்க நோக்கு சார்ந்த பாடப் பொருண்மைகள்? நம்மால் கொண்டுவர முடியுமா? நம் கல்வி முறையை மாற்றுவதன் மூலம் நம்  புவியை இயற்கை அழிவிலிருந்து காக்க முடியுமா? மனிதவளத்தை மேம்படுத்த முடியுமா? முடியும் என்று சொல்கிறது கல்வி 4.0.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 70(   கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 71(கணினிமயமான எதிர்காலமும் கல்வியின் பரிணாமமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்