‘பிணிவாசினி’ கவிதை – திவ்யதர்ஷினி

‘பிணிவாசினி’ கவிதை – திவ்யதர்ஷினி

தொற்றென்   றொன்று தோன்றி    யதூஉம் வேற்றார் என்பார் வீட்டா   ராயினும் – எனினும் உன்னிலை    காக்க உயிரதை   மீட்க அவளென்று   மிருப்பாள் அவநிலை  உடைப்பாள் யாரவரென்றும்   தெரியாமல், வேற்றாரென்றும்   கருதாமல்,…
Ondralla Poem By Shanthi Saravanan. ஒன்றல்ல கவிதை - சாந்தி சரவணன்

ஒன்றல்ல கவிதை – சாந்தி சரவணன்

கோபமும் குரோதமும் ஒன்றல்ல
காதலும் காமமும் ஒன்றல்ல
கவவையும் கஷ்டமும் ஒன்றல்ல
கஞ்சதனமும் சிக்கனமும் ஒன்றல்ல
பசியும் பட்டினியும் ஒன்றல்ல
சிரிப்பும் புன்னகையும் ஒன்றல்ல
மருந்தும் மருத்துவமும் ஒன்றல்ல
வரலாறும் வரலாற்று நூல்களும் ஒன்றல்ல
ஊடக செய்திகளும் உண்மை நிகழ்வுகளும் ஒன்றல்ல
நீதியும் நீதிமன்ற தீர்ப்பும் ஒன்றல்ல
பார்வைகளும் காட்சிகளும் ஒன்றல்ல
சொல்லும் வாக்குறுதியும் ஒன்றல்ல
நினைவுகளும் சிந்தனைகளும் ஒன்றல்ல
போரும் புரட்சியும் ஒன்றல்ல
அடிமைத்தனமும் அகிம்சையும் ஒன்றல்ல
கவி படைப்பவனும் மூன்டாசு கவி பாரதியும் ஒன்றல்ல
போதையும் போதை பழக்கமும் ஒன்றல்ல
மரணமும் இறப்பும் ஒன்றல்ல!
உளவியல் அகழாய்வு செய்து ஊடே சென்று பார்த்தால்
மனதின் சித்தாந்தம் புலப்படும்!

Ippothellam yarunga sathi pakkura Poem by Sa Veermani. இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா! கவிதை - மரு. சா. வீரமணி

இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா! கவிதை – மரு. சா. வீரமணி




1.சேரி என்றால்
ஊர் என்கிறது பேரகராதி
கிழக்கே தப்பு சத்தம் கேட்குதே
சேரியில் சாவு விழுந்திடுச்சாம்
ஊருக்குள் சொல்கிறார்கள்

2.
எந்த ஊர்?
இன்னாரைத் தெரியுமா?
இன்னார் உங்களுக்கு என்ன வேண்டும்?
நான் இன்னார் என்பதோடும்
அவர் இன்னார் என்பதோடும்
முடிகிறது கேள்வியும் பதிலும்

3.
இன்னசாதியென்கிறபோது
விழும் பார்வையும்
இன்னசாதியென்கிறபோது
கடைசிப் பந்தியில் சாப்பாடும்
இன்னசாதியென்கிறபோது
வாசற்படியோடு முடிகிற பேச்சுமுள்ள ஊரில்
காதில் கேட்கிறது
இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா!