இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 56 – சுகந்தி நாடார்
அடுத்த இரு எண்ணியல் செலவாணிகள்
நாம் இன்று புழக்கத்தில் இருக்கும் எண்ணியல் செலவாணிகளில் சில முக்கியமானவற்றைப் பார்த்து வருகின்றோம், இந்த கட்டுரையில் Dogecoin, Litecoin. ஆகிய இரண்டையும் பற்றிப் பார்ப்போம்.
Dogecoin
நாம் பார்க்கும் ஒவ்வோரு எண்ணியல் செலவாணியும் ஒவ்வோரு வேறுபடுகிறது என்றால் Dogecoin தோன்றிய விதத்திலும், அது பயன்படுத்தும் விதத்திலும் சிறிது மாறுபட்டு இருக்கிறது. எண்ணியியல் செலவாணி என்ற தொழில்நுட்பத்தை நையாண்டி செய்யும் விதமாக Dogecoin. Palmer Billy Markus இரு மென்பொருள் நிரல்களால் உருவாக்கப்பட்டது தான்.
Shiba Inu என்ற ஜப்பானிய வேட்டைநாய் இனத்தைச் சேர்ந்த Kabosu என்ற பெயர் கொண்ட ஒரு நாய் இன்று இணையத்தில் உலாவரும் மிம்ஸ்களில் மிகப் பிரபலம் இந்த நாயின் முக பாவனைகளைக் கொண்டு மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நகச்சுவையான நையாண்டியான மீம்ஸ்களால் கவரப்பட்ட இந்த இரு இளைஞர்களும் அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த மறைக்குறியீட்டு செலவாணியான bitcoin என்ற தொழில்நுட்பத்தை ஏற்ப்படுத்தும் விதமாக Kabosu நாயின் முகத்தை தாங்கள் உருவாக்கிய எண்ணியல் செலவாணியின் அடையாளமாக வைத்தனர். மறைகுறியீட்டாக்க செலவாணி என்ற பொருண்மையை ஏளபன் செய்த இவர்களின் எண்ணியியல் செலவாணியைப் பற்றி இன்றைய பெரும் தொழில் அதிபர் இளான் மஸ்க் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் பேசி பிரபலம் அடையச் செய்தார்.
இந்த செலவாணி bitcoin போல தற்போது பிரபலமாக இல்லை என்றாலும் ஒரு சில சமூக வலைத்தளங்களில் அதற்கென ஒரு குழுவினர், அதைப்பற்றி கலந்தாய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். bitcoin போல ஒரு செலவழிக்கும் பணமாக Dogecoin இருந்தாலும் இது பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் ஒரு செல்வமாகவேக் கருதப்படுகின்றது.
இந்தச் செலவாணி மைக்ரோசாப்ட் ஆப்பிள் லினிக்ஸ் ஆகிய தளங்களுக்கான மறைகுறியீட்டுப் பத்தாயத்தை வெளியிட்டு இருப்பது மட்டுமில்லாமல் சில பங்குச்சந்தை நிறுவனங்களின் வழியாகவும் வெளியிட்டு உள்ளது.
Bitcoin 21 மில்லியன் அளவில் அதன் பரிவர்த்தனைகள் அடைந்து விடும். ஆனால் தற்போது 129 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. இச்செலவாணிக்கு எந்த ஒரு வரம்பும் இல்லை.
இந்த செலவாணியின் p2p வலையத்தில் இருக்கும் கணினிகளில் அனைத்துத் தரவுப்பாளங்களையும் சரிபார்க்கும் கணினி முனைகளுக்கு என்று ஒரு எண்னியியல் பத்தாயமும், நுகர்வோர் தங்களுடைய சொந்தத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் பத்தாயமுன் என்று இரு வகைகளைக் கொடுக்கின்றது. இந்தப் பத்தாயங்கள் ஒரு கணினி எந்த வகையில் பாளத்தரவுகளை கையாளுகின்றது என்று முடிவு செய்கின்றது.
அனைத்துத் தரவுப்பாளங்களையும் சரிபார்க்கும் கணினி முனை DogCore என்று அழைக்கப்படுகின்றது. இதே மாதிரியான வேலைகளைச் செய்யும் கணினி முனைகளை dash master nodes என்று அழைக்கின்றது DogCore கணினி முனைகள் தரவுப்பரிமாற்றங்களைச்சரிபார்ப்பதோடு எண்னியியல் செலவாணியைத் கணித்ப்புதிர்விடுவித்தல் மூலம் தோண்டி எடுக்கவும் பயன் படுகின்றது. இக்கணினி முனைகள் மற்ற கணினிகளிடமிருந்து விவரங்களை வாங்குவதும் விவரங்களை அனுப்புவதுமாக இருக்கும். இப்படியான கணினி முனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணினி முனைகள் இணைந்து இருக்கும்.
பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு பத்தாயமாக இருப்பது multi dodge என்று அழைக்கப்படுகின்றது. இக்கணிமுனைகள் ஒவ்வொன்றிலும் இருந்து குறைந்தது 8 கணினி முனைகளை இணைக்கலாம். இந்த எட்டுக்கணினி முனைகளுக்கும் நுகர்வோரின் தரவுகள் வெளியே போகும். ஆனால் எந்த ஒரு தரவும் உள்ளே வர முடியாது
Litecoin
எல்லா எண்ணியியல் செலவாணிகளஒயும் போலவே இந்த எண்ணியல் செலவாணியும் bit coinலிருந்து சிறிது மாறுபட்டுள்ளது. 2011, கூகுளில் வேலை செய்த நிரலர் சார்லிலீ என்பவரால் உருவாக்கப் பட்டது, இதில் மொத்தமாக 84,000,00 litcoinகளை உருவாக்க இயலும்.
பொதுமக்களுக்குச்சென்று சேரும் வகையில் இந்த எண்ணியியல் செலவாணியை அவர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தியும் வாங்க வசதி செய்யப் பட்டுள்ளது. இவர்களின் இணைய தளத்திலிருந்தே இன்னொருவருக்கு அவரது பொது விலாசக் குறியீட்டை இட்டுப் செலவாணியை அனுப்பி வைக்கவும் வழிமுறைகள் உள்ளன. Venmo போன்ற குறுஞ்செயலிகள் வழியாகவும் ஒருவர் இந்த எண்ணியல் செலவாணியைப் பரிவர்த்தனை செய்ய முடியும். அது மட்டுமின்றி Atomic Swaps என்று சொல்லபப்டும் ஒரு எண்ணியல் செலவாணியைக் கொண்டு இன்னொரு எண்ணியியக் செலவாணியை வாங்கும் முறையும் இந்த செலவாணிக்கு உண்டு
பங்குச்சந்தையில் bit coin க்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு நிறுவனமாக இந்த எண்ணியியல் செலவாணி விளங்குகின்றது. bit coin நாணயத்தைப் போல இந்த செலவாணியை உருவாக்கவும் ஏறத்தாழ 10 நிமிடங்கள் தேவைப்படுகின்றது ஆனால் இரு எண்ணியியல் செலவாணிக்குமான கணக்கீடுகள் முழுவதுமாக வேறுபட்டுள்ளன.
ஒரு Litecoinன் மதிப்பு ஏறத்தாழ 200 அமெரிக்க டாலராக உள்ளது. அமெரிக்க மக்களாலும் பொதுமக்களாலும் ஒரு செலவாணியாகப் பயன்படுத்தப் படும் அதே நேரம் பங்கு சந்தையிலும் இவை விற்கப்படுகின்றன. என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க பங்கு சந்தையில் மின்சாரம் கனிமங்கள் விவசாயப் பொருட்கள் கால்நடைகள் ஆகியவையுமவர்ற்றின் தேவை அளிப்பு விலை ஆகியவற்றைக்கொண்டு பங்கு சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த இயற்கை வளங்களுன் எதிர்கால விலையின் அடிப்படையில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் பங்கு சந்தையில் விற்கப்படுகின்றன. அதே போல ஒரு நுகர்வோர் தானே என்ணீயியல் செலவாணீயை வாங்க வில்லை என்றாலும் இந்தத் தொழில்நுட்பத்தில் பங்கு கொண்டு செயலாற்றும் நிறுவனங்களைலும் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38 (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 54 (வித விதமான எண்ணியல் செலவாணிகள்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 55 (Ethereum) – சுகந்தி நாடார்