பிச்சுமணியின் கவிதை

பிச்சுமணியின் கவிதை




பகுத்தறிவுக் கிழவனே
வெண்தாடித் தலைவனே..
ஓய்வறியாமல்
ஓடி ஓடி மானத்தையும் அறிவையும்
விதைத்த கிழவா

யார் சொல்லினும்
மெய் சொல் காண் என்றார்
தமிழ்வள்ளுவர்

எதனையும் சந்தேகி என்றார்
பேராசான் மார்க்ஸ்

அறிவையும் மனத்தையும்
விதைத்துச் சென்ற நீயும்
அதையே சொன்னாய்..

மனிதன் மானம் கொள்ள
தமிழ் மண்ணில் வழித்தடம்
அமைத்தவன் நீ

நீ போட்ட வழித் தடத்தில்
நடை பயின்றது தமிழகம்
சிலர் வழி மாறியிருக்கலாம்
சிலர் விழி மூடி நடக்கலாம்
ஆனாலும் உன் வழித்தடம்
மாறாமல் இருக்கிறது

1900 வரை
ஆதிக்கத்துக்கு எதிராய்
சுயமரியாதைப் போர் புரிந்த
ஒட்டுமொத்தப் போராளிகளின்
அடையாளமாய் நீ நிற்கிறாய்..

உன் வழித்தடம்
மிக மிக நீண்டது..
அது பயணித்துக் கொண்டே இருக்கிறது

பிறப்பில் பேதம் பேசினால்
உன் கைத்தடியே முதலில்
வாள் வீசுகிறது

உரிமைகளை யார் தடுத்தாலும்
உன் குரலே முதலில் எதிர்த்து ஒலிக்கிறது

யோ.. கிழவா..
உன்னை மறுதலித்து விட்டு
இந்த மண்
சமூகநீதி பேச முடியாது
பெண்ணியம் பேச முடியாது
சுயமரியாதை பேச முடியாது
பகுத்தறிவு பேச முடியாது.

பகுத்தறிவுக் கிழவனே
கருப்புச் சட்டைத் தலைவனே.
கடைக்குட்டிப் பேரன்கள்
வாழ்த்துகள் செய்திகள்
குவிந்து கிடக்கின்றன
வா.. வந்து பார்..

– பிச்சுமணி

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்



நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த

முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –

உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.

மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.

இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.

500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.

சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.

போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.

இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

2022 மே 19

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில்  என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில் என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்




நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது.
குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மனியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மனி எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதார அடிப்டையிலும் என மூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

உக்ரைனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்ய இனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரைனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும் நிகழ்வுகளும் நடந்தது.

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

எனவே உக்ரைன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலைமையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ. பாக்கியம்

நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : பேரா ச.மாடசாமியின் ’மனச்சாட்சியின் குரல்கள்’ – தேனி சுந்தர்




நூல்: மனச்சாட்சியின் குரல்கள்
ஆசிரியர்: பேரா ச.மாடசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 150
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய *மனச்சாட்சியின் குரல்கள் :
நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..!*

அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..!

அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்..

அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது..

நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..!

ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..!

மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் மதம் வேறு.. அப்பாவி மக்களின் மதம் வேறு..!

போகிற போக்கில் இந்து அமைப்புகள் என்று சொல்கிறார்களே.. அது சரியா..? அப்படிச் சொல்லலாமா? இந்து அமைப்புகள் வேறு.. அடிப்படைவாத, இந்துத்வா அமைப்புகள் வேறு இல்லையா..?! தெளிவு படுத்துகிறார்..!

மதத்தில் அன்பு ஒரு பகுதி.. பழமைவாதமும் பிரிவினை, வன்முறை இன்னொரு பகுதி.. மக்கள் மனதில் இருப்பது அன்பு எனும் பகுதி.. இந்துத்வா கும்பல் முன்னிறுத்துவது..!?

மதங்களின் ஒரிஜினல் முகம் பழமைவாதம்.. அது போட்டிருக்கும் முகமூடி வேண்டுமானால் மாறிக் கொண்டே இருக்கலாம்.. அவர்களின் ஒரிஜினல் முகம் ஒன்றுதான்.. அது மாறாது..! அது தாலிபானாக இருந்தாலும் சரி.. இந்துத்வா கும்பலாக இருந்தாலும் சரி..!

மேற்கே நிறம்.. இந்தியாவில் “வர்ணம்”.. இரண்டும் ஒன்று தான்..!

பாரபட்சமான கடவுள், பாகுபடுத்தும் சாதி, பெண்ணைக் குற்றவாளி ஆக்கும் ஆணாதிக்கம்.. பெண்ணை இச்சைப் பொருளாக பார்த்த திருட்டு புத்தியின் தொடக்கம்.. அருவருப்பு.. பதுங்கி இருக்கும் ஆபத்து என மனுஸ்மிருதியை வெளுத்து வாங்குகிறார்..

ஏன் இந்த அத்தியாயம் இப்படி கொதிக்கிறது.. மீண்டும் முன்னுரையை வாசித்தேன்.. அவரே சொல்லி இருக்கிறார்.. “இந்துத்துவ வெறியையும் அரசியல் சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பதே இப்போதைய என் பதிவுகளின் இலக்கு..!”
இலக்கு தப்பவில்லை தோழர்..!

மூளையில் திணிப்பது எளிது. இதயங்களை திறப்பது தான் கடினம்.. ஆனால் அது தான் அவசியம்..!

மாணவர்கள் கும்பல் அல்ல.. வகுப்பறை – ஒரே முகம் அல்ல..!

வகுப்பறை எதைத் தான் மறுத்துப் பேசியது..? எதைத் தான் கேள்வி கேட்டது..?

குளிர்ந்து உறைந்த வகுப்பறைகள் எதற்கு..? பகிரும் வகுப்பறைகள் வேண்டும்.. தொழில்நுட்பமும் உத்திகளும் மட்டுமே புதுமை ஆகி விடுமா..? உள்ளடக்கம் பற்றி பேச வேண்டாமா..? என்று கொதிக்கிறார்.. பாடநூல், கல்விக் கொள்கை, வகுப்பறை, பாகுபலி திரைப்படம் என கல்வி குறித்த அத்தியாயம் விரிகிறது..

நிறைவாக ஆளுமைகள் எனும் அத்தியாயம்.. அதுவும் சிறப்பாக உள்ளது.. நிகழும் போதே எழுதப்பட்ட வரலாறு போல தான் இந்நூலும்..

சமூக, அரசியல் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகள்.. அதற்கு வந்த பின்னூட்டங்கள் என இது ஒரு புதிய முயற்சி..!

106 பதிவுகள்.. கிட்டத்தட்ட 250 பேரின் பின்னூட்டங்கள் உள்ளன. முரண்பட்டவர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளனவா என்று அறிய ஒரு ஆர்வம். தேடிப் பார்த்தேன்..

பிரதமர் மோடி குறித்த ஒரு பதிவில் “உங்கள் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. ஆனால் நீங்கள் எல்லாருக்குமான பொது மனிதராக மாற வேண்டும்” என்று எழுதி இருக்கிறார்.. அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி வருகிறது.. “அன்பு காட்ட தகுதியில்லாத நபர் அவர் என்பதற்கு குஜராத் சம்பவங்களே சாட்சியம்..!”

தோழரின் வீட்டில் இருந்தே.. அவருக்கு அருகில் இருந்தே பதிவு செய்யப் பட்டிருக்கிறது அந்த பின்னூட்டம்.. ஆம், அது தோழரின் இணையர் லைலாதேவி அம்மா எழுதியது..!

இது போல வேறு சில நண்பர்களின் மாற்றுக் கருத்துகளையும் இடம்பெறச் செய்திருக்கிறார்.. என்னுடைய சில பின்னூட்டங்களும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது நான் பெற்ற பேறு..!

இந்நூல் ஒரு காலக் கண்ணாடி.. ஒவ்வொருவரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்..!

-தேனி சுந்தர்

Theruvil Sithariya Sevvanthi Shortstory By Sudha தெருவில் சிதறிய செவ்வந்தி சிறுகதை - சுதா

தெருவில் சிதறிய செவ்வந்தி சிறுகதை – சுதா

இரவு மூன்று மணி இருக்கும் பின்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். என்ன என்று  கூர்ந்த போதுதான் அது ஒப்பாரியும் அழுகையும் சேர்ந்த சத்தம் என உணர்ந்தேன். அடப்பாவமே என்ன ஆயிற்று முருகேசனுக்கு என்று பதறிப்போனேன்.

முருகேசன் ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்க்கிறான். அவனது மனைவி மகள் இருவர் இவர்கள் தவிர அந்த வீட்டிற்கு சொந்தம் என்று யாரும் வந்ததில்லை. எப்படி வருவாங்க முருகேசனுக்கு எப்பவுமே சந்தேகம்தான். சொந்தக்காரங்க யாராவது வீட்டுக்கு வந்தா கூட பொண்டாட்டிய பாக்க வந்தாங்கலோனு முருகேசன் நெனச்சுக்குவான். தன் பொண்டாட்டி வாசலில் நின்னு பால் வாங்குறதுக்கு கூட அனுமதிக்க மாட்டான். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு கோலம் போட்டுட்டு உள்ள போயிடணும் இதுதான் முருகேசன் வீட்டு வழக்கம்.

கடுகு வாங்கக்கூட முருகேசன் தான் போவான் இரண்டு பெண் பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்த்தான். பிள்ளைங்க ரெண்டும் கல்லூரியில் முதுகலை படிக்கும் போது கூட அந்த இரண்டு பிள்ளைகளையும் கொண்டு போய்விட்டு கூட்டிட்டு வருவான். ஜெராக்ஸ் எடுக்குறதுக்குகூட அவங்க தனியா போனதில்லை.

இப்படித்தான் ஒருநாள் அந்த இரண்டு பிள்ளைகளும் பரீட்சைக்கு எழுத பேப்பர் வாங்கணும்னு தெருவுல இருக்குற கடைக்கு போச்சுங்க. தன்னோட அப்பா வர்றதுக்குள்ளே வந்துடலாம் நினைச்சுதான் அவங்களும் போயிருக்காங்க ஆனா அப்படி நடக்கல. அந்தப் பிள்ளைகள் கடையிலிருந்து சிரிச்சுகிட்டே வந்ததுங்க இதை அந்த வழியா வந்த முருகேசன் பார்க்க வேற வினையே வேணாம். வேகமா வீட்டுக்கு வந்தவன் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டான். அந்தப் புள்ளைங்க பயத்தோடு நடந்து வந்துச்சுங்க. அதுங்க நடந்து வர்றதுக்குள்ள இவனுக்கு கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பிச்சுட்டான். இந்த பிள்ளைங்க வந்ததும் வராததுமாக கோவத்துல பிள்ளைங்கள முடிய பிடிச்சு இழுத்து அடிக்க ஆரம்பிச்சுட்டான். அது அந்த தெருவே வேடிக்கை பார்த்துச்சு. யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் அவ்வளவுதான். அவங்களோட தன் பொண்டாட்டியும் பிள்ளையும் கூட முடிச்சு போட்டு பேச ஆரம்பிச்சுடுவான். முருகேசன் ஒன்னும் அவ்வளவு வசதியானவன் இல்லை. கால் வைத்து கஞ்சிக்கு கஷ்டப்படுகிறான். இந்த கஷ்டமும் கூட அவனாவர வச்சிக்கிட்டதுதான். வேலைக்கு சரியாக போகாமல் தன் பொண்டாட்டி மேலையும் பிள்ளைகளையும் சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு வாழ்க்கையை சூனியம் ஆகிட்டான்.

ஒழுங்கா அவன் வேலைக்கு போய் இருந்தா அவன போல செல்வந்தன் இல்லை. இத்தனை கஷ்டமும் வந்திருக்காது அவன் பொண்டாட்டியும் எதுவும் சொல்லமாட்டாள். சொல்லவும் முடியாது அப்படி மீறி சொன்னா அவ்வளவுதான்.

இப்படித்தான் ஒரு வாரத்திற்கு முன்பு அவன் பொண்டாட்டியை பால் வாங்க வெளிய வந்துட்டா பால்காரன் ஏதோ பேச பக்கத்துவீட்டு பொம்பளை எதோ சொல்ல இவ சிரிச்சிட்டாபோல தூரத்திலிருந்து பார்த்த முருகேசன் அந்த கோவத்துல ஒருஅரை போட்டான். பாருங்க அந்த அரையில் பால் செம்பு பறந்து போயிடுச்சு. பால்காரன் தெறிக்க ஓடிட்டான். முருகேசன் பேசிய பேச்சுக்கு அளவே இல்லை அசிங்கமும் இல்லாமல் பேசினான்.

யாராவது அவன் கிட்ட பேச முடியுமா? யார் கேட்டாலும் பதிலும் வராது.

ஒரு நாலு முருகேசன் பொண்டாட்டிக்கு வைத்து வலிவர ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனா முருகேசன். ஆஸ்பத்திரியில முருகேசன் பொண்டாட்டிக்கு கர்ப்பப்பையை எடுக்கணும் ரொம்ப மோசமா இருக்குன்னு சொல்லிட்டாங்க. இது அவனுக்கு இன்னும் கொஞ்சம் எளக்காரமா போச்சு சரி கடன உடன வாங்கி கர்ப்பபை எடுத்துட்டாங்க.

கர்ப்பபையை எடுத்துட்டு வந்ததுல இருந்து ஒரே சண்டைதான் நீ எதுக்கு உலகிலே உன்னை வச்சு என்ன செய்ய அப்படின்னு ஒரே பேச்சுதான் எப்பவும் இப்படி சொல்லிக் கொண்டே இருப்பான் பாவம்தான் முருகேசன் பொண்டாட்டி.

ஒரு வாரமா உடம்பு சரியில்லாமல் இருந்தான். ஆஸ்பத்திரிக்கு போகவர இருந்தாங்க இன்னைக்கு இறந்துட்டான். என் வீட்டுக்கு பின்னாடி தான் அவனோட வீடு நானும் வீட்ல இருப்பு கொள்ளாம அவன் வீட்டுக்கு சத்தம் கேட்டதும் கிளம்பி  வந்துட்டேன். நான் மட்டும்தான் வந்தேன் பக்கத்து வீட்டுக்காரி ஜன்னல் கூட திறக்கலை.

விடியறதுக்குள்ள  ஒன்னுரெண்டு பேர் வந்தாங்க பிள்ளைங்க ரெண்டும் கதறி அழுதத பாக்கவே முடியல. எங்களுக்கு இந்த உலகமே தெரியாதே நாங்க எப்படி வாழப் போறோம்னு அழுதுச்சுங்க பாக்கறதுக்கு கஷ்டமா இருந்துச்சு.

எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே நாங்க எப்படி வாழப்போறோம் என்ற வார்த்தைகள் மட்டும் திரும்பத் திரும்ப காதுல கேட்டுக்கிட்டே இருந்துச்சு. வாழுற காலத்துல வீட்டு பொம்பளைகளுக்கு எல்லா உரிமையும் கொடுத்து வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்திருந்தால் இவ்வளவு நலமா மோசமா ஆயிருக்காது.

உலகமே மோசம் ஆண்களை மோசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா வீட்டுக்குள்ளே பூட்டி பூட்டி வச்சா உலகத்தை பற்றி எப்படி தெரிஞ்சுக்கும் பிள்ளைங்க. ஆம்பளைங்களோட சந்தேக புத்திக்கு அளவே இல்லை. ஆம்பளைங்களா அடக்கப்பட்டு அடக்கப்பட்டு பெண்களுடைய திறமைகளை வெளியே வராமலேயே போயிடுது.

என்னமோ போங்க இனிமேலாவது முருகேசன் பொண்டாட்டி சித்ரா. சித்ரா வா வாழ்வாளா என்று பார்ப்போம். முருகேசனை தூக்கிட்டு போன பாதையிலே பூக்கள் கூட முருகேசன் சாவுக்கு வருந்தி வாடல…