திரை விமர்சனம்: DUAL – சிரஞ்சீவி இராஜமோகன்

திரை விமர்சனம்: DUAL – சிரஞ்சீவி இராஜமோகன்




சுமார் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து இருக்கும் ஒரு வெளிநாட்டுச் சூழலை உரித்தாக்கிக் கொள்ளுங்கள் அதாவது டெக்னாலஜிகள் அதன் உச்சத்தைத் தொட்டியிருக்கும் காலகட்டம். அந்த காலகட்டத்தில் க்ளோனிங் முறை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் யார் நினைத்தாலும் தன்னை போன்ற இன்னொரு உயிரினத்தை உயிரை மனிதனை நகல் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு விதிமுறைதான் தாங்கள் இறக்கப் போவது அரசால் மருத்துவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் அதற்கான சான்று இருந்தால் போதும். இதுவே குளோனிங் முறை எனப்படும் பூனை எலி போன்றவற்றை இன்றைய கால அறிவியல் அறிஞர்கள் குளோனிங் முறை செய்து வெற்றி கண்டுள்ளனர். கதைக்கு வருவோம். கதாநாயகனுடன் வாழ்ந்து வரும் கதாநாயகி சற்று உடல்நிலை குறைவால் பாதிக்கப்படுகிறாள் அவள் இறப்பது 90% உறுதியாகிவிட்டது இந்த நிலையில் யாரிடம் இதை எப்படி சொல்வது என்பது அறியாமல் திகைத்து திக்கு முக்காடி போய் கையறு நிலைக்கு ஆளாகிறாள்.

தனக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர் மூலமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட குளோனிங் முறையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படுகிறாள். அந்த டாக்டர் உனக்கு விருப்பமெனில் உன்னுடைய இழப்பு யாருக்கும் வருத்தம் அளிக்காத அளவிற்கு குலோனிங்கில் உன்னை நீயே உருவாக்கி இந்த உலகத்திற்கு அளித்துவிட்டு போ என்று கூறுகிறாள். தாயிடம் தான் இறப்பதை சொன்னால் வருத்தப்படுவாள் என்பதற்காக கணவனிடம் மட்டும் உத்தரவு வாங்கிக்கொண்டு குளோனிங் முறைக்கு தயாராகிறார் அந்த பெண். குளோனிங் முறையில் நல்லபடியாக தன்னை போலவே ஒரு பெண்ணை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

டாக்டர்கள் நீங்கள் இறப்பதற்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருக்கிறது அதற்குள் உங்களுடைய கதாபாத்திரம் என்ன குடும்ப சூழ்நிலை என்ன நீங்கள் எவ்வாறு நடப்பீர்கள் ஆடை அணிவீர்கள் என்பதெல்லாம் இந்த பெண்ணுக்கு அனிச்சையாகப் பழகி போகும் வரைக்கும் டிரைனிங் கொடுக்கவும் என்று அறிவுரை கூறுகின்றனர் அவளும் அதற்கு ஏற்றது போல் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து தன்னை போன்ற ஒரு குலோனிங்கை உருவாக்கி செல்கிறாள்

அந்த குளோனிங் கணவனுடன் இணைந்து ஷாப்பிங் செல்வது போன்றவற்றில் அன்றாட வாழ்வினை தொடங்குகிறாள். அப்போது தனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரிடம் இருந்து ஒரிஜினல் பெண்ணுக்கு போன் வருகிறது தங்களிடம் சற்று பேச வேண்டும் நேரில் சந்திக்கவும் என.

அவள் மருத்துவரை சந்தித்து க்ளோனிங் முறையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கூறி தான் இறப்பதற்கு தயாராகவும் சந்தோஷமாகவும் இருப்பது குறித்து முனகுகிறாள். அப்போது ஒரு சிறிய தவறு நடந்து விட்டதாகவும் தன் உடலில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் தான் இறக்கப் போவதில்லை என்பதும் அந்த டாக்டர் சொல்ல அவளை திக்கு முக்காட செய்கிறது. நீங்கள் 90% இறந்து விடுவேன் என்று சொல்லித்தானே இந்த க்ளோனிங் முறைக்கு நான் தயாரானேன் இப்போது என்ன செய்வேன் என்று கெஞ்சுகையில் மீதமுள்ள 10 சதவீதம் கடவுள் கையில் என்று கை வைக்கிறார் அந்த டாக்டர் கதை இந்த இடத்தில் இருந்து விறுவிறுப்பாகிறது.

வீட்டில் இந்த உண்மையைச் சொல்லி குளோனிங்கை தான் மீண்டும் அழிக்கப் போவதாக அந்தப் பெண் கணவனிடம் கூறுகிறாள். கணவன் சற்றே மன சங்கட்டத்துடன் எனக்கு உன்னை விட குளோனிங் பெண்ணே பிடித்துள்ளது அவளை அழிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறான் பின்பு அதுவே சண்டையாகவும் மாறுகிறது. பதிலுக்கு இந்த குளோனிங் பெண் இதில் என் தவறு எதுவும் இல்லை நான் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது தகுதி இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். முடிவில் யார் ஜெயித்தார் யார் இறந்தார்? யார் கணவனுடன் சேர்ந்து வாழ போகிறார் என்பதே கதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 100% நீங்கள் எப்படி நினைத்தாலும் அது முடிவாக இருக்காது முடிவில் ஒரு மிகப்பெரிய விறுவிறுப்பு உங்களுக்காகவே பிரத்யேமகமாக காத்திருக்கிறது.

கதையின் பலம் : வித்தியாசமான திரைக்கதை தத்ரூபமான நடிப்பு மனதை குலைக்கும் மனோ தத்துவ நீண்ட வசனங்கள்.

பலவீனம் : சில இடங்களில் தேவையில்லாத நீண்ட வசனங்கள் வறட்சியை ஏற்படுத்துகிறது திரைக்கதையில்

தி ஆர்ட் ஆப் செல்ஃப் டிபன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்தப் படத்திலும் தன்னுடைய தத்ரூபத்தை காட்டியுள்ளார். அவருக்கு ஒரு சல்யூட்.

மேலும் இது போன்ற வித்தியாசமான திரைக்கதை உள்ள திரைப்படங்களை எனக்கு பகிரவும் இந்த திரைப்பட விமர்சனம் எவ்வாறு இருந்தது என்பதை விமர்சிக்க விரும்புகிறேன் என்னுடைய தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளேன் நன்றி.

-சிரஞ்சீவி இராஜமோகன்