noolarimugam : siraiil olirum natchathirangal oru sirai kavalarin anubavappathivugal - esudass நூல்அறிமுகம்: "சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்" ஒரு சிறைக் காவலரின் அனுபவ பதிவுகள் - இரா.இயேசுதாஸ்

நூல்அறிமுகம்: “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” ஒரு சிறைக் காவலரின் அனுபவ பதிவுகள் – இரா.இயேசுதாஸ்

இதுவரை சிறைக்கைதிகள் எழுதிய நூல்கள் சிறை அனுபவங்களாய் வெளிவந்ததை படித்திருக்கிறோம். 1980 முதல் 2020 வரை சிறைக் காவலராக பணிபுரிந்த ஒரு இடது சாரி காவலரின் உண்மையான அனுபவங்களின் தொகுப்பு இந்த நாவல்-சிறுகதை வடிவ கட்டுரைகளின் விறுவிறு நடைத்தொகுப்பு. ஜனவரி 22ல்…
நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா

நூல் அறிமுகம்: அ.பாக்கியத்தின் “ஞாபகங்கள் தீ மூட்டும்!” – தாரைப்பிதா



“ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்!”

நூல்: ஞாபகங்கள் தீ மூட்டும்
ஆசிரியர்: அ.பாக்கியம்
வெளியீடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
விலை: ரூ.100/-
பக்கம்: 136
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

தோழர் ஏ.பாக்கியம் எழுதிய “ஞாபகங்கள் தீ மூட்டும்” (DYFI போராட்டங்கள் சில துளிகள்) நூல் நேற்றுதான் 28.09.2022 கள்ளக்குறிச்சி மாநாட்டில் பிரதிநியாக கலந்து கொண்ட ஒரு தோழரிடம் வாங்கினேன்.

இன்று முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். 136 பக்கங்களும் போனதே தெரியவில்லை. அதைவிட முக்கியம் 1978 முதல் 1996 வரை SYF மற்றும் DYFI களில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஓடிய ஓட்டங்களை அப்படியே புரட்டி போட்டுவிட்டது என்றால் மிகையல்ல.

அன்றைய போராட்டங்களில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்ததை, போராட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டத்தை, போராட்டங்களின் உக்கிரங்களை போகிற போக்கில் பதிந்திடாமல், படம்போட்டு பதிந்துள்ளார் தோழர்  ஏ.பாக்கியம்.

ஆம், வேலை அல்லது நிவாரணம் வேலை உரிமை தடைச் சட்டம், பஸ் கட்டணம் உயர்வு, குடிநீர் தேவை, ரேசன் அட்டை, லஞ்சம் ஊழல் எதிர்ப்பு, மருத்துவ மனைகளில் மருத்துவ வசதி, குடிமனைகள் அமைத்தல் என எடுத்த கோரிக்கைகள் யாவும் அரசுடன் மோதி, அதிலே வெல்லாமல் விட்டதில்லை.

அல்லது வேறு வார்த்தையில் சொன்னால், அரசும் அதில் கவனமிட்டு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டின. இதுதான் அந்த போராட்ட உந்துதலுக்கு பிரதான காரணியாக இருந்தது. அதை மிக நுட்பமாக புள்ளி விபரங்களோடு இந்நூல் பதிந்திருக்கிறது.

பேருந்து கட்டண உயர்வுக்கான எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்கைது தமிழகத்தில்தான் நடந்திருக்கும். அந்தளவிற்கு அக்காலங்களில் DYFI ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் மிகையல்ல.

அன்றைய கோரிக்கைகளை பார்த்தால், இதற்கெல்லாமா போராட்டம் நடத்தப்பட்டது என தோன்றும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட மாநிலமெங்கும் குடிநீர் போராட்டம்; மாநிலம் முழுவதும் ரேசன் அட்டைக்கு போராட்டம் இப்படி நிறைய குறிப்பிடலாம்.

ஆம், அந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு தற்போது அவசியம் இல்லையென்றாலும், இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளைக் கண்டறிந்து கையில் எடுத்து போராடினால், அன்றைய அரசுகளைப்போல், அரசு அதிகாரிகளைப் போல் செவி சாய்க்கும் நிலை இல்லாமல் இருப்பது ஒரு கசப்பான பேருண்மை.

ஆம், போராட்டங்களை நீர்த்து போகச் செய்யும் கலையை இன்றைய ஆட்சியாளர்கள் கற்று இருக்கிறார்கள். அவர்களின் பாணியில் நாமும் திருப்பியடிக்கும் கலையை கண்டறிந்தாக வேண்டியிருக்கிறது. இது அனைத்து அமைப்புகளின் போராட்டங்களுக்கும் பொருந்தும்.

இந்த நூலை என்னிடம் தந்த அந்த இளம் தோழர் சொன்னார்… _”அரைஞான் கயிறு, பூணூல் கயிறுகளில் சிறையில் கொடியேற்றப்பட்டதா? அடே சாமி”_ என்கிறார். ஆம், இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தோழர் அகத்தியலிங்கம் கூறியதைப்போல்… அக்காலத்தின் கோரிக்கை போராட்டங்களை அந்த 4 (உறுதிமிக்க போராட்டங்கள்;  பன்முக செயல்பாடுகள்;  சித்தாந்த பயிற்சி; வலுவான அமைப்பு) கட்டத்திற்குள் அடக்கிவிடலாம்.

அது, அன்று மட்டுமல்ல என்றும் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று. அதற்கு இந்த நூல் அடித்தளம் அமைத்து தந்திருக்கிறது. அதற்கான உழைப்பை தோழர் ஏ.பாக்கியம் செலுத்தி இருப்பது சிறப்பு. மிகுந்த பாராட்டுக்குரியது.

தோழர் பாலா வரலாற்று ஆசிரியர்களை மேற்கோள் காட்டியிருப்பதைப் போல், “எந்த ஒரு வரலாற்றையும், முழுமையாக எழுத முடியாது” என்பது சத்திய வார்த்தைகள். அதைத்தான் தோழர் பாக்கியமும் இது ஒரு புள்ளி மட்டுமே என்கிறார் மிகுந்த தன்னடக்கத்துடன்.

ஆனால், என்னை பொருத்தவரை எடுத்த 15 பணிகளில் புள்ளி வைத்து கோலமிட்டு நிறைவாக செய்திருக்கிறார் இந்த நூலில். இதுபோல் பலநூறு போராட்டங்கள் கிளை, வட்ட,  மாவட்ட அளவில் இன்னும்கூட இருக்கக்கூடும். அவற்றை எல்லாம் தொகுத்தளிப்பது அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அதொரு கையேடாக நிச்சயம் இருக்கும். அதற்கான துவக்கப்புள்ளி இந்த நூல் என்று வேண்டுமானால் கூறிடலாம்.

ஆம், இதெல்லாம் இரண்டாயிரத்திற்கும் முந்தியவைகள். அதற்கு பிந்திய களம் பல பதித்த போர் பரணிகள் ஏராளம். அவற்றையும் பதிவிடல் வேண்டும்.

தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்க காலத்தில் முத்திரை பதித்த முத்தான 15 களப்பணிகளை அதே உத்வேகத்தில் பதிந்துள்ள தோழர் எ.பாக்கியம் பதிவும், அதை 15 அத்தியாயங்களாக  வடிவமைப்பும் அருமை. மேலும் அவற்றை நூலாக்கி மாநில மாநாட்டில் வெளியிட்ட DYFI மாநிலக்குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இன்றைய சூழலை புரிந்து,  அதற்கேற்ற முறையில் மிக நுணுக்கமாக போராட்டங்களை வடிப்பதில் இந்நூல் நிச்சயம் வழிகோலும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் கையில் தவழ்ந்தால், “ஞாபகங்கள் நிச்சயம் தீ மூட்டும்” என்றால், அது மிகையல்ல.

– தாரைப்பிதா… 
முகநூல் பதிவிலிருந்து
29.09.2022

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்




நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.

இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி‌. ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘மகாத்மா மண்ணில் மதவெறி‘ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) தி.நகரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். உடன் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், ஜானகி ஆகியோர் உடன் உள்ளனர்.

நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி

ஆசிரியர் : ஜி‌.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. 125.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com

நன்றி : தீக்கதிர்

யாருக்காக தேசிய கல்விக் கொள்கை… – பாலா (DYFI)

யாருக்காக தேசிய கல்விக் கொள்கை… – பாலா (DYFI)

  கல்வி என்பது எப்போதுமே அதிகாரத்துடன் உறவு கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. ஒரு சமூகத்தில் யார் அதிகாரத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் கல்வியின் விளைவுகளையும், உள்ளடக்கங்களையும் தீர்மானிக்கிறார்கள் என்கிறார் பாவ்லோ ஃபிரெய்ரே. தற்சமயம் மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசாங்கத்தால் தேசிய கல்விக்கொள்கை 2020…
வேலையற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து வேலை கேட்கும் இயக்கத்திற்கான இணையதளம் – சி.பாலசந்திர போஸ் (DYFI)

வேலையற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து வேலை கேட்கும் இயக்கத்திற்கான இணையதளம் – சி.பாலசந்திர போஸ் (DYFI)

"இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - தமிழ்நாடு மாநிலக் குழு" பெருகி வரும் வேலையின்மை பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்காக வேலையற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து வேலை கேட்கும் இயக்கத்தை வலுவாக நடத்திட திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக வேலையற்ற இளைஞர்களின் பட்டியலை அவர்கள்…