Posted inPoetry Uncategorized
யாழ் எஸ் ராகவனின் கவிதை
அந்த வான் கனியை
வெட்கத்தில்நீந்த வைத்தது
உன் மந்தகாசம்
உருளும் திவலைகளில்எல்லாம்
உனது குறுநகை
சொட்டுச் சொட்டாய்..
உன்செவ்விதழ் வழி வழிந்த
அமுதம் என்னிடம்
தீரத்தமானது.
ஆணிவேர்களை அசைத்து
ஆலிங்கனம் செய்யும்
சீகரம்
தடுப்பாடையை
நீக்கத்தயங்கும்
என்னைப் புறந்தள்ளி
உன்னுள் புகுந்து கூத்தாடும்
மாஆலி
– யாழ் எஸ் ராகவன்