டாக்டர் அம்பேத்கர் நினைவுச் சின்னங்கள் – பேரா. எ. பாவலன்

டாக்டர் அம்பேத்கர் நினைவுச் சின்னங்கள் – பேரா. எ. பாவலன்




டாக்டர் அம்பேத்கர் வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் அவருடைய கருத்துக்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறன. காரணம் அந்த அளவிற்கு எல்லாவற்றிலும் மிக கவனமாகப் பங்காற்றி இருக்கிறார். இந்தியாவின் எல்லை பிரச்சினையாக இருந்தாலும், பொருளாதார சிக்கலாக இருந்தாலும், சாதி விடுதலையாக இருந்தாலும், நதிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் எல்லாவற்றிலும் தன் கருத்தை ஆழமாகப் பதிவிட்டிருக்கிறார். அதனால்தான் இவ்வுலகில் அவர் எங்கெல்லாம் சென்றோ? உரை நிகழ்த்தினாரோ?, அவர் எங்கெல்லாம் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டாரோ, அந்த இடங்கள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க காலத்தில் பள்ளியில் சேர்ந்த நாளை மகாராஷ்டிரா அரசாங்கம் கல்வி தினமாகக் கொண்டாடப்படும் என்று அரசாணையை வெளியிட்டது. அதேபோன்று முதன் முதலில் வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். அந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் வளாகம் என்று பெயர் சூட்டி உள்ளது. அதேபோன்று அவர் எழுதிய WAITING FOR A VISA என்ற நூல் POLITICAL SCIENCE படிக்கும் மாணவர்களுக்குப் பாட திட்டுமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் LONDON SCHOOL OF ECONOMICSல் படிக்க சென்றார். அப்பொழுது அவர் தங்கிப் படித்த வீட்டை இங்கிலாந்து அரசாங்கம் நினைவுச் சின்னமாக அறிவித்திருக்கிறது.

அதேபோன்று. பீம் ஜென்ம பூமி, தீக்சா பூமி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவு இல்லம் (ராஜ கிரகம்), டாக்டர் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்டி மகிழ்வதைக் காண முடியும். இவை எல்லாவற்றையும் தொகுத்து டாக்டர் அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

பீம் ஜன்மபூமி

பீம் ஜன்மபூமி (Bhim Janmabhoomi) (அதாவது, “பீமின் பிறப்பிடம்”) என்பது பாபாசாகேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மோவ் (இப்போது டாக்டர். அம்பேத்கர் நகர்) என்ற இடத்தில் அமைந்துள்ளது. மேலும், இது ஏப்ரல் 14, 1891 இல் மோவில் பிறந்த அம்பேத்கரின் பிறப்பிடமுமாகும். மத்தியப் பிரதேச அரசு இந்த பிரமாண்டமான நினைவுச்சின்னத்தை கட்டியது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் 100 வது பிறந்த நாளன்று – ஏப்ரல் 14, 1991 – அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் சுந்தர்லால் பட்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச் சின்னத்தின் கட்டிடக்கலை கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கடே என்பவர் மேற்பார்வையிட்டார். பின்னர், ஏப்ரல் 14, 2008 அன்று, அம்பேத்கரின் 117 வது பிறந்த நாளன்று, நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச்சின்னத்துடன் கிட்டத்தட்ட 4.52 ஏக்கர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அம்பேத்கரை பின்பற்றும் இலட்சக்கணக்கான பௌத்தர்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் பிறந்த நாளை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்வார்கள். மோவ் போபாலிருந்து 216 கி.மீ தொலைவிலும், இந்தூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இடத்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2016 ஆம் ஆண்டில் 125 வது அம்பேத்கர் பிறந்தநாளில் வருகை புரிந்து பார்வையிட்டு பாபாசாகேப்பிற்கு அஞ்சலி செலுத்தினார். 2018 ஆம் ஆண்டில், 127 வது அம்பேத்கர் பிறந்தநாளில் , இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த், இங்கு வருகை தந்து பாபாசாகேபிற்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான ஐந்து புனித தளங்களில் ஒன்றாகும். மத்தியப் பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் சமாஜிக் சமரஸ்த சம்மேலன் என்ற மாநாட்டை இங்கு ஏற்பாடு செய்கிறது. இது தவிர, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அம்பேத்கரின் தந்தை இராம்ஜி மலோஜி சக்பால் புனேவில் உள்ள பான்டோஜி பள்ளியில் கல்வியை முடித்து, இந்திய பிரிட்டிசு இராணுவத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிரதம ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் முக்கியத்துவம் பெற்றார். 14 ஆண்டு தலைமை ஆசிரியரின் பணிக்குப் பிறகு, இராணுவத்தில் சுபேதார் பதவி உயர்வு வழங்கப்பட்டு மோவுக்கு அனுப்பப்பட்டார். மோவ் இராணுவ தலைமையகமாக இருந்தது. இங்கு அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, பிறந்தார். அம்பேத்கரின் பிறந்த பெயர் பீம், பிவா மற்றும் பீம்ராவ் என்றும் அழைக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பௌத்த மறுமலர்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகள் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கர் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க நபராக கருதப்படுகிறார். பின்னர், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறப்பிடம் புனித நிலமாகவும் முக்கியமான இடமாகவும் மாறியது.

மார்ச் 27, 1991 அன்று, “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு குழுவின்” நிறுவனர் தலைவர் பௌத்த துறவி சங்சில் இந்தக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். நினைவுச்சின்னத்தின் அடிக்கல் நாட்டிற்கு மத்திய பிரதேச முதல்வர் சுந்தர் லால் பட்வா அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பிறந்த இடத்தில், கட்டிட வடிவமைப்பு கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கேட் அவர்களால் உருவாக்கப்பட்டது. பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அம்பேத்கரின் சாம்பலைக் கொண்டுவருவதற்காக பண்டேஜி (பிக்கு) மும்பைக்குச் சென்றார், அவர் ஏப்ரல் 12, 1991 அன்று சாம்பலுக்கு திரும்பினார். 1991 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் 100வது பிறந்த நாள் அன்று முதலமைச்சர் சுந்தர் லால் பட்வா அவர்களால் நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடல் பிகாரி வாச்பாய் மற்றும் அமைச்சர், பெரூலால் பட்டிதர் மற்றும் பாண்டே தர்மசில் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், பிரமாண்டமான பீம் ஜன்மபூமியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. மேலும் அருங்காட்சியகமும் அம்பேத்கரின் 117வது பிறந்த நாளான 2008 ஏப்ரல் 14 அன்றே திறக்கப்பட்டது.

நினைவுச்சின்னத்தின் அமைப்பு பௌத்த கட்டிடக்கலை தாது கோபுரத்தைப் போன்றது. நினைவுச்சின்ன நுழைவாயிலுக்கு அருகில் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச்சின்னத்தில் இந்தியில் “பீம் ஜென்மபூமி” என சிலைக்கு மேலே செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பெரிய அசோக சக்கரம் உள்ளன. நினைவுச்சின்னத்தின் முன் மற்றும் நினைவுச்சின்னத்தின் மேற்புறத்தில் இரண்டு புத்த கொடி உள்ளது. நினைவுச்சின்னத்தின் உள்ளே, பாபாசாகேப்பின் வாழ்க்கை முறையின் பல உருவப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கௌதம புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர், இவரது முதல் மனைவி இரமாபாய் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் உள்ளன

தீக்சாபூமி

தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும்.. இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது..

தீக்சாபூமி மகாராட்டிரம் மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெருந்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.

தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பூமி நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் இடமாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாகப் போற்றப்படும் இரு இடங்களில் இது ஒன்று. மற்றொன்று மும்பையிலுள்ள சைதன்யபூமி ஆகும்.

இங்குள்ள பௌத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கொள்ளப்பட்டன.

அம்பேத்கரின் தேசிய நினைவகம், தில்லி

அம்பேத்கர் தேசிய நினைவகம் (Dr. Ambedkar National Memorial) என்பது இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில், அலிப்பூர் சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த இடத்தில்தான் அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தார். இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

1951இல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் 26, அலிப்பூர் சாலை என்ற இந்த இடத்தின் முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்சும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார். இவ்வளவு சிறப்புவாய்ந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டனர். ஆனால் இங்கு பின்னர் புதிய நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் உள்ளவை

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய மை பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன

சைத்திய பூமி

சைத்திய பூமி (Chaitya Bhoomi) (மகாபரிநிர்வான நினைவிடம்) என்பது ஒரு பௌத்த சைத்தியமும், இந்திய அரசியலமைப்பைக் கட்டியெழுப்பியவரான டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் தகன இடமுமாகும். இது மும்பையின் தாதர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த சைத்திய பூமி என்பது அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமுமாகும். ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் விழாவில் (மகாபரிநிர்வான தினம்) ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகிறார்.

மகாராஷ்டிரா முதல்வர், ஆளுநர், அமைச்சர் மற்றும் பல அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி சைத்திய பூமியில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதை பார்வையிட்டுள்ளார். சைத்திய பூமி அம்பேத்கருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குகிறது. மேலும் மகாராஷ்டிரா ரசாங்கத்தால் ஏ-வகுப்பு சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தளமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டமைப்பு விவரங்கள்

இந்த அமைப்பு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய குவிமாடம் கொண்டு தரைத் தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சதுர வடிவ கட்டமைப்பில் 1.5 மீட்டர் உயரத்தில் ஒரு வட்ட சுவர் உள்ளது. வட்ட பகுதியில் அம்பேத்கரின் மார்பளவு சிலையும், கௌதம புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. வட்ட சுவரில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. அவை பளிங்கு தரையையும் கொண்டுள்ளன. தவிர பிக்குகளுக்கு ஓய்வெடுக்கும் இடமும் உள்ளது. சைத்திய பூமியின் பிரதான நுழைவாயில் சாஞ்சி தாது கோபுர வாயிலின் பிரதி ஆகும். அதே நேரத்தில் அசோகரின் தூணின் பிரதியையும் கொண்டுள்ளது.

சைத்திய பூமியை 1971 திசம்பர் 5 ஆம் தேதி பி.ஆர்.அம்பேத்கரின் மருமகள் மீராபாய் யசுவந்த் அம்பேத்கர் திறந்து வைத்தார். இங்கே, அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நினைவுச்சின்னம் கட்டுவதற்காக இந்து ஆலைகளின் நிலத்தை மகாராஷ்டிரா அரசுக்கு மாற்ற அனுமதித்தது

மகாபரிநிர்வான தினம்

அம்பேத்கரின் நினைவு ஆண்டுவிழா (திசம்பர் 6) மகாபரிநிர்வான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கு வருகிறார்கள்.

அம்பேத்கர் தேசிய நினைவகம் தில்லி

அம்பேத்கர் தேசிய நினைவகம் (Dr. Ambedkar National Memorial) என்பது இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில், அலிப்பூர் சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த இடத்தில்தான் அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தார். இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

1951இல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் 26, அலிப்பூர் சாலை என்ற இந்த இடத்தின் முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்சும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார். இவ்வளவு சிறப்புவாய்ந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டனர். ஆனால் இங்கு பின்னர் புதிய நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் உள்ளவை

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய மை பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன

அம்பேத்கர் நினைவில்லம் லண்டன்

இலண்டன் அம்பேத்கர் நினைவில்லம் (Dr. Bhimrao Ramji Ambedkar Memorial) என்பது பெரிய பிரித்தானியா தலைநகரமான இலண்டனில், கிங் ஹென்ரி சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த வீட்டில் அம்பேத்கர் 1921-1922 காலகட்டத்தில் வாழ்ந்தார்.

அம்பேத்கர் பிரிட்டன் தலைநகரான இலண்டனுக்குச் சென்று அங்கு புகழ்வாய்ந்த இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுநிலையும், முனைவர் பட்டமும் படித்து, அதிலும் பிரித்தானியரைக் கடுமையான விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட ‘பிரித்தானிய இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல்’, ‘ரூபாயின் சிக்கல்’ ஆகிய ஆய்வேடுகளை அம்பேத்கர் எழுதியது இந்த வீட்டில் வசித்த 1921-1922 காலத்தில்தான்.

இலண்டனில் கிங் ஹென்ரி சாலையில் உள்ள 2,050 சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு மாடிகள், ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டை அதன் உரிமையாளர் 2015 ஆம் ஆண்டு விற்க முடிவு செய்தா. இதை அறிந்த இந்தியாவின் மகாராஷ்டிர அரசு 31 கோடி ரூபாய் கொடுத்து இதை வாங்கியது.பின்னர் இதை நினைவில்லமாக மாற்றியது. மேலும் இது ஒரு அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது. இதில் அம்பேத்கரின் பொருட்கள், அவர் குறித்த ஒளிப்படங்கள், அவரின் கடிதங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்நிலையில் திட்ட அனுமதி பெறவில்லை என்று என்று கூறி நினைவில்லத்தை மூட இலண்டன் காம்டென் நகராட்சி உத்தரவிட்டது. மேலும் இங்கு உள்ள அம்பேத்கரின் பொருட்களை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்துமாறும் சொல்லப்பட்டது. அனுமதி கோரி இந்திய தூதரகம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதன் பிறகு நடத்தப்பட்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு இந்த நினைவகம் செயல்பட இலண்டன் அரசு 2020 மார்ச் மாதத்தில் அனுமதி அளித்தது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dr. Babasaheb Ambedkar International Airport, ) மகாராட்டிரத்தின் நாக்பூர் நகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையம் நாக்பூரின் தென்மேற்கில் 8 கிமீ (5 மை) தொலைவில் சோனேகாவ்னில் அமைந்துள்ளது. 1355 ஏக்கர்கள் (548 எக்டேர்) பரப்பளவு கொண்ட இந்த வானூர்தி நிலையம் 2005இல் இந்திய அரசியலமைப்பை வடித்தச் சிந்தனையாளர் அம்பேத்கர் நினைவாகப் பெயரிடப்பட்டது. நாளுக்கு 4,000 பயணிகளைக் கையாளும் இந்த நிலையம் ஐந்து உள்நாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் இரண்டு பன்னாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. சார்ஜா, தோகா மற்றும் 12 உள்நாட்டுச் சேரிடங்களுக்கு இவை நாக்பூரை இணைக்கின்றன. இங்கு இந்திய வான்படையின் வான்தளமும் அமைந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பெரிதும் 700 கிமீ (378 மை) தொலைவிலுள்ள மாநிலத் தலைநகர் மும்பைக்கே உள்ளது.

இந்த வானூர்தி நிலையம் 1917-18இல் முதல் உலகப் போரின்போது அரச வான்படைக்காகப் பயன்பாட்டிற்காகத் துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு விலகியபோது இது இந்திய அரசிற்கு மாற்றப்பட்டது. 1953இல் உணவகங்கள், ஓய்வறைகள், ஒப்பனையறைகள், நூலங்காடிகள், பார்வையாளர் அரங்கங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

சோனேகான் வானூர்தி நிலையம் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட தனித்துவமான “இரவு வான்வழி அஞ்சல் சேவையின்” மைய அச்சாக விளங்கியது; இத்திட்டத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையிலிருந்து நான்கு வானூர்திகள் ஒவ்வொரு இரவும் அஞ்சல்பைகளுடன் இங்கு வந்து சேர்ந்து மற்ற நகரங்களுடன் அஞ்சல்களைப் பிரித்துக் கொண்டு தத்தம் இடம் திரும்பின. இந்த சேவை சனவரி 1949 முதல் அக்டோபர் 1973 வரை இயக்கத்தில் இருந்தது. இங்கு குடிசார் வான் போக்குவரத்தே முதன்மையானதாக இருந்தது; 2003இல் மீண்டும் இந்திய வான்படை இங்கு தனது 44ஆம் அலகை நிறுவி படைத்துறையின் சரக்கு வானூர்தி ஐஎல்-76ஐ இங்கு இருத்தியுள்ளது.

விரிவாக்கம்

இந்தியாவின் நடுமத்தியில் அமைந்துள்ளதால் பன்முகட்டு பன்னாட்டு சரக்கு மைய அச்சு மற்றும் நாக்பூர் வானூர்தி நிலையம் என்ற திட்டம் (ஆங்கிலச் சுருக்கம்:MIHAN) முன்மொழியப்பட்டு இதற்கான மேம்பாட்டுப் பணிகள் 2005ஆம் ஆண்டு துவங்கின. இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் ஓடுபாதை, புதிய முனையக் கட்டிடம், மற்றும் சரக்கு வளாகத்தை கட்டு-பராமரி-மாற்று அடிப்படையில் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய வான்படைக்கு மகாராட்டிர அரசு 400 எக்டேர் நிலத்தை மாற்றாக வழங்கியது.

புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ஏப்ரல் 14, 2008இல் திறக்கப்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பழைய கட்டிடத்தையும் ₹790 மில்லியன் செலவில் மேம்படுத்தியது. இந்த வானூர்தி நிலையம் 17,500 சதுர மீட்டர் பரப்பளவில் மணிக்கு 550 பயணிகளைக் கையாளும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் 20 உள்பதிகை முகப்புகளும் 20 குடிபுகல் முகப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த முனையத்தில் கட்புல இணைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய பயணியர் வானூர்தி பாலங்களும் சரக்குப் பெட்டிகளுக்கான சுமைச்சுழலிகளும் அமைந்துள்ளன. 600 தானுந்துகளை நிறுத்தக்கூடிய தானுந்து நிறுத்தற்பூங்காவும் உள்ளது. இதில் 18 நிறுத்த தடவழிகள் உள்ளன. வானூர்தி நிலையத்தை முதன்மை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அணுக்கச்சாலை புதியதாகக் கட்டப்பட்டது. வானூர்தி நிலையத்தின் வான் பயண வழிகாட்டுதலை மேம்படுத்த புதிய கட்டுப்பாட்டு அறையும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்பக் கட்டிடமும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் பராமரிப்பு மையம்

இந்த வானூர்தி நிலையத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமெரிக்க வானூர்தித் தயாரிப்பு நிறுவனமான போயிங் பராமரிப்பு – செப்பனிடுதல் – பழுதுபார்வை (MRO) வசதியை சனவரி 2011இல் கட்டமைத்துள்ளது. இந்த வசதியை ஏர் இந்தியாவின் பராமரிப்புத் துறை, ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் பிரிவு, 2013இல் ஏற்றுக்கொண்டது; சூன் 2015 முதல் இயக்கி வருகின்றது. இந்த $100 மில்லியன் பெறுமான திட்டத்தில் இரண்டு 100 x 100 மீட்டர் வானூர்திக் கூடாரங்களை லார்சன் அன்ட் டூப்ரோ கட்டியுள்ளது. இவை போயிங் 777 & 787-8 போன்ற அகல உடல் வானூர்திகளை நிறுத்துமளவிற்கு உள்ளன. மேலும் வேலைசெய்ய ஏதுவாக கூடுதலாக 24,000 ச மீட்டர்கள் பகுதியை வழங்குகின்றன. நாக்பூர் நாட்டின் மையமாக இருப்பதாலும் வெப்பநிலை மிக்கதாகவும் கடல்நீர் தூய்மைக்கேடும் அரித்தலும் இல்லாததாலும் இந்த வானூர்தி நிலையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. உலகில் இத்தகைய வசதியை போயிங் நிறுவனம் இரண்டாவது முறையாகக் கட்டமைத்துள்ளது; முதலில் சீனாவின் சாங்காயில் நிறுவியுள்ளது.

– பேரா. எ. பாவலன்

ஷெல்லி கட்டுரை – இரா. இரமணன்

ஷெல்லி கட்டுரை – இரா. இரமணன்




19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பஞ்சமும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவின. முதல் சோளச் சட்டமும் (இறக்குமதியின் மீது வரிகள் விதித்து விலைகளைச் செயற்கையாக உயர்த்தி வைத்திருக்கும் நடைமுறை) மக்களுக்கு ஆட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாமையும் சேர்ந்து புரட்சிகரமான அரசியலைப் பிரபலப்படுத்தியிருந்தது. 1819ஆம் வருடம் ஆகஸ்ட் 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் அரசியல் பிரதிநிதித்துவம் கேட்டு 60000-80000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் குதிரைப்படையினர் புகுந்து தாக்கியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 400-700 பேர் காயமுற்றனர். இது பீட்டர்லூ படுகொலை என அழைக்கப்பட்டது. இந்தப் படுகொலையை ’அராஜகத்தின் முகமூடி’என்ற தனது கவிதையில் ஷெல்லி உருக்கமாக வருணித்திருந்தார்

‘நீங்கள் சிந்திய ரத்தத்தால்
அவர்கள் முகம் வெட்கி சிவக்கட்டும்.’

அந்தக் கவிதையை ஒரு அறைகூவலுடன் முடித்திருப்பார்.

‘உறக்கத்தில் விழித்த சிங்கமென
ஓராயிரம் வீரரென
எழு! உடைத்திடு
உன்னைப் பிணித்திருக்கும் சங்கிலிகளை.
உறக்கத்தில் உன்மீது படிந்திட்ட பனித்துளியென
உதிர்த்திடு புவியின்மீது!
நீ பெரும்படை!
அவர்களோ குறுங்கூட்டம்!’

ஷெல்லியின் இந்த கவிதை வரிகள் எவ்வாறு பல கவிதைகளில் பல காலங்களில் பிரதிபலிக்கிறது என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ்மிக்க வரிகளான

‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலிகளைத் தவிர’ என்பதும் இது போன்றே கவித்துவமானது என்று சொல்லலாம்.
‘இங்கிலாந்தின் மக்களே’ என்ற இன்னொரு கவிதையிலும் தொழிலாளிகள் நிலை குறித்து ஷெல்லி உணர்ச்சி ததும்ப பாடுகிறார்.

‘இங்கிலாந்தின் தேனீக்களே!
உம் உழைப்பின் செல்வத்தை
உறிஞ்சிக் குடிக்கும்
பல்லில்லாப் பூச்சிகளுக்கோ
சங்கிலியும் சாட்டைகளும்
அளவில்லா ஆயதங்களும்
அடித்துத் தருவீர்?’
இந்தக் கவிதையின் தாக்கமாக ஜார்ஜ் ஆர்வெல் தனது ‘விலங்குப் பண்ணை’ குறு நாவலில்
‘மூக்கணாங்கயிறுகள் அறுந்துவிழும்
நுகத்தடிகள் கழலும்.
சேணங்கள் துருப்பிடிக்கும்.
கொடும் சாட்டை ஒருக்காலும்
சொடுக்கப்படாது.’

என்று எழுதுகிறார்.இந்த நூல் சோவியத் புரட்சியை கேலி செய்து எழுதப்பட்டது.

பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதத்தின்
“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரிற்கடையரே எழுங்கள்
வீறு கொண்டே தோழர்காள்’
என்று தொடங்கும் வரிகளும்
‘மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்’

என்ற வரிகளும் ஷெல்லி எழுதிய ‘இங்கிலாந்து மக்களே’ என்ற பாடல் வரிகளான

ஓய்வோ சுகமோ அமைதியோ
உறைவிடமோ உணவோ
அருமருந்தாகும் காதலோ
உமக்குண்டோ?’
என்பதோடும்

‘வியர்வையும் நுணுக்கமும் விரவி
நீங்கள் நெய்த பட்டாடை
அக்கிரமக்காரர்கள் அணிந்து மகிழவோ?’

என்பதிலும் எதிரொலிக்கிறதல்லவா?
ஷெல்லியின் கவிதையை காந்தி அடிக்கடி மேற்கோள் காட்டுவார் என்றும் அவரது சாத்வீகப் போராட்டம் ஷெல்லியின் தாக்கம் என்றும் கூறப்படுகிறது.

அதே பாடலில் வரும்
‘விதைப்பாடு செய்வோம்;
வீணர் அறுக்க விடோம்..
தேடுவோம் செல்வம்;
செருக்கர்கள் குவிக்க விடோம்.
ஆடைகள் நெய்வோம்;
அக்கிரமக்காரர்கள் அணிய விடோம்.
ஆயுதங்கள் செய்வோம்;
அதை நாமே தரிப்போம்.’
என்ற வரிகள் பாரதியின்
‘விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்’

என்பதில் காலங்கடந்து நிற்கிறதல்லவா? பாரதியார் எட்டையபுரத்தில் இருந்த காலத்திலேயே ஷெல்லியை ஈடுபாட்டுடன் கற்றார். “ஷெல்லிதாசன்” என்பது பாரதியின் இளமைக்காலப் புனை பெயர்களிலொன்று.என்கிறார் முனைவர் கைலாசபதி. பாரதிதாசனின்
“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது- சிறுத்தையே வெளியே வா’.
மற்றும்
‘இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!’

எனும் வரிகளும் ஷெல்லியின் கவிதையோடு ஒப்பிடத் தக்கது.

ஷெல்லியின்
‘விதைப்பது நீ;அறுப்பது யாரோ.
செல்வம் விளைப்பது நீ; சேர்வது யாரிடமோ?’
என்ற வரிகளை பட்டுக்கோட்டையின்
‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’
என்பதில் பார்க்கலாம்.ஆனால் அதற்கான காரணங்களையும்
மாடா உழைச்சவன் வாழ்வில் பசி வந்திடக் காரணம் செல்வந்தர் வீட்டில் சேர்வது’
என்று பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி

‘வசதி படைத்தவன் தரமாட்டான் வயிறு பசித்தவன் விடமாட்டான்’
என்று எதிர்காலத்தையும் சொல்லிச் சென்றார்.

ஷெல்லியின் கவிதையில் வரும் சோக வரிகள்
‘சமரசம் உலாவும்
இங்கிலாந்தில் உன் கல்லறை
காணும்வரை
உன் தறியே
உனக்கு பாடைத்துணி நெய்யும்
உன் கலப்பையும் களைக் கொத்தியும்
மண்வெட்டியுமே
உன் சவக்குழி தோண்டும்;.
சமாதியும் கட்டும். ‘
என்ற தொழிலாளியின் நிலை ஐம்பது ஆண்டுகளில் மாறி ஹென்ரிக் ஹீனியின் ‘ஷைலேஷியன் வீவர்ஸ்’ பாடலில்
‘தெறித்தோடும் ஓடம்
முக்கி முனகும் தறிச் சட்டம்
இரவும் பகலும் இமை மூடாது
இயங்குகிறோம்.
புராதன ஜெர்மனியே
மூன்றடுக்கு சாப இழைகள் கோர்த்து
உனக்கொரு பாடைத் துணி நெய்கிறோம்.’

என்று தங்களுடைய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்த்துபோகச் செய்த கடவுளுக்கும் கடைசிக் காசு வரை பறிமுதல் செய்யும் அரசனுக்கும் பொய்மையே தாய்மொழியாகிப்போன தந்தை நாட்டிற்கும் சாபமிடும் நெசவாளர்களின் வரிகளாக பார்க்க முடிகிறது.

ஷெல்லியின்
‘அடுத்தவர் வாழ அறை அலங்கரித்து
பின் நீ முடங்குவதோ
சந்திலும் பொந்திலும்.’
என்பது நம் தமிழ்ஒளியின் பாடலின்

“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்’

வரிகளாக பார்க்கும்போது தொழிலாளி வர்க்கக் கவிஞனைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

ஷெல்லியின்

‘நீ பெரும்படை!
அவர்களோ குறுங்கூட்டம்!’
என்ற வரிகள்

‘மறந்து விடாதே
மக்கள்தான் ஆயுதம்
மக்கள்தான் பேராயுதம்’

என்ற தோழர் பால பாரதியின் முகநூல் கவிதை வரிகளில் இரு நூற்றாண்டுகள் கழிந்து புதுப் பிறவி எடுக்கிறது.எனவே காலத்தின் குரலாக விளங்குபவர்களே கவிஞர்கள் என்பது தெளிவு.

கட்டுரைக்கு உதவியவை
1.விக்கிபீடியா
2.இந்த நாள் இதற்கு முன்னால் – தீக்கதிர் –அறிவுக்கடல்
3.புராஜெக்ட் மதுரை-ஒப்பியல் இலக்கியம்-கலாநிதி கைலாசபதி
4. எழுத்து.காம்
5.தோழர் வே.மீனாட்சிசுந்தரம்

கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த “ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை – பேரா.சோ.மோகனா

கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த “ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை – பேரா.சோ.மோகனா




1500 ஆண்டுகளுக்கு முன் கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்தவர் 
இன்றைக்கு சுமார் 15௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு துறவி  மற்றும் விஞ்ஞானியைப் பற்றிய பதிவு இது.  அவரது செயல்பாடுகள், அந்தக் காலத்திலேய மிகவும் ஆச்சரியமாக உள்ளன. அவரின் பெயர் வெனரபிள் பேட் (the Venerable Bede).
BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஆனால் பொதுவாக அவரை  பேட் என்றே அழைக்கப்படுகிறார். அவர் ஒரு துறவி. இங்கிலாந்தின் திருச்சபையின் ஆரம்பகால வரலாற்றாசிரியர், மத போதகர், ஆங்கில அறிஞர், பாடகர், கவிஞர், மொழியியலாளர் ,மொழிபெயர்ப்பாளர்  மற்றும் இறையியலாளர். அம்மாடி போதுமா ஒருவரின் திறமையும் செயல்பாடும். பேட் ஒரு பல்துறை வித்தகர். பேட் விஞ்ஞான, வரலாற்று மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல,  இசை மற்றும் அளவீடுகள் முதல் வேதாகம வர்ணனைகள் வரை அவரது எழுத்துக்களின் வரம்பை பிரதிபலிக்கின்றன. அதைவிட இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கி.மு. மற்றும் கி.பி தொடங்கிய தேதிகள், அவற்றின் அவதானிப்பு, அத்துடன் ஈஸ்டர் தினத்துக்கான தேதிகள் உட்பட அவர்தான் நிர்ணயித்தார்.. இதற்காக பேட் வானவியலைப் பயன்படுத்திகொண்டார். பேட்
“ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

  பேட் பற்றிய சிறு குறிப்பு 

பேட்  ஆணாதிக்க இலக்கியங்களையும், பிளினி தி எல்டர், விர்ஜில், லுக்ரெடியஸ், ஓவிட், ஹோரேஸ் மற்றும் பிற கிளாசிக்கல்  எழுத்தாளர்களையும் அறிந்திருந்தார். அவருக்கு கிரேக்க மொழியும் தெரிந்திருந்தது. லத்தீனில்  பேடேயின் வேத பூர்வ வர்ணனைகள் உருவகமான விளக்க முறையைப் பயன்படுத்தின; அவர்  எழுதிய வரலாற்றில், அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இருந்தன. இது நவீனBC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா வரலாற்றாசிரியர்களுக்கு அவரது வரலாற்றில் உள்ள பொருட்களைப் பற்றிய விமர்சன அணுகுமுறையுடன் முரண்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பகால இடைக்கால அறிஞர்களின் உலகப் பார்வையில் இத்தகைய கருத்துக்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. பேட் இப்போது முக்கியமாக ஒரு வரலாற்றாசிரியராகப் பார்க்கப்பட்டாலும், அவரது கால இலக்கணம், காலவரிசை மற்றும் விவிலிய ஆய்வுகள் குறித்த அவரது படைப்புகள், அவரது வரலாறு மற்றும் வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளைப் போலவே முக்கியமானவை. கரோலிங்கியன் மறுமலர்ச்சிக்கு, வரலாறு சாராத படைப்புகள் பெரிதும் பங்களித்தன. இந்த படைப்பில் அவரது படைப்புரிமை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர் ஒரு தவத்தை எழுதிய பெருமைக்குரியவர். பேட்  இறக்கும் தருவாயில், இறப்பு படுக்கையில் கூட கவிதை எழுதி சமர்ப்பித்தவர்.

ஈஸ்ட்டர் & நேரம் கணிக்க வானவியலைப் பயன்படுத்தியவர்

நேரத்தை கணக்கிடுவதில் பிரபஞ்சத்தின் பாரம்பரிய, பண்டைய மற்றும் இடைக்கால கருத்தின் படி, பேட் கணித்துள்ளார். கோளவடிவ  பூமி மாறிவரும் பகல் நீளத்தை எவ்வாறு பாதித்தது என்றும், சூரியன் மற்றும் சந்திரனின் பருவகால இயக்கம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கான விளக்கம் உட்பட அவரது எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகம் அதில்  இருந்தது. மாலை அந்தி நேரத்தில் அமாவாசையின் மாறும் தோற்றம் பற்றியும் பேசுகிறார். பேட் சந்திரனால் அலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார். தினமும் இரண்டு முறை அலைகளின் ஏற்ற இறக்க நேரம் சந்திரனுடன் தொடர்புடையது என்பதையும், வசந்த கால சந்திர மாத சுழற்சியும், மற்றும் நேர்த்தியான அலைகளின் அளவும்  சந்திரனின் நிலையுடன் தொடர்புடையது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். அதே கடற்கரையில் அலைகளின் நேரங்கள் வேறுபடுகின்றன என்பதையும், மற்ற இடங்களில் அதிக அலை இருக்கும்போது நீர் அசைவுகள் ஒரே இடத்தில் குறைந்த அலைகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.  பேட் தனது புத்தகத்தின் கவனம் கணக்கீடாக இருந்ததால், ஈஸ்டர் தேதியைக் கணக்கிடுவதற்கும், பாஸ்கல் – பௌர்ணமி தேதியிலிருந்து ராசி மண்டலத்தின் வழியாக சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிடுவதற்கும், காலெண்டர் தொடர்பான பல கணக்கீடுகளுக்கும் பேட் அறிவுறுத்தல்களை வழங்கினார். . ஆங்கிலோ-சாக்சன் காலண்டரின் மாதங்களைப் பற்றி அவர் சிலஅவசியத்  தகவல்களைத் தருகிறார்.

சமகால நாள் குறிப்பை சரி செய்தல்
பேட் கி.மு மற்றும் கி.பி.யின்  ஈஸ்டருக்கான சரியான தேதியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, அவர் வானியல் பற்றிய அறிவைப் பயன்படுத்தினார்.  சோசிஜெனீஸின் ஜூலியன் காலெண்டரில் ஒரு குறைபாடு காரணமாக, 21 மார்ச் பாரம்பரிய தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வந்ததாக குறிப்பிட்டிருந்து. வசந்த கால உத்தராயணம் (வசந்த கால சமகால நாள்-மார்ச் 21 )ஒரு கட்டத்திற்கு நழுவியிருப்பதை அவர் கண்டறிந்தார். BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஇருப்பினும், ஒரு லீப் ஆண்டுகளின் எண்ணிக்கையில் தேவையான சரிசெய்தல் தொடர்பாக அவர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்பது நூற்றாண்டுகள் கழித்த்துதான் பேட்டின் இந்த செயல்பாடு சரிசெய்யப்பட்டது.  பூமி ஒரு கோளம் என்று பேட் கருதினார். சந்திரனின் நகர்வை அலைகள் தொடர்பான பைத்தாஸின் ஆலோசனையை அவர் பாதுகாத்தார்.  மேலும் அதிக அலை என்பது ஓர் உள்ளூர் விளைவு மற்றும் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் ஏற்படாது என்ற செலூகஸின் கருத்தை பின்பற்றினார்.

பிறப்பு &வளர்ப்பு

பேட்டின் பிறப்பு கி.பி  672/673 ஆக இருக்கலாம் என அவரே பிற்காலத்தில் அவரே தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். 673 ஆம் ஆண்டில் தான் பிறந்ததாகவும், வேர்மவுத் மடத்தின் நிலங்களில் இருப்பதாகவும் பேடே கூறினார். அவரின் ஏழாவது வயதில், அவரது குடும்பத்தினரால் வியர்மவுத்தின் மடாதிபதி பெனடிக்ட்BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா பிஸ்காப்பிடம்.பேட்   கல்வி கற்பிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டார். பேட், தனது  பத்தொன்பது வயதில் தேவாலயத்தில் ஒரு டீக்கனாகவும், முப்பது வயதில் அவர் ஒரு பாதிரியாராகவும் நியமிக்கப்பட்டார். அவர் தனது

 

 

சமூகத்தில் சுறுசுறுப்பாக இருந்தபோது, ​​பேட் படிப்பு, எழுதுதல் மற்றும் அவருக்கு பிடித்த செயல்பாடுகளை கற்பித்தல் ஆகியவற்றைக் கண்டார். அவர் பைபிள் மற்றும் லத்தீன் மொழியைப் படித்தார். அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டார்,. BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஏனென்றால் அப்போது அதுதான்  மடத்தின் நூலகத்தில் உள்ள பைபிளின் மொழி மற்றும் பிற புத்தகங்களில் உள்ளதும் கூட. .அவரது போதனைகள்  மிகவும் அடிப்படையானது. மேலும்  அவரது கருத்துக்கள் மிகவும் வழக்கமானவை (எந்த வகையிலும் முற்போக்கானவை அல்ல).

  ஸ்காட் டெக்ரிகோரியோ எழுதிய புனித பேடேயின் எழுத்துக்களில் புதுமை மற்றும் பாரம்பரியம் உள்ளது என்றார். எனவே அவரை புத்தக பரிந்துரை யில் “பேட் ஆங்கில வரலாற்றின் தந்தை” என்று கூறி பெருமைப்படுத்தி அழைக்கப்படுகிறார்.

உயிர்ப் போராட்ட வாழ்க்கை 

பேட் தன் சிறுவயதில் ஜாரோவில் மடாலயத்தில்,  அபோட் சியோல்ஃப்ரித் உடன் இருந்தார்.  அங்கே  இருவரும் கி.பி 686ம் ஆண்டில்  தாக்கிய உயிர்க்கொல்லி நோயான  பிளேக் நோயிலிருந்து அதிருஷ்டவசமாகத் தப்பினர், பிளேக் நோய் ஊரெங்கும் வெடித்தது அங்குள்ள பெரும்பான்மையான மக்களை உயிர்ப்பலி வாங்கியது. . ஏறக்குறைய கி.பி 710ம் ஆண்டில் எழுதப்பட்ட தகவல் என்னவென்றால்,: ” சியோல்ஃப்ரித்தின் வாழ்க்கை”என்ற புத்தகத்தில் ” அந்த ஊரில் பிளேக் நோயிலிருந்து தப்பிபிழைத்தது எஞ்சியிருந்தது இரண்டே இரண்டு துறவிகள் மட்டுமே. ஒருவர் சியோல்ஃப்ரித், மற்றவர் ஒரு சிறுவன், அதுதான் பேட் அநாமதேய எழுத்தாளரின் கூற்றுப்படி சியோல்ஃப்ரித் கற்பித்தார். மற்றவர்கள் பயிற்சி பெறும் வரை இருவரும் வழிபாட்டின் முழு சேவையையும் செய்ய முடிந்தது. ” என்று தெரிவிக்கிறது. அந்த சிறுவன் கிட்டத்தட்ட நிச்சயமாக பேடே,தான். பின்னர்  அவன் பயிற்சி எடுக்கும்போது, அவனுக்கு  14 வயதாக  இருந்திருக்கும்

குறைந்த வயதில் பாதிரியாராக  

பேடேவுக்கு சுமார் 17 வயதாக இருந்தபோது, ​​அயோனா அபேயின்  மடாதிபதியான அடோம்னான், மாங்க்வேர்மவுத் மற்றும் ஜாரோவைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது பேட் மடாதிபதியை சந்தித்து, ஈஸ்டர் டேட்டிங் சர்ச்சையில் அடேமோன் பேடேவின் ஆர்வத்தைத் தூண்டினார். இது கி.பி 69ம் ஆண்டு, , பேடேவின்19 வயதில் பேட் பிஷப்பாக இருந்த அவரது மறைமாவட்ட பிஷப் ஜான் ஒரு டீக்கனாக நியமிக்கப்பட்டார். ஹெக்சாம். ஒரு டீக்கனின் நியமனத்திற்கான நியமன வயது 25; பேடேவின் ஆரம்பகால நியமனம் என்பது அவரது திறன்கள் விதிவிலக்கானதாகஇருந்ததால் அவரிறிற்கு முக்கியம் தரப்பட்டது. அதனால் குறைந்தபட்ச வயதுத் தேவை என்பதும் புறக்கணிக்கப்பட்டது. பேட் தனது 3௦ வயதில் (கி.பி 702), அவர் ஒரு பாதிரியார் ஆனார், இதனை பிஷப் ஜான் நிகழ்த்தினார்.

எழுத்தாளர் மற்றும் அறிஞர் 

பேட், மாங்க்வேர்மவுத்-ஜாரோவின் சகோதரி நார்த்ம்ப்ரியன் மடாலயங்களில் உறுப்பினராக இருந்தார். அவர் ஜாரோவில் இருந்த அதன் பெரிய நூலகத்துடன் அதிக நேரம் செலவிட்டார். இருவரும் டர்ஹாம் (இப்போது டைன் மற்றும் வேர்) என்ற ஆங்கில கவுண்டியில் வாழ்ந்தனர்.  அவர் ஓர் அற்புதமான எழுத்தாளர் மற்றும் அறிஞராக பலராலும் நன்கு அறியப்பட்டவர். ” ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு” என்ற புத்தகம் அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தை தந்தது. .பேட் தனது வாழ்நாளில்,  பல அறிவியல், வரலாறு மற்றும் இறையியல் படைப்புகளை எழுதினார். இவையாவும், பல இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிற மடங்களால் நகலெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

படைப்பு 

பேட்டின்  குறிப்பாக மிகவும் பிரபலமான ஒரு படைப்பு இருந்தது. ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று பேடேவின் ஆங்கில தேசத்தின் பிரசங்க வரலாறு. பேட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜாரோவில் கழித்தார், இங்குதான் அவர் தனது தன் வரலாற்றை எழுதினார். பிரசங்க வரலாறு ஐந்து புத்தகங்கள் மற்றும் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட சுமார் 400 பக்கங்களால் ஆனது. இது சீசரின் காலம் முதல் அது நிறைவடைந்த தேதி வரை (731) இங்கிலாந்து வரலாற்றின் 800 ஆண்டுகால நீண்ட நெடிய வரலாற்றைக் விரிவாகக் கொண்டுள்ளது. அதன் கடைசி அத்தியாயம் பேடே பற்றியது.

பெனடிக்ட் பிஸ்காப் உதவியால் உயர்வு 

பேடேவின் வேலையை சாத்தியமாக்கிய ஒருவர் பெனடிக்ட் பிஸ்காப் என்ற அறிவியலாளர் ஆவார். அவர் வேர்மவுத் மற்றும் ஜாரோ மடங்களை நிறுவினார். மிக முக்கியமாக அவர் பேடேவின் பெரும்பாலான தகவல்களைப் பெற்ற நூலகத்தை உருவாக்கினார். கி.பி 689ம் ஆண்டில்  பெனடிக்ட் பிஸ்காப்  இறக்கும் போது, ​​பேட்  ரோம் மற்றும் தெற்கு பகுதிக்கு நான்கு பயணங்களை முடித்து, ஒவ்வொரு முறையும் பெரிய புத்தகங்களை திரும்பவும்  கொண்டுவந்தார். அந்த மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான சியோல்ஃப்ரிட் இல்லையென்றால் பேடேவின் பணி இன்னும் சாத்தியாமாகி இருக்காது. பெனடிக்ட் பிஸ்காப் விட்டுச் சென்ற நூலகத்தின் அளவை, பேட் இரட்டிப்பாக்கினார். பேட், யார்க்(York) மற்றும் லிண்டிஸ்பார்னை  தாண்டி வேறு எங்கும் அதிக தூரம் பயணம் செய்யவில்லை. தொலைதூர இடங்களில் அவர் எப்போதும் நூலகங்களைப் பார்வையிட்டதாக எந்த பதிவும் இல்லை. பேட் தனது ஆதாரங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

“கடவுளின் உதவியுடன், கிறிஸ்துவின் ஊழியரும், ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் பவுலின் வேர்மவுத் மற்றும் ஜாரோவின் மடத்தின் பாதிரியாருமான நான், பிரிட்டனில் உள்ள திருச்சபையின் வரலாறு மற்றும் ஆங்கில சர்ச்சின் வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்தேன். குறிப்பாக, பண்டைய எழுத்துக்களிலிருந்தும், நம் முன்னோர்களின் மரபுகளிலிருந்தும், எனது சொந்த அறிவுகளிலிருந்தும் அவற்றைக் கண்டறிய முடிந்தது. அவற்றையே நான் பதிவு செய்தேன்” என்று தெரிவிக்கிறார்.

காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் தந்தவர் பேட் 

பேட் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மடத்தில் கழித்தபோது, ​​பேட் பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள பல தங்குமிடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மடங்களுக்குச் சென்றார்.  யார்க்கின் பேராயர் மற்றும் நார்த்ம்ப்ரியாவின் மன்னர் சியோல்வல்ப் ஆகியோரையும் பார்வையிட்டார். பேட் எழுத்தாளர், ஆசிரியர் , மற்றும் அறிஞர் என நன்கு அறியப்பட்டவர், மற்றும் அவரது மிகப் பிரபலமான படைப்பான ஆங்கில மக்களின் பிரசங்க வரலாறு, அவருக்கு “ஆங்கில வரலாற்றின் தந்தை” என்ற பட்டத்தைப் பெற்றது. அவரது “எக்குமெனிகல்” எழுத்துக்கள் விரிவானவை மற்றும் பல விவிலிய வர்ணனைகள் மற்றும் பிற இறையியல் படைப்புகள் ஆகியவை . பேடேவின் மற்றொரு முக்கியமான ஆய்வு பகுதி, கம்ப்யூட்டஸின் கல்வி ஒழுக்கம். அதுவே அவரது சமகாலத்தவர்களுக்கு காலண்டர் தேதிகளை கணக்கிடும் அறிவியல் வரலாறு என்று பலராலும் அறியப்படுகிறது.

ஈஸ்டர் தேதி நிர்ணயிப்பு 

பேட் கணக்கிட முயற்சித்த மிக முக்கியமான தேதிகளில் ஒன்று ஈஸ்டர் தேதி.  இது அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து முன்னோக்கி தேதிகள் குறிப்பிடுவதை  பிரபலப்படுத்த அவர் உதவினார், இது ஒரு அப்போதைய நடைமுறை ஆகும். பின்னர் அது இடைக்கால ஐரோப்பாவில் பொதுவானதாக மாறியது. ஆரம்பகால இடைக்காலத்தின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான பேட், கி.பின் 604 ம் ஆண்டில் முதலாம் கிரிகோரி மரணம் மற்றும் கி.பி 800ம் ஆண்டு ல் சார்லமேனின் முடிசூட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான காலத்திற்கு பழங்காலத்தின் மிக முக்கியமான அறிஞராக பல வரலாற்றாசிரியர்களால் “பேட்” கருதப்படுகிறார். பேட்டின் சிறப்பு பல காலங்களில் கொண்டாட்டப்பட்டது. அவரின் பெருமை உலகம் உள்ள அளவும் நீடிக்கிறது.

மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

பன்னிரெண்டாம்  போப் லியோ, பேட்டை திருச்சபையின் மருத்துவராக அறிவித்தார். இந்த பெயரை அடைய கிரேட் பிரிட்டனின் ஒரே பூர்வீகம் அவர்; திருச்சபையின் டாக்டரான கேன்டர்பரியின் ஆன்செல்ம் முதலில் இத்தாலியைச் சேர்ந்தவர். பேட் ஒரு திறமையான மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார், மேலும் அவரது பணி ஆரம்பகால சர்ச் பிதாக்களின் லத்தீன் மற்றும் கிரேக்க எழுத்துக்களை அவரது சக ஆங்கிலோ-சாக்சன்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாற்றியது, இது ஆங்கில கிறிஸ்தவத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. பேடேவின் மடத்திற்கு யூசிபியஸ், ஓரோசியஸ் மற்றும் பலரின் படைப்புகள் அடங்கிய ஒரு சுவையான நூலகத்தை அணுக முடிந்தது.

பேடேயின் வாழ்க்கை பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயம் 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேடேயின் வாழ்க்கையைப் பற்றி ஏறக்குறைய அறியப்பட்ட அனைத்தும் இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தின் வரலாறான அவரது ஆங்கில மக்களின் பிரசங்க வரலாற்றின் கடைசி அத்தியாயத்தில் உள்ளன. இது சுமார் கி.பி 731ம் ஆண்டில் நிறைவடைந்தது, மேலும் பேட் அப்போது தனது 59ம் வயதில் இருந்தார், இது அவரது கி.பி 672 அல்லது 673 இல் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்பட்டது

 ஒரு சிறிய தகவல் ஆதாரம் 

 ஜாரோவில் உள்ள மடாலயம் பின்னர் கட்டப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள மோன்க்டனில் அவர் பிறந்தார் என்ற பாரம்பரியமும் உள்ளது. பேட் தனது தோற்றம் பற்றி எவ்விடத்திலும் எதுவும் கூறவில்லை, ஆனால் உன்னத வம்சாவளியைச் சேர்ந்த மனிதர்களுடனான அவரது தொடர்புகள் அவரது சொந்த குடும்பம் நல்வாழ்வைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன.  அவர்களில் ஒருவர் பேடே. பேடேவின் படைப்புகளில் ஒன்றான குத்பெர்ட்டின் வாழ்க்கையின் சில கையெழுத்துப் பிரதிகளில், குத்பெர்ட்டின் சொந்த பாதிரியார் பேட் என்று பெயரிடப்பட்டார்; இந்த பூசாரி லிபர் விட்டேயில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற பெயர்.

ஏழு வயதில், பேடே தனது குடும்பத்தினரால் பெனடிக்ட் பிஸ்காப் மற்றும் பின்னர் சியோல்ப்ரித் ஆகியோரால் கல்வி கற்க மாங்க்வேர்மவுத்தின் மடத்திற்கு அனுப்பப்பட்டார்.இங்கிலாந்தில் உள்ள ஜெர்மானிய மக்களிடையே இந்த நடைமுறை பொதுவானதாக குழந்தைப் பருவத்தில் மடாலயத்துக்கு அனுப்புவது என்பதும்  வழக்கத்தில்  இருந்தது. ஜாரோவில் உள்ள மாங்க்வேர்மவுத்தின் சகோதரி மடாலயம் கி.பி 682 ஆம் ஆண்டில் சியோல்ப்ரித் என்பவரால் நிறுவப்பட்டது, மேலும் பேட் அந்த ஆண்டு சியோல்ஃப்ரித்துடன் ஜாரோவுக்கு சென்றார்.  தேவாலயத்திற்கான அர்ப்பணிப்புகள் இன்றுவரை பிழைத்து வருகிறது; இது ஏப்ரல் 23, 685ம் ஆண்டு  தேதியிட்டதும் கூட.  பேட் தனது அன்றாட வாழ்க்கையில் மோசமான பணிகளுக்கு உதவ வேண்டியிருக்கும்  என்பதால், அசல் தேவாலயத்தை கட்டியெழுப்ப அவர் உதவியது சாத்தியமாகும்.

படைப்புகள்

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட் கி.பி 701ம் ஆண்டில்  தனது முதல் படைப்புகளான டி ஆர்டே மெட்ரிகா மற்றும் டி ஸ்கேமடிபஸ் எட் டிராபிஸ் ஆகியவற்றை எழுதினார்; இரண்டும் வகுப்பறையில் பயன்படுத்தும்  நோக்கத்தைக் கொண்டவை. அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதினார் ,எழுதினார், எழுதிக்கொண்டே இருந்தார். சாகும் தருவாயிலும் கூட எழுதிக்கொண்டே உயிர் துறந்தார்.  இறுதியில் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி முடித்தார், அவற்றில் பெரும்பாலானவை தப்பிப் பிழைத்தன. அவரது வெளியீடு அனைத்தையும் எளிதில் தேதியிட முடியாது; மேலும் பேட் சில ஆண்டுகளில் சில நூல்களில் பணியாற்றியிருக்கலாம். அவரது கடைசி எஞ்சிய படைப்பு கி.பி  734ம் ஆண்டு  எழுதப்பட்ட முன்னாள் மாணவரான யார்க்கின் எக்பெர்ட்டுக்கு எழுதிய கடிதம்தான் எஞ்சியது . 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனா கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் கிரேக்க மற்றும் லத்தீன் கையெழுத்துப் பிரதியான  அப்போஸ்தலர்களின் செயல்களை  பேட் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது, இப்போது அது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது; இது கோடெக்ஸ் லாடியனஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜாரோவில் நகலெடுக்கப்பட்ட சில லத்தீன் பைபிள்களிலும் பேட் எழுதினர். அவற்றில் ஒன்று, கோடெக்ஸ் அமியாட்டினஸ், இப்போது புளோரன்ஸ் நகரில் உள்ள லாரன்டியன் நூலகத்தால் அது  நடத்தப்படுகிறது. பேட் பலே கில்லாடி. அவரே  ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்தார்; அவர் இசையையும் ரசித்தார்; ஒரு பாடகராகவும்இருந்தார்.  தனது சொந்த மொழியில் கவிதை வாசிப்பவராகவும் சாதனை செய்தார்.

பேச்சில் சிக்கல்/ திக்குவாய் பேட்  

அவருக்கு பேசும்போது பேச்சில் சிக்கல் மற்றும் பிரச்சினை இருந்தது. பேட்டுக்கு சரளமாக பேச வராது. , ஆனால் இது செயிண்ட் குத்பெர்ட்டின் அவரது வசன வாழ்க்கையின் அறிமுகத்தில் ஒரு சொற்றொடரைப் பொறுத்தது. இந்த சொற்றொடரின் மொழிபெயர்ப்புகள் வேறுபடுகின்றன, மேலும் பேட் பேச்சு சிக்கலில் இருந்து குணமடைந்துவிட்டார்; துறவியின் படைப்புகளால் அவர் ஈர்க்கப்பட்டார்.க்ளூசெஸ்டர் கதீட்ரலில் உள்ள ஒரு கண்ணாடி டம்ளரில் , பேட் ஒரு எழுத்தாளருக்கு ஆணையிடுவதை போல சித்தரிப்பு உள்ளது.

உலக வயதை கணக்கிட; 

கி.பி 708 ஆம் ஆண்டில், ஹெக்ஸாமில் உள்ள சில துறவிகள், பேட் தனது டி டெம்போரிபஸ் என்ற படைப்பில் மதங்களுக்கு எதிரான கொள்கையைச் செய்ததாக குற்றம் சாட்டினர். அந்த நேரத்தில் உலக வரலாற்றின் நிலையான  இறையியல் பார்வை உலகின் ஆறு யுகங்கள் என்று அழைக்கப்பட்டது; பேட் தனது புத்தகத்தில், செவில்லேவின் ஐசிடோரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை விட, உலகின் வயதை கணக்கிட்டார். பின்னர் , உலகத்தை உருவாகிய பின் 3,952 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்து பிறந்தார் என்ற முடிவுக்கு வந்தார்;  ஆனால் அது இறையியலாளர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 5,000 க்கும் மேற்பட்டஆண்டுகள் அல்ல என்றார் .

விவிலிய நூல் உருவாக்கம் 

கி.பி 733 ஆம் ஆண்டில், பேட் அப்போது யார்க்கின் பிஷப்பாக இருந்த எக்பெர்ட்டைப் பார்க்க அங்கு சென்றார். 735 ஆம் ஆண்டில் சீக் ஆஃப் யார்க் ஒரு பேராயராக உயர்த்தப்பட்டார், மேலும் பேட் மற்றும் எக்பெர்ட், தனது வருகையின் போது பேட் உயர்வதற்கான முன்மொழிவைப் பற்றி விவாதித்திருக்கலாம். கி.பி 734 இல் மீண்டும் எக்பெர்ட்டைப் பார்வையிட போனார். ஆனால் அப்போது அவரால்   பயணத்தை மேற்கொள்ள முடியாவில்லை.  உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்  இருந்தது.. அவர் அப்போதும் கூட லிண்டிஸ்பார்னின் மடத்திற்குச் சென்று, சில சமயங்களில் விக்டெட் என்ற துறவியின் அறியப்படாத மடத்தை பார்வையிட்டார்.அந்த விஜயம் அந்த துறவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தீவுகள் முழுவதும் மற்றவர்களுடன் அவர் பரவலாக தொடர்பு கொண்டதன் காரணமாகவும், பல கடிதங்களில்  பேட் தனது நிருபர்களைச் சந்தித்ததாகக் குறிப்பதால், பேட் வேறு சில இடங்களுக்கும்  சென்றார். நேரம் அல்லது இருப்பிடங்களைப் பற்றி மேலும் எதுவும் யூகிக்க முடியாது. எவ்வாறாயினும், அவர் ரோமிற்கு விஜயம் செய்யவில்லை என்பது அப்போது உறுதியானது. ஏனெனில் அவர் தனது ஹிஸ்டோரியா எக்லெசியாஸ்டிகாவின் சுயசரிதை அத்தியாயத்தில் அது பற்றி ஏதும்  குறிப்பிடவில்லை. ரோமில் அவருக்கான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவருக்கு உதவிய பேடேயின் நிருபர் நோத்ஹெல்ம்,  பேடேவுக்கு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது. நோத்ஹெல்மின் ரோம் வருகைக்குப் பிறகும் கூட அவர்களால் தேதியைத் தீர்மானிக்க முடியாது. மற்ற மடங்களுக்கு ஒரு சில வருகைகளைத் தவிர, அவரது வாழ்க்கை ஒரு சுற்று பிரார்த்தனையிலும், துறவற ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும், புனித நூல்களைப் படிப்பதிலும் கழிந்தது. அவர் தனது காலத்திலேயே மிகவும் கற்றறிந்த மனிதராகக் கருதப்பட்டு சிறந்த விவிலிய மற்றும் வரலாற்று புத்தகங்களை எழுதினார்.

இறப்பு 

பேட் கி.பி 735ம்  ஆண்டு  மே மாதம் 26,ம் நாள் , ஒரு  வியாழக்கிழமை, ஒரு விருந்தின்போது தனது  உயிரை இயற்கையுடன் கலந்தார்.  “பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாகட்டும்” என்று பாடி, பேடேயின் சீடரான ஜாரோ குத்பெர்ட்டில் அடக்கம் செய்யப்பட்டார். குட்வினுக்கு ஒரு கடிதம் எழுதினார், பேடேவின் கடைசி நாட்கள் மற்றும் அவரது மரணம் ஆகியவற்றை விவரித்தார். குத்பெர்ட்டின் கூற்றுப்படி, ஒரு ஈஸ்டர் திருநாள் முன்பு, “மூச்சுத் திணறல் தாக்குதல்களால் ஆனால் கிட்டத்தட்ட வலி இல்லாமல்” பேட் நோய்வாய்ப்பட்டார். செவ்வாயன்று, பேட் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது சுவாசம் மோசமாகி, அவரது கால்கள் வீங்கியிருந்தன.

இறக்கும்போதும் கவிதை எழுதிய பேட் . 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட்  ஒரு எழுத்தாளரிடம் தொடர்ந்து ஆணையிட்டார்.  இருப்பினும்,கூட அவர்  இரவில் விழித்திருந்து ஜெபத்தில் கழித்த போதிலும், மறுநாள் அவர் மீண்டும் ஆணையிட்டார். மூன்று மணிக்கு, குத்பெர்ட்டின் கூற்றுப்படி, அவர் தன்னுடைய ஒரு பெட்டியை மடத்தின் பூசாரிகளிடையே கொண்டு வந்து விநியோகிக்கும்படி கேட்டார், அவரின் “சில பொக்கிஷங்கள்”: “சில மிளகு, நாப்கின்கள், மற்றும் சில தூபங்கள் அங்கு  வந்தன. “. அன்று இரவு அவர்  வில்பெர்ட் என்ற சிறுவனுக்கு எழுத்தாளருக்கு இறுதி தண்டனையும்  விதித்தார்.. குத்பெர்ட்டின் கணக்குப்படி  நள்ளிரவுக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ பேட் இறந்தாரா என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பேடேயின் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம், பழைய நாளிலிருந்து புதிய இடத்திற்குச் செல்வது நள்ளிரவில் அல்ல, சூரிய அஸ்தமனத்தில் நிகழ்ந்தது,.  ஆகவே, மே மாதம்  25ம் நாள்  புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் அவரது பெட்டி கொண்டு வரப்பட்டபோது, ​​இறுதி ஆணையின் நேரத்தில், மே 26 அன்று அந்த மதச்சார்பற்ற அர்த்தத்தில் ஏற்கனவே  என கருதப்படலாம், இருப்பினும் 25 மே சாதாரண அர்த்தத்தில். குத்பெர்ட்டின் கடிதம் மூல , பேட் தனது மரணக் கட்டிலில் “பேடேயின் மரண பாடல்” என்று அழைக்கப்படும் ஐந்து வரிக் கவிதைகளையும் தொடர்பு படுத்துகிறது. இது மிகவும் பரவலாக நகலெடுக்கப்பட்ட பழைய ஆங்கிலக் கவிதை மற்றும் 45 கையெழுத்துப் பிரதிகளில்உருவாகிறது. , ஆனால் பேடேவுக்கான அதன் பண்பு உறுதியாகத் தெரியவில்லை-எல்லா கையெழுத்துப் பிரதிகளும் பேடேவை ஆசிரியராகப் பெயரிடுவதில்லை, மேலும் அவை பிற்காலத்தில் இல்லாதவை அல்ல.

கல்லறைக் கொள்ளை 

 பேடேவின் எச்சங்கள்/பொருட்கள்  11 ஆம் நூற்றாண்டில் டர்ஹாம் கதீட்ரலுக்கு மாற்றப்பட்டன. அவரது கல்லறை கி.பி 1541ம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டது, ஆனால் அதன்  உள்ளடக்கங்கள் கதீட்ரலில் உள்ள கலிலீ தேவாலயத்தில் மீண்டும் இணைக்கப்பட்டன.

விந்தை மனிதர் 

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாபேட் எழுத்துக்களில் இன்னொரு விந்தை என்னவென்றால், ஏழு கத்தோலிக்க நிருபங்களின் வர்ணனை என்ற அவரது படைப்புகளில், அவர் திருமணமானவர் என்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதுகிறார். பொதுப் பார்வையில் எழுதப்பட்ட அதில் கேள்விக்குரிய பகுதி மட்டுமே உள்ளது. பேட் கூறுகிறார்: “என் மனைவியின் காரணமாக நான் அடிக்கடி ஜெபம் செய்ய இயலாது என்பதால், பிரார்த்தனைகள் ஒருங்கிணைந்த கடமையால் தடைபடுகின்றன.” மற்றொரு பத்தியில், லூக்கா பற்றிய  வர்ணனையில், மனைவியையும் குறிப்பிடுகிறார்: “முன்பு நான் ஆசை உணர்ச்சியில் மனைவியைக் கொண்டிருந்தேன், இப்போது நான் அவளை கெளரவமான பரிசுத்தமாக்கலிலும் கிறிஸ்துவின்  உண்மையான அன்பிலும் வைத்திருக்கிறேன்.” வரலாற்றாசிரியர் பெனடிக்டா வார்ட் இந்த பத்திகளை பேட் ஒரு சொல்லாட்சிக் கருவியைப் பயன்படுத்துகிறார் என்று வாதிடுகிறார்


வேறு வரலாற்று படைப்புகள் .   பேட்  மரணிப்பு

BC 'Grandfather of English History' who set the dates of AD & Theologian, Venerable Bad Article - Prof. So.Mohana கி.மு. கி.பி தேதிகளை நிர்ணயித்த "ஆங்கிலேய வரலாற்றின் பிதாமகன்" & இறையியலாளர், வெனரபிள் பேட் கட்டுரை - பேரா.சோ.மோகனாஈ டெம்போரிபஸ், அல்லது ஆன் டைம், கி.பி 703 இல் எழுதப்பட்டது, ஈஸ்டர் கம்ப்யூட்டஸின் கொள்கைகளுக்கு ஒரு அறிமுகத்தை வழங்குகிறது.இது செவில்லின் சொற்பிறப்பியல் ஐசிடோரின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது, மேலும் யூரோபியஸிடமிருந்து பெறப்பட்ட உலகின் காலவரிசைகளையும் உள்ளடக்கியது, ஜெரோம் பைபிளின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகயும்  கொண்டது.

கி.பி 723 ம் ஆண்டில் இடைக்காலம் முழுவதும் செல்வாக்கு செலுத்திய ஆன் தி ரெக்கனிங் ஆஃப் டைம் என்பதில் பேட் ஒரு நீண்ட படைப்பை எழுதினார். கம்ப்யூட்டஸின் குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் பல மரணிப்பு குறுகிய கடிதங்களையும் இறையியல்,  கட்டுரைகளையும் எழுதினார்.

பேட் 735 இல் இறந்தார். அவர் ஜாரோவில் அடக்கம் செய்யப்பட்டார்,.கி.பி 836 ஆம் ஆண்டில் பேட் ‘வணக்கத்திற்குரியவர்’ என்று சர்ச் அறிவித்தது. அவர் 899 இல் ஒரு புனிதராகவும், சர்ச்சின் டாக்டராகவும் அறிவிக்க்ப்படுகிறார். அந்தப் பட்டத்தை வகித்த ஒரே ஆங்கிலேயர் பேட் மட்டுமே,

பெடேஸ் வேர்ல்ட் என்பது வடக்கு இங்கிலாந்தின் ஜாரோவில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும், இது அவரது வாழ்க்கை மற்றும் பணியை விவரிக்கிறது. இது ஒரு புனரமைக்கப்பட்ட ஆங்கிலோ-சாக்சன் பண்ணை மற்றும் நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் அந்தக் காலத்திலிருந்த படிந்த கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

– பேரா.சோ.மோகனா

To Sir With Love Braithwhaite BookReview By Theni Sundar. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் - தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – தேனி சுந்தர்




உலகப் போரின் போதும், கடுமையான வேலைகள் செய்யும் போதும் கருப்பு, வெள்ளை பேதமில்லை.. ஒரு நல்ல வேலை தேடி அலைகிறார். வேலை இருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை. காரணம் கருப்பு வெள்ளை..!

தகவல் சொல்லும் போதே நம்பிக்கை இழக்க வைக்கும் வார்த்தைகள். கிட்டத்தட்ட நம்ம ஊர்ல சொல்றது அடிக்கடி அரசு துறைகளில் சொல்லப் படுவது போல சொன்னால் தண்ணி இல்லாக் காடு.. பனிஸ்மெண்ட் ஏரியா.. அந்த மாதிரி..!

வெள்ளை மக்கள் தான் அங்கும். ஆனால் அவர்களும் கூட வறுமையின் பிள்ளைகள் தான். குடிக்க கஞ்சி இல்லைன்னாலும் வீராப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்வது போல நிற வெறிக்கு கொஞ்சமும் குறைவில்லை..!

அந்த பள்ளி குறித்து நல்ல அபிப்பிராயங்கள் எங்கும் இல்லை. ஊரிலும் இல்லை. பள்ளிக்கு உள்ளேயும் இல்லை.. பணியில் சேர்வதற்கு முன்பு பள்ளி முழுவதையும் ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வாங்க.. அவசரம் எதுவுமில்லை.. நிதானமாக முடிவெடுங்க என்கிறார் புளோரியன். பள்ளியின் முதல்வர்.

அமைதி இல்லை. ஒழுங்கு இல்லை. மதிப்பு இல்லை. மரியாதை இல்லை. வளாகத்திற்கு உள்ளே வருவோர்க்கு கெட்ட வார்த்தைகள் இலவசம். பார்க்க கூசும் காட்சிகள்.. கோபமூட்டும் பார்வைகள்.. வேறு வழியில்லை, பிழைப்புக்காக வாத்தியார் ஆவது என முடிவெடுக்கிறார் பிரைத்வெயிட்.!

நாம் அறிந்த எல்லா பள்ளிகளிலும் இருக்கிற அத்தனை கேரக்டர்களிலும் ஆசிரியர்கள் அங்கு இருக்கிறார்கள். பெண்கள் தான் பெரும்பான்மை..! புதுசா வந்தவர் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிப்பார்ன்னு தெரியல.. கிண்டல் கேலிகள்..!

உலகப் போரில் சண்டையிட போனவர் பிரைத்வேயிட். கிட்டத்தட்ட அதே தயாரிப்புடன் வகுப்புறைக்கு செல்கிறார்.. போரில் வெற்றி ஒன்றே இலக்கு என்று சென்றவர் வகுப்பறையில் தோற்றுப் போகிறார். ஆம், வேண்டுமென்றே தோற்றுப் போகிறார். உள்ளங்களை வெல்வதற்கு தோல்வி தான் முதல் படி..!

இங்கு மதிக்கத் தகாத பெண்கள் என்று யார் இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியில் சரிபாதி பேரை வெல்கிறார். அடித்து வீழ்த்த வலை விரிக்கிறான் டென்ஹாம். அடித்தும் வீழ்த்தி, அன்பால் அதை விட பெரும் வெற்றியை ஈட்டுகிறார். வகுப்பில் மீதி பாதியையும் வென்று விட்டார். ஆசிரியர் பெல் பிரச்சினையை சிறப்பாக அணுகி மொத்த வகுப்பையும் வென்று விட்டார்..!

பமீலா எடுக்கும் துணிச்சல் மிக்க முடிவால் ஒட்டு மொத்த மாணவர்களின் மனதையும் வென்று எதிரணி, தனது அணி என்று எதுவும் இல்லாமல் ஓரணியில் திரள வைக்கிறார். தெருவிலும் வெற்றி..!

சேரும் சகதியும் குழப்பமும் குற்றமும் என எல்லா கேடுகளும் பாகுபாடுகளும் நிறைந்த சமூகத்தில் வாழும் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் பள்ளிக்கு வந்து போகிறார்கள். அவர்களின் நடத்தைகளை அவர்களின் வாழிட சூழலையும் சேர்த்து பாருங்கள் என்கிறார். தெருவைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பறையை, குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது..! எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்காமல் பேசும் பள்ளியின் முதல்வர் புளொரியன்..சிறந்த முன்னுதாரணம்!

சுதந்திர பள்ளி.. விவாத வகுப்பறை சிந்தனைகளையும் சின்ன சின்ன இடங்களில் தோற்று தோற்று மாணவர்கள் மனதையும் மக்கள் மனதையும் வெல்லும் பிரைத்வெயிட் என்னும் ஹீரோவையும் அறிமுகப் படுத்துகிறது எங்கள் பேரா. ச.மாடசாமி அவர்களின் நிறத்தை தாண்டிய நேசம் என்கிற புதிய நூல். வாசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது..

நிறத்தை தாண்டிய நேசம்.. மாற்றத்திற்கான வாசல்..!

To Sir With Love Braithwhaite BookReview By M kathiresan. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் - ம.கதிரேசன்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம் – ம.கதிரேசன்




கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் TO SIR WITH LOVE என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் தான் “நிறத்தைத் தாண்டிய நேசம்”. இது அவரது வாசிப்பனுபவ புத்தக வரிசையில் மூன்றாவதாகும். TO SIR WITH LOVE புத்தக ஆசிரியர் ரிக்கி பிரைத்வைட். கறுப்பர்.அவரின் சுயசரிதை. சந்தர்ப்பவசத்தால் ஆசிரியரான கறுப்பர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை.

பிரைத்வைட் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தவர். இன்ஜினியர்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் சேர்ந்து போரிடுகிறார்.
உலகப் போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படுகின்றன. வேலையிழப்பு. பண்பாட்டிலும், நாகரிகத்திலும் தான் பெரிதும் மதிக்கும் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். இங்கிலாந்தின் நிறத்தின் அடிப்படையிலான பாரபட்சத்தால் செல்லுமிடமெல்லாம் நிராகரிக்கப் படுகிறார். இறுதியாக லண்டனின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.

கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளி- பணிபுரிய யாரும் தயங்கும் பள்ளி. ஆசிரியர் பணியே அவர் நேசிக்கும் பணியல்ல. அதிலும் சேரிப் பகுதியில், சமாளிப்பதற்கு கடினமான பள்ளியில் வாழ்க்கை பாட்டுக்காக பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள்தான். மாணவர்களை சமாளிப்பது பெரும்பாடு. பொதுவாக ஆண் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் நீடிக்க முடிவதில்லை. அவரது நல்வாய்ப்பு ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் புளோரியனும் சக பெண் ஆசிரியர்களும்தான்.

புளோரியன் எளிமையானவர். வழக்கமான பள்ளியாக இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரத்துடன் புதிய முயற்சிகளுடன் பள்ளியை நடத்துபவர். பசியுடன் வரும் மாணவர்களைப் புரிந்தவர். பல்வேறு இன, மத மாணவர்கள் படிப்பதால் அசெம்பிளியில் கூட குறிப்பிட்ட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மதிய உணவை உண்கின்றனர். பாடம், ஆசிரியர், விளையாட்டு பற்றிய மாணவர்களின் வெளிப்படையான வாராந்திர அறிக்கை- மதியம் இசை-நடனம்-ஆண்டுப் பேரவை- அதில் கற்றுக்கொண்டவைகளை மாணவர்களே வெளிப்படுத்துதல், ஆசிரியர்களுடன் மாணவர்களின் கேள்விகள் என்று புதுமையான முயற்சிகளை பின்பற்றுகிறார் புளோரியன்.

பிரைத்வைட் உயர் வகுப்பு ஆசிரியர். அவர் கனவு கண்ட வகுப்பறையல்ல இது. அசுத்தமான வகுப்பறை. அழுக்கான உடைகள். அவரது முதல் வகுப்பு இறுக்கத்துடன் முடிகிறது. தொடர்ச்சியான வகுப்புகளிலும் கசப்பும் பகைமையும் மிஞ்சுகிறது. பேருந்து, பொதுவெளி எங்கும் நிலவும் நிறபேதம் சமூகத்தின் தாக்கத்தால் ஏழைமாணவர்களிடமும் ஒரு ஆண் ஆசிரியரிடம் கூட வெளிப்படுகிறது. பிரைத்வைட் பொங்கி எழுவதில்லை. கறுப்புத் தோலுடன் மரியாதையாக வாழ்வது எப்படி என்று அவமதிப்புகளை நிதானமாக கடக்கிறார். மாணவர்களின் ஒத்துழைக்காத மௌனம், வகுப்பறை சத்தம், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறார். மாணவர்களின் மனங்களை அன்பால் வெல்கிறார்.

ஏழை மாணவர்களான அவர்கள் பள்ளி உயர் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லக் கூடியவர்கள் அல்ல. உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை தாங்கும் நிலையில் உள்ளவர்கள். இதையே பிரைத்வைட் கற்பித்தல் ஆயுதமாக பிரயோகிக்கிறார். நீங்கள் குழந்தைகளல்ல;சீனியர்; வேலைக்கு போகும் இடங்களில் இதெல்லாம் வேண்டியதிருக்கும் என்று சொல்லியே மாணவர்களை வழிக்குக் கொண்டு வருகிறார். சமமாக நடத்துகிறார்.

உரையாடல் தொடங்குகிறது. பிரைத்வைட் பெரிதும் மெனக்கெடுகிறார். மாணவர்கள் எதைக் கேட்டாலும் அவரிடம் பதில் இருக்கிறது. மியூசியத்திற்கு அழைத்துச் செல்வது போன்று பொது வெளியிலும் கற்றலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறார். இப்போது அவரது டேபிளைச் சுற்றி எந்நேரமும் மாணவர்கள்! வீடுகளிலிருந்து ஆசிரியருக்கு பூங்கொத்தும் ,கேக்கும் கொண்டு வருகிறார்கள். எங்க சார் எங்க சார் என்று கொண்டாடுகிறார்கள்.

மாணவர்களின் குடும்ப பின்னணி நெகிழ வைக்கும்!அம்மாவின் பிரசவத்தின்போது தலைமாட்டில் உடனாளாக இருந்த ஒரு மாணவி. மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் பெற்றபோது குடும்பத்தையே தாயாக பார்த்துக்கொண்ட மாணவி .மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற குடும்ப பின்னணியை கொண்டவர்கள்தான்! விளையாட்டுச் சண்டையில் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவனுக்கு கத்திக் காயம்பட, கத்தியை வைத்திருந்த மாணவன் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது தண்டனையின்றி அந்த மாணவன் வெளிவருவதற்கு பிரைத்வைட் உதவுகிறார். இளம் விதவையான அம்மா, அவரது மகள் மனக்கசப்பை போக்க தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

வீதியோடு நெருங்கும்போது பள்ளியும் அவரோடு மிகவும் நெருக்கமாகிறது. தள்ளுவண்டியில் சாமான்கள் வாங்கும்போது அவருக்கு தனி முன்வரிசை. இவர் என் மகளின் /மகனின் ஆசிரியர் என்ற பெருமை! கறுப்பர் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த பெண்மணி மகளின் கோபத்தால் மனம் வருந்தி வீடு வாடகைக்கு விட முன்வருகிறார். அன்பு மட்டுமல்ல; மாணவர்களின் அத்துமீறல்களின் போதும் உரியவாறு தலையிடுகிறார் பிரைத்வைட்.

ஆண்டுப் பேரவை! பிரைத்வைட்டின் மாணவர்கள் உலகெங்கும் நாடு இழந்து வாடும் மக்கள் பற்றி- நாடு இனம் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்று- நிற பேதமற்ற இங்கிலாந்து என்றெல்லாம் பேசுகின்றனர். பிரைத்வைட்டின் முயற்சிகள் வீண் போகவில்லை! முடிவில் மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியரிடம் சொல்வது முக்கியமானது. ” உங்களால் வளர்ந்தோம். பொறுப்புள்ள இளைஞர்களாக நடத்தினீர்கள். உங்களுக்கு எங்களின் இந்த சிறு பரிசு” என்று எழுதி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர்.

இவ்வளவும் ஓராண்டுக்குள் சாதித்துள்ளார் என்பதுதான் பிரைத்வைட்டின் பெருமை! மாணவர்களிடம் நிறத்தை தாண்டிய நேசம் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு சோகம்! அவரது சக பெண் ஆசிரியர் கில்லியன். வெள்ளை நிறத்தவர். ஒத்த ரசனையும், மனப்போக்கும் காதலுக்கு வழி வகுக்கிறது. காதல் கைகூடவில்லை.வெளியில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்குப் பிறகு சின்ன தயக்கத்திற்குப் பின்னர் கில்லியன் தெளிவடைகிறார். எனினும் அவரது தந்தை கலப்புத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. கில்லியன் பள்ளியைவிட்டு சென்று விடுகிறார். பிரிவால் சோர்வடைந்து விடவில்லை. உறுதியான மனிதர்! 104 வயது வரை வாழ்ந்தார்.

இந்தப் புத்தக அனுபவம் பற்றி எஸ். எம். கூறும்போது பிரைத்வைட்டின் மீதான அன்பால் புத்தகத்தை கையில் எடுத்ததாகவும், அனுபவத்தை எழுதி முடித்த போது பிரைத்வைட்டுடன் கூடவே தலைமையாசிரியர் புளோரியனும் மாணவி பமீலாவும்தனது மனதில் நிறைந்ததாக கூறுகிறார். மாணவர்களை நேசித்து தன்னுடன் பயணித்த சக ஆசிரியர்களும் உடன் நின்ற உயிருக்குயிரான மாணவர்களும் இந்த புத்தக வாசிப்பின் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தார்கள் என்கிறார்.

அனேகமாக நிறத்தை தாண்டிய நேசம் புத்தகத்தைப் படிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவரைப் போன்றே ஞாபகம் வருவது நிச்சயம். சில புத்தகங்கள் லயித்து படித்து அப்படியே விழுங்க வேண்டியவைகள் என்று பிரான்சிஸ் பேகன் கூறுவது இந்தப் புத்தகத்திற்கு அப்படியே பொருந்தும். பிரைத்வைட்டின் குழந்தைகளின் மீதான அன்பு எஸ்.எம். சாரின் வார்த்தைகளுடன் அன்பு வெள்ளமாக பிரவாகமெடுக்கிறது. அவரது “வித்தியாசம் தான் அழகு “புத்தக மதிப்புரையில் வேணுகோபாலன் “அன்புதான் பேராசிரியர் ச. மாடசாமியின் மைக்கூடு.அவரின் எந்த எழுத்தும் அன்பின் மை தொட்டே எழுதப்படுவது” என்று குறிப்பிட்டது மிகச் சரி. இந்தப் புத்தகத்தை வாசல் பதிப்பகம் அழகுணர்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.

கரோனோ பெருந் தொற்றுக்கு பின்னர் கற்றல் திறன் குறைபாடு அதிகரிப்பு- இடைநிற்றல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் செய்துள்ளது. இந்நிலையில், போதிய ஆசிரியர்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் இந்த சிரமங்களைத் தாண்டியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்விப் பணியாற்றவேண்டியுள்ளது.

போற்றத்தக்க முன்னெடுப்புகளை பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தனிப்பட்ட முயற்சிகள் ஒரு இயக்கமாக மாற வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சங்கங்களின் கடமைகளில் சரி பாதி கற்பித்தல் தொடர்பான மெனக்கிடல்களும் இருக்க வேண்டும். அதற்கு பிரைத்வைட்டின் அனுபவம் கைகொடுக்கும்.

அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு நீண்டகாலமாகவே பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமது ஊதியத்தில் ஒன்றிரண்டு சதவீத தொகையையாவது புத்தகம் வாங்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதே அந்த ஆதங்கம். தமிழறிஞர் வீ.அரசு அவர்களின் தலைமையில் “சீர் வாசகர் வட்டம்” 700 பக்கங்கள் கொண்ட புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக ஒரு ரூ. 100 க்கு விற்பனை செய்யும் மகத்தான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கல்வி தொடர்பான புத்தகங்களை லட்சக்கணக்கில் ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியம் அல்ல.

புத்தகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம்
புத்தக வெளியீடு- வாசல் பதிப்பகம்
விலை- ரூ.120
98421 02133-
மின்னஞ்சல்- vasalviji@gmail.com

To Sir With Love Braithwhaite BookReview By Sa Madasami. நூல் அறிமுகம்: To Sir With Love - பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் - பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்

நூல் அறிமுகம்: To Sir With Love – பிரைத் வைட் வரலாறு | நிறத்தைத் தாண்டிய நேசம் – பேரா.ச. மாடசாமியின் வாசிப்பு அனுபவம்




பேராசிரியர் . மாடசாமி  அவர்களின் எழுத்துகள் தமிழக வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. எளிய சிறு சிறு வாக்கியங்களில் பெரும் உண்மை களை மிருதுவாகக் கூறும் மொழி அவருடையது. தான் பெற்ற பட்டறிவையும், படிப்பறிவையும் தமிழ் மக்கள் சமூகத்தின் மேன்மைக்குப் பயன்படுத்தி வரும் எழுத்தாளர்; சிந்தனையாளர். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூட்டா தொழிற்சங்கப் போராட்டங்களில் முன் நின்றவர். தேசிய எழுத்தறிவு முனைப்பு இயக்கத்தின் தூதுவராகப் பங்களித்தவர். தமிழகத்தின் எழுத்தறிவு இயக்க வரலாற்றில், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றி வயது வந்தவர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சிகளில் மிக முன்னோடியான புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். மதுரையில் பிஜிவிஎஸ் கருத்துக்கூடம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் பல தொகுப்புப் பணிகளையும், ஏராளமான சிறு நூல்கள் உருவாக்கத்தையும் புதிய கற்போருக்காக மேற் கொண்டவர். இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரர் இவர். 

இவருடைய சமீபத்திய நூல்- நிறத்தைத் தாண்டிய நேசம். வாசல் பதிப்ப கத்தின் வெளியீடான இந்தப்புத்தகம், சற்று வித்தியாசமானது. நாமெல்லாரும் ஒரு புத்தகத்தை வாசித்தால் என்ன செய்வோம்? தூக்கிப்போட்டு விட்டு வேறு வேளைகளில் மூழ்குவோம். அந்தப்புத்தகம் ரொம்பவும் பிடித்திருந்தால், நண்பர்களிடம் அதைப்பற்றிப் பேசுவோம். எழுதும் பழக்கம் இருந்தால் அதைப் பற்றி ஓர் அறிமுகக்கட்டுரை எழுதுவோம். அதிகபட்சம் நாம் செய்யக் கூடியது, செய்வது –இவைதாம். ஆனால், பேரா. மாடசாமியின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. தான் வாசித்த புத்தகத்தின் மையப்பொருள், அதன் கதை மாந்தர்கள், அது முன்வைக்கும் கருத்துகள், தான் அதை வாசிக்கும் போது அடைந்த உணர்வுகள் எல்லாவற்றையும் உடனே ஒரு முழுநீளப் புத்தகமாகவே எழுதிவிடுகிறார். இவர் ஏற்கெனவே எழுதிய “ போயிட்டு வாங்க , சார் ! “ புத்தகம் அப்படி ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவம்தான். இப்போது வந்துள்ள “ நிறத்தைத் தாண்டிய நேசம் “ புத்தகமும் அதேபோல் ஒரு புத்தக வாசிப்பு அனுபவப்பதிவுதான் !

இந்த ‘Sir With Love’ புத்தகம், 1959-இல் வெளியானது. ஆசிரியர் ரிக்கி பிரைத் வைட். நாவல் வடிவில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல் இது. ரிக்கி பிரிட்டிஷ் கயானாவில் பிறந்த கறுப்பர். அவர் ஒரு வேலை தேடி இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் அங்கு நிலவிய இனவெறி பற்றிய உண்மை எதார்த்தம் புரிகிறது. பிரிட்டனின் விமானப்படையில் பொறியாளராகப் பணி செய்கிறார். இராணுவ உடையில், உயிரைப் பணயம் வைத்து அவர் வேலை செய்யும்போது, பிரைத்வைட்டின் கறுப்பு நிறம் யார் கண்களையும் உறுத்துவதில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்ததுமே அவரின் கருப்பு நிறம் முன்னுக்கு வந்து விடுகிறது. 1945-இல் அவர் பணியை விட்டு விலக்கப்படுகிறார். பல பணிகளுக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வானபின், நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது, கறுப்பர் எனத் தெரிந்தவுடன் நிராகரிக்கப்படுகிறார். பள்ளிகளில் ஆசிரியர் வேலை பல இடங்களில் காலியாக இருக்கிறது என்ற தகவலை வழிப்போக்கர் ஒருவர் சொல்லுகிறபோது, அதைக்கேட்டதும் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணிக்குப் போகிறார். அது லண்டனின் கிழக்குக் கோடி யில், கிரீன்ஸ்லேடு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலை. அந்தப்பகுதி, வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. ஏழைகள்தாம் எனினும், வெள்ளை நிறத்திமிர் அதிகமாயிருந்தது.                    

இந்த வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்த பேராசிரியர் ச. மாடசாமி, தன் மனம் கவர்ந்த அந்த நூலைப் பற்றி 104 பக்கங்கள் கொண்ட இந்தப்புத்தக்கத்தை ‘ நிறத்தைத் தாண்டிய நேசம் ‘ எனும் தலைப்பில் எழுதியுள்ளார். படிக்கும்போதே மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் அரும்பி விடுகிறது.” ஒரு மறக்க முடியாத அனுபவம் “ என்ற துணைத்தலைப்பில், நான்கு பகுதிகளாக இதை எழுதியுள்ளார். தொடக்கம், போராட்டம், பயணம், பிரியம் –என்பவை அந்த நான்கு பிரிவுகள். தொடக்கத்தின் தொடக்கம், ஆசிரியரானது எப்படி,முதல் நாள்… முதல் நாள்,முதல் வகுப்பு … முதல் வகுப்பு, புகையும் நெருப்பும், உரையாடல் தொடங்குகிறது, பயணம் தொடங்கியது, உள்ளத்துக்காதலா? உடலின் நிறமா?, அன்புடன் .. . எங்கள் சாருக்கு ! –என்பவை அத்தியாயங்களின் தலைப்புகளுள் சில. 

நூல் தொடங்கும் விதத்தைப் பாருங்கள்: “ஆங்காரம், வெறுப்பு, உதாசீனம் இவற்றின் அடிவேர் – நிறம். உலகெங்கும் அதிகம் அடிவாங்கிய நிறம்-கறுப்பு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள்,பழுப்பு என எல்லா நிறங்களின் கைகளிலும் ‘கறுப்பு’ அடி வாங்கியிருக்கிறது. இனவெறிப் பாகுபாடுகளிலும், இனவெறிப் படுகொலைகளிலும் முதன்மையான இலக்காக கறுப்பு சிக்கி சீரழிந்திருப்பது போல் தெரிகிறது. உண்மைதானா? அடிவேர் இன்னும் காய்ந்து போகவில்லை. இந்தியா ஒன்றும் வெள்ளை இந்தியா இல்லை; இருப்பினும் இங்கேயும் கறுப்பு ஒரு மதிப்பான நிறமில்லை. மனசின் இடுக்குகளில் மறைந்து கிடக்கும் காயங்களில் ஒன்றாக இங்கு கறுப்பு இருக்கிறது; ஆதங்கங்களில் ஒன்றாக சிவப்பு இருக்கிறது … “     

இத்தகைய ஒரு சூழலில், இந்தக்கறுப்பு ஆசிரியர், வெள்ளை மாணவர்களின் வெறுப்பை வென்ற விதம்தான் இதன் கரு. கறுப்பைப் பார்த்துக் கறுவிக் கொண்டிருந்த வெள்ளையரை ‘சார்’ என்று அன்புடன் அழைக்க வைத்தவர் அவர். பிரைத்வைட்  தலைமைஆசிரியரைப் பார்த்து, வேலை வேண்டும் என்று கேட்டதும் புளோரியன் நிதானமாகப் பேசுகிறார் : “முதலில் இந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு வாருங்கள். இது வித்தியாசமான ஒரு பள்ளி. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் பணியில் சேர்வது குறித்துப் பேசி முடிவெடுப்போம்..” 

பள்ளியை, வகுப்பறைகளில் மாணவர்களை, ஆசிரியர் அறையில் ஆசிரியர்களை, சூழலை.. எல்லாரையும், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டு, அங்கு பணியில் சேர்வதெனத் தீர்மானிக்கிறார். சேரந்தபின் ஒவ்வோர் அடிவைப்பிலும் அவமரியாதைகளை எதிர்கொள்கிறார். கோபம் பொங்கினாலும், பொறுமையாகவும், விவேகத்துடனும், தேவைப்படும் இடங்களில் துணிவுடனும் செயல்படுகிறார். படிப்படியாக அவர் மாணவர்களின் மனங்களை வெல்லும்விதம் மனதை உருக்குகிறது. இவர் விரும்பும் பெண் ஆசிரியை இவரைத் தானும் விரும்புகிறபோதும் வெள்ளை இனப்பெற்றவரின் நிர்ப்பந்தங்களால் விலகிப்போய் விடுகிறாள். வெள்ளை மாணவி ஒருத்தி இவரை விரும்புகிறாள். ஆனால், இவர் அதை மிக நாசூக்காகத் தவிர்த்துவிடுகிறார். ஆண்டு முடியும் போது, அனைத்து மாணவர்களும் கையொப்பமிட்ட ஒரு கடிதம், To Sir with Love ’ என்ற தொடக்கவரியுடன் வழங்கப்படுகிறது. 

“மனிதர்கள் உலகம் பூராவிலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள்; இடம், நிறம், இனம், மதம்-எல்லாவற்றையும் தாண்டியதாகவே இந்த சார்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த மனித நேயமிக்க சார்பு குறித்துப் பாடப்புத்தகங்கள் பேசுவதில்லை “ என்று பிரைத்வைட் வகுப்பறையில் விடாமல் சொல்லித்தந்த கருத்தை, இறுதியில் படிப்பு முடித்துப் போகப் போகும் மாணவி ஒருத்தி சொல்லுகிறாள். உலகெங்கிலும் வீடிழந்து, நாடிழந்து வாடும் பரிதாபத்துக்குரிய மக்கள் பற்றி மற்றொரு மாணவி பேசுகிறாள். ஒரு செடி முளைவிட்டுத் துளிர்த்து, வளர்ந்து மரமாகிக் கனி  தருவது போல, பிரைத் வைட்டின் மாணவர்களும், மாணவிகளும் அவர் கற்றுத்தந்த பாடங்களாலும், அவரின் அணுகுமுறைப் பண்புகளாலும் மன வளமும் கருத்துவளமும் பெற்று ஒளிர்கிறார்கள். நிறத்தைக்கண்டு கறுப்பரை வெறுத்த அந்த வெள்ளை மனிதர்களின் மனங்களில் அன்பும், நேயமும் நிறைந்து ததும்புவதை நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. 

அட்டைப்படத்தை மூல  நூலின் திரைப்படப் போஸ்டரைக்கொண்டு வடிவமைத்துள்ளனர். உள் ஓவியங்களை ஓவியர் ஸ்ரீரசா வரைந்துள்ளார். இதை மிக அழகான அமைப்புடன் மாரீஸ் வடிவமைக்க, வாசல் பதிப்பகம் மிக நேர்த்தியாக நூலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா முன்னெடுத்த பருவநிலை மாநாடு – தமிழில் ரகு | தமிழில் இரா. இரமணன்

அமெரிக்கா முன்னெடுத்த பருவநிலை மாநாடு – தமிழில் ரகு | தமிழில் இரா. இரமணன்

ஏப்ரல் 22ஆம் தேதியை புவி தினமாகக் கொண்டாடுகிறோம். அன்று அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் பருவநிலை மாற்றம் குறித்த ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்…
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் | அ. சவுந்தரராசன்

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் | அ. சவுந்தரராசன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us BelowA view o https://thamizhbooks.com To Get to know more about tamil…