Posted inPoetry Uncategorized
கவிதை : இனி பெண்மை – சாந்தி சரவணன்
அகராதியில் அழிந்தது பெண் சிசுக் கொலை அகழ்வாராய்ச்சியில் பெண் நடுகற்கள் எதிர்காலத்தில் கிடைக்காது திரெளபதியும், சீதையும் வருங்கால இதிகாசத்தில் இடம் பெறமாட்டார்கள் கிருஷ்ணனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இனி வேலையில்லை வால்மீகியும், கம்பனும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பர் ஆசிபா கொடுமை இனி புவியில் இல்லை…