தொடர் – 36: சமகால சுற்று சூழல் சவால்கள்
தொடர் 35: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 4 – முனைவர். பா. ராம் மனோகர்
குறையா சுற்றுசூழல் குற்றங்கள்!
வருமா நமக்கு மன மாற்றங்கள்?!
முனைவர். பா. ராம் மனோகர்.
“தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு வீடு இவையுண்டு தானுண்டென்போன், சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் “என புரட்சி கவிஞர் பாரதி தாசன் 70 ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தின் சுயநலம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அது நவீன காலம், உலக மயமாக்கல் போன்றவற்றால் தீவிரமயம் ஆகியது நிதர்சன உண்மை! வளர்ச்சி என்ற பெயரில் தன்னை பற்றிய சிந்தனை மேலோங்கி, அனைத்து துறைகளிலும் சமுதாய நலன் பின்னோக்கி நிற்கின்றது!
சுற்று சூழல் மாசு பாடு என்பது தன் வீடு, இடம் மட்டும் இருக்க கூடாது! மற்ற இடங்களில் இருப்பது ஏற்றுக் கொள்வதும், அதற்கு அரசுத் துறையினை குறைகள் கூறுவதும் நம் வழக்கம் ஆகிவிட்டது. சுற்றுசூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பசுமையாக்கம், தூய்மை, மாசகற்றுத்ல்
ஆகியவன, கல்வியறிவு, விழிப்புணர்வு அறிவியல் தொழில் நுட்பம் போன்றவற்றை பலரும் அறிந்த நிலையிலும் பின்பற்றுவதும், சரியாக செயல் படுத்தி வருவதிலும் நாம், நம் நாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதை நாம் உணர்வோமா!?
ஆம்! சமீப காலத்தில் நம் நாட்டில் சுற்றுசூழல் குற்றங்கள் பெருகிவிட்டது.
குறிப்பாக 2019-20 ஆண்டுகளில் 78% அதிகம் இக்குற்றங்கள் நடைபெற்றுள்ள நிலை கவலை தரக்கூடியது அல்லவா!? வனங்கள் அழித்தல், வனவிலங்கு வேட்டை, சூழல் பாதிப்பு செய்தல், நீர், காற்று மாசாக்குதல், புகை பிடித்தல், ஒலி மாசு தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்திற்கு எதிர் குற்றம், போன்றவை, அவற்றின் நீதி மன்ற வழக்குகள் எண்ணிக்கை பெருகிவிட்டன. நம் நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 61767 வழக்குகளும்,2021 ஆம் ஆண்டில் 64,471 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. ஆனால் 2019 ஆம் ஆண்டு 34676 வழக்குகளே இருந்த நிலை!
இதனை விசாரணை செய்து, முடித்து வைக்க கால அவகாசம் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால், தற்போதைய நிலையில் நீர், காற்று மாசு தொடர்பு குற்ற வழக்குகள் அனைத்தும் முடிய 33 ஆண்டுகள் ஆகும் எனவும், சுற்றுசூழல் பாதுகாப்பு வழக்குகள் நிறைவடைய 54 ஆண்டுகள் ஆகும் என ஆய்வு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
வன விலங்கு குற்றங்கள், சூழல் குற்றங்கள் ஆகியவை உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அதிகம் நடைபெறுகின்றன. நீர், காற்று மாசு போன்றவை மத்திய பிரதேசம் மேல் சொன்ன மாநிலங்களுடன் சேர்ந்து கொள்கிறது. புகைபிடித்தல் அதிக குற்றத்தில் தமிழ் நாடு, கேரளா மாநிலங்கள், ராஜஸ்தான் உடன் இணைகின்றன. ஒலி மாசு குற்றம் ராஜஸ்தான் மாநிலம் 7186 வழக்குகள் கொண்டு முன்னணி வகித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழ் நாடு போன்றவை அதற்கு அடுத்தநிலையில் உள்ளன.ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்தமான், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன், டையூ, லடாக் போன்ற மாநிலங்களில் எவ்வித சுற்றுசூழல் குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை, என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு 13316 வழக்குகள் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 42756 சூழல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே காலத்தில் கர்நாடக மாநிலத்தில் 413, கேரளா வில் 1795 மட்டும் பதிவு செய்துள்ள நிலை நம் சிந்தனை தூண்டும் ஒன்று!
சுற்றுசூழல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் இந்திய வன சட்டம் (1927)
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972)
சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் (1986)
உயிரின பல்வகைமை சட்டம் (2002)
நீர் மாசு எதிர்ப்பு, பாதுகாப்பு சட்டம் (1974), காற்று மாசு எதிர்ப்பு சட்டம் (1981)
போன்றவை நம் அரசு உருவாக்கிய சட்டங்கள், எனினும் இது பற்றிய விழிப்புணர்வு, செயல்படுத்தும் நிலையில் தெளிவு, ஒளிவு மறைவற்ற நம்பகத் தன்மை, வெவ்வேறு அரசு துறைகளிலும் ஒருங்கிணைப்பு, போன்றவை இன்றைய நிலையில் சவால்கள் ஆகும். பொருளாதாரம், வணிகம், நவீன அறிவியல் தொழில் நுட்பம் மாற்றங்கள் ஆகியவற்றால் இவற்றிற்கிடையே முரண்பாடுகள் நிலவுகிறது.
சுற்றுசூழல் சட்டங்கள் விழிப்புணர்வு, பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில், முறையாக ஆய்வு செய்து இணைக்கப்படவேண்டிய அவசியம் ஆகும். பொது மக்களுக்கும் உரிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டிய கடமை அரசு துறைகளுக்கு உள்ளது! சிந்தித்து பார்ப்போம்!!