பேரா.சோ.மோகனா எழுதிய "பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின்" அறிவியல் கட்டுரை | Charles Darwin Tamil Science Article - www.bookday.in

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின் – பேரா.சோ.மோகனா

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வினின் 209 வது பிறந்த தினம் பிப்ரவரி 12 ஆம் நாள் தான். ஆம் 1809ஆம் ஆண்டு, , பிப்ரவரி 12ஆம் நாள், நம்மோட சார்லஸ் டார்வின் பிறந்தார் அவர் .…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 36 (Enakku Cinema Konjam Pidikkum) இளமை வெறும் கனவல்ல! | பழைய திரைப்படங்களின் போக்கு | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 36: இளமை வெறும் கனவல்ல! – ராமச்சந்திர வைத்தியநாத்

இளமை வெறும் கனவல்ல..! எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 36 - ராமச்சந்திர வைத்தியநாத் பதின்பருவத்தில் உள்ளோர் என்பதன்றி சாதாரண மனிதர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள் என்று வெவ்வேறுவிதமான வாழ்வியல் அனுபவங்களைப் பெற்று முழுமையடைகின்றனர். பெரும்பாலானோர்…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 35 (Enakku Cinema Konjam Pidikkum) உயர்ந்த மனிதர்களின் பொய்கள் | தமிழ் சினிமாவில் கதை மற்றும் வசனத்தின் முக்கியத்துவம் | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 35: உயர்ந்த மனிதர்களின் பொய்கள் – ராமச்சந்திர வைத்தியநாத்

உயர்ந்த மனிதர்களின் பொய்கள் எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 35 - ராமச்சந்திர வைத்தியநாத் சினிமா என்பது என்னதான் காட்சி ஊடகமாக இருப்பினும் அக்காட்சியினை பதியவைப்பது அதற்கான கதையமைப்பும் வசனங்களும்தான். துவக்க கால திரைப்படங்கள் இதிகாச புராண நாட்டுப்புறக் கதைகளை…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 34 (Enakku Cinema Konjam Pidikkum) காடு வௌஞ்சென்ன – கையும் காலும் தானே மிச்சம் | தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை விவசாய உலகின் உண்மையான வலியை இன்னும் சரியாக காட்சி படுத்தவில்லை. | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 34: ஊரப்பா பெரியதப்பா, உள்ளம்தான் சிறியதப்பா – ராமச்சந்திர வைத்தியநாத்

காடு வௌஞ்சென்ன – கையும் காலும் தானே மிச்சம் எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 34 - ராமச்சந்திர வைத்தியநாத் ஐம்பதுகள் வரை மதராஸ் மாகாணத்து மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே சார்ந்திருந்தனர். கூலி விவசாயிகள், சிறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், நிலப்பிரபுக்கள்…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 33 (Enakku Cinema Konjam Pidikkum) ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா | தமிழ் திரைப்படங்களின் சினிமா காட்சிகளுக்கும், காதலை மறுக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கும் உள்ள தொடர்பு | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 33: ஊரப்பா பெரியதப்பா, உள்ளம்தான் சிறியதப்பா – ராமச்சந்திர வைத்தியநாத்

ஊரப்பா பெரியதப்பா, உள்ளம்தான் சிறியதப்பா எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 33 - ராமச்சந்திர வைத்தியநாத் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த அண்டை அயல் பெண்ணை இளைஞன் ஒருவன் ஓடும் ரயில் முன்னர்…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 32 (Enakku Cinema Konjam Pidikkum) மாப்பிள்ளை அவ்ருதான் ஆனா . . . . | தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் குறித்த கட்டுரை | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 32: மாப்பிள்ளை அவ்ருதான் ஆனா . . . . – ராமச்சந்திர வைத்தியநாத்

மாப்பிள்ளை அவ்ருதான் ஆனா . . . . எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 32 - ராமச்சந்திர வைத்தியநாத் தமிழகத்தில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கும், தயாரிக்கவிருக்கும் திரைப்படங்களுக்கும் பெயர் சூட்டுவதென்பது சிக்கலான பிரச்னையாக மாறி வருகிறது. தன்…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 31 (Enakku Cinema Konjam Pidikkum) சினிமா பத்திரிகைகள் | திரைப்படப் பத்திரிகைகளின் வரலாறு குறித்த கட்டுரை | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 31: சினிமா பத்திரிகைகள் – ராமச்சந்திர வைத்தியநாத்

சினிமா பத்திரிகைகள்   எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 31 - ராமச்சந்திர வைத்தியநாத் மவுனப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட காலத்திலேயே அவற்றைக் குறித்து பேசக்கூடிய பத்திரிகைகளும், அடுத்த கட்டத்தில் படங்கள் பேசத் தொடங்கியதும் படங்கள், அதன் வர்த்தகம் பற்றிய பத்திரிகைகளும் பெருமளவில்…
Thu Pa Parameshwari Poems 8 து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள் 8

து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்




மனிதம் அற்ற மனிதா..
******************************
துயரத்திலும் துவண்டு போகாது
வாழ்க்கையை வெறுத்தொதுக்காது
வறுமையிலும் முகம்சுளிக்காது
ஏழ்மையிலும் தாழ்வுறாது

மனபாரத்திலும் புன்சிரிப்பு மாறாது
கயவர் மத்தியிலும் கடமை தவறாது
பெரும் தோல்வியிலும் மனம்தளராது
புகழ்ச்சிப் பெருக்கிலும் தன்நிலை மாறாது

துரோகியிடமும் காழ்ப்புணர்வு பாராது
துளைக்கும் முட்களிடத்தும் அகமலர்ச்சி இழக்காது
வெறுப்பவரிடத்தும் முகம் பூக்க மறவாது
கோபத்திலும் வன்சொல் வீசாது

வதைத்தவனிடத்தும் வன்மம் பாராது
மானபங்கத்திலும் கண்ணியம் தவறாது
வசவுகளையும் வரவேற்கத் தவறாது
சுடுசொல்லிலும் துளி நீர் சிந்தாது

பகைவரிடத்தும் நேசிக்க மறவாது
பட்டினியிலும் பசிமுகம் காண பொறுக்காது
வாழ்வின் விளிம்பிலும் மரணத்தை நோக்காது
போட்டியிலும் பொறாமை பாராது

கொடுஞ்சுழலிலும் பிரிதுயிர் வாட பொறுக்காது
எச்சூழலிலும் பிறர் மனம் புண்படுத்தாது…
….வாழும் மனிதமே மனிதம்..

மனிதம் என்பது ..
தமக்குட்பட்ட
தமக்கேற்ற
தமக்கானவாறு
தம்மனத்திற்கான
தம்சூழல்பாதிப்பற்ற போக்கில்
கடந்தும் கடமையல்ல..

பிறர் நோக தம் உயிர்நொந்திடும்
நிலையே மனிதம்..

மனிதம்..
மனிதமனத்தின்மீதமல்ல
மனிதவாழ்வின் மார்க்கம்..

மனிதம் கொண்ட மனிதனாய்
வாழ்கிறோமா..
விடைதெரியா மானுடமாய்
நிற்கிறோம்
வெறும் மனிதம் கண்ட
இதழ் சுமக்கும் மரமாய்..

உடைந்து போகாதே..
***************************
இது இலையுதிர் காலம்…
இயற்கையின் சோதனை..
பெரும் வேதனை

காய்ந்தும் சுருண்டும்
நொடிந்தும் ஒடிந்தும்
ஊடாடும் விருட்சம்..

பசுமை தொலைத்த கிளைகள்
காய்ந்து சருகாகிய இலைகள்..
காலத்தின் கைங்கயர்யம்
பருவத்தின் பகிர்ந்தளிப்பு..

ஆட்டமும் பாட்டமும்
மேய்தலும் மெருகேறலும்
நிலையற்றது சுழற்சியில்..

வருந்தியும் வாடியும்
வருத்தியும் வதங்கியும்
உயிர் மட்டும்
ஒட்டியிருக்கும் பட்டமரம்..

வாழ்க்கையெனும் இந்த ஓடம்
வழங்கும் அனுகணமும் பாடம்.

மேலிருப்பதைக் கீழும்
கீழுள்ளதை மேலும்
நொந்தவரைத் தூக்கியும்
உயர்ந்தவரை நொடித்தும்
திருப்பிப் போடும்
திருப்புமுனை.

மரத்தின் பெருமாண்பும்
மனிதனின் பேரிறுமாப்பும்
வேறுபடும் துன்ப காலங்களில்

பசுமையில் பல் இளிக்காது
பெருவறட்சியிலும் பரிதவிக்காது
மன சமநிலைக் குன்றாது
மகத்துவத்தை‌ உணர்த்தும் மரம்
அமைதியின் மேன்மைக்கான பாடம்

வாழ்க்கைப் போர்க்களத்தை
எதிர்கொள்ளும் ‌குணமே
சோதனையிலும் வேதனையிலும்
சோர்ந்து போகா மனமே..
சாதனையை நோக்கி நடைபோடும் தினமே..

பெருங்காற்றாய்‌ நீ
**********************
பெருங்காற்றாய் உன் மொழி
சிறு பறவையாய் என்‌செவி
சில நேரம் ஏற்கிறேன்
பல நேரம் தவிக்கிறேன்..
உன் விழி எனையாள
குளிர்கிறேன்..
உன்‌மொழி
எனைக் கொல்ல
மாள்கிறேன்..
உன்…
மொழியோ விழியோ
மௌனித்தே கிடக்கும்
பல சமயங்களில்..
என்..
உடலோ மனமோ
புரியாமல் பிதற்றும்
அநேகவிடங்களில்..
இவ்விரண்டிற்கும் மத்தியில்
நமது பெரும் பனிப்போர்..

வானமகளின் பரிணாமம்
*******************************
அந்திப்பொழுதின்
பொன்னிற மேனியவள்..
அடர் மஞ்சள் சேலையுடுத்தி
வெளிர் நீல ரவிக்கைச் சுற்றி
கண்கூசும் மின்னல் கீற்றிழுக்க
கற்றை கற்றையாய்
சுருண்டு விழுந்த
கார்மேகக் கூந்தல்
மார்பை அணைத்திட
தென்றல் வீச
கரமேந்திய  முந்தி
கவிதை பேச
சட்டென…
பறவைகளின் எச்சம் பட ..
சேலை சிவக்க
சிவந்த சேலையின் சாயம்
மங்கை முகம்  படர்ந்தொளிர
தகிக்கிறாள் பாவை
ரோஜா கூட்டமாய்

சற்றே தாமதம்
எட்ட நின்ற
நட்சத்திரங்களைத் தட்டிப் பறித்து
வான் விட்டம் மின்னிய
விண்மீன்களைப் பற்றியிழுத்து
இருபுறமும் ஒருபுறமாய்
மேலிழுத்தும்
கீழிழுத்தும்
இடமென்றும்
வலமென்றும்
முன்னொன்றும்
பின்னொன்றுமாய்
விரவியமைத்தவள்..
வண்ணமலர்களாய்..

சுற்றியே பார்க்க..
சற்றே திரும்பியவள்
சுத்தியே நின்றாள்
கருவண்ண காரிகையாய்..

அப்போதே வந்த
பால் வண்ண‌ வேந்தன்
இருகரம் ஏந்தி
இறுமாப்பாய் நிற்க..

அண்ணலும் நோக்க
அவளும் நோக்கினாள்..
அன்ன நடைபயில
தென்றலிடை தவழ
இருள் கொண்டு
விழியுண்டு
மருவினாள் கருவாச்சி..

விண்ணவனும் வானவளும்
கைகூடி கரம் பற்ற
தடாகத்தினின்று ஏங்கியேத்
வெளிரிப் போனாள் அல்லி மகள்..

கர்வம் கூடி தலைக்கனம் பூண
மதி மீது மதி மயங்கினாள்
கரு மங்கையவள்….

விழியின் மொழி
***********************
என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு அதீத பரிச்சயம்.

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனக்கு‌‌ அதிக பிடித்தம்.

என் விழிகள்
எனைச் சுற்றிலும்
உனைச் சுற்றின பெரும்பாலும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனை நோக்கின எப்போதும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைத் தேடின முப்போதும்

என் விழிகள்
எனைக் காட்டிலும்
உனைக் கொண்டன அவ்வப்போது

என்‌ விழிகள்
எனைக் காட்டிலும்
உனை உண்டன முப்பொழுதிலும்

இத்தனையும்‌ பருகத் தந்த
பேரன்பின் நிமித்தம்..
எனதழகிய விழிகள்..
எப்போதும் நீ….
வெறுமை
கண்ணீர்
ரணம்
ஏக்கம்
ஏமாற்றம்
மட்டுமே ‌பருகத் தருகிறாய்..

விழியில் விழந்தெழுந்த நீ
சென்று விடுகிறாய் வெகு இயல்பாய்.
பரிசாக கணத்தை ‌விட்டு‌விட்டு

பாவம்
செய்வதறியாது..
ஒன்றுமற்றுக் கிடக்கின்றன விழிகள்..