விஷ்ணுபுரம் சரவணனின் (Vishnupuram Saravanan) “ஒற்றைச் சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

விஷ்ணுபுரம் சரவணனின் “ஒற்றைச் சிறகு ஓவியா” (Ottrai Siraku Oviya) – நூல் அறிமுகம்

‘ஒற்றைச் சிறகு ஓவியா’ (Ottrai Siraku Oviya) தலைப்பை வாசித்த உடன் ஒற்றைச் சிறகை வைத்துக்கொண்டு எப்படி பறக்க முடியும் என்று யோசித்தேன். வானத்தில் பறவைகளை பார்த்தால் அனைவருக்கும் பறக்க வேண்டும் என்று தான் தோன்றும்… குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்? எனக்கும்…
CPIM முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன் (Ko Veeraiyyan) எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட "வெண்மணி தீ" (Venmani Thee Book) - நூல் அறிமுகம்

கோ.வீரய்யன் எழுதிய “வெண்மணி தீ” – நூல் அறிமுகம்

போராடாமல் இங்கு எதுவும் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. என்பது மீண்டும் மீண்டும் நாம் அதை படித்து தெரிந்து கொள்கிறோம். அப்படி தான் இந்த "வெண்மணி தீ," ஆம் இன்று இந்த புத்தகத்தை படித்தேன், என்னவோ தெரியவில்லை வீட்டு வேலைகள் கூட செய்ய…
பண்டிகை சிறுகதை – செ.ரேகா

பண்டிகை சிறுகதை – செ.ரேகா




முகம் கொள்ளா புன்னகையுடன் காரில் சென்று கொண்டிருந்தாள் எழிலரசி. திருமணம் முடிந்து ஏழு வருடங்களுக்கு பின் இந்த வருடம் தான் தன் பிறந்த வீட்டில் தைப் பொங்கலை கொண்டாட போகிறாள். எழிலின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி, இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு பொறுப்பை ஒப்படைத்து இருந்தார்கள். ஒரு வாரமாக அவளின் தாய் அங்கு தனியாக இருக்க வேண்டாம், பொங்கல் பண்டிகைக்கு பிள்ளைகளை கூப்பிட்டுட்டு இங்க வந்துரு, பிள்ளைகளும் கூட ரெண்டு நாளு சேர்ந்தாப்புல இருந்துக்கும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். சொன்னது போல அவளின் அண்ணன் தங்கையையும், மருமக்களையும் அழைத்து செல்ல அதிகாலையிலேயே காரை எடுத்துட்டு வந்து விட்டான். கார் கிளம்பியதும் குழந்தைகள் இருவரும் மடியில் படுத்து தூங்கி விட்டார்கள். என்னத்தா பிள்ளைகள் தூங்கிட்டாங்களா, நீ வேற எதாவது சாப்பிடுறீயானு கேட்ட  அண்ணன் கிட்ட இல்லண்ண எனக்கு எதுவும் வேண்டாம். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் அண்ண, இந்த பொங்கல் பண்டிகையை நான் மறக்கவே மாட்டேனு சொல்லி புன்னகைத்தாள். ஒவ்வொரு  பண்டிகை வரும்போது உன் நினைவுதான் எங்களுக்கும், என்ன செய்ய மாமாவோட வேலை இங்க தான இருக்கு. சரி நீ கண்ணை மூடி தூங்கு, எப்படியும் ஊர் போய் சேர நான்கு மணி நேரம் ஆகும்.

தூக்கம் வராவிட்டாலும் கண்ணை மூடி கடந்த பொங்கல் பண்டிகைகளை நினைத்து பார்த்தாள்.
தனசேகரன்-பொன்னி தம்பதியருக்கு எழிலையும் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள்  அடுத்தடுத்து பிறக்க நான்காவதாக பிறந்தாள் எழிலரசி. மிகவும் செல்லப் பெண்ணாக வளர்ந்தாள், இருப்பினும் மிகவும் அன்பானவள்.

அவள் குடும்பம் முழுக்க முழுக்க விவசாய குடும்பம். பொங்கல் பண்டிகை வந்து விட்டால் அவள் வீடே விழாக்கோலம் பூண்டு விடும். வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து, பரணில் உள்ள பாத்திரங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, வீட்டு வாசல் மற்றும் மாட்டு தொழுவத்தில் கலர் கோலங்கள் போட்டு சூரிய உயரத்திற்கு முன்பே மண்பானையில் பொங்கலிட்டு,  காய்கறிகளுடன் கதிரவனுக்கு படைத்து விட்டு, இலை போட்டு ஒருவாய் சர்க்கரை பொங்கலை வாயில் வைக்கும் போது ஒரு வாரமாக பொங்கலுக்கு பார்த்த வேலை அலுப்பு எல்லாம் மறந்து  பொங்கல் தேனாக தித்திக்கும். இப்படி பழைய நினைவுகளுடனே தூங்கிவிட்டாள்.

ஒரு வழியாக  ஒரு மணியளவில் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவளின் பிறந்த வீட்டு உறவுகளுக்கு எழிலையும், குழந்தைகளையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.  தனது வீடு எப்போதும் போல பொங்கலுக்கு தயாராகி இருந்தது. கூடுதல் சிறப்பாக இரண்டு அண்ணிகள் வேறு இருந்தார்கள், அவளின் இரண்டு அண்ணன்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.  மதியம் தடபுடலாக விருந்து தயார் செய்து இருந்தார்கள். சாப்பிட்டுட்டு அனைவரும் சிறிது ஓய்வு எடுத்தார்கள். மாலைப்பொழுதில் எழிலுக்கு மாதவிடாய் வந்து விட்டது,  என்ன இன்னும் ஒருவாரம் இருக்கே அதுக்குள்ள இப்படி வந்துட்டே, சரி நம்ம வீடுதான பரவாயில்லை அப்படினு நினைச்சுட்டு குளித்து விட்டு தனது அறையில் உடை மாற்றிக்கொண்டு இருந்தாள் எழில். பின்கட்டில் அவள் அண்ணிகள் இருவரும் பேசிக் கொண்டது தற்செயலாக எழிலின் காதில் விழுந்தது. இந்த வாரம் தான் தலைக்கு ஊத்த நாளுனா எதற்கு இங்க வரா இந்த எழிலு, நம்மலே வீடெல்லாம் சுத்தம் செய்து சுத்தபத்தமா காலையில பொங்கல் வைக்க ரெடியியிருக்கோம் என்றார் பெரிய அண்ணி. அவளுக்கா தெரியணும் பிறந்த வீட்டை பற்றி கொஞ்சமாவது அக்கறை இருந்தால் வந்துருப்பாளா என்ன செய்ய  பொங்கல் வைச்சு முடிக்கிற வரைக்கும் அவ அறையை விட்டு வெளில வராம இருந்தா நல்லாருக்கும்,  இதை போய் அவகிட்ட யார் சொல்ல முடியும்  என்றார் சின்ன அண்ணி.

இதைக் கேட்டதும் எழிலின் கண்கள் தானாக கண்ணீர் சிந்தியது,முதல் முறையாக தன் வீடு தனக்கு அந்நியமாக தோன்றியது. ஊருக்கு கிளம்பு என்று தன்மானம் தூண்டியது, நாளைக்கு காலைல பொங்கலை வைச்சுகிட்டு இப்ப கிளம்பி போனேன உன்ன பெற்றவர்களுக்கும், உன் அண்ணன்களுக்கும் என்ன பதில் சொல்லப் போற அதைவிட ஊருக்கு போனா உன் வீட்டுக்காரர்  அதுக்குள்ள வந்துட்டேன்னு கேட்பார் அவர்கிட்ட என்ன சொல்லுவ அப்படினு அவள் மனசாட்சி சிரித்தது. யாரிடமும் எதுவும் கூறாமல்  உடை மாற்றிக் கொண்டு கண்ணில் கண்ணீர் வடிய கண்ணை மூடி அறையில் படுத்துக்கொண்டாள்.சிறிது நேரத்துக்கு அப்புறம் அவள் அம்மா வந்து என்ன படுத்துட்டா ஒருவேளை வயிறு வலி இருக்கும் போல, சரி அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு கசாயம் போட்டு கொடுத்துட்டு நீ நல்லா தூங்கி ஓய்வு  எடு குழந்தைகள் நான் பார்த்துக்கிறேன் சொல்லி வெளில போய்ட்டாங்க எழிலின் அம்மா.  அவ அண்ணன்களும் அவள் உடல் சரியில்லாததால் சோர்வாக படுத்து இருக்கா அப்படின்னு நினைச்சுட்டு தொந்தரவு பண்ணல. மறுநாள் காலை 3 மணியிலிருந்து வெளியில் பொங்கல் வைக்கிறதுக்கான வேலை நடந்து கொண்டு இருந்தது. எழிலுக்கு முழிப்பு தட்டியும் வெளியில் செல்லவில்லை. அவள் அப்பா எழில் அதிகாலையில் எந்திரிச்சிடுவாளே ஏன் எந்திரிக்காம இருக்கா அப்படின்னு கேட்டாரு, அவங்க அம்மா அவளுக்கு ஒரே வயிறு வலி அதனால் தான் எந்திரிக்காமல் இருக்கா, ஓய்வு  எடுக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டாங்க.  எல்லாரும் பொங்கல் வைத்து முடித்து அதற்கு அப்புறம் அவள் அறைக்கே வந்து அண்ணிகள் பொங்கல் கொடுக்க வந்தாங்க, இந்தா எழில் பொங்கல் சாப்பிடு, இப்போ வயிறு வலி பரவாயில்லையா? பொங்கல் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுட்டு சொல்லு இனிப்பெல்லாம் கரெக்டா இருக்கான்னு சொல்லு அப்படின்னு அண்ணி சொன்னாங்க.  எழில் அதை வாங்கி வாயில் வைக்கவும் அவளுக்கு அது கசப்பாக தோன்றியது, இருந்தாலும் பொங்கல் மிக ரொம்ப நல்லா இருக்கு அண்ணி என்று புன்னகைத்தாள்.  இரண்டு நாட்கள் கழித்து அவள் கணவர் ஊருக்கு அழைத்துப் போக வந்திருந்தார். என்ன எழில் உனக்கு  இந்த பொங்கல் பண்டிகை மறக்க முடியாத பண்டிகையாக இருந்துருக்கும்  அப்படித்தானே என்றார். ஆமாங்க இந்த பொங்கல் பண்டிகையை மறக்கவே மாட்டேன் என்று அவளுக்கே உரித்தான புன்னகையுடன்  பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள்.

– செ.ரேகா,
சிவகாசி. 

Meeral short story by Tha.Ezhilarasi த. எழிலரசியின் மீறல் சிறுகதை

மீறல் சிறுகதை – த. எழிலரசி



காலையில் பரபரப்பாக வேலையில் இருந்த சமயம் மெதுவாக தூறல் வர ஆரம்பித்தது. கன மழைக்கு முன் அலுவலகம் சென்று விட வேண்டும் என்று கிச்சனில் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தேன்.தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னால் என நா முத்துக்குமார் அவரின் பாடல் வரிகள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. என் மகளை எழுப்புவதற்கு ரூம் நோக்கி நகர்ந்தபடியே அப்படியே என் மனமும் பின்னோக்கி நகர்ந்தது .

தாயும் தந்தையும் ஆன தருணத்தை நினைவுக் கூர்ந்தது.போன வருடத்தில் இது போன்று ஒரு காலைவேளையில் வேகமாக சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெட்ரூமில் இருந்து என் இணையரின் குரல் தீனமாக கேட்டது போய் பார்த்த பொழுது மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் என்னவென்று அருகில் சென்று என்ன பார்க்கும் பொழுது மூச்சு விட முடியவில்லை என்று கூறினார் ஒரு வாரமாக அவருக்கு உடம்பு முடியாமல் இருந்தது. அவரின் தந்தையின் இழப்பு அவரை வெகுவாக பாதித்து இருந்தது. அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட புறக்கணிப்பும் அவரை மனதளவில் தொய்வை ஏற்படுத்தியது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவைப்படும் முதலுதவிகளை கொடுத்தோம் பிறகு திரும்பவும் தன்னால் முடியவில்லை என்று கூறியதால் அங்கிருந்த ஆம்புலன்ஸ் உதவியோடு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் சிகிச்சை பலனின்றி எங்களை தவிக்க விட்டு அவர் விட்டு சென்றது இன்று நடந்தது போல நெஞ்சை அடைக்கிறது

அதற்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்துமே தன்னியல்பாக விருப்பு வெறுப்புகள் அன்றி தானாகவே நடந்தேறியது. பள்ளி செல்லும் என் பெண்ணை கவனித்துக் கொள்வதா அல்லது என்னை கவனித்துக் கொள்வதா எங்களைப் புறக்கணித்த உறவினர்களின் எதிரில் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று போராடுவதா என் இணையரின் ஆசையே அதுதான் ஆனால் அவருமே கடைசியில் தந்தையின் இறப்பில் மிகவும் பலகீனமாக ஆகிவிட்டார் அதுவே அவரின் இறப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது
தந்தையை சரியாக கவனிக்காததால் அவர் இறந்து விட்டார் என்ற எண்ணம் அவர் மனதில் அதிகமாக பதிந்ததால் அவரை அதிலிருந்து வெளிக்கொண்டுவர என்னால் முடியவில்லை அதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது.

காதல் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்வது கேள்விக்குறியானது. பல சிக்கல்களில் நான் சிக்கினேன். என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கினேன். என் அலுவலகம் என்னை தாங்கிக் கொண்டது. அதன்மூலம் என்னால் துயரங்களில் இருந்து வெளிவர முடிந்தது. வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து என்னால் பழைய வாழ்க்கையை வாழ முடிந்தது ஏனென்றால் நானும் என் இணையரும் காதல் திருமணம் என்பதால் எங்கள் இரு வீட்டு குடும்பங்களில் இருந்தும் இதுவரைக்கும் புறக்கணிப்பு இருந்தது அதனால் யார் முகத்திலும் விழிக்காமல் தெரியாத மாநிலத்தில் தெரியாத ஊரில் தெரியாத மனிதர்களுடன் அன்புடன் பழகிக் கொண்டிருக்கிறோம்.
நினைவலைகளில் இருந்து மீண்டு என் அலுவலகம் நோக்கி பயணித்துக் கொண்டு உள்ளேன். என் மகளும் என்னுடன்! இயற்கையும் எங்களை ஆசிர்வதிப்பது போல் சிறு தூறல்.

Manamatram short story by Tha.Ezhilarasi மன மாற்றம் குறுங்கதை

மன மாற்றம் குறுங்கதை – த.எழிலரசி



வெகுநாள் கழித்து ரம்யா பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். லாக்டவுன் முடிந்து அப்போதுதான் பேருந்தில் பயணம் செய்ய முடிந்தது. அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.

பஸ் டிரைவரும் பொறுமையாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார் ரம்மியமான இந்த சூழலில் மழைநீரின் தூறல் மேலே மோதியது ரம்யாவின் அடிமனம் வரை குளிர்ந்ததை உணர்ந்தாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள் .

போன வருடம் மழை காலம் மழை இல்லாமல் போனதை நினைத்து இப்பொழுது ஆங்காங்கு நிரம்பியிருக்கும் மழைநீரை பார்க்கும் பொழுது மனம் உல்லாசமாக பொங்கியது . மன துள்ளலுடன் ஆபீஸ் சென்று கொண்டிருக்கும் பொழுது பக்கத்து ஜன்னலோரச்சீட்டில் ஒரு சிறுவன் நடுத்தர வயதுடன் கூடிய பெண்ணுடன் வந்து அமர்ந்தான். சிறிது நேரத்தில் தன் வழக்கமான சேட்டைகளை ஆரம்பித்தான். அந்த பெண் எதுவுமே சொல்லவில்லை. சன்னலை திறப்பதும் மூடுவதும் ஆக இருந்தான் மழை நீரும் உள்ளே தெறித்தது. முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிறகு ஒரு தொந்தரவு மெல்ல எட்டிப்பார்த்தது . ஒரு கட்டத்தில் அருகில் அமர்ந்திருந்த அனைவரும் முகத்தை சுளித்தனர்.

‘கொஞ்சம் அமைதியா வரச் சொல்லுமா குழந்தையை”‘என்று அந்தப் பெண்ணிடம் சிலர் முறையிட்டனர்.. ‘ஏற்கனவே கொரானா பயம் வேற மனுஷனை கொல்லுது இதுல நேரா மழை சாரலில் நனைந்தால் சளி பிடித்தால் யார்மா பார்க்கறது? கொஞ்சம் சன்னல் கதவ மூடச் சொல்லுமா’ என்று மற்றொரு ஆண் எகிற உடனே அந்த பெண் எல்லோரிடம் மன்னிப்பு கேட்டாள் .

அந்த சிறுவனின் தாய் கொரானா பாதித்து இறந்து விட்டதாகவும் இப்போதுதான் வெளியில் கூட்டி வருவதாகவும் தெரிவித்தார். வீட்டில் அம்மா இல்லாத தனிமை என்பது அவனை வாட்டியதாகவும் தெரிவித்தார் . சரியாக சாப்பிடவும் தூங்கவும் அடம் பிடித்ததாகவும் கூறினர் வெளியில் கூட்டி வந்தால் கொஞ்சம் பையனின் மனநிலை மாறும் என்று நினைப்பதாகவும் , அதனால் கூட்டி வந்தாகவும் கொஞ்சம் சேட்டைகளை பொறுத்துக்கொள்ளும் மாறு கேட்டார் அந்த பெண்.

அனைவருமே ஆழ்ந்த மவுனத்திற்கு சென்றனர்.
துள்ளலாக இருந்த மனம் சூம்பியது எனக்கு இன்னும் எவ்வளவு இழப்புகளை இந்த மனித சமுதாயம் பார்க்க வேண்டுமோ என்ற எண்ணத்துடன் ரம்யா தன் தடத்தில் இறங்கினாள்.

Loss shortstory by ezhilarasi இழப்பு

*இழப்பு* சிறுகதை – த. எழிலரசி



ராதா வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்று அம்மன் தரிசனம் முடித்து அம்மனுக்கு முன்னால் சிலையாக அமர்ந்திருந்தாள் .அங்கு இரண்டு சிலைகள் இருந்தன ஒன்று கற்சிலையாக அம்மனும் உயிர் சிலையாக ராதாவும் இருந்தனர் .சிலைகளுக்கு இடைய ஒரு மெளன உரையாடல் நடந்து கொண்டிருப்பதாக பார்த்தவர்களுக்கு தோன்றியது.

ஆறு மாதத்திற்கு முன்னால் ராதா தன் தாய் தந்தையருடன் எவ்வளவு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.ராதா வீட்டிற்கு ஒரே பெண் அதனால் அவளின் பெற்றோர் தன் வீடு அருகிலேயே அவளுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டனர் மாப்பிள்ளையும் நல்லவர் அவளை புரிந்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர் ராதாவிற்கு இரண்டு தம்பிகள் இருந்தனர் .

திடீரென்று ஏற்பட்ட கொரானா தொற்றால் குடும்பமே நிலை குலைந்தது அதுவும் ஆரம்பகாலத்தில் ராதாவுக்கு லேசான சளி ஜுரம் ஆகத்தான் ஆரம்பித்தது பிறகு அதிகமானதால் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே தன் மகளுக்கு ஏதோ வரக்கூடாத கொடிய நோய் வந்துவிட்டதாக எண்ணி தாய் மிகவும் மன முடைந்ததால் உடல்நலம் பாதித்தது. அதனால் ஏற்பட்ட ஊரடங்கும் மனித சமுதாயத்திற்கே மிகவும் புதியது என்பதால் அதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நிறைய பேரிடம் இல்லை. முக்கியமாக ராதாவின் தாயிடம் இல்லாததால் திடீரென்று ஏற்பட்ட மூச்சுதிணறல் அவருக்கு சைலண்ட் ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தது . சுயநினைவு இழத்தலும் அவருக்கு ஏற்பட்டது . அதீத பயம் காரணமாக அவர் தன் இன்னுயிரை இழந்தார்.

அதனைப் பார்த்த மொத்த குடும்பமும் கையறு நிலைக்கு சென்றது. எந்தச் செயலுமே அவர்களை மீட்க முடியவில்லை.ராதா நிலைகுலைந்துபோனாள மருத்துவமனையும் அவளைத் தன் தாயின் முகத்தைப் பார்க்க அனுமதிக்கவில்லை. கதறி அழுதது தான் மிச்சம்.அதனைப் பார்த்த தந்தைக்கும் மனைவி மற்றும் மகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனைவியின் காரியங்கள் முடிவதற்குள் துக்கத்திலேயே ராதாவின் தந்தையும் இறந்துவிட்டார். ஒரே நேரத்தில் தனது தாயையும் தந்தையையும் இழந்த ராதா மிகவும் மனம் உடைந்தால் அதுவும் தாயின் ஊர்வலத்திற்கு கூட அவரால் வர முடியவில்லை தந்தையின் காரியத்திற்கு வந்தவளை உள்ளே விட மறுத்தனர் தம்பிகள் இருவரும்.

மிகவும் மனம் சோர்ந்த அவளை அவளுடைய கணவன் ராஜேஷ் தாங்கிப் பிடித்தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தனக்கு நோய் சரியாகி விட்டது என்று கூறியும் சமுதாய மக்கள் அவளை தந்தையின் முகத்தை பார்க்க அனுமதிக்கவில்லை.  தாயின் முகத்தையும் பார்க்கவில்லை அப்போது மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வில்லை. தந்தையின் முகத்தையும் பார்க்காமல் பித்துப் பிடிக்கும் நிலையில் இருந்தவளை கணவனும் குழந்தைகளும் தாங்கிப் பிடித்தனர் குழந்தைகள் தன்னிடம் வந்ததை எண்ணி ஆறுதல் அடைந்தாள்.

இன்று அனைத்தும் சரியாகி விட்டது தம்பிகள் புரிந்துகொண்டு தவறுக்கான மன்னிப்பும் கேட்ட பிறகு ஒன்றும் சொல்ல முடியவில்லை .ஆனால் அவளுக்கு மிகப்பெரிய ரணம் உண்டாக்கியது கொரானா. அதைத்தான் அந்த தெய்வத்திடம் முறையிட்டு செல்வாள் ராதா. இழப்புகளின் வலி என்றுமே குறையாது என்பதை அறிந்த ராதா சோர்வடைந்தாள். இதற்கு காலம் தான் மருந்து கொடுக்கும் என அப்பகுதி மக்கள் நினைத்தனர்.