கற்கால பெண்கள், சங்க கால பெண்கள்,நவீன இக்கால பெண்கள்  | மார்ச் 8 மகளிர் தினம - Womens Day | Muthulakshmi Reddy, Dr.Shalini ,Savitribai Phule - https://bookday.in/

மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கட்டுரை

மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கட்டுரை கற்கால பெண்கள், சங்க கால பெண்கள், நவீன இக்கால பெண்கள்  கற்கால பெண்கள் பூமித் தாயாக போற்றப்படுபவள் பெண், புவியைப் பெண்ணாகவும் பொறுமைக்கு இலக்கணமானவளாகவும் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. கற்காலம் தொட்டே…
கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் - உதயசங்கர் (Udhayasankar) | Ku. Alagirisami Tamil Short Stories Based on Feminism |

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் – உதயசங்கர்

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம் - உதயசங்கர் கலை தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன.…
சிந்துஜா (Sindhuja) எழுதிய பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் (Penkalin Aadai Varalarum Arasiyalum) - புத்தகம் அறிமுகம் - https://bookday.in/ | Penkalin Aadai Varalarum Arasiyalum Book Review By Rajathilagam Balaji

பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் – நூல் அறிமுகம்

பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் (Penkalin Aadai Varalarum Arasiyalum) புத்தகத்திலிருந்து... 📖👖👗👚மனித பரிணாம வளர்ச்சியின் முக்கிய குறியீடு இன்று நாம் பயன்படுத்தும் ஆடை. ஆதிகாலத்தில் மனிதன் உருவான காலத்தில், அவர்கள் வாழ்ந்த இடங்களின் தட்பவெப்பநிலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளதற்கவே ஆடையானது…
WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம் Documentary - raise awareness of the rising tide of violence against women in India https://bookday.in/

WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம்

WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று சந்தித்த பெண்கள் - அ. குமரேசன் ‘ஊம்ப்’ (WOMB) என்றால் கருப்பை. ‘விமன் ஆஃப் மை பில்லியன்’ (WOMEN OF MY BILLION)…
பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் – நூல் அறிமுகம்

பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் – நூல் அறிமுகம்

பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும் ஆசிரியர் : சிந்துஜா பதிப்பகம்  : பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பு : டிசம்பர் 2021 மூன்றாம் பதிப்பு…
எசப்பாட்டு - நூல் அறிமுகம் -Tamilselvan's Esappatu Published By Bharathi Puthakalayam book review Writen by Aravind Sammy - https://bookday.in/

எசப்பாட்டு – நூல் அறிமுகம்

எசப்பாட்டு - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல் :  எசப்பாட்டு ஆசிரியர் :  ச தமிழ்ச்செல்வன் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்  விலை : ரூ.190/- மதுரை புறநகர் தமுஎகச நடத்தும் மாதாந்திர வாசிப்பு முகாமில் 17ஆவது முகாமுக்காகத்…
‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் - ச. தமிழ்ச்செல்வன்- Esa Paattu Tamil book review by pon vickram - S.TamilSelvan - Bharathi puthakalayam - https://bookday.in/

‘எசப்பாட்டு’ – நூல் அறிமுகம்

‘எசப்பாட்டு’ - நூல் அறிமுகம் ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம். எசப்பாட்டு என்றதும், “ஏய் எவடியவ எம் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவ” என்று முதல் மரியாதையில் எழம் சிவாஜி கணேசனின் குரல் தான் ஞாபகத்தில் எழுந்தது. ஆனால் இது…
‘பெண் அன்றும் இன்றும்’ | நூல் | பெண் | பெண்கள் | https://bookday.in/

‘பெண் அன்றும் இன்றும்’ – நூல் வெளியீடு

  வரலாறு நெடுகிலும் தொடரும் பெண்களின் போராட்டம் நர்மதா தேவி எழுதிய ‘பெண் அன்றும் இன்றும்’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித் துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
தர்மசிங் : கவிதைகள் dharmasing : kavithaigal

தர்மசிங் : கவிதைகள்


1
“ஒற்றை இரவு”.

நீ என்னில் பூக்கும்
நிதர்சன வேளைக்காகவே
நீண்ட தவமிருக்கிறேன்
பூத்த விழிகளோடு
கிடப்பதுதான் மிச்சம்
நீ எங்கோ மறைந்து திரிகிறாய்
உனக்கும் எனக்கும் என்ன
பங்காளிச் சண்டையா?
நீயாகத்தான் விலகிப் போனாய்
நீயும் எனது இன்னொரு நிழல்தான்
விலகினாலும்
கலந்து விடுவாய்
எனும் நூலளவு
நம்பிக்கையில் நான் …
ஒன்று என்னைத் தூங்க விடு
அல்லது தொலைய விடு
” கிடைத்து விட்டது வாழ்ந்து விடுவோம்” என நகர்த்துவதற்கு
வாழ்க்கையைப் போல
அவ்வளவு எளிதானதல்ல
தனிமையில் என்னோடு விழித்திருக்கும்
ஒற்றை இரவு…

2
” வாசல் ”

கருவறையின் கன்னி வாசல்
கல்விக்கான அறிவு வாசல்
உயர் கல்விக்கான கனவு வாசல்
வாழும் வீட்டின் பிரதான வாசல்

கோயிலின் சந்நிதி வாசல்
இரவின் கறுப்பு வாசல்
இளமையின் புன்னகை வாசல்
நட்பின் நேச வாசல்

பயணத்தின் தனிமை வாசல்
வேலையின் வருவாய் வாசல்
அரசியலின் கருத்து வாசல்
அதிகாரத்தின் ஆணை வாசல்

ஆட்சியின் சட்ட வாசல்
அறிவியலின் நவீன வாசல்

அத்தனை வாசல்களும்
இவர்களுக்கு வசப்பட்டது
திறவுகோல்களால் அல்ல
போராட்டங்களால்…

ஊதாங்குழலை உதறிவிட்டு
புல்லாங்குழலைக் கைப்பிடிக்க

அவர்கள் நடந்து வந்த பாதை
நந்தவனமல்ல
முள்காடு

மண் வெளியிலிருந்து
விண் வெளிவரை
தடம் பதித்திருக்கும்
சாதனைப் பெண்களுக்கு
இனிய வாழ்த்துகள்…

பெண்கள் தின வாழ்த்துகளை
எழுதி முடித்த
உற்சாகத்துடன் எழும்புகிறேன்

” கோயிலுக்குப் போய்ட்டு வர்ரேங்க”
என்றாள் மனைவி

” என்ன அவசரம்? அடுத்த வாரம் போகலாம் ” என்றேன் நான்

காகிதத்தில் இருந்த
எனது வாழ்த்தையும்
எழுதிய என்னையும்
மாறி மாறி பார்த்தவள்
கோபம் கொப்பளிக்க சொன்னாள்

“நீங்..களு..ம்… ஒங்க பெண்ணியமும்…”