ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தோலுரிக்கிறது தோழர். சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury)-யின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?

தோழர். சீதாராம் யெச்சூரியின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?

ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தோலுரிக்கிறது தோழர். சீதாராம் யெச்சூரியின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன? பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில் மதச்சார்பின்மை மீதும் மதச்சார்பின்மையை பாதுகாத்து நிற்கின்ற அரசமைப்புச் சட்டத்தின் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது.…
சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram Endral Enna) புத்தகத்தின் முன்னுரை - ஜி.ராமகிருஷ்ணன் - https://bookday.in/

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? – நூல் அறிமுகம்

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? - நூல் அறிமுகம்   ‘ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கும்’                                         -மாசேதுங் இந்த மேற்கோளை பொருத்திப்பார்த்து, இன்றைய பாஜக தலைவர்களின் அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியும். அதானி - அம்பானி…
"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் | Padiyaan - M.Subramanian - G.Ramakrishnan - Movie review - https://bookday.in/

“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உதவி இயக்குநரான தோழர் எம் எஸ் மணி இயக்கத்தில் உருவான படியான் குறும்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். இயக்குநர் மா.சுப்ரமணியன் இயக்கிய குறும்படம் படியான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக அருமையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய இந்த படத்தை இயக்குநர் மா. சுப்ரமணியன் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.…
கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் –  ஜி.ராமகிருஷ்ணன்

கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் – ஜி.ராமகிருஷ்ணன்

கிராமப்புற இந்தியாவின் சுரண்டும் வர்க்கமும் உழைப்பாளிகளும் - ஜி.ராமகிருஷ்ணன் “காஷ்மீர் பள்ளத்தாக்கில் கனிமரங்களை வளர்த்துவிட்டு சகாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்கிறோம்” ~ கவிஞர் இன்குலாப் உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுகிற உழைப்புச் சுரண்டலை இன்குலாப் தனது கவிதையில் அழகியலுடன் விளக்கியுள்ளார். இந்தியாவில்…
‘பெண் அன்றும் இன்றும்’ | நூல் | பெண் | பெண்கள் | https://bookday.in/

‘பெண் அன்றும் இன்றும்’ – நூல் வெளியீடு

  வரலாறு நெடுகிலும் தொடரும் பெண்களின் போராட்டம் நர்மதா தேவி எழுதிய ‘பெண் அன்றும் இன்றும்’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித் துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Kalapaniyil Communistugal | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் – 3 பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்

ஜி ராமகிருஷ்ணன் எழுதிய “பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்” – நூலறிமுகம்

ஒரு சுதந்திர நாட்டில் வாழும் மக்களை நெறிப்படுத்தவும் அவர்களுக்கான அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்கித் தரவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முறையான கட்டமைப்பும் தலைமைப் பண்பும் தேவைப்படுகிறது. நமக்கான செயல்திட்டங்களை வகுக்கவும் அவற்றை முறையான வழியில் நடைமுறைப்படுத்தவும்…
‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்

‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்




தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கம்யூனிசம் பற்றிய உண்மையான கருத்துக்கள் சென்று சேர்வதற்கு முன்பே, பொய்யான பிரச்சாரங்கள் சென்று மக்களை குழப்பிவிடும். இந்த அனுபவம் மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது. அதனை தன்னுடைய பாணியில் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ், தலைவர்களின் வாழ்க்கையை அற்புதமாக விவரிப்பதன் மூலம் அந்த தவறான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணிகள் ஒவ்வொன்றுமே, பொய்யான பிரச்சாரங்களுக்கு எழுதப்படும் மறுப்புரைகள்தான். நான் எழுதி இதுவரை 3 தொகுதிகளாக வெளியாகியிருக்கும் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற தொடர், அதே பணியை வேறு விதத்தில் செய்கிறது. அன்புத்தோழர் ரமேஷின் தந்தையும் அந்த தொகுப்பில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். வாழையடி வாழையாக மக்களுக்கு உழைப்போம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் மகனும் செயல்படுகிறார்.

இந்தியாவின் முதல் மோதின கொடி ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த சென்னை மண்ணில், தோழர் சிங்காரவேலர் வாழ்க்கையை விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். தோழர் சிங்காரவேலர், கம்யூனிச கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில், மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அதன் பிறகு தோழர் அமீர் ஹைதர் கான் பற்றி விவரிக்கிறது. அவர் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், பொட்டல் காட்டை திருத்திப் பயிர் செய்யும் உழவுப் பணிக்கு ஒப்பானவை. அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் புடம்போடப்பட்ட களப்போராளிகளான சுர்ஜித்தும், இன்றும் நம்மோடு வாழும் நூற்றாண்டு கண்ட நாயகர் என்.சங்கரய்யாவும் வருகிறார்கள். இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாழ்க்கையும், பல்வேறு ஒத்த அம்சங்களையும், தனிச்சிறப்பான வரலாற்று பங்களிப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. எல்லோருமே ‘தோழர்கள்’ என்ற சொல்லுக்கு தமது வாழ்க்கையே பொருள் என்ற அளவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களுக்கும் விடுதலையை உறுதி செய்திட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம். எத்தனையோ நிகரில்லாத தலைவர்களை உருவாக்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், எந்த ஒரு தனிநபர் பிம்பத்தையும் கட்டமைப்பதில்லை. வாழும் காலத்திலேயே தமது தனிப்பட வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தலைவர்கள் மேற்கொண்டார்கள். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சிகர இலக்கை நோக்கிய வர்க்கப் போராட்டம், அதற்காக இன்னுயிர் ஈந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வடிவமான செங்கொடி, இதைத்தான் நமது முன்னுதாரண தலைவர்கள் தம் வாழ்நாளெல்லாம் முன்னிருத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மறைவுக்கு பிறகுதான் ஒருவரின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிட வேண்டும் என்பதில் சமரசமில்லாத உறுதிகாட்டி வாழ்ந்துள்ளார்கள். அதற்கு நியாயம் சேர்ப்பதாக இந்த நூல் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவரை பல்வேரு மொழியாக்க நூல்களுக்காக விருதுகள் பெற்றும், வாசகர்களின் பாராட்டைப் பெற்றும் வலம் வந்த கி.ரமேஷ், இந்த அற்புதமான கட்டுரைகளின் மூலம் தனது இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து வன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழ் வாசகர்களின் பரவலான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தோழர்கள் இன் நூல் முன்னுரையில் இருந்து

– ஜி.ராமகிருஷ்ணன்

நூல் : தோழர்கள் 
ஆசிரியர் : கி.ரமேஷ்
விலை : ரூ.₹170/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய அரிய நூல் – ஜி.ராமகிருஷ்ணன்

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய அரிய நூல் – ஜி.ராமகிருஷ்ணன்




“நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதை தீர்மானிப்பதுதான் ஒரு புரட்சியின் முக்கியமான அம்சம். இதற்காக ஒவ்வொரு வர்க்கத்தினுடைய சமூக பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்’’ இந்த வார்த்தைகள் மாவோ எழுதியவை. 1926 ஆம் ஆண்டு ‘‘சீன சமூகத்தில் வர்க்கங்களை பற்றிய ஆய்வு’’ என்ற ஆய்வுக் கட்டுரையில் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ரஷ்யாவில் விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி’ குறித்து 1899 ஆம் ஆண்டு லெனின் எழுதிய நூல் ரஷ்யாவில் கிராமப்புற மக்களை திரட்ட வழிவகுத்தது. மார்க்சியவாதிகளாகிய நாம் சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம், மனித குல விடுதலைக்காக உழைக்கிறோம். எனவே, நம்முடைய அன்றாட செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதற்கே நம்முடைய நண்பர்கள் யார்; எதிரிகள் யார் என தீர்மானிப்பது அவசியம். மக்கள் ஜனநாயக புரட்சிக்காக திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் விரிவாக விளக்குகிறது. இத்தகைய வர்க்கங்களை திரட்டுவதற்காகவே இடதுஜனநாயக அணி என்ற முழக்கத்தை கட்சி முன்வைத்துள்ளது.

1937 ஆம் ஆண்டு அன்றைய பிராந்திய அரசு (சென்னை ராஜதானி) கேரளத்தில் மலபார் பகுதியில் குத்தகை விவசாயிகள் பிரச்சனை பற்றி ஆய்வு செய்திட அமைத்த குழுவில் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் இடம் பெற்றிருந்தார். அக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு தனது மாற்றுக் கருத்தை தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் குழுவிடம் சமர்ப்பித்தார். கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களுடைய உபரி நிலங்களை நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்வதன் மூலமே கிராமப்புற வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் காண முடியும் என தனது குறிப்பில் வலியுறுத்தினார். 1957 ஆம் ஆண்டு அவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றி அமலாக்கினார். இந்தியாவில் விவசாய வர்க்கங்கள் பற்றி ஆய்வு செய்திட இப்போதும் இஎம்எஸ் குறிப்பு முன்னுதாரணமாக திகழ்கிறது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 1976 ஆம் ஆண்டு தோழர் சுந்தரய்யா முன்முயற்சியில் ஆந்திராவில் தெனாலி வட்டத்தில் அனந்தவரம் மற்றும் குண்டூர் மாவட்டம், குண்டூர் வட்டத்தில் கசா என இரண்டு கிராமங்களை தேர்வு செய்து இந்த கிராமங்களில் விவசாய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை செய்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நூலாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனுபவம்

தமிழ்நாட்டின் அனுபவத்திலும் இத்தகைய ஆய்வுகள் முக்கியமான இடம் பெற்றுள்ளன. அதில் ‘‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’’ என்ற தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய நூல் மிகவும் முக்கியமானதாகும். 1947 ஆம் ஆண்டு சீனிவாசராவ் எழுதிய இந்நூல் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழுவால் வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு துவங்கி பாரதி புத்தகாலயம் இதுவரை இந்நூலை மூன்று பதிப்புகள் வெளியிட்டுள்ளது. 1947க்குப் பிறகு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கீழத்தஞ்சையில் (திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) விவசாயத்திலும், விவசாய வர்க்க நிலைமைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், சீனிவாசராவ் எழுதிய இந்த ஆய்வு நூல் விவசாய வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்மாதிரியாகவும் இன்றைய சூழலை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டியாகவும் அமையும். 1947-ஆம் ஆண்டில் அன்றைய அரசு, காவல்துறை, ஊடகம் ஆகியன பற்றியும், நிலச்சுவான்தார்கள், குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட விவசாய வர்க்கங்கள் பற்றியும் ஆய்வு இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் பெரிய நிலச்சுவான்தார்களின் நிலக்குவியல் பற்றியும், கோவில்களுக்கு, மடங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு இவர்களே அறங்காவலர்களாக இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிலச்சுவான்தார்களின் சமூக, பொருளாதார ஆதிக்கத்தை கீழ்க்கண்டவாறு தோழர் சீனிவாசராவ் விளக்கியிருக்கிறார். ‘‘பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு எஜமானர்களாக விளங்கும் மடங்கள் பல இருக்கின்றன. மிராசுதார்களில் பலர் லேவாதேவிக்காரர்கள். வட்டிக்கு வட்டி, கடும்வட்டி வாங்கி பணம் குவிப்பதில் கெட்டிக்கார புள்ளிகள். கிராமக் கமிட்டிகளிலும், கோவாப்பரேட்டிவ் சொஸைட்டிகளிலும் இவர்களே அடைந்து கொண்டு தம்மிஷ்டம் போல் அவற்றை ஆட்டுவிக்கிறார்கள். நெல் விற்பனை சம்மேளனமும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. இவர்களில் பலருக்கு முழுசாக அநேக கிராமங்கள் சொந்தம்’’ ‘‘…இவர்கள் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் இருக்கவே இருக்கிறார்கள்’’.

பண்ணையாட்கள் பற்றி…

‘‘பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே. இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால் அரை மரக்கால் நெல்தான்’… ‘‘…முடிவாக சொல்லப்போனால் ஜெயில்களில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, தஞ்சை ஜில்லா விவசாயிகள் உண்ணும் உணவை விட பல மடங்கு மேலானது’’. மேலும், பண்ணையாட்கள் குரூரமான தீண்டாமைக் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

குத்தகை விவசாயிகள் பற்றி…

‘‘ஆதி திராவிட பண்ணையாட்களின் நிலைமைதான் இப்படி; மிராசுதார்களிடமிருந்து நிலத்தை வாங்கி வாரத்திற்கும் குத்தகைக்கும் உழுகிற ஜாதி ஹிந்து விவசாயிகளுடைய நிலைமையாவது சுபீட்சமாயிருக்கிறதா? கிடையாது. இந்த ஜில்லாவில் வாரத்திற்கு உழுபவர்கள், விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்குதான் பெற்று வருகிறார்கள்’’.

சிறு மிராசுதார்கள் பற்றி…

‘‘ஒன்று முதல் பத்து ஏக்கர் வரை தமக்கு சொந்தமாக கொண்ட சிறு மிராசுதார்களாவது நல்லபடி இருக்கிறார்களா? இவர்களுடைய பேரில் பட்டா இருந்தாலும், உண்மையில் இவர்களும் இந்த பெரும் நிலப்பிரபுக்களின் பொருளாதார பிடிக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’’.

ஏழை விவசாயிகள் பற்றி…

‘‘ஏழை விவசாயிகள் இந்த மிராசுதார்களிடம் ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறார்கள். விதைப்புக் காலத்தில் மிராசுதார்களிடம் தானியமாக கடன் வாங்குவார்கள் விவசாயிகள். அறுவடைக் காலம் வந்தவுடன், தான் கொடுத்ததைவிட மூன்று மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டுபோவார் மிராசுதார்’’.

ஊடகங்கள் பற்றி…

‘‘விவசாயிகளை அடக்க வேண்டும், விவசாய சங்கங்களை நசுக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிற மிராசுதார்கள் என்ன கடிதமெழுதினாலும் சரி, உடனுக்குடன் அவற்றை, நாலு பத்தி தலைப்புக் கொடுத்து கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துவிடுகின்றன தேசியப் பத்திரிக்கைகள். அதே சமயத்தில், மிராசுதார்களின் பொய்ப் பிரச்சாரத்தை மறுத்து கிசான் சபைத் தலைவர்களோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ அறிக்கை விடுத்தால், அவைகளை வெளியுலகுக்கு தெரியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகின்றன அதே பத்திரிக்கைகள்’’. அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறை பற்றியும் நிலச்சுவான்தார்களின் பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட ஆதிக்கம் பற்றியும் விளக்கிய தோழர் சீனிவாசராவ் விவசாய சங்கத்தின் தேவையை குறித்து கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்: ‘‘மிராசுதார்களின் இத்தகைய மனித தன்மையற்ற சுரண்டலையும், பயங்கரச் செயல்களையும் எதிர்ப்பதற்காகவே 1943 ஆண்டு தஞ்சை ஜில்லாவில் கிசான் சபை ஏற்படுத்தப்பட்டது. கிசான் சபா இயக்கத்தின் முன்னணி வீரர்களாக கம்யூனிஸ்ட்டுகள் விளங்கினார்கள் என்பதில் ஆச்சரியப்படத்தக்க தொன்றுமில்லை’’.

வீரமிக்க போராட்டம்

கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் நடத்திய வீரமிக்க போராட்டத்தினால் கீழத்தஞ்சையில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை கொடுமையும் ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய வர்க்க போராட்டத்தினால் இதுபோன்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டு வரும் சூழலில் இன்றைய நிலைமைக்கேற்றவாறு முழக்கங்களை உருவாக்கி போராட வேண்டிய தேவை உள்ளது. 1947-ஆம் ஆண்டு தோழர் பி.சீனிவாசராவ் எழுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வெளியிட்ட ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற நூலை நாம் இப்போது மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளூரில் இதுபோன்ற ஆய்வுப் பார்வையை வகுத்துக் கொண்டு செயல்பட இந்த மறுவாசிப்பு சிறந்த பயிற்சியாக அமைந்திடும்.

நூல் : தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?
ஆசிரியர் : பி.சீனிவாசராவ்,
விலை : ரூ.₹20/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நன்றி: தீக்கதிர்

நூல் வெளியீட்டு விழா: ஜி.ராமகிருஷ்ணனின் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம்-3) பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்

நூல் வெளியீட்டு விழா: ஜி.ராமகிருஷ்ணனின் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம்-3) பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது பாகம் வெளியீட்டு விழா 18.12.2022 அன்று எழுத்தாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது..

மேனாள் பாராளுமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி கே ரங்கராஜன் இந்நூலினை வெளியிட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக சங்கத்தின் மாநில தலைவர்கள் பாரதி மற்றும் நிரூபன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ் ஏ பெருமாள் மற்றும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தனது சிறப்புரையில் கேரளாவில் வெளியான பள்ளி ஆசிரியரின் நூல் குறித்து தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

தொடர்ந்து கட்சியின் அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய ஆசிரியர் பணி போக மீதம் உள்ள நேரங்களில் கட்சி பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தார்.

இத்தோடு மர சிற்பம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் பல்வேறு உருவங்களையும் சிற்பங்களாக செதுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்கள் குறிப்பாக மாவோ, லெனின், ஸ்டாலின் போன்ற ஆளுமைகளின் உருவங்களையும் சிற்பங்களாக செதுக்கியிருந்தார்.

இவரது பணிகள் குறித்து கேரளாவில் உள்ள மூத்த தோழர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் உள்ளூரில் உள்ள தோழர்கள் இவரது செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் ஆதரவு அங்கீகமோ அங்கீகாரமோ வழங்கவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தனது கட்சிப் பணிகளை செயலாற்றிக் கொண்டிருந்தார்.

பின்பு கட்சி அலுவலகத்திற்கு செல்வதை நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே சிற்பங்களை செதுக்குவதும் நூல்களை படிப்பதிலும் கவனம் செலுத்தி இயங்கிக் கொண்டிருந்தார் வெளியில் எப்படி அங்கீகாரம் இல்லை அதேபோன்று இவரது குடும்பமும் உறவினர்களும் இவரது பணிகளை ஏற்றுக் கொண்டதில்லை.

இச்சூழலில் கிராமத்தில் உள்ள கட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கும் பணிகளில் கட்சித் தோழர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு தோழர் இ எம் எஸ் நம்பூதிரி பாடு வருகை தந்தார்.

கட்சி அலுவலக திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்த தோழர்களிடம்
இ. எம். எஸ் இக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் நமது கட்சி பணிகளில் ஈடுபடுவாரே அவரை காணோமே. அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இங்கிருந்து தோழர்களுக்கும் அப்போது கட்சியை தலைவர்களுக்கும் தோழர் பள்ளி ஆசிரியர் குறித்து கேட்டது மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் கொடுத்தது.

அனைவரும் பரபரப்பானார்கள் பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தோழர் இ எம் எஸ் உங்கள் வீட்டிற்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியரும் வரட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

அனைவரும் கூட்டமாக பள்ளி ஆசிரியர் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஆனால் இ எம் எஸ் அனைவரையும் தடுத்து என்னோடு நாலு தோழர்கள் மட்டும் வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

தோழர் இ எம் எஸ் பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தார்.

குறிப்பாக அந்தக் காலத்தில் நடந்த போராட்டங்கள் கட்சி பணிகள் போன்றவற்றை நினைவு கூர்ந்தார்கள்.

இப்போதும் நீங்கள் மர வேலைப்பாடுடைய சிற்பங்கள் செய்து கொண்டுள்ளீர்களா என இ எம் எஸ் கேட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் தொடர்ந்து தான் செய்த சிற்பங்களை அவரிடம் காட்டியுள்ளார்.

இப்போது மாவோவின் மரச் சிற்பம் செய்து கொண்டிருப்பதையும் தோழர் இ எம் எஸ் இடம் பள்ளி ஆசிரியர் காண்பித்துள்ளார்.

தோழர் இ எம் எஸ் மிக்க மகிழ்ந்து இப்பணி தொடரட்டும் என்று பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அடித்தட்டு மக்களிடம் எப்படி நேசம் காட்டினார்கள் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக உலக தலைவராக வலம் வந்தவர் தோழர் இ எம் எஸ்.

அவரது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இது போன்ற மிகச் சாதாரணமான ஒரு கட்சி பணி செய்து கொண்டிருந்தவரை நினைவு கூர்ந்து அவரை சந்தித்தது கட்சி தலைவர்களுக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியில் உள்ள கட்சி ஊழியர்களுக்கு மட்டுமல்ல அந்த கிராமத்து மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

அதன் பின்பு அந்த பள்ளி ஆசிரியரின் பணிகள் குறித்து அந்தப் பகுதி கட்சி தோழர்கள் அவரது குடும்பம் மற்றும் அந்தப் பகுதியினர் அனைவரும் போற்றிப் பாராட்டினார்கள் என்ற செய்தியை எழுத்தாளர் தோழர் எஸ். ராமகிருஷ்ணன் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.

அது போன்று தான் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள களப்பணியில் கம்யூனிஸ்டுகள் நூல்கள் ஆகும்.

3 பாகம் வந்துள்ளது. இன்னும் நிறைய தோழர்களை சந்தித்து அவர்கள் கட்சிக்கு ஆற்றிய பணிகளை நூலாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்தோடு இனிமேல் சந்திக்கும் தோழர்களிடம் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். தோழர்களின் குரலோடு இப்பதிவுகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர் தோழர் எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

இந்நிகழ்வில் பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்த தோழர் பாலாஜி நன்றி தெரிவித்தார்.

நூல் : களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம்-3) பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணனின்
விலை : ரூ.₹ 250
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]