நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் மின் மினி π உலகத்தின் கதை – ஹரி கிருஷ்ணன்

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் மின் மினி π உலகத்தின் கதை – ஹரி கிருஷ்ணன்




நூல் : மின்மினி π உலகத்தின் கதை
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ. ₹80/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

பை உலகின் குட்டி ராணியை சந்தித்தேன்

புத்தக பைண்டிங் கடைக்காரர் நான் கொடுத்த “மின்மினி” எனும் புத்தகத்தை பார்த்துக் கொண்டே   “ஸ்கூல் பசங்க பரவா இல்லைங்க… நீங்க பண்றதுக்கு… என்று தலையில் அடித்துக் கொண்டார்.

 நானும் அவரைப் பார்த்து வழிந்து கொண்டே எப்ப பைண்டிங் பண்ணி கொடுப்பீங்க என்றேன்.

ஆங்… நாளைக்கு வாங்க என்று வேகமாக கூறினார்.

அவர் கோபம் நியாயமானது. அதற்கு காரணம் மின்மினிதான்.

அழகிய சிறுமி தன் நண்பருடன்  மாயாஜால வித்தை காணச் செல்கிறாள்.

அங்கு அவளது நண்பன் மாயாவித்தைக்காரனிடம் மாட்டிக் கொள்கிறான். தனது நண்பனை காப்பாற்ற மின்மினி செல்கிறாள்.  எங்கே எனது நண்பன் என்கிறாள். மாய வித்தைக்காரன் உள்ளே போ என்று தள்ளுகிறான்.  அங்கே தள்ளப்பட்ட  பொழுது அந்த அறை இருட்டாக இருக்கிறது.  தான் நிற்கிறேனா நடக்கிறேனா எப்படி இருக்கிறேன் என்பதை அறியமுடியவில்லை.  விரைவில் வட்டத்தின் விட்டமாக மின்மினி காலச் சக்கரத்தில் கட்டப்பட்டதை உணர்கிறாள்.  ஒரு சின்ன சத்தம் கேட்கிறது மின்மினி வந்து விட்டாயா…ஆம் அவள் நண்பனின் குரல். வந்து விட்டேன் என்கிறாள். மயக்க நிலையில் நண்பன் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவன் பெயர் ரா வில் ஆரம்பிக்கும் என்று மட்டும் நியாபகம் இருக்கிறது.

 ஏழு  π  கதைகள் கூறினால் விட்டு விடுகிறேன் என்கிறான் மாயவித்தைக்காரன்.

இதோ நான் சொல்கிறேன் என்று ஆரம்பிக்கிறாள்… அவள் கூற கூற π தேசத்தில் மூழ்கி அதன் தொடர்பான π  ராஜாக்களை காட்சிப்படுத்திக் கொண்டு செல்கிறாள். ஒவ்வொரு பை தொடர்பான கணித ராஜாக்களை கூறுகிறாள். அவளை காலச் சக்கரத்தில் இன்னும் வேகமாக சுற்றுகிறான்.  1711 ஆம் வருடம் ராயல் கல்வியகம் ஈர்ப்பு விசை நாயகன் தொடங்கி, வட்டத்தின் விட்டமாக இயங்குகிறாள்.

 காலம் பிரபஞ்சத்தை இயக்குகிறதா அல்லது பிரபஞ்சத்தை காலம் இயக்குகிறதா எனும் பிரம்மாண்ட கேள்விக்கு ஏழாம் நூற்றாண்டு  இரண்டாம் பாஸ்கரா கூறுகிறார்.

வட்டத்தை பூஜ்ஜியமாக இந்த உலகம் பயன்படுத்தட்டும் என்கறார் பிரம்ம குப்தர்…

 இப்படியாக அவளோடு சேர்ந்து மாய வித்தைக்காரனிடம் நாமும் மாட்டிக் கொண்டு மாயவித்தை காரனின் கேள்விக்கெல்லாம் அந்தந்த காலச் சக்கரத்தில் சுழன்று அந்த இடத்திலிருந்து அவன் கேள்விக்கு மின்மினி பதிலளிப்பதைக் காண்கிறோம்.

 சற்று நேரத்தில் பாடலிபுத்திரம் வருகிறது. அண்டவியல், இறையியல், தத்துவம், தர்க்கம், மருத்துவம் என காலச்சக்கரம் சுழல்கிறது.

புத்த மதத்தின் நான்கு பள்ளிகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட கணிதம் வருகிறது. நான்காயிரம் தசமஸ்தானம் வரை π அணிவகுப்பு தொடர்கிறது.

ஆம் இப்போது காலத்தை பார்த்தால் 1914. இது நம் இந்திய கணித சக்கரவர்த்தி சீனிவாச ராமானுஜம் என்கிறாள். மீண்டும் காலச்சக்கரம் சுழல்கிறது தனது நண்பர்களை காப்பாற்ற ஒவ்வொரு காலசக்கர முயற்சியிலும் அந்த அந்தக் காலத்தின் π  நகரைப்பற்றி கூறிக்கொண்டு வருகிறாள்…  பிதாகரஸ் மாறிலி, அனக்ஸிமாண்டர், பித்தாகரசின் ஆசிரியர் பெரைசைடஸ் என்று இந்த கதை விரிந்து கொண்டே செல்கிறது. 1756 இல் மன்னர் ஷுக் ஹோமின் செஸ் அட்டையின் 64 கட்டங்களையும் அதன் எண் தொடர் விரிவாக்கம் என்று பல புதிர்கள் உள்ளன.  உலகின் முதல் கணித கையேடு எழுதிய பெண் அறிஞர் மேதை ஆக்னேஷி அம்மையார். ஆக்னேசி தியரம்  நீங்கள் அறியலாம். இத்தாலியில் (பொலக்னா யுனிவர்சிட்டியில் பணியாற்றியவர் இவர்). கடைசியாக  πன் தசமஸ்தான 212 ராஜா யார் எனும் கேள்வி கேட்கிறான்.

πயின் 212 வது ராஜா யார் எனும்  சுவாரசியமான தகவலை நீங்கள் மின்மினியோடு காலச்சக்கரத்தில் சுழன்று அறிந்து கொள்ளலாம்.

கடைசியாக π சாம்ராஜ்யத்தில் இருந்து கட்டவிழ்க்கப்பட்டாளா மின்மினி….. படித்து அறிந்து கொள்ளுங்களேன்.

குறிப்பு:

1. நியோலோஜிசம் குறித்து பேசப்பட்டிருக்கும் முதல் தமிழ் நாவல்.

2.  பெற்றோர்கள் அறிய வேண்டிய குழந்தை ஹிப்னாடிசம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய  முக்கியமான செய்தி இருக்குங்க.

இந்நூல் ஆசிரியர்  முனைவர் ஆயிஷா நடராஜன் 2014 இல் சாகித்ய அகாடமி விருதாளர்.

முதன் முதலில் தமிழில் பேண்டஸி சயின்ஸ் பிக்சன் எழுதப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

கதை ஆரம்பிக்கும் பொழுது கணிதத்தின் π தொடர்பான விஷயங்களை அறியப் போகிறோம் என எப்பொழுதும் போல் தொடங்கினேன். தொடங்கிய பிறகுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக மின்மினியோடு காலச்சக்கரத்தில் சென்று மின்மினியாகவே மாறிப் போய் மயவித்தைக் காரனின் அச்சுறுத்தலில் மிரண்டு போய் மின்மினியின் பதிலை அறிய அறிய π எனும் சாம்ராஜ்யம் இத்தனை பெரியதா முடிவில்லாததா எனும் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

 அந்த மயக்கத்தில் இருந்து நான் மீள வெகு நாட்கள் ஆகும்.

 நம்முடைய பிளஸ்-1 பிளஸ்-2 மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் என எல்லாருக்கும் அற்புத அனுபவத்தை இந்தப் புத்தகம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

கதை முடியும் பொழுது, மின்மினி மயக்கம் தெளிந்தாலோ இல்லையோ,

 நாம் அந்த மயக்கத்திலே அதாவது π சாம்ராஜ்யத்தில் இருந்து விடுபட முடியாமல் அதன் யோசனையில் ஆழ்ந்து இருப்போம் என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் உணரலாம்.

– ஹரி கிருஷ்ணன்