Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸின் நான்கு கவிதைகள்

1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று தூக்கிட்டுத் தொங்க மனிதர்கள் கிடைக்காமல் தங்களையே தூக்கிட்டுத் தொங்குகின்றன கோடைகால மின்விசிறிகள் காவிரி…
உயிர்த்தெழும் நாள் | Day of Resurrection - ஐ.முரளிதரன்

தொடர் : 2– சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்

உயிர்த்தெழும் நாள்   வெரோனிகா வை பற்றி முதன்முதலாக குமரன் எனக்குச் சொன்னது “அந்த உதட்டு மச்சத்தைப் பற்றி தான்”. நல்ல வடிவான முகம் அவளுக்கு. அந்த முகத்தில் மேலுதடு முடிந்து கிழுதட்டினை தொடுகிற இடத்தில் மெல்லிதாக ஒரு புள்ளி. பிறந்த…
சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. சாதி நிழல்கள்  நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது அவர் வாகனம்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது - ராம்குமார். ரா

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – ராம்குமார். ரா

      சாதியம் பற்றியும் மதவாதம் பற்றியும் அதன் உள் நோக்கங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் வரலாற்றின் மூலம் விளக்கும் கட்டுரை நூல். ஆதவன் தீட்சண்யா அவர்களின் பல உரைகளும் அனுபவங்களின் மூலம் இவை விவரிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என்று…
nool arimugam : saamigalin pirappum irappum - prof s.balaraman நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் - முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் – முனைவர் சு.பலராமன்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்னும் அபுனைவு பிரதி அறுபத்து நான்கு பக்கங்களுடன் 2011ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.  ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், திறனாய்வாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவர் என பன்முக ஆற்றலோடு இயங்கி வருகிறார்.…
paangai thamizhan kavithai பாங்கைத் தமிழன் கவிதை

பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்*                                          •••••••••••••••••••••••••••••••• சேரிகளில் வாழ்ந்து மறைகின்றவர்க்கு சொர்க்கத்திலோ நரகத்திலோ…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்
கடவுள் மனதில் சாத்தான் நுழைவது
*******************************************
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள்
ஒரு நாள் தொலைந்து போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும்
தேவாலயங்களிலும் தேடியபிறகும்
அவரின் இல்லாமை
குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
ஆற்றாமையில் அரற்ற
சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார்
தவளையுடையணிந்த கடவுள்
இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள்
புரிந்தாக வேண்டும்
இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும்
நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல்
தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது
கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில்
அழுத்த
விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில்
நெருஞ்சி முட்கள் முளைக்க
இதயத்தைக் கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் நுழைகிறான்

நிழல்களை அழைத்தல்
**********************************
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கிய உருவா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்தத் தெருவெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும் கவிஞர்களுக்கு
சவால் விட்டுச் செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்

ஒற்றைச் சொல்
***********************
ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது
மூன்று எழுத்து
ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது

அது சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும் இருந்தது
நம்மை அறியாமலேயே
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்தபடியேவும்
அது இருந்தது

ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்திலிருந்த தவளை
குதித்து வெளியேறிப் போனது
அது எழுப்பிப்போன பேரலைகள்
இன்னும் குளத்தை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன

பச்சை பாசிக்கடியில் நீரின் மூலக்கூறுகளும் இன்னும்
மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்து குதித்துப் போன
மாயம் தான் இன்னும் தெரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான் …

– தங்கேஸ்

ஜேசு ஞானராஜின் கவிதைகள்

ஜேசு ஞானராஜின் கவிதைகள்
1
உணவு!
அந்தி மயங்கியது!
மேற்குத் தொடர்ச்சி மலை
மஞ்சளும் சிவப்புமாய் ஒளிரத் தொடங்கியது!
கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்க
மாடுகள் வீடு நோக்கி நடைபயின்றன!
ஆட்டுப் பட்டிக்குள்
ஏழு சுரங்களும்
ஏப்ரலின் அடுத்த மாதத்தைப்
பாடத் தொடங்கின!
ஓடையிலிருந்து வெளிவந்த
வாத்துக்கூட்டம்
வீட்டைப் பார்த்து விரைந்தன!
அம்பு வடிவில் பறக்கும் கொக்குகள்
கூடுநோக்கி போய்க்கொண்டிருந்தன!
வேப்பமர உச்சி
காக்கைக் கூட்டில் குஞ்சுகள்
கீச் கீச் சென
தாயைத் தேடிக் கொண்டிருந்தன!
வேகமாய் வீடு நோக்கி நடக்கும்
வேடனின் முகத்தில்
கொள்ளை சந்தோஷம்!

2
சுழற்சி!
சூரியனின் காந்தப் பார்வையில்
மோகம் கொண்டு மயங்கிய கடல்
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமான பெருங்காற்று
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
உடனே கூப்பிட்டு
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!

3
கடன் கொடுத்த பணம்!
இரவு சாப்பாடு முடிந்து
முற்றத்திலிருந்த நார்க்கட்டிலில்
அமர்ந்திருந்தார் அப்பா!
வாசல் படியில் உட்கார்ந்து
வாகாக கால் நீட்டினாள் அம்மா!
வெற்றிலைப் பெட்டியைத் திறந்து
தோதான கொட்டைப்பாக்கை
அப்பாவுக்குத் தந்தாள்!
சுண்ணாம்பு பாக்கெட்டை
மெதுவாகப் பிதுக்கி
நுனி கிள்ளிய வெற்றிலையில்
வைத்து நீட்டினாள்!
பாக்கை கடித்துக் கொண்டே
விரித்த வெற்றிலையில்
சுண்ணாம்பைத் தடவி
வாயில் குதப்பினார் அப்பா!
திருவிழாவுக்கு வாங்கிய
தேன் குழல் மிட்டாய்
ஓலைப் பெட்டியில்
பாதி நிரப்பிய அடுப்பு குப்பை
துப்பட்டியாக மாறி இருந்தது!
கடைத்தெரு குப்புசாமி என்று
ஆரம்பித்தாள் அம்மா!
‘ம்’ கொட்ட ஆரம்பித்தார் அப்பா!
மேகத்துள் மறைந்திருந்த முழு நிலவு
அம்மாவின் கதையைக் கேட்க
மெதுவாக எட்டிப் பார்த்தது!
வானத்து நட்சத்திரத்தில் ஒன்று
கீழ்த்திசையில் ‘சர்ர்ர்’ரென்று இறங்கி மறைந்து போனது!
பக்கத்து கோவிலில்
மணி ஒன்பது அடித்தது!
இலங்கை வானொலியில்
ராக தீபம் முடிந்து
செய்தி பேசிக்கொண்டிருந்தது!
எதிர்வீட்டு ஆள் உயர மண் சுவரில்
வெள்ளை நிறப் பூனை யொன்று
பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது!
ஓட்டுக் கூரைக்குள்
ஒளிந்திருக்கும் சுண்டெலிக்கு
அதிர்ஷ்டம் இருந்தால்
பூனையின் பசியைத் தின்று
உடனடியாக கடவுளிடம்
பேச வாய்ப்பிருக்கிறது!
தெருவில் பால்காரரின் சத்தம்
தேய்ந்து மறைந்து போனது!
அம்மாவின் பேச்சில்
குப்புசாமி இறந்து போயிருந்தார்!
அப்பாவின் நாளைய சட்டையில்
ஆயிரம் ரூபாய்
காணாமல் போயிருந்தது!

4
இரவும் பகலும்!
இரவைத் தின்று கொண்டிருந்த
காலத்துக்கு அகோர பசி!
கதவைத் திறந்து
எட்டிப் பார்த்த சுக்கிரன்
பட்டென்று சாத்திக் கொண்டான்!
மீந்து போன இரவுகளை
கையில் எடுத்த நிலவன்
செய்வதறியாது திகைத்தான்!
நட்சத்திரங்களை ஊசியாக்கி
இரவைத் தைத்துக் கொடுத்தேன்!
என் கடவுள் நீதான்
என்ற சந்திரனை
மெதுவாகத் தின்று கொண்டிருந்தான் சூரியன்!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!

5
கடவுளைக் காணும் ஆவலில் கடவுள்!
உலகம் முடியப் போகிறது!
கடவுள் வருகிறார்!
அந்த நபரின் குரல்
ஆகாயம் வரை கேட்டது!
உண்டியல்கள் வேகமாய் நிறைந்தன!
பண நோட்டுகளில்
காணிக்கைப் பெட்டிகள்
மூழ்கிக் கொண்டிருந்தன!
இதோ வந்து கொண்டிருக்கிறார்!
வந்தே விட்டார்!
குரலின் டெசிபல் கூடியது!
அனைவரும் வாசலைப் பார்த்தனர்!
கடவுளும் தான்!

6
தோட்டா சொன்ன ரகசியம்!
பட்ட்ட்ட்…………..
காது வரை வந்த ரகசியம்
அதோடு நின்று விட்டது!
எதுவும் புரியாது குழம்பிய மனம்
கண்களைப் படம் வரையச் சொன்னது!
கண்களின் கேள்விகளுக்கு
காது மௌனம் சாதித்தது!
நிலை அறியா மூளையோ
மதுவில் ஊறிய ஆப்பிள் காயாய்
கனத்துக் கிடந்தது!
சரக்…..சரக்…..சரக்!
வேகமாக நடக்கும் வேடுவனின்
தோள் பையில்
முயலின் சூடான ரத்தம்
இப்போது படம் வரைய ஆரம்பித்தது!

7
பால்!
நாற்காலியில் அமர்ந்து
பாட்டிலில் பால் குடித்தான் பேரன்!
பாட்டி படுக்கையில்
மேசைக்கரண்டியில் பால் குடித்தாள்!
முன்னது உள்ளே இறங்கியது!

8
தாரமும் தாசியும்!
தரையை மேயும் நிழலுக்கு
சூரியனும் விளக்கொளியும் ஒன்றுதான்
இருளைத் தொடும் வரை!

9
புதுக் கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!

10
நல்லாட்சி!
ஆணவப் படுகொலையை
ஆவணப் படுத்திய கடைசி தேதி
யாருக்கும் ஞாபகம் இல்லை!

11
மதம்!
அசோகரின் வாளால்
வெட்டுண்ட கிளியோபாட்ராவின் வீட்டில்
பௌத்தம் தூக்கிலிட்டுக் கொண்டது!

12
வாசலில் வாழைமரம் கட்டி
பந்தல் போட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்து
காய்கறிகள் வெட்டி
பதினாறு வகை
கூட்டுப் பொரியலுடன்
கறிசோறும் சாம்பார் ரசமும்
ரெடி பண்ணி
மாப்பிள்ளை பொண்ணுக்கான
மேடை அலங்காரமும் முடிச்சு
அரிசி பெட்டியுடன்
வாழைக்குலையும் ஏந்தி
மாமா மாமி சித்தப்பா சித்தி
பெரியம்மா பெரியப்பா
எல்லோரும் வந்திருக்க
செல்லக் குழந்தைகளின் உற்சாகத்துள்ளல்களில்
புத்தாடைகள் சரசரக்க
பாட்டியின் கைத்தடி மட்டும்
மூலையில் தனியாகக் கிடக்கிறது!

13
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
அமைதியான சத்தத்துடன்
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!

14
இரவைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து
நடந்து கொண்டிருந்தேன்!
கோட்டானும் அரவமும்
உணவு தேட தோதான நேரமான
இரவைத் திரும்பத் தர சொன்னது!
கல்லறைக்குள்ளிருந்து
வெளிவந்த ரத்த காட்டாரி
மக்களை பயமுறுத்த
இரவு தான் சரியென கேட்டது!
எரிந்து கொண்டிருந்த பிணம்
எழும்பி வந்து
இரவில் தான் சரியாக எரிய
முடியுமென யாசித்தது!
தர முடியாதென வேகமாக நடந்தேன்!
இரவு இல்லையேல்
என் வருமானம் கிடையாதென
ஏக்கமாய் வந்து நின்றான்
இரவுக் காவலாளி!
கக்கத்தில் இருந்த இரவை எடுத்து
சந்தோஷமாய் அவனிடம் தந்தேன்!

15
எல்லோரையும் காப்பாற்ற
வேண்டுபவனின் கையில்
குளித்து மாலை சூடிய பெரிய ஆடு!
அரிவாளுடன் வந்து கொண்டிருக்கிறார் கடவுள்!

16
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!

17
கை நிறைய பணம் இருந்தும்
செலவழிக்க முடியவில்லை
வங்கியில் பணம்
பட்டுவாடா செய்பவர்!

18
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
– இப்படிக்கு
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கும்
விவசாயி குடும்பம்!

29
பீடை யென
ஒதுக்கப்பட்டவளுக்கு
நடு வீட்டில்
தடபுடல் விருந்து!
அன்று பாட்டியின் நினைவு நாள்!

20
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு!

-ஜேசு ஞானராஜ்,
ஜெர்மனி

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ –  பிரவீன் ராஜா

நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது’ – பிரவீன் ராஜா
மொத்தம் 18 கட்டுரைகள்.

சாதியை பற்றிய புரிதல் கம்யூனிஸ்ட்களுக்கு அவ்வளவாக இல்லை என்ற புரிதலை மாற்றும் கட்டுரைகள் என நான் நினைக்கிறேன்.

தோழரி‌ன் பேச்சுகளை பெரும்பாலும் கேட்டதன் காரணமாக, புத்தகத்தை படிக்கும் போது, அவரின் குரல் வழியே படிப்பது போன்ற ஒரு உணர்வு.

100 பெரியார்கள் வேண்டும் என்றால் நமக்கு என்ன அதைவிட பெரிய புல் புடுங்குர வேளை இருக்க போகிறது என்ற வெளிப்படையான கேள்வி நடுநிலை என்னும் போர்வையில் வாழும் எலைட்கள் கன்னத்தில் பளீர் என்று அறைந்த வலியை கொடுக்கும்.

கல்வி என்பது அறிவின் வளர்ச்சியையும், சமூகத்துடன் சமமாக பழகும் குணத்தையும், பகுத்தறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல் போனதுக்கு தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களின் வெட்டி தற்பெருமையுமே காரணம் என்பதை அரசு பள்ளி மாணவர்களின் பக்கம் நின்று பேசி இருக்கிறார்.

இறைவனின் படைப்பில் மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது என தொடங்கிய வரிகள் போதும், கொள்கை புரிதலுடன் எவ்வளவு பேர் பயணிக்கிறார்கள் எ‌ன்று.

சாதி ஒழிப்பில் தலித் மக்களை அரசியல்படுத்துவதில் உள்ள சிக்கலையும், தலித் அல்லாதார் செய்யவேண்டிய சுய சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் போன்ற முன்னெடுப்புகள் பற்றியும் அழகாக பேசி இருக்கிறார்.

தோழர் திருமாவின் இயக்க அரசியல் முதல் ஓட்டு அரசியல் பயணம் வரை இருந்த ஈர்த்த மற்றும் முரண்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது எல்லாம் அருமை.

இருக்கையில் உட்காரும் போது குத்தும் சின்னஞ்சிறு ஊசி உண்டாக்கும் வலியை அனைத்து கட்டுரையிலும் உணர்த்தி இருக்கிறார்…

அந்த வலி சாதியும் மதமும் முக்கியமாக கருதும் கூட்டத்திற்கு எதிராக மனித மாண்பினை மீட்கும் உண்மையான மனிதர்களை ஒன்றிணைக்கும் என்று நானும் அவரை போலவே நம்புகிறேன்.

– பிரவீன் ராஜா

நூல் : கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
விலை : ரூ.₹80
வெளியீடு : நூல்வனம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]