Posted inPoetry
பழக்கார அம்மா கவிதை – கண்ணன்
வழக்கமாக வாங்குவது தான்
‘பழம் வாங்கரேதேயில்ல’
‘இல்லம்மா, பசங்க வீண் பண்றாங்க‘
சப்போட்டா ஒன்று, திராட்சை அரை
தராசுமுள் பழம் பக்கம்
சாய்ந்தமைக்கும்
‘அறியாப்பையனென’ மகனை அழைத்தமைக்கும்
இடது கையின் கொசுருக்குமே
கொடுத்தது போதவில்லை
வாங்கிய பழத்திற்கும்
கொடுத்திருக்கலாம் நான்