அனுராதா சௌரிராஜன் எழுதிய “"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு” புத்தகம் | Anuradha Sourirajan's Kurivi Vaayil Parunthu Haiku Thoguppu Tamil Book Review | சாந்தி சரவணன் | www.bookday.in

அனுராதா சௌரிராஜன் எழுதிய “குருவி வாயில் பருந்து” ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம்

"குருவி வாயில் பருந்து" ஹைக்கூ தொகுப்பு – நூல் அறிமுகம் ஹைக்கூ மூன்று வரிகள் தானே எளிதாக எழுதிவிடலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வருவது இயல்பு. ஆனால் பல நிமிடங்கள் பேசுவது எளிது. ஒரு நொடியில் எண்ணத்தை காட்சிபடலமாக கண்முன்னே…
Haiku Poems 2 By Era Kalaiyarasi ஹைக்கூ கவிதைகள் 2 - இரா.கலையரசி

ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி




1)
ஒடித்த பறவை இறகு
இதமாய் இறங்குகிறது
காதுகளில்

2)
இரட்டை விரல்களின் நடுவே
சிம்மாசனம் போட்டது
சிகரெட்

3)
உலுக்கிய கைகளில்
முத்தமிட்டு அமர்ந்தன
சரக்கொன்றை மலர்கள்

4)
அழுத்தியதும் வெடித்தது
ஏழைகளின் பட்டாசு
எருக்கம்மொட்டு

5)
வரிகள் இருந்தும்
கவிதை இல்லை
உதடுகள்.

Haiku Poems 3 By JeyasriBalaji. ஹைக்கூ கவிதைகள் 3 ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்

#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி

#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு

#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்

#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி

#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்

#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி

#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்

#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை

#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்