ஞா. ஆனந்தனின் ஹைக்கூ கவிதை Haiku poem by Anandan G - Tamil Poetry / Tamil Haiku Poems - https://bookday.in/

ஞா. ஆனந்தனின் ஹைக்கூ கவிதை

ஞா. ஆனந்தனின் ஹைக்கூ கவிதை   என்னுடைய தடைகளை உடைத்தெறிய எந்த படைகளும் தேவையில்லை தைரியம்   ஏறுவதும் ஏணிகளால் இறங்குவதும் ஏணிகளால் செயல்கள்   பகலின் தொடக்கம், இரவின் முடிவில் பகலின் முடிவில், இரவின் தொடக்கம் காலம்   நீ…
ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

ஹைக்கூ கவிதைகள் - ஆ.சார்லஸ்   1. நெகிழி இருக்கை தயாரிப்பாளர் உட்காரப் பயன்படுத்துகிறார், மர நாற்காலி.   2. யாசகர்கள் கண்டு கொள்கின்றனர், கடவுளர்களை, கோயிலுக்கு வெளியில்.   3. ஒப்பனை அலங்கார பயிற்றுநர் அடிக்கடி மாற்றிக் கொள்கிறார், பழகும்…
Haiku Poem | ஹைகூ கவிதைகள் | Book Day

ஹைக்கூ கவிதைகள்

ஏக்கம்   1. காத்திருக்கும் காய்ந்த மரக்கிளையில் கருநிறப் பறவை வானில் கருமேகம் 2. விரிந்த வானம் கருமேகக் கூட்டம் வெறிக்கும் கடல்... 3. கானல் நீரிடம்... கார்மேகம் கேட்டேன் காலமல்லாக் காலத்தில்   எழுதியவர்  முனைவ‌ர் வெ விஜயலட்சுமி வெங்கட்ரமணன்…
Book Day | ஹைக்கூ கவிதைகள் | Haiku Poem

ஹைக்கூ கவிதைகள் – க. புனிதன்

குயில் கூவும் போது மலை பள்ளத்தாக்கில் வெள்ளம் வடிந்தது ... புழுவை விழுங்கிய மரங்கொத்தி சப்தம் வித்தியாசமாய்க் கேட்கிறது ... மழைப் பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தேன் தாளம் இசைத்தது ... கொஞ்சம் தூரம் நகரும் நத்தை பின்னோக்கி நகர்வதில்லை ... தண்ணீர்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங் 1.கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக நிழல் 2.பூ உதிரும் போதெல்லாம் ஆடுகிறது கிளை ஊஞ்சலில் சிறுமி 3.நிலைக்கண்ணாடி நிழலை ரசிக்கிறான் நிஜ மனிதன் 4.பரபரப்பாக சமையலறை அம்மாவுக்கு உதவுகிறது தூங்கும் குழந்தை 5.அலைபேசி கோபுரம்…
ஹைக்கூ - Haiku poem

வள்ளுவனின் ஹைக்கூ

1. பெய்கிறது மழை வருத்தத்தில் விவசாயி அறுவடை நேரம்.   2. ஆடையின்றி அம்மணமாய் மரங்கள் இலையுதிர் காலம்   3. வீழ்ந்தது மரம் வேர்வையில் மரம் வெட்டிய மனிதன்.   4. மகிழ்ச்சியாய் மாணவர்கள் பயத்தில் ஆசிரியர் தூரத்தில் அதிகாரி.…
ஹைக்கூ கவிதைகள் – இளம்பரிதி

ஹைக்கூ கவிதைகள் – இளம்பரிதி




1. மரத்தின் இலையை விட்டு
கீழிறங்க மறுக்கிறது
மழையின் கடைசித் துளி!

2. சிவந்து சிவந்து
கருப்பானது தான் மிச்சம்
அடுப்புக் கறிகள்!

3. வெளிச்சமிடம் நிழலே
எனதெனப் பட்டா போடுகிறது
இருள்!

4. காற்றின் மொழி பேசி
இரு நண்பர்கள் கைகுலுக்குகின்றனர்
மரக்கிளைகள்!

5. தாயைக் காண துளிர் விட்டன
வெட்டப்பட்ட மரத்தின்
விதைகள்!

6. பெட்டியில் சிறை
விடுதலையில் ஒளி
தீக்குச்சிகள்!

7. யாரும் பறிக்கக் கூடாதென்று
சுவர் ஏறிப் பூக்கிறது
கொடி மல்லி!

8. ஈரம் வருமென,
புழுக்கத்தில் காத்திருப்பு
விதைகள்!

9. மேகமில்லாத வானில்
தினமும் மழை
கண்கள்!

10.தொட்டால் தூய்மை கெட்டுவிடுமென்று,
சிணுங்கிக் கொள்கிறது
தொட்டாற் சிணுங்கி!

11. மேகக் கூட்டங்களை ஓட்டிச்சென்று
எந்த ஊரில் கரை ஏற்றுமோ?
காற்று!

12. ஓடி ஆடி களைத்து
போய் விட்டது
கரை ஒதுங்கிய புயல்!

13. பூட்டிய வீட்டில்
புது வீடு
குருவிக் கூடு!

14. பூச்சியை வாசமில்லாமல்
எப்படி ஈர்த்தது
பிளாஸ்டிக் பூ!

15. மின்மினியென்று கண்மணியின்
கண்களை நோட்டமிடும்
சுவர்ப் பல்லி!

16. கனவிலொரு கவிதை
எப்படி எழுதி வைப்பது?
கண்விழித்தா!

17. இறைவன் கசக்கிப் போட்ட
காகித உருண்டை
இவ்வுலகம்!

18. காட்டாற்று வெள்ளத்தால்
கடலில் புதுமனை புகுந்தன
ஆற்றுமீன்கள்!

19. ஒரே வரி
அதுவும் கவிதை
பிரிந்த காதலி!

20. வானவில்லை உரசி,
சிறகை மிழற்றுகிறது
வண்ணத்துப்பூச்சி!

– இளம்பரிதி
தருமபுரி மாவட்டம்

Haiku poem by Era Kalaiarasi ஹைக்கூ கவிதை இரா.கலையரசி

ஹைக்கூ கவிதை – இரா.கலையரசி



1)
நகைக் கடன் தள்ளுபடி
ஓடிச் சென்று அடகுவைத்தார்
பெருநிலக்கிழார்.

2)
வீட்டிற்கு வந்த உடன்
சீக்கிரம் கட்டச் சொல்லியது
தவணைப் பொருள்கள்.

3)
பிதுக்கிய சட்டைப் பாக்கெட்டில்
எட்டிப் பார்த்தன
கடைசி சில்லறைகள்.

4)
பசிக்கு ஓடிய பூனை
பரிகசிக்கபட்டது
சகுணதடையாம்!

5)
தலைவாழை இலையில்
விரும்பியும் கிடைக்காத உணவுகள்
செத்த அப்பாவிற்கு!

6)
யானைத் தந்தங்களை
அழகாய் அடுக்கினர்
அதிகாரி வீட்டில்.

7)
பிணம் ஏறிய பூக்கள்
பேசிக் கொண்டன
துர்நாற்றம் அடிக்கிறது.

8)
கடைசி மாடும்
களவு போனது
வங்கிக் கடனுக்கு.

9)
சாதி ஒழிப்பைப் பேசினர்
தனிதனியாக ஒதுக்கிய
பெஞ்சுகளில் அமர்ந்து

10)
காலுக்கு மேல் கால்
உடனே எடுக்கபட்டன
போடபட்ட கால்கள்.

Haiku therippukal poem by Jananesan ஜனநேசனின் ஹைக்கூ தெறிப்புகள் கவிதை

ஹைக்கூ தெறிப்புகள் கவிதை – ஜனநேசன்



குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே …!
மாறின இறக்கைகள்
இரு கைகளாக ….
மாறவில்லை பறக்கும் மனம் !
வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் …..
மரமும் ….!
தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்…..
பனையோலை நிழல் !
வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ….
காங்கிரீட் பூங்கா !
கலைத்திடாதே காலைக்காற்றே …
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ….!