Haiku Poems 3 By JeyasriBalaji. ஹைக்கூ கவிதைகள் 3 ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்

#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி

#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு

#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்

#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி

#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்

#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி

#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்

#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை

#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்

Haiku Poems by Jeyasri ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




பசியோடு பிச்சைக்காரன் வாசலில்
மாடியில் காக்கைக்கு விருந்து
அமாவாசை..

ஆழ்ந்த தூக்கத்திலும்
என்னை தட்டி எழுப்புகிறது
நாளைய நினைப்பு..

மலடியை கடந்து சென்ற
பூனைக்கு பிரசவத்தில் ஆறுகுட்டிகள்
சகுனம்..

ரேசன் சர்க்கரை கிடைக்க
முறையாக வரிசையில்
எறும்புகள்..

பெண்மை இல்லாத வீட்டை
உணர்த்திக் காட்டியது
அடுப்படியில் தூங்கிய பூனை..

தெய்வங்கள் உண்டு
சாட்சிகள் உள்ளது
இரைந்து கிடக்கும் பொம்மைகள்..

தலைவலிக்கான சிகிச்சை
தலைசுற்றல் ஆனது
மருத்துவமனை கட்டணம்..

வேகமாய் துடுப்பினை போட்டும்
முன்னேறவில்லை
படகோட்டி வாழ்க்கை.

வீடு வசதி குறைவென்போம்
இன்னும் சிறியதில் வாழ வேண்டுமே
கல்லறை..

Haiku Poems by Jeyasri ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




1
வெந்து தணிந்த காட்டின்
மூலையில் கொஞ்சம் ஈரம்
ஆறுதல்..

2
கரைகள் இருந்தும்
ஒதுங்கவில்லை
அலைகள்..

3
தீயின்றி புகையின்றி
வேள்வி நடக்கிறது
அவளின் முறைப்பில்..

4
சிக்கலைக் கூட அழகாய்
வெளிப்படுத்துகிறாள் பெண்
வாசல் கோலம்..

5
கடந்து செல்பவர்கள்
கடவுள் தான்
கையேந்துபவர்களுக்கு..

6
எந்த மதத்திலும் இல்லை
மனதில் இருக்கிறார்
கடவுள்

7
மீன் வாங்கச் சென்றால்
முள்ளாய்க் குத்துகிறது
விலை

8
கதிரவனைத் தேடி
கண்ணீருடன் மேகம்
மழை

9
ஒரு நாள் கூத்தில்
ஐந்தாண்டு வாழ்வு
தேர்தல்

10
அவளைச் சேராமல் நிலை
குலைந்து கிடக்கிறது
சேலை

Haiku poem by Era Kalaiarasi ஹைக்கூ கவிதை இரா.கலையரசி

ஹைக்கூ கவிதை – இரா.கலையரசி



1)
நகைக் கடன் தள்ளுபடி
ஓடிச் சென்று அடகுவைத்தார்
பெருநிலக்கிழார்.

2)
வீட்டிற்கு வந்த உடன்
சீக்கிரம் கட்டச் சொல்லியது
தவணைப் பொருள்கள்.

3)
பிதுக்கிய சட்டைப் பாக்கெட்டில்
எட்டிப் பார்த்தன
கடைசி சில்லறைகள்.

4)
பசிக்கு ஓடிய பூனை
பரிகசிக்கபட்டது
சகுணதடையாம்!

5)
தலைவாழை இலையில்
விரும்பியும் கிடைக்காத உணவுகள்
செத்த அப்பாவிற்கு!

6)
யானைத் தந்தங்களை
அழகாய் அடுக்கினர்
அதிகாரி வீட்டில்.

7)
பிணம் ஏறிய பூக்கள்
பேசிக் கொண்டன
துர்நாற்றம் அடிக்கிறது.

8)
கடைசி மாடும்
களவு போனது
வங்கிக் கடனுக்கு.

9)
சாதி ஒழிப்பைப் பேசினர்
தனிதனியாக ஒதுக்கிய
பெஞ்சுகளில் அமர்ந்து

10)
காலுக்கு மேல் கால்
உடனே எடுக்கபட்டன
போடபட்ட கால்கள்.

Haiku therippukal poem by Jananesan ஜனநேசனின் ஹைக்கூ தெறிப்புகள் கவிதை

ஹைக்கூ தெறிப்புகள் கவிதை – ஜனநேசன்



குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே …!
மாறின இறக்கைகள்
இரு கைகளாக ….
மாறவில்லை பறக்கும் மனம் !
வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் …..
மரமும் ….!
தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்…..
பனையோலை நிழல் !
வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ….
காங்கிரீட் பூங்கா !
கலைத்திடாதே காலைக்காற்றே …
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ….!

Haiku poem by Era Kalaiarasi ஹைக்கூ கவிதை இரா.கலையரசி

ஹைக்கூ கவிதை – இரா.கலையரசி



ஹைக்கூ

1)
உதடுகளை முத்தமிட்டு
கடைசியாய் விடைபெற்றது
சிகரெட்.
2)
பழங்களை மொய்த்து
நற்சான்றிதழ் வழங்கின
ஈக்கள்.
3)
பல கிலோமீட்டர் நீந்தியும்
கரை சேருவதில்லை
மீன்தொட்டி மீன்கள்.
4)
இருளுக்கு பூசை செய்து
தொழிலை தொடங்கினாள்
விலைமகள்.
5)
இருளுக்கு சில காலம்
அடமானமாய் இருக்கிறது
அமாவாசை நிலா

Madhusudhan S Five Short Poems (Haiku) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

மதுசூதனனின் ஐந்து குறுங்கவிதைகள்



1)
திறக்கக் கடினமான
போத்தல் மூடியை
அழுத்தித் திருகும் போது
மென்னி முறித்துக் கொல்லும்
கொலைகாரன் ஆன உணர்வு.
************
2)
அறுவடையான வயல்களில்
கொத்திக் கொண்டிருந்தன
கரிச்சான்கள்
இதற்கு மேல்
சொந்த ஊர் பற்றி
எழுத முடியாமல்
தொண்டைக் கவ்வியது
என் பேனாவிற்கு.
*********
3)
பலர் பற்றி நின்ற
தாழ்மரக் கிளையை
வேறு சிலர் முறிக்கிறபோது
அந்த பலரை
தேடிப் போகிறது போலிருக்கிறது
உச்சியிலிருந்து விலகிய பறவை
*******
4)
நீ வந்து போன கனவை
என் கைக்குட்டையில்
மடித்து வைத்திருந்தேன்.
தெரியாமல் விரித்த போது
பனி படர்ந்திருக்கிறது
என் அறையில்.

*******

5)
வருத்தம் தொக்கி நிற்கும்
என் வார்த்தைகளுக்கு
முற்றுப் புள்ளியாய் இருக்கிறது
உன் உதட்டு மச்சம்.
*******

Madhusudhan S
14.8.2021

Karthikeyan Six Haiku Poetries. Book Day (Website) And Bharathi Tv (Youtube) are Branches of Bharathi Puthakalayam.

ந. கார்த்திகேயன் ஹைக்கூ (Haiku) கவிதைகள்

1. என்னைச் சவமாக்கினாலும் உன் சவம் சுமப்பேன் மரம்...... பெட்டியாய். 2. மழைநீர் தரும் மரமழித்து கானல்நீர் பயணம் நான்கு வழிச்சாலை. 3. நாள்முழுதும் பூ விற்று வாடியவள் வீடுதிரும்ப மறுகணம் பூத்தாள் குழந்தையின் சிரிப்பு. 4. கைரேகை காட்டியது மழைவரும்…
தமிழினி ஹைக்கூ கவிதைகள்

தமிழினி ஹைக்கூ கவிதைகள்

1.உணவிற்காக அணிவகுப்பு நசுக்கப்பட்ட எறும்புகள்...   2. அண்ணாந்து பார்க்கையில் அழகிய விமானம் பொழியும் குண்டு...   3. கொரோனா மரிக்கும் மனிதர்கள் மீண்டெழும் மனிதநேயம்... 4. சிலந்தியின்றி சிலந்திவலை கண்ணாடி மேல் விழுந்த கல்...   5. சமூக வலைத்தளத்தில்…