கத்தி வந்தது வால் போனது டும்! டும்! டும்! பாஜக வந்தது மகிழ்ச்சி போனது டும்! டும்! டும்! கட்டுரை – அ.பாக்கியம்

கத்தி வந்தது வால் போனது டும்! டும்! டும்! பாஜக வந்தது மகிழ்ச்சி போனது டும்! டும்! டும்! கட்டுரை – அ.பாக்கியம்



பாஜக வந்தது மகிழ்ச்சி போனது
டும்! டும்! டும்!
கத்தி வந்தது வால் போனது
டும்! டும்! டும்!
———————————
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

146 நாடுகளில் இந்தியா 136 வது இடத்தில் உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு இந்தியா 111 வது இடத்தில் இருந்தது.

மோடி வந்தார் இந்தியாவை 136 வது இடத்திற்கு கொண்டு சென்றார். நமக்கு கீழே ஆப்கானிஸ்தான்,(146) லெபனான்(145) சிம்பாப்வே,(144) ரூவாண்டா(143) போஸ்ட் வானா(142) ஆகிய நாடுகள் தான் உள்ளது. பாகிஸ்தான்(121) பங்களாதேஷ்(94) இலங்கை(127) நேபாள்(84) ஆகிய நாடுகள் நம்மை விட மகிழ்ச்சியாக நமக்கு மேலே உள்ளது.

– அ.பாக்கியம்

மற்றுமொரு நாள் சிறுகதை – சுதா

மற்றுமொரு நாள் சிறுகதை – சுதா




கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த லட்சுமியை ‘விஷ் யூ டுவென்டி செகண்ட் ஆனிவர்சரி மாம்…’ அப்டீனு கன்னத்தில் முத்தப்பரிசோட காயத்ரி சொல்லவும் காயத்ரியின் அப்பா கதிர் வரவும் சரியா இருந்துச்சு. ‘அப்பா திருமணநாள் வாழ்த்துக்கள்’ என காயத்ரி சொன்னதும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து ‘உங்க அம்மா என்னை கல்யாணம் பண்ணி 22 வருஷம் ஆச்சா… அவளுக்கு என்ன ராணி’ என தோள் தொட்டு இழுத்து நெற்றியில் முத்தமிட்டார் கதிர்.

‘அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல், சிக்கன் பிரியாணி கேசரி மட்டன் கிரேவி எல்லாமே வேணும்மா’

‘உனக்கில்லாததா காயூ, எல்லாமே செஞ்சுடுவோம்’ என கதிரும் மகளுக்கு பிடித்தமானதை வாங்க கடை வீதிக்கு சென்று விட்டார்.

லட்சுமியின் உடல் நிலையை யாரும் கவனிக்கவில்லை அவளும் காட்டிக்கொள்ளவில்லை தலைவலியும் உடல்வலியும் லட்சுமியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.வயதும் ஏறுகிறது வலிமையும் குறைகிறதுதானே…

சிக்கனும் மட்டனும் வந்துவிட மும்முரமாய் கிச்சன் வேலையை ஆரம்பித்தாள். வேலை ஏதும் இருக்கான்னு கேட்க யாருக்கும் மனமில்லை. லட்சுமி அடுக்களையில் வேர்வையில் குளிச்சிட்டு இருக்க.ஏசி அறையில புதிதாய் வெளியான திரைப்படத்தின் சத்தம் காதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அத்தனையும் சமைச்சு எல்லாருக்கும் பரிமாறி பாத்திரத்தை ஒதுக்கி போட்டு அடுக்களையை அலசி பாத்திரம் கழுவ உட்காரும்போது பாத்திரம் சொன்னது ஹேப்பி அனிவர்சரி என்று…

Unarvu Poem By Shanthi Saravanan உணர்வு கவிதை - சாந்தி சரவணன்

உணர்வு கவிதை – சாந்தி சரவணன்




அன்பு
அகந்தை
அழுகை
அமைதி
கோபம்
காதல்
காமம்
சிரிப்பு
புன்னகை
மௌனம்
பசி
வலி
என உணர்வுகள் நம் உள்ளத்தில்
உலா வருகிறது!
உணர்வுகளை சொற்கள் பிரதிபலிக்குமா!
மொழியில்லா கற்காலத்தில் கூட உணர்வுகள் வெளிபட தானே செய்தது!
அப்படியிருக்க
சொல் அகராதியை கையாண்டு உணர்வை
முழுமையாக வெளி கொணர முடியுமா!
வார்த்தை முகமூடிகள் அணிந்து
உணர்வுகளை
முடக்குவது ஏன்?
உணர்வுகளை உணர்வால் தான் உணர முடியும்
என்பதை மறந்து மறுப்பது ஏன்?
இழை போன்ற
உணர்வை இதயத்தில் ஏந்தி உணர்ந்து மற்றவர்கள் இதயத்தில் வாழ்ந்து தான் பார்போமே!