The story of the lying man (பொய் மனிதனின் கதை 14) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 14 – ஜா. மாதவராஜ்



“ஒரு உண்மையை பொய்யென ஆரம்பித்து
ஒரு பொய்யை உண்மையென முடிப்பான் பொய்யன்”
                                                                                        – வில்லியன் சென்ஸ்டோன்

ராம்கிஷ்ன கிரேவாலுக்கு 70 வயது. முன்னாள் இரானுவ வீரர். தேஜ் பஹதூரோ எல்லைக் காவல் படையின் வீரராக இருந்தவர். இருவருமே ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 14) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஅவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்த தேசத்தின் பிரஜைகள் நினைவில் வைத்திருப்பார்களா, தெரியவில்லை. இராணுவத்தையும், இராணுவ வீரர்களையும் பிஜேபி கட்சியும், மோடியும் எப்படி நடத்தியது, மதித்தது என்பதற்கு அவர்களே ரத்தமும் சதையுமான சாட்சிகள். அலைக்கழிக்கப்பட்ட அந்த மனிதர்களின் மரணத்தையும், வாழ்வையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்தவைகளை மீண்டும் கவனிக்க வேண்டும்.

2013 செப்டம்பர் 15ம் தேதி ஹரியானா மாநிலத்தின் ரேவரியில் முன்னாள் இராணுவ வீரர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் நடந்த கூட்டம் அது. நாட்டின் இராணுவ வீரர்களுக்கு மோடி செலுத்தும் முதல் மரியாதையை எல்லோருக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

“நாட்டுக்காக உயிரையேத் துறக்க துணிந்திருக்கும் நீங்கள் மகத்தான துறவிகளுக்கு ஈடானவர்கள். உங்களை நான் வணங்குகிறேன்” என உணர்ச்சி பூர்வமாக பேச ஆரம்பித்தார் மோடி.The story of the lying man (பொய் மனிதனின் கதை 14) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History“1962 போர் சமயத்தில் நான் ஆறாவதோ எழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். இராணுவத்துக்குச் செல்லும் வீரர்களை உற்சாகப்படுத்த ரெயில்வே ஸ்டேஷனில் அவர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் பலகாரங்கள் கொடுத்து வழியனுப்புவதாய் கேள்விப்பட்டேன். என் அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் நான் ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களுக்கு டீ கொடுத்து காலில் விழுந்து வணங்கினேன்.” என மெய்யெல்லாம் கூச்செரியச் செய்தார்.

“பாகிஸ்தான் குஜராத்தை ஒட்டி இருக்கிறது. ஆனால் அங்கு எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களுக்கு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருந்தது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி.மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.” என்று பெருமிதம் கொண்டார்.

உண்மை என்னவென்றால் அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் கட்ச் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இருந்தது. 1985ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது திட்டமிடப்பட்ட திட்டம் 2003ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.

“நண்பர்களே! தாய் நாட்டுக்காக தங்கள் வாழ்வை இழந்த, உடல் உறுப்புக்களை இழந்த, சந்தோஷங்களை இழந்த இராணுவ வீரர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ரெயில்வே ஸ்டேஷனில், ஆஸ்பத்திரியில் அவர்கள் பிச்சையெடுப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. நம் மரியாதைக்குரிய முன்னள் இராணுவ வீரர்களின் அடிப்படைத் தேவைகளை யார் மறுத்தது? அவர்களின் சுய மரியாதையை யார் பறித்தது? 2004ம் ஆண்டில் வாஜ்பாய் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் நீங்கள் One Rank One pension பெற்றிருப்பீர்கள்.” என்றார்.

OROP என்றால் One Rank One Pension. இந்திய இராணுவ வீரர்களின் 42 ஆண்டுகால கோரிக்கை அது. இராணுவத்தில் ஒரே ரேங்க்கில் இருந்தாலும் அவர்களின் கிரேடு சார்ந்தும், துறை சார்ந்தும் வெவ்வேறு பென்ஷன்கள் கொடுக்கப்பட்டு வந்தன. பெரும் ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும் கொண்டதாயிருந்தது. பணி ஓய்வு பெறும்போது ஒரு இராணுவ வீரர் எந்த ரேங்க்கில் இருந்தாரோ அதற்குரிய பென்ஷன் ஒன்றுபோல் வழங்க வேண்டும் என அவர்கள் காலம் காலமாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

அதுவரை இருந்த எந்த பிரதமரையும் விட இராணுவ வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மோடி தன்னைக் காட்டிக் கொண்டார். தன் தேர்தல் பிரச்சாரங்களில், இராணுவ வீரர்களை இதுவரை இருந்த அரசுகள் மதிக்கவில்லை, போற்றிப் பாதுகாக்கத் தவறி விட்டன என குறை சொல்ல ஆரம்பித்தார். அதற்கு அவர் கையிலெடுத்ததுதான் OROP.

உலகின் சர்வாதிகாரிகள் அனைவருமே மற்ற எவரைவும் விட இப்படித்தான் தங்கள் இராணுவ வீரர்களை போற்றி வந்தனர். அதன் அடிநாதம் வேறு. சர்வாதிகாரிகளுக்கு நிலமே தேசம். மக்கள் அல்ல. குடும்பம், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு எல்லைகளில் நின்று நிலத்தைக் காப்பவர்களை கொண்டாடுவார்கள். தங்கள் நலன்களைப் பொருட்படுத்தாமல் தேசத்தின் பிரச்சினைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இராணுவ வீரர்களின் தியாகங்கள் வழியாக நாளும் மக்களுக்கு உணர்த்தப்படும். தேசத்தின் மீது மக்களுக்கு ஒரு பக்தியை ஏற்படுத்துவதும், அதை மேலும் தேசீய வெறியூட்ட முயற்சிப்பதுமே பாசிஸ்டுகளின் முக்கிய இலக்கணமாயிருக்கிறது.

நிஜத்தில் அவர்களுக்கு இராணுவமே முக்கியமானது. இராணுவ வீரர்கள் என்னும் மனிதர்கள் முக்கியமில்லை. காலம் இதனை தெளிவுபட உணர்த்தியும் உலகம் முழுமையாக இன்னும் அறியாமலேயே இருக்கிறது.

2014 மே மாதம் மோடி பிரதமர் ஆனார். இராணுவ வீரர்களின் சேவையை வழக்கம்போல் பாராட்டிக்கொண்டு இருந்தாரே ஒழிய, OROP-குறித்து வாயைத் திறக்கவில்லை. ஓய்வு பெற்ற இராணுவர் வீரர்கள் தொடர்ந்து அரசிடம் கேட்கத் தொடங்கவும், 2014 தீபாவளிக்குள் அமல்படுத்தப்படும் என இராணுவ அமைச்சர் பாரிக்கர் உறுதியளித்தார். மோடியிடமிருந்து நல்ல செய்திக்காக பாலைவனத்திலும், பனிமலைகளிலும் இராணுவ வீரர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
The story of the lying man (பொய் மனிதனின் கதை 14) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஏமாற்றங்களுக்கு ஆளான முன்னாள் இராணுவ வீரர்கள் கோபம் கொண்டு போராட்டங்களுக்கு அழைப்பு விட ஆரம்பித்தனர். பிரதமராகி ஒரு வருடம் கழித்து 2015 மே 30ம் தேதி மோடி, “நிச்சயம் OROP அமல்படுத்துவோம். அது குறித்து வரையறுக்க வேண்டியிருக்கிறது” என வாயைத் திறந்தார். மே 31ம் தேதி மான் கீ பாத்தில், முன்னாள் இராணுவ வீரர்கள் பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

காலதாமதம் செய்யப்படுவதையும், தங்கள் பிரச்சினைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையும் உணர்ந்து ஜூன் 15ம் தேதி முன்னாள் இராணுவ விரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ‘இதுதான் இராணுவ வீரர்களைத் தாங்கள் நடத்தும் விதமா, இதுதான் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தாங்கள் தரும் மரியாதையா?” என ஜனாதிபதிக்கு கடிதங்கள் எழுதினர்.

2015 சுதந்திரதினத்திற்கு முந்திய நாள் முன்னாள் இராணுவத்தினர், இறந்த இராணுவத்தினரின் மனைவி மக்கள் எல்லாம் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு OROP கேட்டு, கோரிக்கை அட்டைகள் சுமந்து அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் அவர்களை வலுக்கட்டாயமாக தரையோடு இழுத்து விரட்டியடித்தனர். தேசத்தை பாதுகாத்தவர்கள் தேசத்தின் தலைநகர் வீதிகளில் பரிதாபமாக நிலைகுலைந்து போனார்கள். அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் கொதிக்கவும், ’பாதுகாப்பு கருதி’ அப்படியொரு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

அடுத்த நாள், செங்கோட்டையில் நின்று சுதந்திர தின விழாவில் மோடி, நாட்டிற்கு அற்புதங்களைக் கொண்டு வரப்போவதாக மணிக்கணக்கில் நீட்டி முழக்கி விட்டு இறுதியில், இராணுவத்தினரையும், அவர்களது சேவையையும் தான் பெரிதும் மதிப்பதாகச் சொல்லி, OROP-ஐ கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லி பறந்து விட்டார்.

இராணுவத்தினர் மீது மோடி அரசின் போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், OROP ஐ மேலும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வலியுறுத்தியும் முன்னாள் இராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் 2015 ஆகஸ்ட் 17 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். பீகார் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

2015 செப்டம்பரில், மத்திய அரசு OROP குறித்த பணிகள் முடிந்துவிட்டதாகவும் அமல் செய்யப் போவதாகவும் திரும்பவும் அறிவித்தது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 2015 தீபாவளி தங்கள் குடும்பத்தினருக்கு கருப்பு தினம் என முன்னாள் இராணுவத்தினர் அறிவித்தனர். இறுதியாக 2016 பிப்ரவரியில் OROP அமல் செய்யப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இருந்தன. ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் கமிஷன் படி உயர்த்தப்பட்ட தொகையும், அதற்குரிய அரியர்ஸும் தரப்படவில்லை. அதை சரிசெய்ய முன்னாள் இராணுவத்தினர் திரும்பவும் போராட வேண்டி இருந்தது.

மோடியோ, OROP ஐ மத்திய அரசு அமல்படுத்தி விட்டதாகவும் 2016 தீபாவளியை இராணுவத்தினரோடு கொண்டாட இருப்பதாகவும் அறிவித்தார். அக்டோபர் 29ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில், இந்திய திபெத் எல்லையில் இராணுவ வீரர்களுக்கு சுவீட்களை ஊட்டியவாறு போட்டோக்களில் காட்சியளித்தார்.

சரியாக அடுத்தநாள் அக்டோபர் 30ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இராணுவ மந்திரியை சந்தித்து, இன்னும் தீர்க்கப்படாத தங்கள் பிரச்சினையை முறையிட சில முன்னாள் இராணுவத்தினர் சென்றனர். அவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 70 வயதான ராம்கிஷ்ண கிரேவாலும் ஒருவர். 28 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு 2004ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். தன் கிராமத்தில் பல சமூக சேவைகளையும் செய்து வந்தவர். அதற்காக சங்கர் தயாள் ஷர்மா விருதினையும் பெற்றிருந்தார்.The story of the lying man (பொய் மனிதனின் கதை 14) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies Historyஇராணுவ மந்திரியை சந்திக்க முடியாமல் அவர்கள் திரும்ப வேண்டி இருந்தது. ராமர் பெயரைக் கொண்டிருந்த அந்த முன்னாள் இராணுவ வீரர் மிகுந்த மன வேதனையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். ”துணிவும் வலுவும் கொண்ட ஒரு மனிதரை இந்த அரசு நொறுக்கிவிட்டது” என சக இராணுவ வீரர் கலங்கி நின்றார். மோடிக்கும் அவரது அரசுக்கும் ராம்கிஷ்ன கிரேவாலின் மரணம் ஒரு பொருட்டல்ல. செய்தியுமல்ல.

ஹரியானாவைச் சேர்ந்த எல்லைக் காவல் படை வீரர் தேஜ் பஹதூரும் அதுபோலவே மோடியை நம்பி ஏமாந்து போயிருந்தார். 1996ல் இராணுவத்தில் சேர்ந்திருந்தவர், மோடியின் ஆட்சியில் இராணுவத்திற்குள் நடந்து வந்த ஊழல்கள் ஒழிக்கப்படும், இராணுவ வீரர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.

2017 ஜனவரி மாதத்தில் இராணுவத்தில் நடந்து வரும் ஊழல்களை வெளியே சொல்ல ஆரம்பித்தார். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவையும், நல்ல உணவுக்கான பொருட்கள் இராணுவ அதிகாரிகளால் வெளியே விற்கப்படுவதையும் வீடியோவில் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பிரபலமாகி பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இராணுவத்தின் மீது பிரதம மோடி வைத்திருக்கும் மரியாதைக்கு பங்கம் அல்லவா அது? பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து உயர் இராணுவ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அதுகுறித்து தேஜ் பஹதூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின் விபரங்கள் வெளியாகவில்லை.

சில மாதங்கள் கழித்து தேஜ் பஹதூரிடமிருந்து இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டது. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சல் தருவதாகவும், அவரது மொபைலை அபகரித்து, அதில் மோசடிகள் செய்து, தேஜ்பஹதூருக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவதூறு செய்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். “ஊழலை வெளிப்படுத்தினால் இதுதான் ஒரு ஜவானுக்கு திரும்பக் கிடைக்குமா என பிரதமரிடம் கேளுங்கள்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

அவரது குரல் எடுபடவில்லை. இராணுவத்திலிருந்து தானாக ஓய்வு பெறுவதற்கு ( VRS) அரை மணி நேரத்துக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டு, எந்த நியதியும் இல்லாமல் உள்ளூர் போலீஸால் விசாரிக்கப்பட்டார். இராணுவத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்கவில்லை என்றும், யூனிபார்மில் இருக்கும்போது மொபைல் போன் உபயோகித்தார் என்றும், அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அறிவித்து இராணுவத்திலிருந்து எந்தவித விளக்கமும் கேட்கப்படாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ‘இராணுவ ரகசியம்’, ‘இராணுவ ஒழுங்கு’ என்றால் சாதாரணமா?

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தேஜ் பஹதூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் பார்த்தார். அங்கும் ஏமாற்றமடைந்தார். 2019 ஜனவரி மாதம் 18ம் தேதி, தேஜ் பஹதூரின் மகன் ரோஹித் மரணமடைந்தார். “ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக டெலிபோன் வந்தது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். உள்ளே பூட்டப்பட்ட அறையில் தலையில் சுடப்பட்டு ரோஹித் இறந்திருந்தான். அருகில் பிஸ்டல் கிடந்தது. தேஜ் பஹதூர் வீட்டில் இல்லை. கும்ப மேளாவுக்குச் சென்றிருந்தார்” என போலீஸ் தரப்பு செய்தி வெளியானது. தேஜ் பஹதூரிடமிருந்து எந்த தகவலும் அது குறித்து இல்லை.

2019 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நிற்கப் போவதாக தேஜ் பஹதூர் முடிவெடுத்தார். 2014 தேர்தலின் போது ஹரியானாவில் எந்த ரேவரியில் நடந்த கூட்டத்தில் நின்று மோடி இராணுவ வீரர்களை போற்றி பேசினாரோ, அதே ரேவரியில் நின்றுதான் 2019 மார்ச் 31ம் தேதி அந்த அறிவிப்பை தேஜ் பஹதூரும் வெளியிட்டார்.

சுயேச்சையாக தேர்தலில் நிற்கத் துணிந்தவரை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி ஆதரித்தது. தங்கள் கட்சி சார்பில் நிறுத்தப் போவதாக அறிவித்தது. அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தேவையான விபரங்கள் இல்லையென சொல்லப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அலகாபாத் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து ’தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டது, மோடியின் வெற்றி செல்லாது’ உச்ச நிதிமன்றத்திஉல் வழக்குத் தொடுத்தார். அங்கும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 2020 நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு தேஜ் பஹதூர் குறித்த தகவல்களும் இல்லை. மக்களின் நினைவுகளில் அவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள்தான்.

ராம்கிஷ்ன கிரேவாலையும் தேஜ் பஹதூரையும் தேசமும், மக்களும் மறந்து விடக் கூடாது. ‘ஜெய் ஜவான்’ என இனி முழக்கங்கள் எழும் பொதெல்லாம் அந்த இராணுவ வீரர்களின் நினைவுகள் வந்தால் தேசம் பிழைத்துக் கொள்ளும். உண்மையான எதிரிகள் யார் என்பதை அந்த இரண்டு இராணுவ வீரர்களும் தேசத்திற்கு காட்டி இருக்கிறார்கள்.

(இத்துடன் இந்த தொடரை இந்த வலைத்தளத்தில் நிறுத்திக் கொள்கிறோம். மேலும் சில அத்தியாயங்களோடு சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘பொய் மனிதனின் கதை’ புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது.)

References:
Full Text of Shri Narendra Modi’s speech at Ex- Servicemen’s Rally, Rewari : Narendra Modi website
OROP suicide: Who was Subedar Ram Kishan Grewal? : India Today, Nov 3, 2016
BSF jawan Tej Bahadur Yadav, who complained of bad food in camps, dismissed : Hindustan Times, Apr 26, 2017
‘Bad food’ video: NIA probed BSF man for ‘foreign contacts,’ found nothing : Indian Express, Feb 1, 2018
“Will Contest Against PM Modi From Varanasi,” Says Sacked BSF Soldier : NDTV, Mar 19, 2021
PM Modi celebrates Diwali with jawans in Sumdo on the Indo-China border : India Today, Oct 30, 2016
Black Independence Day, cry OROP protesters at Jantar Mantar : India Today, Aug 14, 2015

முந்தைய தொடரை வாசிக்க:
பொய் மனிதனின் கதை அத்தியாயம் 12 – ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 13 – ஜா. மாதவராஜ்

Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு




முஸ்லீம்கள் 2018ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் தொழுகை நடத்தி வருவதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது இஸ்லாமிய வெறுப்பு அடிப்படையில் இயங்குகின்ற குழுக்களின் கைவேலையாக இருக்கும் என்றே யாரும் நினைக்கலாம். ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் இப்போது நேரடியாக அந்தச் சாதனையைச் செய்திருக்கிறார். திறந்தவெளியில் தொழுகைகள் நடத்தப்படுவதை தனது அரசாங்கம் ‘சகித்துக் கொள்ளாது’ என்றும், முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்துகின்ற ஆட்சேபணைக்குரிய மொழியில் கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் கட்டார் முஸ்லீம்களை எச்சரித்திருந்தார்.Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருஇதுபோன்ற பிரச்சனைகளை முதலமைச்சர் ஒருவரே உருவாக்குவது மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற செயலாகவே இருக்கிறது. மதநம்பிக்கை கொண்ட முஸ்லீம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்று கூடி ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வது பொதுவான வழக்கம். மற்ற நாட்களில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நடத்திக் கொள்கின்றனர். இந்த நிலைதான் நாடு முழுவதும் இருந்து வருகிறது. ஏதோ முஸ்லீம்கள் சாலைகளிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து நாளொன்றிற்கு ஐந்து முறை தொழுகைகளை நடத்திக் கொண்டிருப்பதைப் போல, வீட்டில் மட்டுமே முஸ்லீம்கள் தொழுகை நடத்த வேண்டும் என்று குறிப்பாக ஹரியானா முதல்வர் எதற்காக உத்தரவிட வேண்டும்?Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருஇரண்டாவதாக முதல்வர் கட்டார் தன்னுடைய உரையில் உண்மைகளைக் கூறுவதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். குருகிராம் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான முஸ்லீம்களே இருக்கின்றனர். குருகிராமில் அதிக எண்ணிக்கையில் மசூதிகள் இல்லாததால், வெள்ளிக்கிழமை ஜமாஅத் தொழுகையை நடத்துவதில் அவர்கள் பெரும்சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல்களுக்கான இடங்களை வாங்குவதற்கு முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அதிகாரப்பூர்வ நிறுவனங்களால் முறியடிக்கப்படுகின்ற அதேசமயத்தில் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பிரச்சனைகள் எதுவுமின்றி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது அரசு நிறுவனங்களிடம் இருக்கின்ற வக்ஃப் நிலங்களில் மசூதிகள் கட்டிக் கொள்ளலாம் அல்லது தொழுகைக்காக சுற்றுச்சுவர்களுடனான திறந்த வெளிகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் அவற்றை மீட்டுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் நிலத்தை மீளப் பெற்றுத் தருவதாக 2018ஆம் ஆண்டே அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அதன் பிறகு பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மூன்றாவதாக திறந்தவெளியில் தொழுகை நடத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு நிர்வாகத்தால் இப்போது ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு முதலமைச்சரிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை. சில அமைப்புகள் பொது இடங்களில் தொழுகை நடத்த 2018ஆம் ஆண்டு மே மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அரசு நிர்வாகம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கென்று முப்பத்தியேழு இடங்களை ஒதுக்கித் தந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. இரண்டு ரக்அத்கள் ஓதப்படும். ஒரு குத்பா ஓதப்பட்டால், அது பொதுவாக பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு நீடிக்கும். குருகிராமில் தொழுகைக்காக அரசால் ஒதுக்கித் தரப்பட்ட பெரும்பாலான இடங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அமைந்திருக்கவில்லை. அவை முக்கிய சாலைகள் அல்லது தொழிற்சாலைப் பகுதிகளை ஒட்டியுள்ள லாரிகள் நிறுத்தப் பயன்படுத்தப்படுகின்ற காலி இடங்களாகவே இருந்தன. தொழுகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, வழித்தடங்கள் எதுவும் தடைபட்டதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. அந்த ஒப்பந்தத்தை இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன? அந்த இடங்களின் எண்ணிக்கையைத் தற்போது பத்துக்கும் குறைவான இடங்களாக நிர்வாகம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசின் நேர்மைற்ற, நியாயமற்ற செயலாக இருப்பதுடன் அது முற்றிலும் ஒருபக்கச் சார்பானதாகவும் இருக்கிறது.Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருபிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மிரட்டல், அச்சுறுத்தலில் மாநில முதல்வரே ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கு நேர்மாறாக முஸ்லீம்களிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கிய பிற குடிமக்களும் குருகிராமில் இருக்கவே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்பவர்களில் பலர் ஆடை மற்றும் பிற தொழில்களில் பணிபுரியும் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களாக அல்லது அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். போதிய இடவசதியுடன் உள்ள சில தொழிற்சாலைகளில் அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் – பெரும்பாலும் ஹிந்துக்கள் – அங்கேயே தங்கள் தொழிலாளர்களை தொழுது கொள்வதற்கு அனுமதிக்கின்றனர். வகுப்புவாதப் பிரிவினைகள் தங்கள் தொழிற்சாலையில் நடைபெறுகின்ற வேலைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது அதன் மூலம் தெளிவாகிறது. ஆயினும் காரணம் எதுவாக இருந்தாலும், அது நேர்மறையான விளைவையே கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் சக ஊழியர்களும், ஹிந்துக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவொரு சம்பவமும் நடைபெற்றிருக்கவில்லை. குருகிராமில் வசிக்கும் பலரும் தொழுகைக்கான இடங்களை வழங்குவதில் ஆதரவுடனே இருந்து வருகின்றனர்.Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருகடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் இரண்டு இணையான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவதாக தொழிலாளர்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி வெளிப்படுத்திக் காட்டியுள்ள ஒற்றுமை அரசியல். அந்த ஒற்றுமையே பல்வேறு பிராந்தியங்களில் கட்டப்பட்டிருக்கும் வகுப்புவாதச் சுவர்களை உடைத்தெறிந்து, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கத்தைத் தள்ளியதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.

இரண்டாவதாக குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மத்திய ஆளுகின்ற கட்சியின் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள் – அவை ஹரியானா முதல்வரின் அல்லது குஜராத் மாநில வருவாய் அமைச்சர் ராஜேந்திர திரிவேதியின் வார்த்தைகளில் தென்படுகின்றன. சாலைகளில் அசைவ உணவுகளை வெளிப்படையாக விற்பது ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக திரிவேதி கூறியிருந்தார். அதுபோன்ற பேச்சுகள் புறந்தள்ளக் கூடியவையாக இருந்தாலும், அவை ஒரு தொகுதியை வலுப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகின்றன. குருகிராமில் தீவிரவாத ஹிந்துத்துவா குழுக்கள் தொழுகையை நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், குஜராத்தில் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அசைவ உணவு விற்பனையாளர்களுக்குத் தடை விதித்து, அவர்களின் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்கின்றனர். குஜராத்தில் நடந்தது குஜராத் உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தில் மத்திய மற்றும் மாநில அளவிலான பாஜக தலைவர்களின் ஒவ்வொரு பேச்சும் வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையிலேயே இருக்கின்றன.Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருஇதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றாலும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மோசமாகச் சித்தரித்து அச்சுறுத்துகின்ற இப்போதைய போக்கு கூடுதல் கவலையளிப்பதாகவே இருக்கின்றது. குருகிராமில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் விஎச்பி தலைவர் ஒருவர் ‘இது தொழுகை அல்ல, ஜிஹாத், பயங்கரவாதம்’ என்று கூறுகின்றார். இது போன்ற பிரச்சாரமே ஹிந்துக்கள் வசிக்கின்ற உள்ளூர்ப் பகுதிகளுக்குள் தெருவோர முஸ்லீம் வியாபாரிகள் நுழைவதை ஹிந்துத்துவா குழுக்கள் வலுக்கட்டாயமாகத் தடுக்கின்ற போது அல்லது முஸ்லீம்கள் வாடகை குடியிருப்பாளர்களாக நிராகரிக்கப்பட்டிருக்கும் பிற குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சாரம் ஒரு சமூகத்தைப் பற்றிய அச்ச உணர்வை உருவாக்க பெரும்பாலும் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இது ஹிந்துத்துவா சக்திகள் பயன்படுத்துகின்ற திட்டமிட்ட உத்தியாகும். அது அவர்களுடைய உன்னதமான தேசியவாதம், பெரும்பான்மைவாதத்துடன் முற்றிலும் பொருந்திப் போவதாக இருக்கிறது.Haryana Chief Minister Khattar's treachery in causing trouble for Muslims to conduct prayers Article by Brinda Karat in tamil Translated by Tha Chandraguru. முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஹரியானா முதல்வர் கட்டாரின் நயவஞ்சகம் - பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயிகள் போராட்டத்தைப் போல் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை வெகுஜனப் போராட்ட அரசியலின் பலத்தால் முறியடித்திட முடியும். ஆனால் அது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு போராட்டத்தின் போது உருவாகும் தன்னிச்சையான சகோதரத்துவ உணர்வுகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டியது அவசியம். பிளவுபடுத்துகின்ற வகுப்புவாத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு எதிராக தன்னுனர்வு கொண்ட போராட்டத்திற்கான அரசியல் நோக்குநிலை நிச்சயமாக இப்போது தேவைப்படுகிறது. தானாகப் போய்விடும் என்ற நம்பிக்கையில் பிரச்சனையைப் புறக்கணிக்கின்ற எந்தவொரு தற்காப்பு நிலையும், மதவெறி அடிப்படையில் மக்கள் பிளவுபடுகின்ற போது அதிக நன்மையடைகின்ற சக்திகளைத் தைரியப்படுத்துவதை மட்டுமே செய்யும்.

https://www.ndtv.com/opinion/haryana-chief-ministers-deceit-in-handling-the-namaaz-issue-2648573
நன்றி என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு