பெண் – அன்றும், இன்றும் – அத்தியாயம் 1- நர்மதா தேவி, சிபிஐ(எம்)
பெண் – அன்றும், இன்றும் – அத்தியாயம் 1
‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த தமிழ்நாடு அரசின் அறி
விப்பு, பொதுமக்கள் மத்தியிலும், வல்லுநர்கள் மத்தியிலும்
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
பாஜகவின் ஒன்றிய அரசால் நவதாராளமயக் கொள்கைகள்
அசுரவேகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் காலம் இது. கார்
ப்பரேட்டுகள் கொள்ளை லாபத்தில் கொழுக்க வேண்டும் எ
ன்பதற்காகத் தொழிலாளர்கள், விவசாயிகள் கொடூரமாக சுர
ண்டப்பட்டு வருகிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்புகள் மிக
மோசமாகக் குறைந்துவிட்டன. உழைக்கும் மக்கள் மாதம் பத்
தாயிரம் ரூபாய்கூட குறைந்தபட்ச வருமானமாகப் பெற முடி
யாத சூழல்தான் இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. ஒன்றிய
அரசின் தவறான வரிக்கொள்கைகளாலும், விலைவாசி ஏற்
றத்தாலும் மக்கள் முதுகொடிந்து போயிருக்கிறார்கள். சமை
யல் உருளை விலை 1150 ரூபாயைத் தொடுகிறது. இவ்வளவு
மோசமான பொருளாதாரச் சூழலில்,
‘2023 செப்டம்பர் முதல் ஒரு கோடிப் பெண்களுக்கு ஒவ்வொ
ரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தமிழ்நாடு
அரசின் அறிவிப்பு பேசுபொருளானது.
இந்தத் திட்டம் குறித்து 27.3.2023 அன்று சட்டசபையில் முதல்
வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கம் முக்கியமானது.
”பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தா
ய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்க
ளுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண்
ஒருவரின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி,
உடல்நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும் வீட்டிலும்,
வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள்
உழைத்திருப்பார்கள்?
அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம்
நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெ
ண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும்.
இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்
பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொ
கைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால் ஆண்
களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சம
உரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் எ
ன்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்ட
த்திற்கு ‘மகளிருக்கான உதவித் தொகை’ என்று இல்லாமல் ‘
மகளிர் உரிமைத் தொகை’என்று கவனத்துடன் பெயரிடப்பட்
டிருக்கிறது” என்பது முதல்வர் அளித்த விளக்கம்.
‘சபாஷ்! பரவாயில்லையே மிகச்சிறப்பான திட்டமா இருக்கே!
சமூக உழைப்பில் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்ப
டாத பெண்களின் வீட்டு உழைப்பைப் பற்றியெல்லாம் ஒரு
அரசாங்கம் சிந்திக்கிறதே!’ நாம் கைதட்டிப் பாராட்டிக்கொண்
டிருக்கும் போதே, நமது நம்பிக்கையில் அணுகுண்டு வீசப்ப
டுகிறது. தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தின் 65-
ஏ சட்டத்திருத்தம் வருகிறது. பெண்களின் உழைப்பைப் பற்
றியெல்லாம் கவலைப்பட்ட அதே திமுக அரசாங்கம்தான்,
12 மணி நேர வேலை என்கிற அடிமைமுறைக்குச் சட்ட அங்கீ
காரம் தரப்பார்க்கிறது.
சமூக உற்பத்தி, வளங்களை உருவாக்குவதில் உழைப்பின்
பாத்திரம், உழைப்பில் பெண்களின் பங்கு, இவற்றைப் பற்றி
யெல்லாம் முறையான, சரியான புரிதல் இல்லாமல், வெறும்
சட்டங்களை இயற்றிப் பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பது
இயலாது. இதுதான் வரலாறு நமக்கு உணர்த்துகிற பாடம்.
மாட்டைவிட அதிகம் வேலை செய்யும் பெண்கள்
”இமயமலை கிராமங்களில் ஒரு ஜோடி உழவுமாடுகள் சராசரி
யாக ஓர் ஆண்டில் 1064 மணிநேரங்கள் வேலை செய்கின்றன
; ஓர் ஆண் 1212 மணிநேரங்கள் வேலை செய்கிறார்; ஒரு பெ
ண் 3485 மணிநேரம் வேலை பார்க்கிறார்” எனக் காங்கிரஸ் த
லைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கால
த்தில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட ’விவசாயத்தில்
பெண்கள்’ என்ற ஓர் ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.
வழக்கமாக அதிகமாக வேலைசெய்பவர்களைப் பார்த்து,
’மாடு மாதிரி பொழுதுக்கும் வேலை செய்கிறாயே!’ என்போம்.
ஆனால் மாட்டைவிடப் பெண்கள் அதிகமாக வேலை செய்
கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட மகளிர் ஆணைய அ
றிக்கை நமக்கு உணர்த்துகிறது. ஆண்டுக்கு 3485 மணிநேரங்
கள் என்றால், ஒரு நாளைக்கு ஒன்பதரை மணிநேரம் வருகி
றது. இந்தக் கணக்கை நமது வீட்டுப் பெண்களிடம் சொன்
னால்,
‘என்னது, ஒரு நாளைக்கு வெறும் ஒன்பதரை மணி நேரமா?
மிகக் குறைவா சொல்றீங்களே! நானெல்லாம் சர்வசாதாரண
மா 10, 12 மணிநேரம் உழைக்கிறேனே!’ எனச் சொல்வார்கள்.
வேண்டுமானால், நமது குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்
குடும்ப வேலைகள் என்ற ’போர்வையில்’ ஒரு நாளைக்கு எ
ன்னென்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு நேரம் வேலை
செய்கிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாக ஒரு வாரம் நாம்
பதிவுசெய்து பார்ப்போம். நிச்சயம் 10,
12 மணிநேரங்களைத் தொடும் என இப்போதே நாம் எதிர்பார்
க்கலாம். வீட்டை, வீட்டுப்புறத்தைச் சுத்தம் செய்வது, தண்ணீ
ர் கொண்டுவருவது, சமையல் செய்வது, பாத்திரங்கள் கழுவு
வது, வேலைக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய அனைத்தை
யும் உறுதிசெய்வது, குழந்தைகள், வயதானவர்களைப் பராம
ரிப்பது என வீடு, குடும்பம் சார்ந்த அனைத்து வேலைகளை
யும் – ஒரு நாள், இரண்டுநாள் அல்ல, வாழ்நாள் முழுவதும் –
அதாவது சாகும்வரை பெண்கள் செய்துகொண்டிருக்கிறார்க
ள்.
ஆண்கள் செய்யும் குடும்ப, வீட்டு வேலைகள் என்னென்ன?
வெளியே கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவருவது
, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று கூட்டிவரு
வது. இவை போன்ற ஒரு சில வேலைகள்தான் பொதுவாக
குடும்பத்தில் ஆண்கள் செய்யும் வேலைகளாக இருக்கின்ற
ன. விதிவிலக்குகளாக வீட்டுவேலைகளில் ஆண்கள் சமமா
பங்கெடுத்துக்கொள்வது என்பது ஒரு சில குடும்பங்களில் ந
டக்கலாம். ஆனால், வீட்டு வேலைகள் முழுமையும் பெண்க
ள் மீது மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது.
வெந்நீர்கூட வைக்கத் தெரியாத ஆண்கள்
ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் நான் பணிபுரிந்த காலத்தி
ல், உடன்பணியாற்றிய ஆண் ஊடகவியலாளர் ஒருவர்,
“எனக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது; எங்கள் வீட்டில் எ
னது அம்மாவும் தங்கையும்தான் எல்லாவற்றையும் பார்த்து
க்கொள்வார்கள்” என அடிக்கடி பெருமைபீற்றிக் கொண்டிரு
ந்தார். எனக்கு ஒரு கட்டத்தில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு
, “எனக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது என ஆண்கள்
சொல்கிறார்களே! பெண்கள் என்ன கர்ப்பப்பையைக் கொ
ண்டா சமைக்கிறார்கள்? ஆண்கள் உட்பட கைகள் இருப்பவ
ர்கள் அனைவரும் சமையல் வேலை செய்யலாமே! சமைப்ப
தற்குக் கர்ப்பப்பை ஒன்றும் தேவையில்லையே!” என முகநூ
ல் பதிவு ஒன்று போட்டுவிட்டேன். அந்தப் பதிவைப் பார்த்த
அந்த நண்பர் ஏன் இப்படிக் கடுமையாக நடந்துகொண்டீர்க
ள் என என்னிடம் வந்து முறையிட்டார்.
பொதுவாகவே ‘வீட்டு வேலைகள் எதையும் ஆண்கள் செய்ய
த் தேவையில்லை. ஓர் எஜமானன் போல தங்களுக்குக் கிடை
க்கும் பணிவிடைகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் அ
னுபவிக்கலாம்’ என்ற சலுகை நமது சமூகத்தில் ஆண்களுக்
கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் ஒடுக்கப்பட்டு, சாதிப்படிநிலையில் கீழ்நிலையில்
வைக்கப்பட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களிலும், ஆ
ண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக, தங்களுக்கு இடப்பட்ட ப
ணிகளைச் செய்யும் அடிமைகளாகவே பெண்கள் இருக்கிறா
ர்கள். கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளர் பெண்க
ளின் வலியான வாழ்க்கையை, கவிஞர் இளம்பிறையின் அ
ல்லு பகல் எனும் கவிதை உணர்த்தும்:
”அல்லு பகல் உழைப்பவள
அடிக்கக் கைய நீட்டாதய்யா
சீக்கிரமா சமச்சித்தாரேன்
’சிடு சிடு’னு பேசாதய்யா
…
கஞ்சி கொஞ்சம் ஊத்திக் கிட்டுக்
கதிரறுக்கப் போகும் போது
கோழிகூட கூவுதில்ல
கொடுமையை நான் என்ன சொல்ல
கொட்டுற பனியில
குனிந்து அறுக்கையில்
அடிவயிறும் நடுங்குதய்யா
ஆரிடத்தில் இதைச் சொல்ல
…
களத்துல கட்டுடைத்துக்
கச்சிதமா நெல் உதிர்த்து
காத்துவரும் நேரம் பாத்து
தூத்தி முடிக்கு முன்னே
கண்ணில் விழுந்த தூசு
முன்னெடுக்க நேரமேது? அட
ஒன்னுக்கு இருக்கக் கூட
ஒழிகிறதில்ல நேரமய்யா
…
கொட்டி குமிஞ்ச நெல்லில்
கொடுத்தக்கூலி வாங்கிக்கிட்டு
குறுகலான வரப்பு வழி
கூலி நெல்லத்தூக்கிகிட்டு
எட்டு அடிவச்சும்
எட்டு மணி ஆகுதய்யா
பச்ச வெறகு பத்த நேரமாகுதய்யா
கண்ணு கலங்குதய்யா
கை நீட்ட நியாய முண்டா
…”
பெண்கள் செய்யும் வீட்டுவேலைகள் அவர்கள் சார்ந்த வர்க்
கங்களைப் பொறுத்து வேறுபடும். என்றாலும், உழைத்தால்
தான் சாப்பாடு என்கிற நிலையில் உள்ள பாட்டாளி வர்க்கப்
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்ய வேண்டிய
வீட்டுப்பணிகள் என்பது மற்ற பெண்களுக்கு இருப்பதைக்
காட்டிலும் மிக அதிகம். அதுவும் பொருளாதார நெருக்கடி தீ
விரமடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், கேஸ் அடுப்பு
களையே பயன்படுத்த முடியாத நிலைக்கு கிராமப்புறக் விவ
சாயக் கூலித்தொழிலாளர் வர்க்கம் தள்ளப்பட்டிருக்கிறது. இ
ந்த வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில், விறகு, சாணம் சேக
ரித்து எப்படியாவது அடுப்பெரித்து குடும்பத்தினருக்கான உ
ணவை உறுதிசெய்ய வேண்டிய கடமை பெண்கள் மீதே சுமத்
தப்பட்டிருக்கிறது.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வீட்டு வேலை, பணியிட
த்தில் வேலை என இருமடங்கு வேலை. சென்னையில் வே
லைக்குப் போகும் பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கு
ம் நேரத்தில் கீரைக்கட்டுகளை வாங்கி மறுநாள் சமைப்பதற்
கு ஏதுவாக ஆய்ந்துகொண்டே பயணிப்பதைக் காணலாம்.
இத்தகைய காட்சிகளில் ஆண்களைப் பார்க்கவே முடியாது.
’இதிலென்ன அங்கலாய்ப்பு வேண்டிக்கிடக்கிறது? இதுதானே
நமது சமூக வழக்கம்!’ என வெகு இயல்பாக எடுத்துக்கொண்
டு, பெண்களின் குடும்ப உழைப்பு சுமை குறித்த எந்தவித வி
மர்சனங்களும், குற்ற உணர்வுகளும் இல்லாமல் நாம் பயணி
க்கிறோம்.
ஒரு சில பெண்கள் விழிப்படைந்து,
’என்னால் மாடுமாதிரி பொழுதுக்கும் வேலை செய்ய முடியா
து!’ என உரிமைக்குரல் எழுப்பினால், இந்திய நீதிமன்றங்கள்
கூட,’நோ வே! அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக்கூடாது. பெ
ண்களின் கடமை வீட்டைப் பராமரிப்பது, வீட்டு வேலைகள்
செய்வது. ஒழுங்குமரியாதையாக எந்தப் புகாரும் இல்லாமல்
வீட்டு வேலைகளைச் செய்து சிறந்த அடிமைகளாக இருங்க
ள்!’ என நிர்ப்பந்திக்கின்றன.
மும்பை உயர்நீதிமன்றத்தின் அகமதாபாத் கிளை, கணவர்
வீட்டில் ஒரு பெண் அனுபவித்த கொடுமைகள் தொடர்பான
வழக்கில் (Sarang Diwakar Amle & Others. v. State of
Maharashtra) அதிர்ச்சிக்கும், கண்டனத்துக்கும் உரிய கருத்துக
ளை தெரிவித்திருந்தது.
“திருமணமான ஒரு பெண் குடும்பத்திற்காக வீட்டுவேலைக
ளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதை, அவர் வேலை
க்காரி போல நடத்தப்படுகிறார் என்றெல்லாம் சொல்லக்கூடா
து.
‘நான் குடும்ப வேலைகளைச் செய்யமாட்டேன்’ என அந்தப்
பெண் திருமணத்திற்கு முன்பே தெரிவித்திருந்தால், அந்தப்
பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமா, வேண்டாமா எ
ன்பதை அந்த ஆண் முடிவுசெய்திருப்பார் அல்லவா?” என நீ
திபதிகள் ‘அறிவார்ந்த’ கருத்துகளைத் தெரிவித்திருந்தார்க
ள். பெண்கள் மீதான பாரபட்சங்களை ஒழித்து, பாலினச் சம
த்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள ஓர் அரசு
இயந்திரம்தான் நீதிமன்றங்கள். ஆனால், சட்டம் தெரிந்த நீதி
பதிகளுக்கே குடும்பத்தில் பெண்கள் வரைமுறையின்றி அடி
மைகள்போல வேலைவாங்கப்படுவது என்பது சுரண்டல்
முறை என்கிற பார்வை இல்லை. திருமணத்திற்கு முன்னிப
ந்தனையே பெண் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்ய
வேண்டும் என்பதுதான் என நீதிபதிகளே வலியுறுத்துகிறார்
கள். இதுதான் சமூகத்தின் எதார்த்த நிலை.
பெண் எப்படி அடிமையானாள்?
’குடும்ப வேலைகள் அனைத்தையும் பெண்கள் இடுப்பொடி
யச் செய்ய வேண்டும்; இதுதான் விதி!’ என்பதைச் சமூகம் நீ
ண்டகாலம் முன்பே விதித்துவிட்டது. இப்படியான நிலைக்கு
என்ன காரணம்?
மனிதச் சமூகத்தில் எந்தக் கட்டத்தில், இப்படியான நியாயமற்
ற நியதிகள் உருவாகின? அல்லது உருவாக்கப்பட்டன? இது
வரை பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலை குறித்து மேற்கொள்
ளப்பட்ட மானுடவியல் ஆய்வுகளிலேயே அறிவியல்பூர்வமா
ன ஆய்வாக, எங்கெல்ஸின் ”குடும்பம் தனிச்சொத்து அரசு
ஆகியவற்றின் தோற்றம்” நூல் விளங்குகிறது. பெண்ணடி
மைத்தனத்தின் வேர்களை ஆய்வு செய்யும் இந்த மார்க்சிய
ஆய்வே நமக்குச் சரியான, தெளிவான, உண்மையான விளக்
கத்தைத் தருகிறது. மார்க்சியவாதிகள் அல்லாத பெண்ணிய
வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் ஆய்வாக இந்நூல் திகழ்கிறது
.
’மனிதச் சமூகத்தில் வர்க்க
சமுதாயம் தோன்றியபோது, அதோடு இணைந்து பெண்ணடி
மை முறையும் தோன்றியது’ இதுதான் இந்நூல் தெரிவிக்கிற
அடிப்படை உண்மை. வர்க்க
சமுதாயம் மற்றும் பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தை எ
ங்கெல்ஸ் மூலமாக அடுத்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
-தொடரும்…