Hindi Translation Poems By Vasantha Deepan | ஹிந்தி மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள் - தமிழில் வசந்ததீபன்

ஹிந்தி மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள்

1. அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் _____________________________ அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் ஆனால் மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவதில்லை தாகமாய் இருக்கிறார்கள் ஆனால் இரத்தத்தைக் குடிப்பதில்லை சிறியவர்கள் இருக்கிறார்கள் ஆனால் மற்றவர்களை சிறுமைப் படுத்துவதில்லை அவர்களின் தலை மீது கூரை இல்லை ஆனால் மற்றவர்களுக்காக…
Hindi Short Poems in tamil translated by Vasanthadheepan ஹிந்தி குறுங்கவிதைகள் - தமிழில்: வசந்ததீபன்

ஹிந்தி குறுங்கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்




1)
இந்த நாட்டில் எப்போதும் சிலர்
ஒரு மனிதனை சுற்றி வளைத்து
சாதாரணமாக கொன்று கொண்டு இருக்கிறார்கள்
அவனை அசிங்கமாக வைவதையோ
பாக்கியசாலி தூரம் நின்று பார்க்கிறாய்
நீ புரிந்து கொள்ளவில்லை…
இது எல்லாம்
அந்த ரத்தம் தோய்ந்த
தனிமையான
மனிதனை மட்டும்
கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

(2)
கொஞ்சம் போல இடம்
____________________________
அவன் சொன்னான்
அவனிடம் ஒரு சின்னஞ்சிறு இதயம் இருக்கிறது
அதைப் போல
வெயில் சொன்னது
அதனிடம் கொஞ்சம் போல ஒளி இருக்கிறது
நெருப்பு சொன்னது
அதனிடம் கொஞ்சம் போல வெப்பம்.

(3)
நீ
இந்திரன்
கெளதம்
ராம்
எந்த உருவத்தில் இருந்தாலும்
எப்போது புரிந்து இருக்கிறாய்
என்னை…?
கெட்ட பார்வை
சாபம்
சீர்திருத்தம்
இதுவாக இருந்து கொண்டு என் விதி
தவறாக தங்கிப் போனேன் நான் தான் ஒவ்வொரு முறை
நீ கடவுள்களின் ராஜா
தர்ம பாதுகாவலர்
சீர்திருத்தவாதி மஹானாய் ஆனாய்
மற்றும் நான் ஒவ்வொரு முறை
அப்பாவி அகல்யா.

(4)
“நான் யார்?
கருப்பா இல்லை வெள்ளையா
அடிமை இல்லை ராணி …
பிறந்த நேரத்தில்
என் முகத்தில்
ஒரு வரைபடம் கூட இல்லை,
நான் என் சொந்த மண்ணை
சுயமாக பிசைந்தேன்
என் முகத்தை நானே உருவாக்கினேன்,
என் முகம் மிகவும் அழகாக இல்லை …
ஆனால் வரைபடங்கள் முழுமையானவை “…

(5)
நான் அந்த மரணத்தைப் பற்றி
அடிக்கடி யோசிக்கிறேன்
அது
கணம் _ கணம் தேய்ந்து
போய்க் கொண்டிருக்கிறது _
நம்முள், உன்னுள், எல்லாருள்.

(6)
குளத்தில் மூழ்கிய
அவன் நினைத்தான்
அவனுடன் அவனது துயரமும் மூழ்கிவிடும்
அது தவறாக இருந்தது
அவன் மூழ்கியவுடன்
இங்கு வந்தது அவனது துக்கம் மேற்பரப்பின் மேல்
அந்த நீர்த்தேக்கம் உண்மையில் ஒரு துன்பத்தேக்கம்
என்று அழைக்கப்பட முடிகிறது
அங்கே லேசான மற்றும் கனமான
பெரிய, சிறிய மற்றும் துக்கங்கள் மிதந்திருந்தன
எவர் பார்த்து இருந்தவர்
தம்மை விட பெரிய அந்தத் துயரங்களை பார்த்து இருந்தார்
மற்றும் திரும்பிப் போய் இருந்தார்
எவர் பார்க்க முடியாமல் இருந்தவர்
அவர்கள் தம்மையும் துக்கமதற்கு ஒப்படைத்துப் போய் இருந்தனர்
சொல்வதற்கு அவசியம் இல்லை
அது மிகவும் நேர்மையானது என்று.

Unkown Hindi Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. *நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்



நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?

ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.

யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.

உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.

ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்

Hindi Poet Bhagwat Rawat Three Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்



(1) பாறைகள்

நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.

பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.

தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.

இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.



(2) மாறிய பருவத்தின் சுபாவம்

எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்

இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.

பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.

ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.

ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.

பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்

மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்

இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.



(3) இந்த அந்நிய நகரத்தில்

சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி

மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.

ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்

பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.

முக்கிய படைப்புகள் :

(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்-ன் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில்: வசந்ததீபன்



(1) பெயரற்ற பறவையின் பெயர்

கங்கைநதி புளியமரத்தின் இலைகளில் மறைந்திருந்த
ஒரு பறவையின் வாய் இருளைப்
பேசுகிறது மிகு இனிப்புக் குரலில்
போகவில்லை என்ன?
போகவில்லை எதனிடம்?
மற்றும் பொழிகிறது மழை
பாதி தூக்கத்தில் கட்டில் _ படுக்கை சுருட்டி
வீடுகளுக்கு உள்ளே ஓடுகிறார்கள் மக்கள்
கொஞ்சம் சிடுசிடுப்புகள், கொஞ்சம் சந்தோஷம்
மேகங்கள் சூழ்ந்த அந்தகாரத்தில் மின்னுகிறது மின்னல்

கனத்து பெய்கிறது மழை
நீர் நிரம்பிக் போகிறது வயல்
திருப்தி ஆகிப் போகிறது முன்னோர்களின் ஆன்மாக்கள்
உடைவதில் தப்பிக்கிறது
மனதின் முதுகு தண்டு
சொல்கிறாள் பிச்சைக்காரி
இந்த பறவையின் குரலால்
வருகின்றன மேகங்கள்
வெகு தூரமான சமுத்ரங்களிலிருந்து எழுந்து
ஓ.. பறவையே
நீ பேசினாய் தொடர்ச்சியாக கிராமத்தில்
வீட்டில், பள்ளத்தாக்கில், வனத்தில்
கல்லாகிப் போன மனிதனின் மனதில்.

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

(2) யாத்திரை

நதிகள் இருந்தன எமது வழியில்
அவைகளை அடிக்கடி கடப்பதற்கு இருந்தது
ஒரு சூரியன் இருந்தது
அது மூழ்காமல் இருந்தது
எப்படி யோசித்து இருக்கிறாய் என அதற்குப் பிறகு
எமக்கு என்ன நடக்கும்
ஒரு காடு இருந்தது
நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது
சில பூக்கள் இருந்தன
நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம்
ஒரு வயல் இருந்தது
நெல்லினுடய
விளைந்து
அது கூரான அரிவாளால் தொடுதலோடு
இருந்தது சந்தோஷம்
ஒரு நீலப்பறவை இருந்தது
நெல்லிக்காய் மரத்தின் வளைந்த கிளையிலிருந்து
இப்போது பறப்பதற்கு தயாராக
நாங்கள் இருந்தோம்
விஷயங்களின் பழைய பொட்டலங்களை அவிழ்க்கிறோம்
எமது பசி மற்றும் களைப்பு மற்றும் தூக்கத்தோடு சண்டையிடுகிறோம்
தூசி இருந்தன தொடர்ச்சியாக பறந்து இருந்தது
அது எமது புன்னகையை மூடி மறைக்க முடியாமல் இருந்தது
ஆனால் எமது முடி நிச்சயம்
சணல் போல காணப்பட இருந்தது
குளிர் இருந்தது மலையின்
எமது எலும்புகளில் இறங்கியது
விளக்கு ஏற்றும் நேரமாக இருந்தது
எப்படி மலையின் மேல் எங்கே எங்கே
மறைந்து இருக்கின்றன ஒளி_ பூக்கள்
ஒரு கரடுமுரடான சாலை இருந்தது
தொடர்ச்சியாக எம்முடன்
ஆறுலைத் தருகிறது
நீ மிகச் சரியாக சேர்வீர் வீடு என்று.

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

(3) பணநோட்டு எண்ணும் எந்திரம்

கனவுகளை எண்ண முடிகிற அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
கனவுகள் அவை பூமியின் மேல் பரவுகின்றன
இருக்கின்ற பூக்களின் விதைகள்போல.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது ஆசைகளை எண்ண கூடியதாக.

அந்த பிரத்யேக அதிர்வு
அது அநியாயம் மற்றும் சித்திரவதைகளுக்கு விரோதத்தில்
பிறக்கிறது.
பீதி பிறக்கிறது பணத்தின் சலசலப்பு
யாரோ குடிக்கிறான் வெள்ளி கிண்ணத்தில்
மனிதனின் ரத்தம்
எமது கடின உழைப்பின் தேன் யாரோ குடிக்கிறான்
ஒரு வலையது தினமும் விழுகிறது எங்கள் மேல்
ஆனால் தெரியவில்லை
இந்த வலையின் ஒவ்வொரு நரம்பதை எண்ண முடியும்.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
காடாக இருக்கிற பிந்த்ரான்வாகர் போல
மற்றும் மரங்களை எண்ணுவது இருக்கிறது கடினம்
கடினமாக இருக்கிறது எண்ணுவது.

அன்பு மற்றும் கனவு மற்றும் ஆசைகளை
மனிதனின் கோபம் எரிமலைக் குழம்பாக மாற்றுகிறது
மற்றும் அதனுடைய அன்பிலிருந்து பரவுகிறது ஒளி
மலருகின்றன ரோஜாக்கள்.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது நட்சத்திரங்களையும் ரோஜாக்களையும் எண்ணி முடிய.

அவை மலருகின்றன மனிதனின் அன்பில்
இரவின் வனத்தில்
மற்றும் பகலின் மரக்கிளைகளின் மேல் எண்ணிக்கையற்று.

ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்

ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
பிறப்பு : 08.02.1964
பிறந்த இடம் : ச்சுரா, ச்சதீஸ்கட்
சில முக்கியநூல்கள் : அன்ன ஹைன் மேரே சப்த , மிட்டீ ஸே கஹூங்கா தன்யவாத் , பீஜ் ஸே ப்பூல் தக்.
விருதுகள் : சரத் பில்லெளரே புரஸ்கார், கேதார் ஸம்மான், துஷ்யந்த் குமார் புரஸ்கார், டாகூர் பிரஸாத் சிங் புரஸ்கார், நரேந்த்ரதேவ் வர்மா புரஸ்கார் மற்றும் ஹேமந்த் ஸ்மிருதி கவிதா ஸம்மான் போன்றவை.

Hindi Poet Gopal Das Neeraj Two Poems Was Translated by Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: கோபால்தாஸ் நீரஜ் | தமிழில்: வசந்ததீபன்

(1) தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது , தாகமாக இல்லாமல் இருக்கிறது ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான் அதிகரித்துக் கொண்டு உடல் , வயது குறைந்து கொண்டு, சித்திரம்…
Writer Ramratan Awasthi Hindi Poetry Translated Poet Vasanthadeepan in Tamil. Book Day is Branch of Bharathi Puthakalayam.

வான நிழல் – ஹிந்தியில்: ராம்ரதன் அவஸ்தி | தமிழில்: வசந்த தீபன்

வான நிழல் ------------ நீர் அலைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது படகு வாழ்க்கையை விடவும் பெரியதாக இருக்கிறது வான நிழல். ஆகாயம், நட்சத்திரம்.... நினைக்கிறாய், பறித்துக் கொண்டு வருவாயா? நிலவொளி சிதற முடியுமா? பூமியின் மீது எல்லா இடங்களிலும்.... ஆனால் திரிசங்கு சொர்க்கம்…
மொழிபெயர்ப்பு கவிதைகள்: நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் – ஹிந்தியில் :  மனிஷா துபே ” முக்தா” | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதைகள்: நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் – ஹிந்தியில் :  மனிஷா துபே ” முக்தா” | தமிழில் : வசந்ததீபன்

நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் ________________________________________ நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள் ஏனென்றால் நான் காதல் கல்யாணம் செய்தேன்... என் விருப்பத்தோடு பையனைக் தேர்ந்தெடுத்தேன் இதனால் வேறுபாடு ஏற்படவில்லை என்று கல்யாணம் வீட்டிலுள்ளவர்களின் ஆசைப்படியே நடந்தது. நான் கெட்டவள்..…
மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ் | தமிழில்: வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ் | தமிழில்: வசந்ததீபன்

(1) நகரம் ______________ கவிதையின் நகரம் புலப்படாததாக இருக்கிறது வார்த்தைகளோ பேருந்து தடங்களாக இருக்கின்றன அந்த புலப்படாத நகரம் போய் சேருவதற்கு. ஒரு நகரம் அதில் உணர்வுகளின் குடியிருப்புகள் அன்பின் எண்ணிக்கையற்ற குடிசைகள் கருணையின் நீர்ஊற்று வெறுப்பின் விரிசலுற்ற கோட்டைகள். வார்த்தை…