ஜெயமோகனின் கலாச்சார அரசியல் – இரா. சண்முகசாமி
ஆஹா… ‘நான் எழுத்தாளன் எப்பக்கமும் சாயமாட்டேன்’ என்று அப்பாவியாக முகத்தை வைத்த எழுத்தாளர் மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களின் முகமூடியை கிழித்து தொங்கவிட்ட நூல் தான் கருப்பு பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள ‘இந்துத்துவா பாசிசத்தின் இலக்கிய முகம், ஜெயமோகனின் கலாச்சார அரசியல்’ என்னும் நூல்.
இருபத்திரண்டு ஆளுமைகளின் முப்பத்தைந்து கட்டுரைகளின் ஆதாரப்பூர்வ பதிவின் வழியே அம்பலப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஏற்கனவே கொஞ்சம் தெரியும் அவரைப்பற்றி. ஆனால் இந்நூல் அவர் சார்ந்த அத்தனையையும் ஒரே இடத்தில் கொண்டுள்ளது.
அடடா, யமுனா ராஜேந்திரன் அவர்கள், முன்னுரையின் வழியே நூல் முழுக்க நுழைவதற்கு அருமையான ஏணியாக நிற்கிறார்.
யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் இந்நூலை தொகுத்த தோழர் பா.பிரபாகரன் அவர்களின் அறிமுகமும் சிறப்பு.
இந்நூலை அனுப்பி வைத்த தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. தோழரும் ஒரு கட்டுரையில் வருகிறார்.
வாசித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் உற்சாகத்தோடு.
ஆரம்பமே கலக்கல் பெரியார் குறித்த அவரின் வைக்கம் போராட்ட வரலாறு தெரியாமல் வகை தொகையில்லாமல் வாயை விட்ட ஜெயமோகனுக்கு தகுந்த ஆதாரத்தோடு கட்டுரையாளர் சுகுணாதிவாகர் ‘வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்’ என்னும் தலைப்பில் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். ஆரம்பமே அசத்தல்தான் போங்க.
தன்னைப்பற்றி புகழும் ஒரு மலையாள எழுத்தாளரின் உரையை தானே மொழிப்பெயர்த்ததை எங்கேயாவது கேட்டிருப்போமா? அந்த புகழுக்குச் சொந்தக்காரர் நம்ம ஜெயமோகன் சார் தாங்க.
எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.
அன்பான ஜெயமோகனின் ரசிகர்களே, கொஞ்சம் இந்நூலை வாசியுங்கள். அவரைப்பற்றி அறிந்துகொண்டு ரசிகராக தொடருங்கள் தப்பில்லை. எதுவும் தெரியாமல் தொடர்ந்தால் ஊஹூம்…
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.