Punitha Por Poem By Sivakumar புனிதப்போர் கவிதை - சிவகுமார்

புனிதப்போர் கவிதை – சிவகுமார்




ஏய் மனிதா!
புனிதப்போராம்
போரில் ஏதடா புனிதம்!

எதிர்காலப் பிஞ்சுகளை
முடமாக்கி யார் நலனுக்கு
இந்தப்போர்.

கொள்கைக்கும்,மதத்திற்க்கும்,
எல்லைக்கும், அதிகாரத்திற்க்கும்
என அனைத்துக்கும் போர்.

பரவெளி சென்று பாரடா
பூமியும் காற்புள்ளிதான்
அதில் உனது எல்லை எங்கே.

நாடுகள் எல்லாம்
வெறும் கோடுகள்தான்
எந்நாட்டையும் நேசித்துவிடு.

சொல்லெண்ணா துயரத்தின் சாட்சிகளில் இனியேனும்
மனிதம் மலர்ந்து போர்கள் மரணிக்கட்டும்.

புவியில் பூக்கள்
வெடிக்கும் சத்தத்தில்
யுத்தங்கள் மடியட்டும்..