The Tell-Tale Heart Short story by Edgar Allan Poe - Translation in tamil - துடிக்கும் இதயத்தின் கதை - Koodalingm Thangeswaran - https://bookday.in/

The Tell-Tale Heart – துடிக்கும் இதயத்தின் கதை

The Tell-Tale Heart - துடிக்கும் இதயத்தின் கதை ( எட்கர் ஆலன் போ ) உண்மை தான் நான் பதட்டமாகத்தான் இருந்தேன். மிகவும் பதட்டமாக இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் ஏன் என்னை பைத்தியமென்று சொல்ல…
Sutha's Poem சுதாவின் கவிதை

சுதாவின் கவிதை




அன்றொருநாள் என்
அறை முழுவதும் சூனியக்
கயிறுகள் அங்குமிங்கும்
தொங்கிக்கொண்டிருந்தது…

என் சிறுபிள்ளைத்
தனத்தையும் சிரிப்பையும்
பேச்சையும் அசட்டுத்ததையும்
ஒளிவு மறைவு இல்லாத
ஆனந்தத்தையும் காலம்
அன்று அறுவடை செய்திருந்தது…

இரண்டே வழி
சூனியக் கயிற்றில்
தொங்கிட வேண்டும்…
இல்லையேல் என் சுமைகளை
சுமந்து சூனிய கயிறின்
உதவியால் மேலேறி விடவேண்டும்…

என் பாதம் பட்ட
இடமெல்லாம்
விஷப்பூச்சியின்
வாழ்விடமானது…

இரண்டில் முதல் ஒன்றே
என் தேர்வு என நினைத்த
உறவுகளின் எண்ணங்கள்
பொய்த்துப் போனது…

என் சுமைகளோடு
சூனியக்கயிறின்
உதவி கொண்டு மேலேறி
மேடேறி விட்டேன்…

இன்றும் என் அறைக்
கதவுகள் தட்டப்பட்டது…
அன்று என் பாதம் பட்ட
இடமெல்லாம் விஷ பூச்சிகளாய்
உழன்று கொண்டிருந்த
உறவுகளெல்லாம் அன்பின்
பூங்கொத்தை நீட்டுகிறது…
பூக்களின் மணம் நுகர்ந்து
பார்த்தேன் பிணக்குவியலின்
வாடையை அதில் உணர்ந்தேன்…