Hunger (பசி) Poetry By Sathya Sampath (சத்யா சம்பத்). Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

பசி – சத்யா சம்பத்



பசி

ஊரடங்கில் இருந்தமக்களுக்கு
வயிற்றுப் பசியை அடக்க வழி இல்லை
மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி,
ஒரு வேளையாக குறைந்த போதும்,
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

காலை முதல் மாலை வரை
உழைத்து வந்தடையும் மக்கள்
வீட்டில் முடங்கியிருப்பதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

தெருவெங்கும் “பூ “விற்று
வாசனை பரப்புபவனின் வீடு
“பூ” உதிர்ந்த நாராக கருகுவதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

உண்ண நேரமின்றி
உழைப்பவரின் உடனடி பசியாற்றும்
டீ மாஸ்டரின் வயிறு
ஒட்டி கிடப்பதைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

ஊசி பாசி விற்று
வயிற்றைக் கழுவுபவரின் வீட்டடுப்பில்
பூனை தூங்குவதை கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

எப்பொழுது பள்ளி திறக்கும்
எப்பொழுது சத்துணவு கிடைக்கும் என்று
ஏங்கும் பிஞ்சுகளைக் கண்டும்
வயிற்றுப்பசிக்கு அடங்க தெரியவில்லை

இந்த வயிற்றுப் பசியை
கொரோனா எப்பொழுது அடக்கும் என்று
யாருக்கும் தெரியவில்லை

– சத்யா சம்பத்

பசிக் கொடுமைக்கு எதிரான போராட்டமும் உணவுப்பாதுகாப்பும் | பி.கே.ராஜன்

பசிக் கொடுமைக்கு எதிரான போராட்டமும் உணவுப்பாதுகாப்பும் | பி.கே.ராஜன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us BelowA view o https://thamizhbooks.com To Get to know more about tamil…
பசிக் கொடுமைக்கு எதிரான போராட்டமும் உணவுப்பாதுகாப்பும் | பி.கே.ராஜன்

பசிக் கொடுமைக்கு எதிரான போராட்டமும் உணவுப்பாதுகாப்பும் | பி.கே.ராஜன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil Books, Visit…
இரு வெவ்வேறு நிலங்கள், பிரச்னை ஒன்று அதுவே பசி – மதன் குமார் U S

இரு வெவ்வேறு நிலங்கள், பிரச்னை ஒன்று அதுவே பசி – மதன் குமார் U S

  எந்த பேரிடர் காலத்திலும் பாதிக்கப்படுவது அந்த நாட்டின் பூர்வ குடிகளும், சமுகத்தால் புறக்கணிக்க பட்ட உழைக்கும் மக்களும் தான். அனைவருக்கும் தெரியும் கொரோனா இந்தியா முழுக்க இருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளை கடுமையாக பாதித்தது என்று. பாதி கொரோனாவால் என்றால் மீதி…