Posted inPoetry
சூர்யா தேவியின் கவிதைகள்
இலட்சிய படிக்கட்டு
************************
சுட்டாலும்
பரவாயில்லை என
தீபச் சுடரை
தொட்டுவிட நினைக்கும்
விட்டில் பூச்சியைப் போல ஒருமுறையேனும்
நீயும்
உன் இலட்சிய படிக்கட்டை
எட்டிப் பிடித்துவிடு!
தாயின் அன்பு
*****************
கட்டி அடைத்த
கரையை
வெட்டி உடைக்கும் போது
விட்டால் போதுமென்று
வேரைத் தேடி
நீர் ஓடுகின்றது;
விடியற்பொழுதில்
விட்டுசெல்ல
மனமில்லாமல்
பிஞ்சுக் குழந்தையின்
அழுகுரல்
அர்ச்சனையை கேட்டு
அரை மனதோடு
வாழ்க்கையின்
விடியலுக்காக
பணிக்குச் சென்று
முடித்து வீடு திரும்பும்
தாயின் அன்பும்
வேரைத் தேடும்
நீரைப்போல தன்
குழந்தையை தேடி ஒடும்.
– சூர்யா தேவி