Ilai marai veyil poem by Velayutha muthukumar வேலாயுத முத்துக்குமாரின் இலை மறை வெயில் கவிதை

இலை மறை வெயில் கவிதை – வேலாயுத முத்துக்குமார்

அடைமழைக்கால நாளொன்றில் நடுவீட்டிற்குள் வந்து விழுந்த வெயில் கூடவே வலப்பக்க முடுக்கிலுள்ள பப்பாளி இலைகளின் நிழலை எடுத்து வந்திருந்தது உள்வருவதும் வெளிபோவதுமாக அசைந்தாடிய இலைமறை பிம்பங்கள் அடைவுகாலத்தில் வீட்டோடு முடங்கியிருக்கின்ற பிள்ளைகளுக்கு புதிய ஏற்பாட்டை முன்மொழிய ஆளுக்கொன்றாக இலைகளை பிரித்துக் கொண்டவர்கள்…