இயற்கையும் நானும் கவிதை – சூரியாதேவி
இயற்கையே இயற்கையே
என் சொல்கின்றாய்?
உனை நான் என்னவென்பேன்..!
கானகப் பயிர்கள் கண்ணீர்விடும்
உன்னைக் காணாவிட்டால்,
மானுட உயிர்கள் மடிந்துவிடும்
உனை மறந்துவிட்டால்.
எராளத்தோடு நீ வந்தால்
ஏசுவதும் இவ்வுலகம்,
இப்போது நீ ஏன் வந்தாய்
என
பேசுவதும் இவ்வுலகம்.
என்று நான் சொல்லி முடித்தவுடன்
இயற்கை இயம்பலாச்சு….
“அடேய்…
மானுடப் பிறவிகளா!
மாசுகொண்டு
என் கண்களை அடைத்துவிட்டு,
தூசுகள்
எனை வந்து துன்புறுத்த,
எனது அழுகையை
அடக்க இயலாமல்
துடிக்கிறேன்,
தூற்றுகின்றேன்….
பெருங்காற்றாய், மழையாய்
உங்களோடு பேசுகிறேன்….
நீங்களோ…?
பழமையை மறந்ததோடு,
புதுமையைப் பேணாமல்
புத்தி தடுமாறி
உங்கள் முட்டாள்தனத்திற்கு
என்னை மூலதனமாக்கி ,
என் பெயரை பிரயோகித்து,
பெரும் பேச்சுப் பேசுகின்றீர்!
அன்று!
உங்களால் பருவக் காற்றாக
பக்குவத்தில் இருந்த நான்…
இன்று!
புயல் காற்றாக
சீறி, உருமாறி
உலகைப் புரட்டிப்போடுகிறேன்
உனக்குப் புரியவில்லையா?
எச்சரிக்கிறேன்..
ஆபத்தின் நுனிதான் இது
அறிந்துகொள் மானுடா.
இனியாவது
பழமையைப் பாதுகாத்து,
புதுமைக்குப் புத்துயிர்கொடு,
வருங்கால சந்ததிகளையும்
வாழவிடு…!
முகவரி:
சூரியாதேவி ஆ
3/130, பாண்டியன் நகர் ,
சிவரக்கோட்டை,
திருமங்கலம் (தா),
மதுரை 625 706
அலைபேசி : 63795 25988