kangal kavithaigal by shakthi கண்கள் கவிதை ச.சக்தி

கண்கள் கவிதை – ச.சக்தி




“கத்திகள் இல்லாமலே
இதயத்தை குத்திக்கிழிக்கிறது
உன் கூர்மையான விழிகள்,

கூர்மையான
ஆயுதங்களெல்லாம்
கூர் உடைந்து தெருவோரக் குப்பைகளில் கிடக்கிறதாம்
உன் விழியெல்லாம்
தெரு வழியெங்கும் நத்தைகளாக
மேய்ந்து கிடக்கிறதனால்,

உன் கண்களைக் கண்டதும்
ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளாகிறது பல கால்கள்
நடக்கிற அந்த தெருக்களெல்லாம் ,

கொத்து கொத்தாக
பூத்திருக்கும் சாமந்தி பூ
கொத்துமல்லி தழைகளைப்போல
வாடி விடுகிறது
வாசலிலிலே பெரிய பூவாக
நீ பூத்திருப்பதால் ,
உன் கண்ணை கண்டதுமே
நிலவை பார்க்கிறேன்
மேகத்தின் கூட்டத்துக்குள் மறைந்து கொள்கிறது
நிலவாக உன்
இரு கண்கள்
குறிஞ்சி நிலத்தில்
நடமாடிக்கொண்டிருப்பதால் …!!!!