எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை – கார்கவி
ஊற்றோடு ஊற்றாக மை ஊற்றப் பழகு..!
செல்லும் இடமெல்லாம்
நம்பிக்கை கொண்டு செல்லப் பழகு..!
உயிர் மெய் உனதாக்கு..!
உலகமே நமக்கென பறைசாற்று..!
ஏணியை வானுக்குப் போடு…!
எட்டாத நிலை வந்தால் எழுதுகோல் எடு…!
உலகத்தை ஒருகையில் ஏந்து..!
உண்மையை சாட்டையாக்கு…!
தளர்வுகளில் ஆசை ஊற்று…!
தயங்காமல் கடல் செய்…!
தற்குறி என கூறலாகாதே…!
தட்டிக் கொடுப்போரிடம் முதுகுடன் கண் கொடு…!
வானுக்கு மை நிரப்பு..!
சின்னதொரு நம்பிக்கை வை..!
நாளை உன் வாசல் வர வை….!
ஆணுக்கு பெண் தேடு..!
பெண்ணுக்கு ஆண் தேடு..!
இரண்டிலும் நீள் உண்மை தேடு…!
கடலுக்குள் முத்தை தேடு..!
கடைசியாக ஒரு சொட்டு நீர் விடு..!
அண்டத்தில் புது பூமி தேடு…!
அங்குலம் நிறைந்த கைரேகை தேடு..!
அணு அளவு அணிசேர்..!
எவனாளாலும் வெற்றியை கொள்..!
அகிலம் நிறைந்த வெற்றி காண்..!
ஏணி ஏறி நடைபோடு
எழுத்தால் நகர்த்து-உன்
எண்ணத்தை உயர்த்து…!