Posted inPoetry
அக்னி கவிதை – சாந்தி சரவணன்
கண்டுபிடிப்பு என்ற பெயரில்
உன்னை கண்டுபிடித்து
அன்று ஒரு
சீதையை உன்னில் சரண் புகுத்தி
வேடிக்கை பார்த்தது
இன்று
பல சீதைகளை
அடுப்பறையில் வேக வைத்து
வேடிக்கை பார்க்கிறது
தீர்வு கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடு.
பயணிக்கும்
பெண் சமூகம்
திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40
9884467730