நூல் அறிமுகம்: கலைச்செல்வனின் ’ஹீரா பிஜ்லி’ வரலாற்று நாவல் – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: கலைச்செல்வனின் ’ஹீரா பிஜ்லி’ வரலாற்று நாவல் – இரா.சண்முகசாமி




நூல் : ஹீரா பிஜ்லி வரலாற்று நாவல்
ஆசிரியர் : கலைச்செல்வன்
விலை : ரூ.₹990/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தோழர்களே, சுடச்சுட வந்திருக்கும் வரலாற்று நாவலை வாசிக்க ஆர்வமா…
அப்படியென்றால் உடனே பாரதி புத்தகாலயம் செல்லுங்கள். ஆம் தோழர் கலைச்செல்வன் அவர்களின் அருமையான எழுத்தில் ஆயிரம் பக்கத்தில் மிகச்சிறப்பாக வந்துள்ள ‘ஹீரா பிஜ்லி’ நூல் பக்கங்களை திருப்ப திருப்ப கால எந்திரத்தில் பின்னோக்கி பயணித்து பூலித்தேவர் தொடங்கி நிறைய கதாபாத்திரங்கள் உரையாடும் குரலின் ஓசை நயத்தை அருகிலிருந்து கேட்கும் உணர்வை பெறலாம். கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும் அளவிற்கு தெளிந்த நீரோடை போன்ற எழுத்தால் நாவலை படைத்திட்ட தோழர் கலைச்செல்வன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்போதுதான் சென்னை புத்தக கண்காட்சியிலிருந்து ரயிலில் பயணித்துக்கொண்டே பக்கங்களை ரயிலைப் போன்று விரைவாக கடந்து வருகிறேன். அவ்வளவு ஓட்டத்தில் எழுத்து நம்மை இழுத்துக்கொண்டு செல்கிறது. புத்தகம் படிக்க ஆரம்பித்த உடனே பதிவிடுகிறாயே என்று கேட்கிறீர்களா… வேறொன்றுமில்லை விரைவில் முதல் பதிப்பு தீர்ந்துவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிவதால் வரலாற்று நாவலை ஆர்வமாக படிக்க விரும்பும் தோழர்களுக்கு இப்புத்தகம் உடனே கிடைக்கவேண்டுமே என்கிற ஒரு ஆவல்தான் தோழர்களே.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

இரா.சண்முகசாமி 
புதுச்சேரி. 

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் காலநிலை அகதிகள் – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் காலநிலை அகதிகள் – இரா.சண்முகசாமி




நூல் : காலநிலை அகதிகள்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இந்நூல் அறிவியல் புனைகதை. ஆனால் வாசிப்பவர்களுக்கு ஒருநிமிடம் அதிர்ச்சியே கொடுக்கும். ஆம் இன்று இந்த கார்பரேட் உலகம் புவி மக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே வைத்துள்ளது. அது மனிதன் என்கிற தன்மையை முற்றிலும் அழிக்கத் துடிக்கிறது. நாமும் தேவையில்லாத வீண் ஆடம்பரத்திற்கு நம்மை அறியாமல் விட்டுக்கொடுத்து வருகிறோம்.

இங்குதான் அடுத்த நிலை உருவாகிறது. அது எந்தவிதமான உலகை அல்லது இந்த உலகமே வேண்டாம் வேறு உயிரினக் கிரகத்திற்கு படையெடுப்போம் என சோம்பேறி உண்டு கொழுத்த கார்பரேட் உயிரினம் பறந்திட, வேற்றுக்கிரகத்தில் என்னென்ன தேவையோ அவற்றை ஒரு உலக பறிமாற்ற சுரண்டல் நிறுவனம் வழியில் எதைச் சுரண்டிச் செல்கிறார்கள் என்பதை வாசித்து அறியும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரு நிமிடம் நின்று போனதாகவே உணரமுடியும். உணர்ந்தேன் தோழர்களே.

நாம் தற்போது இருப்பது 21ஆம் நூற்றாண்டில். 31ஆம் நூற்றாண்டில் என்ன நிலைமை இருக்கும் குறிப்பாக 3040-3050 இடைப்பட்ட காலத்தில் பூமி எப்படி இருக்கும் என்று புனைவாக அதேநேரம் முன்னோக்கிய சிந்தனையாக ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் Ayisha Era.Natarasan அவர்கள் குறிப்பிடுவது போன்ற நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்தாலே திகிலாக இருக்கிறது. தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கு ராயல் சல்யூட்.

இனி என் மனதில் பட்ட சில கருத்துகள் உங்களோடு-

நமக்கு சாலைகளும் சரியில்லை, வாகனமும் பெருத்துவிட்டது, நுகர்வும் அதிதீவிரமாகி விட்டது. பிறகென்ன உலகம் முழுவதும் காலநிலை மாற்ற குழுவை போட்டுகிட்டே இருப்போம். வளர்ந்த பெருச்சாளி கும்பெனிகள் வளராத, வளரும் நாடுகளின் முதுகில் ஏறி சவாரி செய்யும். நாம் அப்படியே நமக்கு வரும் அவர்களுக்கான செய்தித்தாள்களையோ, அவர்களுக்கான ஊடகங்களையோ மட்டுமே உண்மை என்று நம்பி நமக்காக யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை கவனியாமலே பல நேரம் ‘அவர்களுக்கு வேலையே இல்லை எந்நேரமும் போராட்டமும் கையுமாகவே அலைவார்கள்’ என்று நமக்காக போராடுபவர்களை மட்டம் தட்டியே கடந்து போவோம்.

நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை நம்மை சுற்றி நடக்கும் போராட்டங்களையும், இதோ இந்நூலையும் வாசியுங்கள் புரியும் தோழர்களே.

இந்நூலுக்கு மிகச்சிறப்பான அணிந்துரை வழங்கிய அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் Kattanur Ponniah Rajamanickam அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்!

உலகின், மனித இனத்தின் அடுத்த எதிர்கால தொழில்நுட்பம் என்னவாக இருக்கும் என்பதை தோழர் ஆயிஷா அவர்கள் எழுதிய இந்நூலை அனைவரும் குறிப்பாக இளையோர் அதிகம் வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழர்களே!!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் “சர்க்யூட் தமிழன்” – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் “சர்க்யூட் தமிழன்” – இரா.சண்முகசாமி




நூல் : சர்க்யூட் தமிழன்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹100
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

‘கடவுளே… இன்றைக்கு ஒருநாள் மட்டும் ரெஜி இறந்துவிடக்கூடாது’
(கேன்சர் பீடித்த மாணவியைப் பற்றி தலைமை ஆசிரியர் புலம்பல் தான் மேற்கண்ட வரிகள் )

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் எழுதிய ‘சர்க்யூட் தமிழன்’ அறிவியல் கதைகள் நூலில் ‘ரெஜி’ என்கிற தலைப்பிலான கதையை வாசிக்கும் ஒருவர் கண்ணீரை தாரை தாரையாய் வரவழைக்காமல் வாசிக்க முடியாது. அற்புதமான மாணவிக்கும், தலைமை ஆசிரியருக்கும், சக மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பிணைப்பில் நெஞ்சை உருக வைத்த கதையாக வடித்திருப்பார். ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எப்போதும் எழுத்துலகின் அரசன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். எந்த நூலை எழுதினாலும் அதில் சமூக தாக்கங்கள் இல்லாமல் நூல் இருக்காது. இன்னும் இந்நூலை முடிக்கவில்லை. அதற்குள் வடித்த கண்ணீர் காயும் முன் எழுதவேண்டும் என்கிற உணர்வில் உங்களோடு பகிர்கிறேன். இன்னும் முடிக்கும் முன்பு என்னென்ன உருவங்களை உள்ளே உலாவ விட்டிருக்கிறாரோ…

2018ல் வெளியான நூல் 2022 செப்டம்பரில் தான் கண்ணில் பட்டது. வாசிக்காத நண்பர்கள் தோழர் Mohammed Sirajudeen அவர்களிடம் அல்லது thamizbooks.com இணையத்தில் பதிந்து வாங்கி வாசியுங்கள் நண்பர்களே!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

இரா.சண்முகசாமி 
புதுச்சேரி-9