இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) - மனோந்திரா | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) – மனோந்திரா

இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) கொஞ்சி மகிழ்ந்து குலவிக் களித்துக் குதிக்கும் வயதினிலே- காசாவில் கஞ்சியும் தண்ணியும் இன்றிக் குழந்தையர் காய்ந்து கிடக்கின்றார்- தினம் அஞ்சி நடுங்கியும் ஆவி துடித்தும் அவதிப் படுகின்றார்- இஸ்ரேல் வஞ்சகர் பிடியினில் மாட்டித் தினம்தினம்…
Isaippadal (இசைப் பாடல் - Musical Song) Poetry By Saravibi Rosichandra. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இசைப் பாடல் – சரவிபி ரோசிசந்திரா



இசைப் பாடல்
***************
என்னை நீ மறந்தாய்
உன்னை நான் மறவேன்
உயிரே நீ பிரிந்தாய்
உணர்வே நான் பிரியேன்

கடந்த நாட்களில் காதல் பேசியதே!
கடக்கும் நாள்களிலோ கண்ணீர் பேசிடுதே!

இந்த வலிகள் இன்னும் நீளுமோ!
இனிய நேசம் எப்போது பேசுமோ!
இனியவனே! எனது பாசம் போதலையா?
இன்னும் உனது கோபம் தீரலையா?

பாலை வனத்தில் சோலையாய்
பாவை மனத்தில் பரிதியாய்
பிடிவாதம் பிழையாய் புகுந்து கொண்டதே!
பிரிவில்லா உறவில் விரிசல் வந்ததே!

எங்கே நான் செல்ல
என்னுயிரே வா சொல்ல
எனக்காக இங்கு யாருமில்ல
என்னவனே பேசு மெல்ல.

– சரவிபி ரோசிசந்திரா