திரும்பி வாருங்கள் சுனிதா வில்லியம்ஸ் | Come back NASA Astronaut Sunita Williams Article By Ayesha Era Natarasan | International Space Station - https://bookday.in/

திரும்பி வாருங்கள் சுனிதா வில்லியம்ஸ்

மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்று இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டபடி ஜூன் 26 திரும்பி வரவில்லை.. காரணங்கள் பல.. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக கருதப்படும் நமது வம்சாவழியில் தோன்றிய அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அன்று விண்வெளி…
வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன் | இஸ்ரோ (ISRO) | Congratulation to Shri. J Muthupandian Mission Director of ISRO RLV-LEX | https://bookday.in/

வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன்

வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன்..  நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவை நிறைவேற்றிவிட்டீர்கள்..! கர்நாடகாவில் சித்ரதுர்காவில் உள்ள இந்தியன் ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ஜூன் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது.. புஷ்பக் ( Pushpak ) ஏவுகலம் புவியை நோக்கி திரும்பி…
eevukalam auppuvathu mattum thaan ariviyalaa ? - ayisha .r.natarasan ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா? - ஆயிஷா. இரா.நடராசன்

ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா? – ஆயிஷா. இரா.நடராசன்

ஏவுகலம் அனுப்புவது மட்டும்தான் அறிவியலா? சந்திரயான் வெற்றி, ஆதித்யா வெற்றி ஆகியவை பற்றி நாம் நிச்சயம் பெருமிதம் கொள்ள வேண்டும். நிலவின் தென் முனையில் தனது உலாவியை இறக்கிய முதல் நாடு. சூரியனைச் சில லட்சம் மைல் அருகில் ஆய்வுசெய்யவுள்ள நான்காவது…
kavithai : chandhirayan kadhal - pudhiyamadhavi கவிதை: சந்திராயன் காதல் -புதியமாதவி

கவிதை: சந்திராயன் காதல் -புதியமாதவி

பூமியின் ஈர்ப்பு விசை நான் நிலவின் ஈர்ப்பு விசை நீ.   நீ கடல் நான் கடற்கரை. யாரை யார் ஈர்ப்பது? யாரை யார் அணைப்பது? யாருக்குள் யார் கரைவது? நிலவிலிருந்து 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறதாம் அந்தப் புள்ளி. ஈர்ப்புவிசை…
நூல் அறிமுகம் : ஜெ. பால்முருகனின் `ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளிப் பயணம் – மா.மகேந்திரவர்மன்

நூல் அறிமுகம் : ஜெ. பால்முருகனின் `ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளிப் பயணம் – மா.மகேந்திரவர்மன்
நூல்: ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிப் பயணம்
ஆசிரியர்: ஜெ. பால்முருகனின்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 120
பக்கம்:128
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

தமிழில் தரமான புத்தம் புதிய தொழில்நுட்பசெய்தியை கொண்ட விண்வெளி சார்ந்த உலக அளவில் நடைபெற்று வரும், ஆராய்ச்சிகளை பற்றிய விளக்கங்களை எளிமையாக எடுத்துரைக்கும் புத்தகம்.

விண்வெளி ஆய்வில், உலகில் உள்ள எல்லா ராக்கெட்டுகளை விட சிறந்த மற்றும் மலிவு விலையில் ராக்கெட்டை உருவாக்கி பல்வேறு நாடுகளின் அரசு சார்ந்த நிறுவனங்களை கூட
ஆச்சர்ய படவைத்த எலன் மாஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிறுவன அமைப்புகள், எலன் மாஸ்கின் எதிர்கால திட்டம் உள்ளிட்ட பற்பல செய்திகளை சுவைபட எளிமையாய்
எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம். தொழில் முனைவோராக உருவாக விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தன்னம்பிக்கை செய்தியையும் அழகாய் ஊட்டுகிறது. எந்த துறையில் இருந்தாலும் அதற்கான ஆர்வம், அதைபற்றிய ஆழ்ந்த அறிவு, கடின உழைப்பு இவை இருந்தால் எல்லோரும் வெற்றி பெறமுடியும் என்பதன் அறிவியலை அழகாய் புரிய வைக்கிறார் ஆசிரியர். ஆசிரியரும் ISRO நிறுவனத்தில் பணிபுரிவதால் ராக்கெட் அதன் என்ஜின், எரிபொருள் இதன் ஆரம்பகால கட்ட வளர்ச்சி, தற்போதைய வளர்ச்சி (SLV, PSLV, GSLV, ESCAPE ROCKET) ஆகியவற்றை தரவுகளோடு ஒப்பிட்டு எளிமையாய் எல்லோருக்கும் புரிய வைக்கிறார். பதினைந்து உப தலைப்புகளோடு எலன் மாஸ்கின் மனித இனம் Multi Planet
இனமாக மாற வேண்டும் என்ற சிந்தனை ஒட்டி, Space X நிறுவனத்தின் செயல்பாடுகளை அவற்றின் வெற்றி ரகசியங்களை மறுபயன்பாடு மூலம் நிறுவனம் பெற்ற பணபலன்களை பட்டியலிடுகிறார்.

ராக்கெட்டின் வடிவம், வடிவமைப்பு, இயக்கநிலை 1,2,3 எரிபொருள் (திட, திரவ, வாயு), எடை, சுமந்து செல்ல எடை (Pay Load) அவற்றின் விலை நவீன வகை ராக்கெட் அவற்றின் சிறப்பு அம்சங்கள் பால்கன் வகை ராக்கெட்டை Space X நிறுவனம் ஏன் பயன்படுகிறது? என்பது உள்ளிட்ட சாதக, பாதக அம்சங்களை அலசுகிறது இந்த புத்தகம்.

மறு பயன்பாடு (Reuse) சுற்றுச் சூழலோடு மட்டுமல்ல விண்வெளிதுறைக்கும் மிக முக்கிய பயன்பாடு தருகிறது என்பது புதிய சிந்தனை. Space X நிறுவனத்தின் புதிய செயற்கை கோள் மூலம் நிறுவப்படும் இணையதள சேவை, விண்வெளி சுற்றுலா, HyperLoop ஆராய்ச்சி, மூலமாக உலகில் எந்த ஒரு மூலையிலும் அதிகபட்சமாக 90 நிமிடங்களுக்குள் செல்லமு டிகி றது . புதிய
தொழில்நுட்ப செய்தி நம்மை வேறு உலகிற்கு கொண்டு செல்லும்.

“நிலாவிற்கு போய் வடை சாப்பிட்டு விட்டு வரலாமா? அப்படியே ஒரு டீயும் சாப்பிட செவ்வாய் கிரக‌த்திற்கு சென்று வர முடியும்’’ என்பதனை எதிர் வரும் ஆண்டுகளில் தொழில்நுட்பம் எளிமைப் படுத்த போகிறதை அழகாக எடுத்துரைக்கிறது. இந்த புத்தகம் அறிவியல் வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் வாங்கி வாசியுங்கள்.

அறிவியலை நேசிக்கிற அனைவருக்கும் ராக்கெட், விண்வெளி நவீன தொழில்நுட்பங்களை அழகு தமிழில் எளிமைபடுத்தி இருக்கிறார் ஆசிரியர் பால் முருகன். அறிவியல் தமிழுக்கு புதிய அறிவியல் கொடை வழங்கிய பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் நன்றிகள்..

Satish Dhawan History and Achievements - Mr. Ayesha. Era. Natarajan சதீஷ் தவான் வரலாறு மற்றும் சாதனைகள் - திரு. ஆயிஷா. இரா. நடராசன்

சதீஷ் தவான் வரலாறு மற்றும் சாதனைகள் – திரு. ஆயிஷா. இரா. நடராசன்#AyeshaNatarasan #Science #Bharathitv #Bookday #Isro #Research #Setellite

சதீஷ் தவான் வரலாறு மற்றும் சாதனைகள் – திரு. ஆயிஷா. இரா. நடராஜன்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy RSS Indhiyavirkku Or Achuruthal Pre-Release Plan. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

Remembering ISRO Aerospace Scientist R Aravamudan Wionews Article Translated by Shesha Jeyaraman. Book Day is Branch of Bharathi Puthakalayam

இந்திய விண்வெளி (ISRO) விஞ்ஞானி திரு. ஆராவமுதன் – சித்தார்த் எம்பி | தமிழில்: சேஷ ஜெயராமன்அரசியல் மற்றும் திரைத்துறையில் பிரபலமான பலரைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நாம் வேறு எத்தனையோ துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள அதிகம் விரும்புவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. நாம் வளர்த்தெடுக்கப்பட்ட விதம் அப்படி. எது நமக்கு முன்பாக பிரதானமாக பேசப்படுகிறதோ, விமர்சிக்கப்படுகிறதோ அதைப் பற்றிய தகவல்களில்தான் நம்மை அறியாமல் நம் மனம் ஈடுபடத்தொடங்கி விடுகிறது.

அறிவியல் உணர்வு ஊட்டப்பெறாத ஒரு சமூகமாக நாம் இயங்கி வருகிறோம். எவ்வளவு புதிய கண்டுபிடிப்புகள் நம் முன்னர் களமாடினாலும், அறிவியல் சார்ந்த சிந்தனைகளோ, விவாதங்களோ மிகக் குறைவாகக் கூட பகிரப்படுவதில்லை. ஒரு சிறிய வட்டத்தில் அடங்கிவிடக்கூடியவையாகவே இன்றளவும் அவை தொடர்கின்றன. கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு கூடி வரும் இந்த நூற்றாண்டில் நாம் நம்மை திறமையுடன் வளர்த்துக்கொள்ள அறிவியல் சிந்தனைகளும், அறிவியல் கண்ணோட்டமும் மிகவும் அவசியமானவை. உண்மையில் எளிமையான முறையில் விளங்கிக்கொள்ளும் வகையில் எத்தனையோ அறிவியல் தகவல்கள் இணையதளங்கள் எங்கிலும் மண்டிக்கிடக்கின்றன. சற்றே ஆர்வமும், பொறுமையும் இருந்தால் இந்த விஞ்ஞான உலகில் நாம் கற்றுக்கொண்டு ஆச்சரிப்படவும், ரசிக்கவும் ஆயிரமாயிரம் தகவல்கள் இருக்கின்றன.

பல நூற்றாண்டுகள் முன்பே விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கி விட்டன என்றாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அது மிகப்பெரும் பாய்ச்சலைக் கண்டது சென்ற நூற்றாண்டில் தான்.

ஆர். ஆராவமுதன் என்னும் இராமபத்ரன் ஆராவமுதன் ஒரு விண்வெளி விஞ்ஞானி. இந்திய விண்வெளித்துறையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். 1936-ல் சென்னையில் பிறந்தவர். நடுத்தர குடும்பம். சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி) மின்னணு-பொறியியலில் முதல் தரம் பெற்றவர்.

Remembering ISRO Aerospace Scientist R Aravamudan Wionews Article Translated by Shesha Jeyaraman. Book Day is Branch of Bharathi Puthakalayam

விஷயங்களைத் தெளிவாகப் பகுத்தும் தொகுத்தும் புரிந்துகொண்டு அவைகளை சரியான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் கூர் அறிவும், அறிவியல் மனப்பாங்கும் கொண்டவர்களுக்குப் பொருத்தமான பணியிடம் வாய்க்கும்போது அதனை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

திரு.ஆராவமுதன் அவர்களுக்கு ட்ராம்பே அணு உலைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருக்கும் அணுசக்தித் துறையில் வேலை கிடைத்தது. கிடைத்த வேலை போதும் என்று அங்கேயே அவர் நீடித்திருக்கவில்லை. தனது திறமைகளை வெளிப்படுத்த அவர் மனம் வேறு ஒரு சிறப்பான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அப்போதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பிதாமகரான திரு.விக்ரம் சாராபாய் அவர்கள் தனது புதிய ஆராய்ச்சிகளுக்காக இளம் விஞ்ஞானிகளைத் தேடிக்கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக இருந்தார். இத்தகவல் கேள்விப்பட்ட ஆராவமுதன் அணுசக்தித் துறையிலிருந்து விலகி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். நண்பர்கள் சிலர் நிலையான வேலையை விட்டு புதிய வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்களை எடுத்துக் கூறினாலும் தன் மனம் விரும்பிய பணியில் சேரவேண்டும் என்ற முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட உடனே, அமெரிக்காவின் நாசாவிற்கு அனுப்பப்பட்டார் ஆராவமுதன். விண்கலத்தடங்களை கண்காணித்தல், தொலைதூரத் தகவல்களைப் பதிவு செய்து சேகரித்தல் என விண்ணில் செலுத்துப்படும் ஒரு ராக்கெட்டின் பாதை தொடர்பான சகல பணிகளிலும் அவருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.. தரை நிலையத்திலிருந்து பறந்துகொண்டிருக்கும் ராக்கெட்டிற்கும், ராக்கெட்டிலிருந்து தரை நிலையத்திற்குமான தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதே இவரது பணியின் மையநோக்கம். ஓராண்டு நீடித்த இந்தப் பயிற்சியின்போது தான் ஆராவமுதனுக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நட்பு கிடைத்தது. அப்போது கலாம் அவர்களின் வயது 31.

பயிற்சிகளின் பின் திருவனந்தபுரம் தும்பாவிற்குத் திரும்பிய குழு, ஒன்றன்பின் ஒன்றாக ராக்கெட் சோதனைகளை ஆரம்பித்தது. அறுபதுகளில் தொடங்கிய இவரது சேவை மங்கல்யான் விண்கலம் 2014-ல் மார்டியன் சுற்றுவட்டப்பாதையில் நிலைபெறும் வரையிலும், தொடர்ந்தது.

1970களின் முற்பகுதியில் இவர் தும்பா ஈக்வடோரியல் ராக்கெட் ஏவுதளத்தில் இயக்குநராக பணியாற்றினார். 1980 களில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குநரானார். பின்னர் 1989-ல் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஐந்தாண்டுகளின் பின் 1994-ல் இவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பெங்களூர் சென்றார்.

1997-ல் திரு.ஆராவமுதன் ஓய்வு பெற்றபின் அவரது துணைவியார் திருமதி.கீதா அவர்களுடன் இணைந்து சுயசரித நூல் ஒன்றை எழுதினார். (ISRO: A Personal History).

Remembering ISRO Aerospace Scientist R Aravamudan Wionews Article Translated by Shesha Jeyaraman. Book Day is Branch of Bharathi Puthakalayam

1963ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் இந்திய விண்வெளித்திட்டங்களின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது. அன்றுதான் ‘நைக் – அபாச்” என்ற சோதனை ராக்கெட் முதன் முதலாக இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டது.

ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் நாற்பதாண்டு விழா நிகழ்வு 2003-ல் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு.ஆராவமுதன் தன் பணியில் ஆரம்பகால சுவாரஸ்யமான அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இவருக்கு ஆர்யபட்டா விருது வழங்கப்பட்டது.

2010 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தனித்துவமிக்க சாதனைக்கான விருதையும் பெற்றார்.

எந்த விதமான கட்டமைப்பு வசதிகளும், வழிகாட்டுதல்களும் இல்லாத அந்த ஆரம்ப நாட்களிலிருந்து ஒவ்வொரு சிறு வாய்ப்பினையும் பயன்படுத்தி இன்று மிகப் பெரும் நிறுவனமாக நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வளர்ந்துள்ளதாக பெருமிதப்படும் திரு.ஆர். ஆராவமுதன் இன்று நம்மிடையே இல்லை. பெங்களூருவில் வசித்து வந்த அவர் சென்ற 4-8-2021 அன்று தனது 84ஆம் வயதில் எல்லையற்ற அந்த விண்வெளியில் நிரந்தரமாக சங்கமமாகிவிட்டார்.

நன்றி: wionews

https://www.wionews.com/india-news/remembering-r-aravamudan-the-pioneer-of-aerospace-radars-and-tracking-in-india-403791

தமிழில்: சேஷ ஜெயராமன்