maainthazinthathu poetry written by jaleela musammil கவிதை: மாய்ந்தழிந்தது - ஜலீலா முஸம்மில்

கவிதை: மாய்ந்தழிந்தது – ஜலீலா முஸம்மில்

ஒரு மெல்லிய இசையைப் புதிதாகக் கேட்டுப் பிடித்துப்போவது போல இருந்தது நம் முதல் சந்திப்பு! நேசம் என்பது ஒற்றைச் சொல்... ஆனால், அது வியாபித்துக் கிடப்பது பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்! பவனிவரும் பால்வீதிகளிலும்! நதி இறுகிக் கல்லாகும்... கல் கரைந்து கலந்து நதியாகும்...…
kavithai : muzhuvathum tholaiyamal...- dr.jaleela musammil கவிதை : மூழ்கித் தொலையாமல்... - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை : மூழ்கித் தொலையாமல்… – Dr ஜலீலா முஸம்மில்

இதயம் முழுவதையும் முற்றாகப் பயன்படுத்தாமல் இதயம் பூராகவும் நிறைத்துக் கொள்ளாமல் சுவாசம் மொத்தமும் இழுத்துக் கொள்ளாமல் சுவாசம் முழுவதும் அடர்ந்து பரவாமல் ஆன்மாவில் இணைந்து இழைந்து ஊடுருவாமல் ஆன்மாவில் பொழிந்து முழுதும் நனைக்காமல் உள்ளத்தில் அடர்வாசனையென எழுந்து நிரப்பாமல் உள்ளத்துள் பேராசையென…
கவிதை : உள்ளங்கை ரேகையாய் - ஜலீலா முஸம்மில் kavithai ; ullangai regayai - jaleela musammil

கவிதை : உள்ளங்கை ரேகையாய் – ஜலீலா முஸம்மில்

உள்ளங்கை ரேகையாய்... உள்ளார்ந்த மௌனத்தில் உதிரிப் பூக்களாகும் உன் நினைவுகள் மெல்லிய நேசவாசம் கொண்டு மேனி தழுவிப் பின் மேகந்தாண்டிப் பரவும் நிலவை வசீகரம் செய்து நெஞ்சம் நெகிழ்த்தும் விண்மீன்களில் கவிதை நெய்து பிரபஞ்சம் போர்த்தும் உள்ளார்ந்த மௌனத்தில் உன் ஸ்நேகம்…
poem- uyirthezuntha vasam - jaleela musammil

கவிதை : உயிர்த்தெழுந்த வாசம்- ஜலீலா முஸம்மில்

உயிர்த்தெழுந்த வாசம் பசுமை பூத்திருக்கும் நினைவுப்படிகளில் குழந்தையாகி ஏறிச்செல்கிறேன் கருணை நிலாக்கள் நீந்துகின்ற அன்பின் கடலில் பயணிக்கிறேன் குளிர் தரு தென்றலாகும் நேச உணர்வுகளில் கொடுகிப் போகிறேன் இருக்கும் வரைக்கும் எதுவுமே பெறுமதி தெரிவதில்லை இல்லாத பொழுதுகளில் இதயத்திலே அன்பின் வலிகள்…