Posted inPoetry
கவிதை: தெய்வம் இருப்பது எங்கே? – ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: ஜெயராமன்)
தெய்வம் இருப்பது எங்கே? "அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை* ", என்றார் துறவி. கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா? ஏ... துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்? விலைமதிப்பற்ற இரத்தினங்களால் பதிக்கப்பட்ட சிம்மாசனத்திலே தங்கச் சிலை ஒளிர்கிறதே, ஏனுரைத்தீர் காலியாக இருப்பதென்று? ” “அது காலியாக இல்லை அரசே, உங்கள் பகட்டுப் பெருமையால் நிறைந்துள்ளது - கோவிலில் உம்மை நிரப்பியிருக்கிறீரே அன்றி, கடவுளை அல்ல",என்றார் துறவி. சினங்கொண்டார் கோமான், “விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கோவிலில் கொட்டியுள்ளேன் இருபது லட்சம் பொன் நாணயங்களை! சடங்கு அனைத்தும் செய்தபின்பே அர்ப்பணித்தேன் ஆண்டவனுக்கு ! அத்தகைய பெரிய கோவிலில் ஆண்டவன் இல்லை என்று எப்படி நீங்கள் கூறத் துணியலாம்?” அமைதியாகப் பதிலுரைத்தார் ஆத்மஞானி: "வறட்சிக் கொடுமையில் வாடிய உமது குடிகள் இரு கோடிப் பேர்…
