Posted inPoetry
ஜீவலதாவின் கவிதைகள்
பெண் தெய்வம்
*******************
உச்சி முகர்ந்து
உள்ளம் கனிந்து
உனது வெட்கத்தில்
என் களைப்பு தீர்கிறது !
நீ வைக்கும்
குங்குமத்தில்
என் ஆயுள் கூடுகிறது !
வெத்தல போட்டு
நீ சிரிக்க நான்
சொக்கிப் போகிறேன் !
உன் கெண்டைக் காலுல
நான் பூட்டிய
தண்டையோசையில்
இதயம் துடிக்குது !
கண்டாங்கி கட்டி
நீ நடக்க
உன்னை நான் ரசிக்க !
எனக்காக நீ இருக்க
உனக்காக நான் துடிக்க !
என் பேர சொல்ல
நீ தயங்க
உன் பேர ஆயிரம் முறை
கூவி நான் அழைக்க
வாடி என் பெண் தெய்வமே !
வயதைக் கடந்து
காதல் செய்வோம் !
தேர்ச்சி
**********
பரீட்சையில் நான்
தேர்ச்சி …
கோவில் சுவற்றில்
என் பரீட்சை எண்கள் …
உலகம்
*********
குழந்தை !
தன் பிஞ்சுக் கரங்களால்
உலகை அளந்தது…
அம்மா !
உன்னை இவ்ளோ
பிடிக்கும் …
– எஸ். ஜீவலதா