jeevalathavin kavithaigal ஜீவலதாவின் கவிதைகள்

ஜீவலதாவின் கவிதைகள்

 ' ம் ' ம்... அடுக்கடுக்கான ஆணையின் பிறப்பில் சிக்கித் தவிக்கும் மனக் கூப்பாட்டின் வெளித்தோன்றல் வார்த்தைப் போரின் தேடு பொருளில் சமாதானத் தூது காதலில் மகிழ்ந்துணரும் தருணத்திற்கு அகம் உரைக்கும் ஓவியம் இலக்கண விதிக்குட்படாத அகர முதலியில் நிகர் பொருளில்லாத…
செ. ஜீவலதாவின் கவிதை

செ. ஜீவலதாவின் கவிதை




எதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத
எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய் ! சூண்யமாய் ஆயின!

ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ?

உன்னை நினைத்து
மை தொடுக்கும் போதே
முகில் தோன்றி
வார்த்தைத் தூறலாய்
தூறிக் கொண்டிருந்த
என் எழுத்துகள் அனைத்தும்
நடையெடுத்து !
அணிவகுத்து !
இலக்கணம் தொட்டு !
கவிதையானதே !!!

செ. ஜீவலதா
இராஜபாளையம்