Jen Cinema Kavithai By K. Punithan ஜென் சினிமா கவிதை - க. புனிதன்

ஜென் சினிமா கவிதை – க. புனிதன்

நாம் அடைய வேண்டிய
ஊரின் பெயர்
தேநீர் பானம்

இடையில் வரும் சிற்றூர்கள்
குக்கூ
நிலவு
மூதூர்
தென்றல்
சிற்றெறும்புகள்

கோப்பையில்
தேநீர் தயாரிக்க
ஒரு கருப்பு நகைச்சுவை
பாலில் கலந்து
சர்க்கரை தூவும்போது
வெட்டுக் கிளியின் சப்தம்

ஏற்ற இறக்கமான
கோப்பை
அதில் வண்ணத்து பூச்சி போல்
பிடிக்கும் கை பிடி

இரண்டு கரைகள்
பருகும் கடல்
தவறி சிந்திய
தேநீர்த் துளிகள்

கோள்கள்
கோப்பையில்
தன் பிம்பம் தெரியும்
நுரைகள்
ஜென் சினிமா