ஜெயாபுதீன் கவிதைகள்

ஜெயாபுதீன் கவிதைகள்

திருமணப் பரிசாய் வந்த எவர்சில்வர் சம்புடத்தில் கொத்தியிருந்த பெயரின் மீதேறி கால்நூற்றாண்டுக்கு முன்னால் போய்இறங்கிவிட்டாள் அம்மா. அங்கிருந்த அத்தையின் ஞாபகங்களை கண்ணீராகவும் தன் திருமணக் குதூகலத்தை வெட்கமாகவும் ஆக்கிக் கலந்த முகத்துடன் அப்பாவின் புகைப்படத்தை உற்றுப் பார்க்கிறாள் அம்மா. பெயர்கள் பொறித்த…